சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் தாமதமாவது மக்கள் நம்பிக்கையைப் பாதிக்கிறது

டிஏபி தலைமைச்  செயலாளர் லிம் குவான் எங்,  சிலாங்கூரில் புதிய அரசை விரைவாக அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்று விட்டதை அவர் சுட்டிக்காட்டினார். எந்தக் கட்சியிலும் உள்தகராறு இருப்பது இயல்பே என்று குறிப்பிட்ட அவர், அது மாநில நிர்வாகத்தைப் பாதிக்கும் அளவுக்குச்…

ராயிஸ்: பிஎன் இழப்புக்கு கெராக்கானும் மசீச-வும் ஒரு பகுதி காரணம்

13வது பொதுத் தேர்தலில் பிஎன் இழப்புக்கு மசீச-விலும் கெராக்கானிலும் நிலவிய 'உட்பூசலும்' காரணம் என முன்னாள் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். "உண்மையாகச் சொன்னால் பாரிசான் நேசனல் இழப்புக்கு மசீச-வும் கெராக்கானும் ஒரு பகுதி காரணம்," என அவர் சொன்னார். "உட்பூசல், புரிந்துணர்வு இல்லாதது,…

‘நிலைமை சரியாகும்வரை’ சொய் லெக் பதவி விலக மாட்டார்

உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஒதுக்கித்தள்ளினார். சரியான நேரத்தில்தான் விலகப்போவதாக அவர் சொன்னார். “இவர்கள் கட்சிமீதுள்ள பாசத்தால் அவ்வாறு கோரிக்கை  விடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பெரும்பாலானோர் நான் தொடர்ந்து இருப்பதை விரும்புகிறார்கள். “இது பற்றி…

கர்பால்: பிஎன் பக்காத்தானில் சேர்வது நன்றாக இருக்கும்

டிஏபி,  பிஎன்னில்  சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய  அதன் தலைவர் கர்பால் சிங், வேண்டுமானால்  பக்காத்தானில் சேர்வது பற்றி பிஎன் ஆலோசிக்கலாம் என்று கிண்டலடித்தார். “அப்படி  (பிஎன்னில்  சேர)  முடிவு செய்யப்பட்டால் டிஏபி-யைவிட்டு முதலில் வெளியேறுவது நானாகத்தான் இருப்பேன்.  நீங்கள் அனைவருமே நான் சொல்வதை ஒப்புக்கொள்வீர்கள்…

கோ சூ கூன் பதவி துறக்கிறார், கெராக்கான் அமைச்சரவையில் சேராது

கெராக்கான் கட்சித் தலைவர் கோ சூ கூன் -னும் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் -வும் அடுத்த வாரம் தங்கள் கட்சிப் பதவிகளிலிருந்து விலகிக் கொள்கின்றனர். கோலாலம்பூரில் இன்று கட்சித் தலைமையகத்தில் சக கெராக்கான் தலைவர்களை சந்தித்த பின்னர் கோ அந்தத் தகவலை அறிவித்தார். 13வது பொதுத்…

பாயான் பாருவில் வாக்குகள் வாங்கப்பட்டதாக இசி-யிடம் புகார்

பினாங்கு பிகேஆர் தலைவர்கள் இருவர், “வாக்குகள் வாங்கப்பட்டது” பற்றி மாநில தேர்தல் ஆணைய (இசி) அலுவலகத்தில் நேற்று புகார் செய்தனர். பாயான் பாரு தொகுதியில் அந்தச் சந்தேகத்துக்குரிய சம்பவம் நடந்ததைத் தாங்கள் நேரில் கண்டதாக அவர்கள் கூறினர். மாநில பிகேஆர் உதவித் தலைவர் அப்துல் ஹாலிம் உசேன் (வலம்…

பிஎன்னில் சேரப்போவதில்லை: டிஏபி திட்டவட்டம்

தேர்தலில் படுதோல்வி கண்டதால்  அமைச்சரவை பதவி ஏற்கப்போவதில்லை என்று மசீச கூறியிருப்பதால் டிஏபி பிஎன்னில் சேர வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் ஆலோசனைகளை அக்கட்சி நிராகரித்தது. அது பக்காத்தானின் ஒற்றுமையை உடைக்க பிஎன் கையாளும் ஒரு தந்திரம் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். “பதவிக்காக…

தேர்தல் ‘மோசடிக்காக’ இசி தலைவர் பதவி விலக வேண்டும் என…

அண்மையில் முடிவடைந்த 13வது பொதுத் தேர்தலில் 'மோசடிகள்' நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது  தொடர்பில் தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி துறக்க  வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றைச் சமர்பிப்பதற்காக புத்ராஜெயாவில் உள்ள அந்த  ஆணையக் கட்டிடத்திற்கு முன்பு இளைஞர் அமைப்புக்கள் இன்று கூடின.…

