பெர்மாத்தாங் பாவில் பாஸ் இளைஞர்கள் திடீர் பல்டி

பினாங்கு பாஸ்  இளைஞர்களிடையே  ஒரு  திடீர்  மாற்றம். பெர்மாத்தாங் பாவ்  இடைத்  தேர்தலின்போது பிகேஆருக்கு  ஆதரவாக  தேர்தல்  பணிகளைச்  செய்யப்போவதில்லை  என்று  கூறி  வந்தவர்கள்  இப்போது  அதன் தேர்தல்  பரப்புரையில்  உதவப்போவதாக  அறிவித்துள்ளார்கள். “பாஸ்  மத்திய தலைமைத்துவ  உத்தரவைப்  பின்பற்றி  பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தலில் உதவுவது  என்று …

இசி: கைதிகள் வாக்களிக்க முடியாது

கைதிகளாக  இருப்பவர்கள்  வாக்களிக்க  முடியாது  என்பதில்  தேர்தல்  ஆணையம்(இசி)  உறுதியாக  உள்ளது. வாக்காளர்  தகுதி  பற்றி  இசி  அரசமைப்பு  விதிகளைத்  தவறாக  புரிந்து  கொண்டிருக்கிறது  என்று  பிகேஆர்  உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன் கூறியதற்கு  ஆணையம்  இவ்வாறு  கூறியுள்ளது. “இசி-இன் நிலைப்பாட்டில்  எந்த  மாற்றமும்  இல்லை”, என இசி  தலைவர் …

சிஐஎம்பி தலைவர்: 1எம்டிபி மக்களின் கவலையைப் போக்க வேண்டும்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி), தேவையான  தகவல்களைத்  தெரிவித்து  கடன்  தொல்லைகளால் பாதிக்கப்பட்டுள்ள  அந்நிறுவனம்  பற்றிய  கவலைகளைப்  போக்க வேண்டும்  என்று  சிஐஎம்பி  தலைவர்  நாசிர்  அப்துல்  ரசாக்  கேட்டுக்கொண்டார். “அதற்கு  என்னிடம்  தீர்வு  இல்லை. ஆனால், எதைச்  சொல்ல  வேண்டுமோ  அதைச்  சொன்னால்  மக்களுக்குத்  தெளிவு  ஏற்படும்.…

வான் அசிசாவை ஆதரியுங்கள்: அன்வார் வாக்காளர்களுக்கு வேண்டுகோள்

பெர்மாத்தாங்  பாவ்  வாக்காளர்களுக்குக்  கடிதம்  எழுதியுள்ள பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  அவர்கள்  எதிர்வரும்  இடைத்  தேர்தலில் தம்  மனைவியும்  பிகேஆர்  தலைவருமான டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயிலுக்கு வாக்களித்து  ஆதரிக்க  வேண்டுமென்று  கேட்டுக்கொண்டிருக்கிறார். அன்வார்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டு  சிறை  சென்றதை  அடுத்து  பினாங்கில் …

முகைதின்: தொகுதிகளைக் கவனிக்க வான் அசிசாவுக்கு நேரமிருக்குமா?

பிகேஆர் தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில், அரிதாகவே  காஜாங்  செல்கிறார். இவ்வளவுக்கும் அவர்தான்  காஜாங்கில்  சட்டமன்ற  உறுப்பினர். அதற்கே  நேரமில்லாத  அவருக்கு பெர்மாத்தாங்  பாவ்  தொகுதி  மக்களின்  நலனையும்  கவனித்துக்கொள்ள  நேரமிருக்குமா? இன்று பெர்மாத்தாங்  பாவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  இக்கேள்வியை  முன்வைத்த  துணைப்  பிரதமர்  முகைதின் …

மார்ச் 28 ஆர்ப்பாட்டம் தொடர்பில் பெர்சே இருவர் கைது

பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லாவும்  அதன் செயலக  உறுப்பினர்  மந்திப்  சிங்கும்  மார்ச்  28-இல்  நடைபெற்ற  கித்தா  லவான் பேரணி  தொடர்பில்  இன்று  கைது  செய்யப்பட்டனர். வாக்குமூலப்  பதிவுக்காக டாங்  வாங்கி  மாவட்ட  போலீஸ்  தலைமையகத்துக்கு  அழைக்கப்பட்டிருந்த  அவர்கள்  காலை  11 மணிக்கு  அங்கு  சென்றபோது கைது  …

