புக்கிட் அமான் கோழைகள்: அம்பிகா சாடல்

இரவு  முழுக்க  போலீஸ்  நிலையத்தில்  தடுத்து  வைக்கப்பட்ட  அனுபவத்தை  நினைவுகூர்ந்த  வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்,  உத்தரவுப்படி  நடந்துகொள்ளும்  அடிநிலை  போலீஸ்  அதிகாரிகளைக்  குறைகூற விரும்பவில்லை   என்றார். அவரது  ஆத்திரமெல்லாம்  புக்கிட்  அமானில்  உள்ள  அவர்களின்  மேலதிகாரிகளின்மீதுதான். “என்னை  பொறுத்தவரை,  உத்தரவுகள்  இடுகிறார்களே  முகமும்  பெயரும் …

வான் அஸிஸாவே பெர்மாத்தாங் பாவ் வாக்காளர்களின் சிறந்த தேர்வாக இருக்க…

பினாங்கு  பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கெஅடிலான் வேட்பாளரான  டாக்டர் வான்  அஸிஸா வான் இஸ்மாயில் பக்காத்தான் எதிர்க்கட்சிக் கூட்டணியைப் பிரதிநிதித்து போட்டியிடுகிறார்.  கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரான வான் அஸிஸா, இந்த நாடாளுமன்ற தொகுதியின் ஒரு முன்னாள் உறுப்பினர் என்பது மட்டுமன்றி, காஜாங் தொகுதி சட்டமன்ற…

சந்தியாகு: கைது நடவடிக்கை அரசாங்கம் மக்களைக் கண்டு அச்சமைடந்திருப்பதைக் காட்டுகிறது

  பொருள்கள் மற்றும் சேவைகள் வரிக்கு (ஜிஎஸ்டி) எதிர்ப்பு தெரிவிக்கவும் தொழிலாளர் தினத்தை கொண்டாடவும் மே தினத்தன்று 20,000க்கு மேற்பட்டோர் அமைதியான பேரணியில் பங்கேற்றனர். அப்பேரணியில் ஒரு தனிப்பட்ட புகைக்குண்டு சம்பவத்துடன் போலீசார் புகழ் பாடாத வாசகங்களும் காணப்பட்டன. அனைத்துலக தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அப்படி…

தியன் சுவா முரட்டுத்தனமான முறையில் கைது செய்யப்பட்டார்

  செபராங் ஜெயா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில் பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பண்டார் பெர்டா, செபராங் பிறை போலீஸ் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்பு கொண்ட போது, "நான் இங்கிருக்கிறேன்,ஆனால் இப்போது பேச முடியாது" என்று தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு…

அம்பிகாவை தடுத்து வைப்பதற்கான ரிமாண்ட் மனு நிராகரிக்கப்பட்டது

  நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகாவை தடுத்து வைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவைப் பெறுவதில் போலீசார் தோல்வி கண்டனர். ஆனால், கைது செய்யப்பட்ட இதர 29 இளைஞர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை. வழக்குரைஞர் மிசேல் யேசுடாஸ் அளித்த…

மிரட்டினார், கையூட்டு கொடுக்க முனைந்தார் என இஸ்மாயில்மீது குற்றச்சாட்டு

விவசாயம், விவசாயம் சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி,  வாக்காளர்களை “மிரட்டியதன்”வழி  தேர்தல்  சட்டத்தை  மீறினார்  என  பிகேஆர்  குற்றம் சாட்டியுள்ளது. அதன்  உதவித்  தலைவர் நூருல்  இஸ்ஸா  அன்வார்,  பிகேஆர்  வேட்பாளர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலுக்கு  வாக்களிக்க  வேண்டாம்  இஸ்மாயில்  சப்ரி  வாக்காளர்களை  மிரட்டிதாகக் …

