பிகேஆர்: வாக்குப் பெட்டிகளைக் கொண்டு வந்த வாகனம் ஒன்று வேறு…

புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்துக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு சென்ற  வாகனம் ஒன்று 'ரகசிய' இடம் ஒன்றுக்கு மாற்றி விடப்பட்டதாக தான் கூறிக் கொண்டுள்ளது மீது பிகேஆர்  கேள்வி எழுப்பியுள்ளது. "வாக்குப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு புத்ராஜெயாவில் உள்ள இசி தலைமையகத்துக்கு சென்ற ஒரு  வாகனத்தை இசி-யின்…

அன்வார் : ‘வன்முறை’ ஆதரவாளர்களை பக்காத்தான் பாதுகாக்காது

அரசியல் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டு  பிடிக்கப்படும் பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்களுக்கு உதவி கிடைக்காது என எதிர்த்தரப்புத் தலைவர்  அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார். "பக்காத்தானைச் சேர்ந்தவர்கள் யாரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் நாங்கள் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை," என அவர் சொன்னார். பிஎன் கூட்டணியின்…

இடது கை விளம்பரம் தேவைதானா?

தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார பதாகைகளில் தமிழ்மொழி சிதைக்கபட்ட விடயமே இதுவரை பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தமிழனின் பண்பாடும், நாகரிகமும் அவமானப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) உலகத்திற்கே நாகரிகத்தை கற்றுத் தந்தவன் தமிழன் என நாம்…

‘வாக்குகள் வாங்கப்படுவதற்கான ஆதாரங்களை பிகேஆர் வெளியிடும்’

சபாவிலும் பினாங்கிலும் வாக்குகள் வாங்கப்படும் சம்பவங்களை தான் ஆவணப்படுத்தியுள்ளதாக  எதிர்க்கட்சியான பிகேஆர் இன்று அறிவித்துள்ளது. அந்தச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது தெரிவித்தது. "எங்களிடம் பற்றுச்சீட்டுக்கள் உள்ளன. பினாங்கில் 50 ரிங்கிட்டும் சபாவில் 1,000 ரிங்கிட்டும் கொடுக்கப்பட்டுள்ளன," என்று பிகேஆர் மூத்த தலைவர் அன்வார்…

தியான் சுவா : அங்கீகாரம் இல்லாத மாற்றங்களைச் சரி செய்ய…

இசி என்ற தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கடைசி நிமிட மாற்றங்கள் எனக்  கூறப்படும் புகார்களை இசி உடனடியாகக் கவனிக்க வேண்டும் என பிகேஆர் கூறுகிறது. வாக்காளருக்குத் தெரியாமல் அவருடைய விவரங்கள் மாற்றப்படும் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என  பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா…

சுஹாக்காம் அறிக்கையை வெளியிடுமாறு டிஏபி நஜிப்புக்கு சவால்

மலேசியாவில் உள்ள சுதேசி சமூகங்களுடைய நில உரிமைகள் மீது சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித  உரிமை ஆணையம் தயாரித்த அறிக்கையை வெளியிடுமாறு டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பராமரிப்பு  அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு சவால் விடுத்துள்ளார். அந்த அறிக்கையை வெளியிடுவதை நிறுத்தி வைக்கும்…

மகாதீர் அவர்களே, உங்கள் நேரம் வந்தது இப்போது போய் விட்டது

'இந்த நாட்டில் செய்யப்பட்ட எல்லாத் தவறுகளையும் சரி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. நீங்கள்  ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என நாங்கள் பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். மலேசியாவை மீண்டும்  மகத்தான நாடாக மாற்ற எங்களை அனுமதியுங்கள்' டாக்டர் மகாதீர்: பக்காத்தான் ஆட்சி நாட்டை 'தோல்வி அடைந்த இஸ்லாமிய…

பெரும் கூட்டங்கள் நெகிரி செம்பிலானை பக்காத்தான் கைப்பற்றப்போவதை காண்பித்தது

திங்கள்கிழமை இரவு சிரம்பானில் டிஏபி செராமாவுக்குத் திரண்ட மாபெரும் கூட்டம், மே 5 தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் சிரம்பானிலும் ராசாவிலும் வெல்லும் என்பதை மட்டுமல்ல அது மாநில ஆட்சியைக் கைப்பற்றப்போவதையும் காண்பித்தது என்கிறார் நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லொக். அன்றிரவு சிரம்பான் மார்கெட்டுக்கு எதிரில் டிஏபியின்…

தாயிப் ஒய்வு பெறுவது பற்றிப் பேசுவதற்குத் தயாராக இல்லை

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், இரண்டு ஆண்டுகளில் ஒய்வு பெறுவதாக 2011ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் வாக்குறுதி அளித்த போதிலும் தாம் ஒய்வு பெறும் தேதி குறித்து எதுவும் இப்போது உறுதியாகச் சொல்ல  மறுக்கிறார். சிபுவில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது ஒய்வு பெறும் திட்டம்…

கோட்டா ராஜா வேட்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்!