பாக் லா: நஜிப் வாய் திறந்து பேச வேண்டும்

நஜிப்  அப்துல்  ரசாக் வாய்திறந்து  பேசாமல்  மெளனமாக  இராமல் முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  குறைகூறல்களுக்கு  எதிர்வினை  ஆற்றத்தான்  வேண்டும்  என்கிறார் முன்னாள்  பிரதமரான  அப்துல்லா  அஹமட் படாவி. “நஜிப்  ஏதாவது  செய்தாக  வேண்டும். பிரதமராக  இருப்பவருக்கு  மக்களுக்குத்  தகவலளிக்கும் பொறுப்பு  உண்டு”, என இன்று  கோலாலும்பூரில் …

உதவிக்காகக் காத்திருக்கிறார்கள் நேப்பாளிகள்: மாண்டவர் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டியது

நில  நடுக்கத்தால்  அதிர்ச்சி  அடைந்த  நேப்பாளிகள்  அந்நெருக்கடிக்கு  எதிராக  அரசாங்கம்  மெதுவாக  செயல்படுவதாகக்  கூறி  ஆத்திரமடைந்துள்ளனர். சனிக்கிழமை  சக்தி  வாய்ந்த  நிலநடுக்கத்தால் தாக்குண்ட  நேப்பாளத்துக்கு  இப்போதுதான்  அனைத்துலக   உதவிகள்  வரத்  தொடங்கியுள்ளன. நில  நடுக்கத்தில்  உயிரிழந்தவர்  எண்ணிக்கை  4010 என்றும்  7,598  பேர்  காயமடைந்திருப்பதாகவும் காட்மண்டுவில்  உள்துறை  அமைச்சு …

நேப்பாள நிலநடுக்கத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய மலேசியர்

சனிக்கிழமை  நேப்பாளத்தை  நில  நடுக்கம் தாக்கியபோது ஒரு விற்பனை  நிர்வாகியான  லோய்  யுன்  கிங், ஒரு கட்டிடத்தின்  இடிபாடுகளில்  புதையுண்டு  மாண்டு  போயிருப்பார்-  அவர்  மட்டும்  விரைந்து  செயல்படாமல்  இருந்திருந்திருந்தால். லோயும்  அவரின்  நண்பரான  சீன நாட்டவர்  ஒருவரும்  ஒரு  சுற்றுலா  வழிகாட்டியுடன்  உணவகம்  ஒன்றில் பசியாறிக்  கொண்டிருந்தனர்.…

அசிசா குடும்பத் தலைவியாக இருக்கத்தான் இலாயக்கு என்று சொல்லவில்லை: சியு…

பெர்மாத்தாங் பாவ் பினாங்கு  மசீச தலைவர் சியு  மெய்  பன், பிகேஆர்  வேட்பாளர்  டாக்டர் வான் அசிசா  வான்  இஸ்மாயிலை ஒரு  குடும்பத்தலைவி  என்று  சொல்லப்போக  அது  மசீச, பக்கத்தான்  தலைவர்களுக்கிடையில்  ஒரு  சர்ச்சையாக  உருவெடுத்துள்ளது. குடும்பத்துக்கு,  அதுவும்  குறிப்பாக  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்ட அவரின்  கணவர்  அன்வார்  இப்ராகிமுக்கு …

சாமிவேலு: ஏழைகள் மீது அனுதாபம் கொண்டவர் நஜிப்

  தற்போது கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் பிரதமர் நஜிப்பை முன்னாள் மஇகா தலைவர் ச. சாமிவேலு தற்காத்துப் பேசினார். நஜிப் ஏழை மக்கள் மீது அனுதாபம் கொண்டவர் என்றாரவர். நஜிப் மக்களைச் சந்தித்து பேசுகிறவர், ஏனென்றால் அவர் நல்ல மனம் படைத்தவர் என்பதோடு "அவர் ஏழைகள் மீது அனுதாபம்…