பெர்சே: கைதுகளால் நஜிப்மீது ஆத்திரம்தான் அதிகரிக்கும்

அமைதியாக  நடந்துமுடிந்த  மே  தினப்  பேரணிக்குப்  பின்னர்  பலர்  கைது  செய்யப்பட்டது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அரசாங்கத்தின்மீது  மக்களுக்கு  ஆத்திரத்தைதான்  தூண்டி  விட்டிருக்கும்  என  பெர்சே  கூறியது. “நஜிப்  அரசாங்கம் பொருள்,  சேவை  வரியை எதிர்க்கும்  மலேசியர்களின்  குரலுக்குச்  செவிவாய்க்காமல்,   மேதின  ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டவர்கள்மீது  சட்ட  நடவடிக்கை …

மே தின கைதுகளுக்குப் பல தரப்பினர் கண்டனம்

மே  தினப்  பேரணிக்குப் பின்னர்  நேற்றிரவு  பலர்  கைது  செய்யப்பட்டதைப் பல்வேறு  தரப்பினர்  கண்டித்துள்ளனர். “பிஎஸ்எம்  தலைமைச்  செயலாளரும்  மே  தினப்  பேரணி  ஏற்பாடுக்குழு  உறுப்பினருமான  எஸ்.அருள்செல்வன், நெகாராகூ  தலைவர்  எஸ்.அம்பிகா,  சட்டமன்ற, நாடாளுமன்ற  உறுப்பினர்  அந்தோனி  லோக்  ஆகியோருடன்  மேலும்  29  இளைஞர்களும்  கைது  செய்யப்பட்டது  நாட்டில் …

தலைவர்களை மாற்றுவது நல்லதல்ல: ஹிஷாமுடின் எச்சரிக்கை

மற்ற  நாடுகளும்  தலைவர்களை  மாற்றியுள்ளன. ஆனால், அவற்றின்  பிரச்னைகள்  தீரவில்லை, சொல்லப்போனால் மேலும்  மோசமடந்துள்ளன  எனத் தற்காப்பு அமைச்சர்  ஹிஷாமுடின்  எச்சரிக்கிறார். நேற்றிரவு  பெர்மாத்தாங்  பாவில்  பேசிய  ஹிஷாமுடின் லிபியா,  ஈராக், எகிப்து  ஆகிய  நாடுகளின்  முன்னாள் தலைவர்கள் முவாமாமார்  கடாபி, சடாம்  உசேன், ஹுஸ்னி  முபாராக்  ஆகியோருக்கு …

பிகேஆர் தேர்தல் இயந்திரத்தின்மீது டிஏபி அதிருப்தி

பிகேஆர், பெர்மாத்தாங்  பாவில் அதன்  தேர்தல் இயந்திரத்தைச்  சீர்படுத்திக் கொள்ளாவிட்டால்  தேர்தல்  பரப்புரையினின்றும்  விலகிக்  கொள்ளப்போவதாக  பினாங்கு  டிஏபி மருட்டல் விடுத்துள்ளது. பரப்புரை  செய்வதற்கு பிகேஆரிடமிருந்து  போதுமான  ஆதரவு  கிடைப்பதில்லை என  பக்கத்தான்  ரக்யாட்டின்  மூத்த  தலைவர்  ஒருவர்  சொன்னார்- அதுவும்  குறிப்பாக  இந்தியர்களிடையே  பரப்புரை  செய்வதற்கு. பெர்மாத்தாங்…

அம்பிகாவுக்கு போலீஸ் சம்மன்ஸ்

  இன்று முன்னேரத்தில் ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதற்காக வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகாவை விசாரிப்பதற்காக போலீசார் அவரை இன்றிரவு தடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரி இதனை தமது வழக்குரைஞரிடம் கூறியுள்ளதாக அம்பிகா மலேசியாகினியிடம் தெரிவித்தார். "நான் இன்னும் சிறிது நேரத்தில் டாங் வாங்கி…

பெர்மாத்தாங் பாவில் குவான் எங், கஜாங்கில் அஸ்மின்

பக்கத்தான்  ரக்யாட்  வேட்பாளர்  டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில் காஜாங்  பெர்மாத்தாங்  பாவ்  ஆகிய  இரண்டு  தொகுதிகளுக்கும்  நேரத்தை  ஒதுக்குவது  ஒரு   பிரச்னையாக  இருக்குமா? கவலையே  வேண்டாம். பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்   அஸ்மின்  அலியும்  அவருக்கு  உதவிக்கரம் நீட்டுகிறார்கள். நேற்றிரவு …