கோட்டா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் ஒரு சுயேச்சையாகக் களமிறங்குவதால் ஒரு காலத்தில் தன் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியைத் திரும்பக் கைப்பற்ற முழுமூச்சான முயற்சியில் இறங்கியுள்ள மஇகாவுக்கு ஒரு சிக்கல். இப்போது அங்கு வெற்றிபெற அத்தொகுதி  இந்தியர்களை மட்டும் அது நம்பி இருக்க இயலாது. இந்தியர்-அல்லாத…

இசி-க்கு எதிரான நீதித் துறை மறு ஆய்வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது

வாக்காளர் பட்டியலிலிருந்து தமது பெயரை அகற்றுமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) கட்டாயப்படுத்துவதற்கு பிரிட்டனில் வசிக்கும் பொறியியலாளர் சமர்பித்த நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பத்தை ஷா அலாம் உயர்  நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. நீதிபதி வெர்னோன் ஒங் தமது அறையில் அந்த முடிவைச் செய்தார். இசி-யையும் சிலாங்கூர் இசி…

‘லஹாட் டத்து ஊடுருவல் சபா பிஎன் பிரச்சார அம்சம்’

லஹாட் டத்து ஊடுருவல் சபாவில் வாக்குகளைக் கவருவதற்கு பிஎன் செய்து வரும் பிரச்சாரத்தில் முக்கியக் கருப்பொருளாகத் திகழ்கின்றது. குறிப்பாக பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அந்த மாநிலத்துக்கு நேற்று  தொடக்கம் மேற்கொள்கின்ற இரண்டு நாள் பயணத்தின் போது அந்த விவகாரம் முக்கியப் பிரச்சார அம்சமாக  திகழ்ந்தது. நேற்றும்…

இசி: பல வாக்காளர்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் அவர்களை அடையாளம்…

வாக்காளர்களின் பெயர்கள் ஒரேமாதிரியாக இருந்தாலும் அவர்களின் அடையாள அட்டை எண்களை வைத்து அவர்களை வேறுபடுத்த முடியும் என்கிறது தேர்தல் ஆணையம்(இசி). மூன்று அடையாள அட்டைகள் அப் ரபர் ஆவாங் என்ற பெயரைக் கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டிருப்பதற்கு இசி செயலாளர் கமருடின் முகம்மட் பாரியா மறுப்புத் தெரிவித்தார் என…

‘ரோஸ்மா மான்சோர்’ பெயரில் அபராதம் செலுத்தப்படாத இரண்டு ஏஇஎஸ் சம்மன்கள்

பாகாங் பெக்கானில் பதிவு பெற்ற வாக்காளரான ரோஸ்மா மான்சோர் என்பவர் சர்ச்சைக்குரிய ஏஇஎஸ்  எனப்படும் தானியங்கி அமலாக்க முறையின் கீழ் அபராதம் செலுத்தப்படாத இரண்டு ஏஇஎஸ் சம்மன்கள்  இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் XIASEAN360 என்ற எண் தகடைக் கொண்ட வாகனம் ஒன்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரும் ஆவார்.…

முன்னாள் அட்மிரல் லுமுட் கடற்படைத் தளத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை

37 ஆண்டுகளுக்கு லுமுட் கடற்படைத் தளத்தை தமது இல்லம் என முதல் அட்மிரல் முகமட் இம்ரான் அப்துல்   ஹமிட் அழைந்து வந்தார். நேற்று லுமுட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் அவர் அந்தத் தளத்துக்குள் பிரச்சாரம் செய்ய முயன்ற போது அதன் கதவுகள் அவருக்கு மூடப்பட்டன. இம்ரானுடைய…

செய்தியாளர்கள்மீது சீறிப் பாய்ந்தார் சொய் லெக்

நேற்றிரவு, ஜோகூர் ஜெயாவில் ஒரு விருந்தில் உரையாற்றிய  மசீச தலைவர் டாக்டர் சொய் லெக்-கை அதன்பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் சினமடைய வைத்தன. அதன் விளைவாக அவர் செய்தியாளர்கள்மீது சீறி விழுந்தார். அவ்விருந்தில் உரையாற்றிய சொய் லெக், அரசாங்கத்தை மாற்றுவது என்பது ஆடைமாற்றுவது போன்றதல்ல என்பதை விருந்துக்கு வந்திருந்த…