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 28-ஆம் தமிழ் விழா

        வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 28-ஆம் தமிழ் விழா   Please like www.facebook.com/fetnaconvention to get up to date news. Registration Open Now for FeTNA 2015 - Tamil Vizha!! * 10% discount ends…

தெங்கு ரசாலியே பிரதமராவதற்குத் தகுதி படைத்தவர்: மகாதிருக்கு ஜைட் பரிந்துரை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலகினால் அவரது  இடத்துக்கு  முகைதின்  யாசின்  பொருத்தமான  தேர்வாக  இருக்க  மாட்டார்  என  நினைக்கிறார்  ஜைட்  இப்ராகிம். நடப்பு  துணைப்  பிரதமர்  நாட்டைச்  சீர்படுத்துவார்  என்றோ  கடந்த  சில  ஆண்டுகளில்  நஜிப்பால்  நாட்டுக்கு நேர்ந்த  தீங்குகளைக்  கலைவார்  என்றோ முன்னாள்  சட்ட …

‘ஷரிசாட், ஜாஹிட்டின் குத்தல் பேச்சுகள் வெறுப்பேற்றுகின்றன’

பெர்மாத்தாங்  பாவில்  சுஹாய்மி  சபுடினுக்காக  பரப்புரை செய்யும்  பிஎன் தலைவர்கள் கூட்டத்தினரைக்  கவர்வதற்காக  பாலியல்  ஜோக்குகள் சொல்வதை வழக்கமாகக்  கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதை  எல்லாரும்  இரசிக்கிறார்கள்  என்று  சொல்வதற்கில்லை. பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர்  ஸுரைடா  கமருடின், அம்னோ  மகளிர்  தலைவர் ஷரிசாட்  ஜலில், அம்னோ  உதவித்  தலைவர் …

பாஸ் உதவித் தலைவர்: நஜிப்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்

பக்கத்தான்  எம்பிகள்  பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக்குக்கு  எதிராக  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவர  வேண்டும்  என பாஸ்  உதவித்  தலைவர்  ஷுசாம்  மூசா  பரிந்துரைத்துள்ளார். அதையும்  அம்னோ, பிஎன்  உதவியுடன்  செய்ய  வேண்டுமாம். டாக்டர்  மகாதிர்  அம்னோவை  வலுப்படுத்த  நினைக்கையில், 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தால்  நாடு  அழிந்து  போகாமல்  காக்க …

போலீஸ் தொல்லை கொடுப்பதாக பிகேஆர் தேர்தல் பணியாளர்கள் புகார்

பெர்மாத்தாங்  பாவ் இடைத்  தேர்தலையொட்டி  பிகேஆர்  அத்தொகுதியில்  செராமாக்கள்  நடத்திவரும்  வேளையில்  போலீசார்  அக்கட்சியின்  தேர்தல் பணியாளர்களை அழைத்து  விசாரணை நடத்துவதாக  மாசாங்  பூபோக்  சட்டமன்ற உறுப்பினர்  லீ  காய்  லூன்  கூறினார். “கட்சித்  தொண்டர்களை  விசாரணைக்காக  போலீஸ்  நிலையத்து  வருமாறு  கூறி  போலீஸ்  தொல்லை  கொடுக்கிறது”, என …

மே7 பினாங்கில் பொது விடுமுறை: சிஎம் அறிவிப்பு

பெர்மாத்தாங்  பாவ்  வாக்களிப்பு  நாளான  மே 7-ஐ  மாநில  பொது  விடுமுறை நாளாக பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங் அறிவித்தார். அது  மாநில  ஆட்சிக்குழுவின்  முடிவு  என்றும்  பெர்மாத்தாங்  பாவில்  வாக்களிப்பு  சுமூகமாக  நடப்பதை  உறுதிப்படுத்த  அவ்வாறு  செய்யப்படுவதாகவும்  அவர்  சொன்னார். “முதலாளிமார்  இதைக்  கவனத்தில்  கொள்ள …