போலீசிடம் தப்பி ஓடுபவர் அரசியல்வாதிகளுடன் ‘தோள் உரசுகிறார்’

யுபுன் நிறுவனத்தின்  தலைவர்  தாய் கிம்  லெங்,  தாய்லந்து  போலீசாரால்  தேடப்படும்  ஒரு  நபராக  இருக்கலாம்  அனால், மலேசியாவில்  அவர்  ஒரு  பெரிய  ஆள். தாய்லாந்தில் அவரைப்  பிடிப்பதற்கு  கைது  ஆணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘டத்தோ  டேனியல்  தாய்’  என்று  தம்மை  அழைத்துக்கொள்ளும்  அவர், முன்னாள்  மசீச  தலைவர் …

புத்தகக் கண்காட்சியில் உள்துறை அமைச்சு நூல்களைப் பறிமுதல் செய்தது

உள்துறை  அமைச்சு  நேற்று, கோலாலும்பூர்  அனைத்துலக  புத்தகக் கண்காட்சியில் கெராக்புடாயா  வெளியீட்டகத்திடமிருந்து  30 நூல்களைப் பறிமுதல்   செய்தது. பறிமுதல்  செய்யப்பட்ட  நூல்களில்  சில, சந்தையில் பல  ஆண்டுகளாகவே இருந்து  வருவதாகவும்   வெளிப்படையாகவே  விற்பனை  செய்யப்பட்டு  வருவதாகவும்  கெராக்புடாயாவின் ஒருங்கிணைப்பாளர் இங்  யாப்  ஹுவா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். அதிகாரிகள்  குர்ஆன் …

மே தினம் 2015

      மே தினம் நல்வாழ்த்துகள் மலேசிய தொழிலாளர்கள் மற்றும் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் செம்பருத்தி.கோம் அதன் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.   தொழிலாளர் தினமான இன்று மலேசிய தொழிலாளர்கள் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மலேசிய தொழிற்சங்க இயக்கம் முன்னேற்றம் காணவில்லை. 1948…

லிங்கின் மனைவி: சொங் வேய்க்கு ஊக்க மருந்து கொடுத்தது நானல்ல

நாட்டின்  முதல்நிலை  பூப்பந்து  ஆட்டக்காரரான  லீ  சொங்  வேய்க்குத்  தடைசெய்யப்பட்ட  ஊக்க  மருந்துகளைக்  கொடுத்தவர் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  அல்ல  என்பது  தெளிவாகி  விட்டதால்  இப்போது  அனைவரின்  கவனமும்  இன்னொருவர்மீது  திரும்பியுள்ளது. அவர்தான்  ஒங்  ஈ நா(படத்தில் இடப்பக்கம்  இருப்பவர்). ஒங் மசீச…

சாபாவில் தடைசெய்யப்பட்ட பேரணியை சுஹாகாம் கண்காணிக்கும்

மலேசிய  மனித  உரிமை  ஆணையம்(சுஹாகாம்), சாபா  சென்று  அங்கு நடைபெறும்  மே 1 பேரணியைக் கண்காணிக்கும். அப்பேரணியில்   பல  முக்கிய  அரசியல்வாதிகளும்  சமூக  ஆர்வலர்களும்  கலந்துகொள்வதற்கு அம்மாநில  மெஜிஸ்திரேட்  நீதிமன்றம்  தடை  விதித்துள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது. நாளை  கோலாலும்பூரிலும் பேரணி  நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால்,  இங்கு  நிலைமை  எவ்வளவோ …