இசி: தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு இவ்வாண்டு இறுதியில் மேற்கொள்ளப்படும்

தேர்தல் மனுக்கள் (எதுவும் இருந்தால்) மீதான நீதிமன்ற விசாரணைகள் முடிந்ததும் இவ்வாண்டு இறுதி வாக்கில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுசீரமைப்புச் செய்யும் நடவடிக்கையை தேர்தல்  ஆணையம் தொடங்கும். தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்புப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக தேர்தல் மனுக்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்காக ஆறு மாதம் வரை…

‘தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மூலம் பிஎன் அதிகாரத்தில் நீடிக்க…

நடப்பு தேர்தல் முடிவுகளைக் கருத்தில் கொண்டால் தேர்தல் ஆணையம் இவ்வாண்டு மேற்கொள்ள வேண்டிய  தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மட்டுமே அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு பிஎன் -னுக்கு உள்ள  ஒரே நம்பிக்கை என டிஏபி தேர்தல் சாணக்கியர் ஒங் கியான் மிங் கூறுகிறார். மிகவும் குறுகிய பெரும்பான்மையில் பிஎன்…

மந்திரி புசார் பதவி தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் கட்சித்…

சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பதை முடிவு செய்யும் போது சிலாங்கூர் பிகேஆரின் கருத்துக்களை ஒதுக்கி விட்டதாக கட்சித் தலைமைத்துவத்தை அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி  சாடியுள்ளார். சிலாங்கூர் பிகேஆர் இணக்கம் இல்லாமல் கட்சித் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் பராமரிப்பு…

‘ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் பேரணி நடத்த வேண்டுமா?’

தேர்தல் மோசடிகளை வேறு வழிகளில் கையாள வேண்டும், அதனால்தான் கறுப்பு 505 பேரணியை ஆதரிக்கவில்லை என டிவிட்டரில் பதிவிட்டிருந்தாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று  தெளிவுபடுத்தினார். பக்காத்தான் ரக்யாட் பேரணி நடத்துவதற்குப் பதிலாக தேர்தல் மோசடி பற்றிய தகவல்களைச் சேகரித்து தேர்தல் முறையீடு செய்வதில் கவனம்…

அமைச்சரவையில் எந்தப் பதவி கொடுத்தாலும் ஏற்க கைரி தயார்

“அவருக்கு (பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்)  உதவியாக எந்தப் பதவி கொடுத்தாலும் ஏற்பேன். முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன்”, என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். அமைச்சரவையில் இளைஞர்களின் பிரதிநிதியாக அவரும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு சொன்னார். நேற்றிரவு பெர்னாமா…

அஸ்மின்: பிகேஆர் கட்சியில் நான் தொடருவேன், மந்திரி புசார் பதவி…

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எல்லா ஊகங்களையும் மறுத்து தாம் தொடர்ந்து கட்சியில் இருக்கப்  போவதாக அறிவித்துள்ளார். கோம்பாக் எம்பி-யாகவும் புக்கிட் அந்தாரா பாங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் தம்மைத் தேர்வு செய்த மக்களுடைய நம்பிக்கைக்கு தாம் துரோகம் செய்யப் போவதில்லை என்றும் அவர் சொன்னார். "தொடர்ந்து கனவு…

டிஏபி: மலாய்க்காரர்களும் பக்காத்தானுக்கு ஆதரவு அளித்தனர்

அண்மைய தேர்தலில் வீசிய 'மலேசியர் சுனாமியில்' மலாய்க்காரர்களும் பக்காத்தான் ராக்யாட்டுக்கு  வாக்களித்தனர் என்று டிஏபி தேர்தல் சாணக்கியர் ஒங் கியான் மிங் இன்று கூறிக் கொண்டுள்ளார். மலாய்க்காரர்கள் 70 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும் பெர்லிஸ், திரங்கானு, பாகாங் போன்ற மாநிலங்களில்  அந்த நிலை காணப்படுகின்றது என அவர் சொன்னார்.…

உங்கள் இடத்தை நினைவில் வைத்திருங்கள் என அஸ்மினுக்கு சிலாங்கூர் பாஸ்…

சிலாங்கூரில் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் நிலவும் ஐக்கியத்தைச் சீர்குலைக்கக் கூடிய  ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடும் பல மூத்த மாநில பிகேஆர் தலைவர்க குறித்து அந்த மாநில பாஸ்  இளைஞர் பிரிவு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் அந்த விவகாரம் மீது அம்னோ பல்லவிக்கு ஏற்ப பேசுவதற்கு முன்னர்…