பாஸ் உலாமா: கட்சி அதிருப்தியாளர்கள் புதிய கட்சி அமைக்க வேண்டாம்

பாஸ்  உலாமாவும்  கட்சித்  தலைவர் பதவி போட்டியாளருமான அஹ்மட்  ஆவாங், அதிருப்தியுற்ற கட்சி  உறுப்பினர்கள் ஒரு  புதிய  கட்சியை  அமைக்க  வேண்டிய  அவசியமில்லை  என்கிறார். அதாவது  அவர்கள்  கட்சியில்  இருந்துகொண்டே கட்சிக்காக  போராட  வேண்டும்  என்றவர்  கூறுகிறார். ஜூன் மாதம், பாஸ்  ஆண்டுக்  கூட்டம்  முடிந்து   தேவையென்றால்  புதிய…

வாக்காளர் ஆதரவு சுஹாய்மிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது

பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தலில் களமிறங்கும்  பிஎன்  வேட்பாளர்  சுஹாய்மி  சபுடினுக்கு  தேர்தலில்  வெற்றிபெறும்  நம்பிக்கை  முதலில்  இல்லை  ஆனால், இப்போது வந்திருக்கிறது. அத்தொகுதில்  வாக்காளர்களைச்  சந்தித்த  பிறகு  அவருக்கு  இந்த  நம்பிக்கை  வந்திருக்கிறது. “நான்தான்  பிஎன்  வேட்பாளர்  என்று கூறியதும்  அதற்கு  எதிர்வினையாக,   உதவுவதாக  அதாவது  பிஎன்னுக்கு …

ஹுடுட் சர்ச்சை இல்லை; பெர்மாத்தாங் பாவில் பிகேஆரும் பாஸும் கைகோத்து…

பாஸ்  துணைத்  தலைவர் முகம்மட்  சாபு,   பிகேஆர்  ஹுடுட்-டை  ஆதரிக்காததற்காக பெர்மாத்தாங்  பாவ்  பாஸ்  தொகுதியிடம்  மன்னிப்பு  கேட்டதாகக்  கூறப்படுவதை  மறுத்தார். அச்சர்ச்சைக்குத்  தீர்வு  காணப்பட்டு  விட்டது  என்றாரவர். மே 7  நாடாளுமன்ற  இடைத்  தேர்தலில்  பிகேஆர்  வேட்பாளர்  டாக்டர் வான்  அசிசாவை  ஆதரிக்க  பெர்மாத்தாங்  பாவ் பாஸ் …

தேவாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களை மன்னித்தது

ஒரு வாரத்துக்குமுன்  ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து  தன்  கட்டிடச் சுவரிலிருந்து  சிலுவையை  அகற்றிய பின்னர்  அச்சம்பவம்  பற்றி  இதுவரை  எதுவும் பேசாதிருந்த பெட்டாலிங்  ஜெயா  கம்முனிடி  அப் பிரேய்ஸ் தேவாலயம்  இப்போது  முதல்முறையாக மெளனம்  கலைந்துள்ளது. தேவாலயத்தின்  மூத்த  பாதிரியார்  பால்  பாக்கியநாதன், ஆர்ப்பாட்டக்காரர்களை  “மன்னிக்க”   தேவாலயம்  முடிவு …

‘மகாதிருக்கே ஜிஎஸ்டி புரியவில்லை என்றால் மக்களின் நிலை என்ன?’

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கு  பொருள், சேவை  வரி (ஜிஎஸ்டி) புரியவில்லை  என்று கூறி  அவரைச்  சிறுமைப்படுத்தியுள்ளதாக  நிதி துணை அமைச்சர்  அஹ்மட்  மஸ்லானைக் கடுமையாக  திட்டியிருக்கிறார் பெர்லிஸ்  முப்தி  முகம்மட்  அஸ்ரி  சைனுல்  அபிடின். “டாக்டர் எம்முக்கே  ஜிஎஸ்டி  புரியவில்லை  என்கிறபோது  தேசிய  பொருளாதாரத்தில்  அவரளவுக்கு …