அரசு ஒடுக்குமுறையால் பத்திரிகைச் சுதந்திரம் குறைந்தது

குறைகூறுவோர்மீது  போலீஸ்  அடக்குமுறைகள்  அதிகரித்ததால்   பத்திரிகைச்  சுதந்திர  தரவரிசையில்  மலேசியா 142-வது  இடத்துக்கு  இறக்கம்  கண்டுள்ளது. அமெரிக்காவைத்  தளமாகக்  கொண்ட பிரிடம்  ஹவுஸ்  வெளியிட்டுள்ள  2014 பத்திரிகைச்  சுதந்திரம்  மீதான  அறிக்கையில் பாகிஸ்தான், துருக்கி  ஆகிய  நாடுகள்  பெற்றுள்ள  இடமே  மலேசியாவுக்கும்  கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த  பத்தாண்டுகளில்  உலக முழுவதுமே …

மகாதிரும் அம்னோவிடம் 1எம்டிபி பற்றி விளக்க விரும்புகிறார்

பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக் அம்னோ  அடிநிலை  உறுப்பினர்களைச் சந்தித்து  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  பற்றி    விளக்கமளித்ததுபோல்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்   அவர்களைச்  சந்தித்துப்  பேச விரும்புகிறார். இதைத்  தம்  வலைப்பதிவில்  தெரிவித்த  மகாதிர்  அம்னோ அடிநிலை  உறுப்பினர்கள்  இரு  தரப்பு  விளக்கங்களையும்  செவிமடுப்பதுதான்  நியாயமாகும் …

மஸ்லான்: ஜிஎஸ்டி பற்றிப் பேச யாரும் தடைபோடவில்லை

பொருள், சேவை  பற்றிக்  கருத்துரைக்கக்  கூடாது  என்று  அம்னோ  தலைமைத்துவம்  தமக்குக்  கட்டளை இடவில்லை  என்பதை  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  உறுதிப்படுத்தினார். அது  பற்றிப்  பேசக்கூடாது  என்று தடையுத்தரவு  போடப்பட்டிருப்பதாக   ஆஸ்ட்ரோ  அவானியில்  கூறப்பட்டது  பற்றி  வினவியதற்கு அஹ்மட்  இவ்வாறு  கூறினார். அப்படியானால் ஜிஎஸ்டி  பற்றி …

ரோஸ்மா மலர்களுக்காக ரிம3 மில்லியன் செலவிட்டாரா?

டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தாம்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரைத்  தாக்கிப்  பதிவிட்டிருப்பதாகக்  கூறப்படுவதை  மறுத்தார். அவரின்  ஆடம்பர  வாழ்க்கைமுறை  பற்றி  மட்டுமே  கேள்வி  எழுப்பியதாக  முன்னாள்  பிரதமர்  கூறினார். “அவர் (மகளின் திருமணத்தின்போது) மலர் அலங்காரத்துக்கு  மட்டும்  ரிம3 மில்லியன்  செலவிட்டதாக  வதந்திகள் …

பிகேஆர்: அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டாமென்று நஜிப்பிடம் கூற முடியுமா?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அடிக்கடி  வெளிநாடுகளுக்குச்  செல்கிறாரே  அதைக்  கண்டிக்க  முடியுமா  என்று  பிகேஆர்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினுக்குச்  சவால்  விடுத்துள்ளது. பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  காஜாங்  சட்டமன்ற  உறுப்பினராகவும்  பெர்மாத்தாங்  பாவ்  எம்பியாகவும் இருந்து  சரியான  முறையில்  பணியாற்ற  முடியாது, அதற்கு …

மே 5-இல் பொது விடுமுறை அளிப்பது பற்றி பகாங் ஆலோசனை

பகாங்  மாநில  அரசு, ரொம்பினில்  வாக்காளர்கள்  வாக்களிப்பதை  ஊக்குவிக்க  அடுத்த  செவ்வாய்க்கிழமையை (மே5) பொது  விடுமுறை நாளாக  அறிவிக்கலாமா  என  ஆலோசித்து  வருகிறது. இன்றைய  மாநில  ஆட்சிக்குழுக்  கூட்டத்தில்  அப்பரிந்துரை விவாதிக்கப்பட்டு  முடிவெடுக்கப்படும்  என  மந்திரி  புசார்  அட்னான்  யாக்கூப்  கூறினார். ரொம்பினில் இன்று  ஏழாம்  நாளாக  இடைத்…