பாராட்டுக் கூட்டம் காலிட்-ஆதரவு கூட்டமாக மாறியது

சிலாங்கூரைத் தக்கவைத்துகொண்டதைப் பாராட்டுவதற்காக நேற்றிரவு பக்காத்தான் ரக்யாட் ஏற்பாடு செய்த கூட்டம், காலிட் இப்ராகிம் மீண்டும் மந்திரி புசார் ஆவதற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமாக மாறியது. சிலாங்கூர் பாஸ் தலைவர் டாக்டர் அப்துல் ரனி ஒஸ்மான், பிகேஆர் செனட்டர் போன்றோர் முடிவெடுக்கும் பொறுப்பைப் பக்காத்தான் ரக்யாட்டிடம் விட்டு விடுங்கள்…

கறுப்பு புதன் கிழமை கூட்டம் மக்கள் வெற்றி பெற்றதைக் காட்டுகின்றது

உங்கள் கருத்து : 'நான் அங்கு இருந்தேன். பிஎன் மீதும் அதன் இனவாதப் போக்கு மீதும் வெறுப்புணர்வு அங்கு நிலவியது.  காலம் மாறுகின்றது' 13வது பொதுத் தேர்தலுக்குப் பிந்திய கூட்டத்தில் 120,000 பேர் ஒடின்: அந்தப் பேரணியை நடத்துவதற்கான முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக நல்ல ஏற்பாடுகளைச்…

இந்தியர்களின் 60 விழுக்காடு வாக்குகள் பக்காத்தானுக்கு கிடைத்தது, சேவியர்

இந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் இந்தியர்களின் ஓட்டு 60 விழுக்காடு பாரிசானுக்கு கிடைத்தாகக் கூறி,  சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் சுப்ரமணியம்  இந்தியர்களை  அவமதிக்கக் கூடாது என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். இந்திய சமுதாயத்தின் வாக்குகள் பெரும்பகுதி  பாரிசானுக்கு  கிடைத்திருந்தால்  பாரிசானுக்கு தேசிய அளவிலும், சிலாங்கூர் மாநிலத்திலும்கூட…

‘அஸ்மின் அலி பக்காத்தானை விட்டு வெளியேறத் தயாராகிறாரா?’

அன்வார் இப்ராஹிமின் வலது கரம் எனக் கருதப்படும் முகமட் அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்தும்  பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவதற்குத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகின்றது. "பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் சிலாங்கூர் ஆட்சி மன்ற இடங்கள் ஒதுக்கீடு குறித்து மனநிறைவு  கொள்ளாததால்" அவர் கூட்டணியிலிருந்து விலக விரும்புவதாக கட்சி…

நஜிப் கருத்துக்கள் பொருத்தமானவை அல்ல என கூட்டமைப்பு ஒன்று கூறுகின்றது

13வது பொதுத் தேர்தல் முடிவுகளை 'சீனர் சுனாமி' என்று வருணித்தும் உத்துசான் மலேசியா வெளியிடும்  'மறைமுகமான இனவாத கருத்துக்களை' தற்காத்தும் பேசியுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 25 அரசு  சாரா  அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்று சாடியுள்ளது. உத்துசான் மலேசியாவும் மற்ற தரப்புக்களும் வெளியிட்டுள்ள நஜிப்பின் அறிக்கை மலேசிய…

கிட் சியாங் பிஎன்னில் சேரும் ஆலோசனையை ‘ஆராயத் தயாராக இல்லை’

டிஏபி பெருந் தலைவர், லிம் கிட் சியாங், புதிய அரசாங்கத்தில் டிஏபி-இன் பங்காற்றுவது குறித்து பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் கட்சி அவை பற்றி விவாதிக்கவில்லை என்றும் தம்மைப் பொறுத்தவரை அப்பரிந்துரையை ‘எண்ணிப் பார்க்கத் தயாராக இல்லை’ என்றும் கூறியுள்ளார். “எந்தவொரு பரிந்துரையையும் நான் பரிசீலிக்க நினைக்கவில்லை”, என்று…

பினாங்கு சட்டமன்றத் தலைவராக சீனர் ஒருவர் நியமனம்

பினாங்கு சட்டமன்றத்துக்கு முதல்முறையாக சீனர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பினாங்கு பிகேஆரின் மாநில துணைத் தலைவர் லாவ் சூ கியாங் சட்டமன்றத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் மன்சூர் ஒஸ்மான், உறுதிப்படுத்தினார். டேவான் ஸ்ரீபினாங்கில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர்…