13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்களில் பத்துக்கு ஒருவரே பெண்கள்

மே 5 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பத்துக்கு ஒருவரே பெண்கள். அந்த விகிதம் முடிவு  எடுக்கும் நிலைகளில் குறைந்தது 30 விழுக்காட்டினர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற அனைத்துலக  இலக்கை விட மிகவும் குறைவாகும். டிஏபி தனது மொத்தம் 153 வேட்பாளர்களில் 22 பெண்களை (14.4 விழுக்காடு)…

‘புத்ராஜெயாவிலிருந்து பிஎன்-னை துரத்துவதற்கு ஒரு 58 பில்லியன் ரிங்கிட்தான் காரணம்’

உங்கள் கருத்து : 'அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தும் இந்த கிறுக்குத்தனம் நிற்க  வேண்டும், வாக்காளர்கள் மட்டுமே நஜிப்பை நிறுத்த முடியும்' ஆதரவை வாங்குவது- நஜிப்பின் 13வது பொதுத் தேர்தல் 'வர்த்தக மயம்' கிம் குவேக்: தேர்தலை இலக்காகக் கொண்டு நஜிப் செய்து வரும்…

‘இந்திய சமுதாயம் தன்மானமுடையது என்பதை அம்னோவிற்கு உணர்த்துவோம்’

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 24, 2013. நேற்று வெளிவந்த நாளிதழ்களில் இந்திய சமுதாயம்  சூல்கிப்ளி நோர்டினை ஏற்றுக் கொண்டு விட்டது என்று பிரதமர் கூறியுள்ளது இந்தியர்களை எப்படி வேண்டுமாலானலும் ஏமாற்றலாம் என்பதில் அவர் மிகுந்த "நம்பிக்கை" கொண்டுள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. வேதமூர்த்தி பாரிசானுடன் தேர்தல் பிரகடனம் …

நம்பவைத்து நாசமாக்கிய தலைவர் இவரன்றோ!

-எம். குலசேகரன், ஏப்ரல் 23, 2012. 1980-களில் இந்திய சமுதாயத்தை ஏழ்மை நிலையில் இருந்து பொருளாதார துறையில் உயர்த்தப் போவதாக தானைத் தலைவரும் சமுதாயத் தலைவருமான டத்தோ ஶ்ரீ உத்தாமா சாமிவேலு, ஏழை எளிய , சாமானிய மக்களிடமிருந்தும் ஏறக்குறைய 106 மில்லியன் (10 கோடி) வெள்ளிப் பணத்தை வசூல்…

சுயேச்சை வேட்பாளர்களை நிராகரியுங்கள்- கிட் சியாங்

மூத்த டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்,  13வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களை  வாக்காளர்கள் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.  அவர்கள் பக்காத்தான் ரக்யாட் உறுப்பினர்களோ,  பிஎன் உறுப்பினர்களோ கவலை இல்லை  அவர்கள் அத்தனை பேரையும் நிராகரிக்க வேண்டும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று…

பக்கத்தானை புத்ரா ஜெயா பக்கம் நெருங்க விடாதீர், ஹிண்ட்ராப்

'பிஎன் -னுக்கு அளிக்கும் வாக்கு உண்மையில் பெருந்திட்டத்துக்குக் கொடுக்கப்படும் வாக்கு என ஹிண்ட்ராப் தலைவர்கள் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த  அந்த அமைப்பின் மூன்றாவது தேசிய மாநாட்டில் கூறியுள்ளனர். அதனால் ஆளும் கூட்டணியை ஹிண்ட்ராப் உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என அதன் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பிஎன் -உடன் செய்து…

டமன்சாரா நெருக்கடிக்கு ‘சித்தாந்த வேறுபாடுகளே’ காரணம்

கோட்டா டமன்சாராவில் வேட்பாளர் நியமனத்தில் பிஎஸ்எம்-மும் பாஸ் கட்சியும் முட்டி மோதிக்கொண்டிருப்பதற்கு இரண்டு கட்சிகளினதும் “சித்தாந்த வேறுபாடுகள்தாம்” காரணம் என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். “பாஸுக்கும் பிஎஸ்எம்முக்குமிடையில் சித்தாந்த வேறுபாடுகள் இருப்பதால் அது பற்றி விவாதிக்க மேலும் சில நாள்கள் தேவைப்படும்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…