முன்கூட்டிய வாக்குகளைக் கொண்டிருந்த பெட்டிகள் முறையாக பாதுகாக்கப்பட்டனவா?

முன்கூட்டி அளிக்கப்பட்ட  வாக்குகளையும் அஞ்சல் வாக்குகளையும் கொண்ட பெட்டிகள்,  அழியா மையுடனும் வாக்களிப்பு நாளில் பயன்படுத்தப்படுவதகான வாக்குச் சீட்டுகளுடனும் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தபோது பாதுகாப்பையும் மீறி எதுவும் நடந்திருக்கலாம் என  ஐயுறுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் புஸியா சாலே. தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப், வேட்பாளர்களின் பிரதிநிதிகள்…

பார்வையாளர்கள்: பொதுத் தேர்தலில் ஓரளவு சுதந்திரம் இருந்தது ஆனால், நியாயமாக…

13வது பொதுத் தேர்தலில் பார்வையாளர்களாக அங்கீகரிப்பட்ட சிந்தனைக் குழுக்களான CPPS / Asli and Ideas ஆகியவை வெளியிட்டிருக்கும் இடைக்கால அறிக்கை, ‘தேர்தலில் ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், நியாயமாக நடத்தப்படவில்லை’ எனக் கூறியுள்ளது. “எங்கள் மதிப்பீட்டு அளவு அனைத்துலக நாடாளுமன்ற சங்க(ஐபியு)ப் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டது. “மலேசியா…

பினாங்கு மசீசவில் கிளர்ச்சி, கெராக்கான் சேவை மையங்களை மூடுகிறது

13வது பொதுத் தேர்தலில் படுதோல்வி கண்டதை அடுத்து பினாங்கு மசீசவில் கிளர்ச்சி உருவாகியுள்ளது. கெராக்கான் அதன் சேவை மையங்களை மூடி வருகிறது. பாயான் பாருவில் நிறைய சேவையாற்றி வந்துள்ளபோதிலும் வேட்பாளராக நியமிக்கப்படாத அத்தொகுதி மசீச தலைவர் டேவிட் லிம்,  இன்று செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவார். அதில் கட்சித் தலைவர்…

அன்வார் தொடர்ந்து போராட வேண்டும் – கா. ஆறுமுகம்

தேர்தல் பற்றி சுவராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். 1. தேர்தல் முடிவுகள் பற்றி பொதுவான கருத்து என்ன? பிரதமர் நஜிப்பின் அள்ளிக் கொடுக்கும் திட்டங்களும், பணப்பட்டுவாடாவும், ஒருதலைப்பட்ச ஊடகங்களும், தேர்தல் ஆணையத்தின் மலட்டுத்தனமும் ஒரு வகையில் மக்களின் தேர்வாக அமைய வேண்டிய இந்த தேர்தலை மக்களிடம் இருந்து…

மகாதிர்: நஜிப்பின் அடைவுநிலை அப்துல்லாவைவிட மோசமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை

பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு முன்னிருந்த அப்துல்லா அஹ்மட் படாவியைவிட மோசமாக சாதிப்பார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். அப்துல்லா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த வந்தவரான மகாதிர், 12வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு 140 இடங்களைப்…

ஐபிஎப் தேர்தல் விளம்பரம், நம்மை அழ வைக்கிறது!

விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின்  மகன் பாலச்சந்திரன் படத்துடன் “ இந்நிலை யாருக்கும் வேண்டாம்” என்ற தலைப்புடன் ஐபிஎப் கட்சி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரம் பலரின் மனதை நோகடித்துள்ளது. இந்த விளம்பரத்தை மு.வீ. மதியழகன் செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நிலை யாருக்கும் வரக் கூடாதுதான். ஆனால் இந்த…

அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ கைது செய்யப்பட்டார்

அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ கைது செய்யப்பட்டுள்ளதாக அரச மலேசியப் போலீஸ்  படை டிவிட்டரில் அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவாளர் கிங் ஜேசனும் கைது செய்யப்பட்டுள்ளார். "போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக பாப்பாகோமோ-வும் கிங் ஜேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர்," என  அந்த டிவிட்டர் பதிவு கூறியது. பாப்பாகோமோ…

முறைகேடான தேர்தலுக்கு எதிராக முகநூலில் அணிசேரும் இளைய சமுதாயம்

முறைகேடான முறையில் 13-வது பொதுத் தேர்தல் நடந்துள்ளதாக கூறி மலேசியர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் முகநூல் (Facebook) வழி தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்கள் பொதுத்தேர்தல் முடிவுகளை புறக்கணிக்கும் வண்ணம் முகநூலில் தங்களது சுயவிபர படங்களையும் (Profile Pictures) கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளனர். இதனால் முகநூல் எங்கும்…

இசி: பொதுத் தேர்தல் முடிவுகளை ஆட்சேபிக்க சாலை ஆர்ப்பாட்டம் வேண்டாம்

13வது பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி அடையாத வேட்பாளர்கள் அல்லது மலேசியக் குடிமக்கள்  தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவிக்க சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது. மாறாக உயர் நீதிமன்றத்தில்  மனுக்களை சமர்பிப்பதின் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்துக் கொள்ள முடியும். இவ்வாறு தேர்தல் ஆணையத் துணைத்…

‘உத்துசான் தலைப்புச் செய்திக்கு நஜிப்பே பொறுப்பு’

அம்னோ தலைவர் என்ற முறையில் நஜிப் அப்துல் ரசாக்தான், அக்கட்சிக்குச் சொந்தமான நாளேடு உத்துசான் மலேசியாவின் முதல்பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வெளியிடப்பட்டிருந்த ‘Apa lagi Cina mahu?’(சீனர்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும்) என்ற தலைப்புச் செய்திக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் அன்வார் இப்ராகிம். “அவர்கள் நஜிப் சொல்வதைக் கேட்பவர்கள்.…

பிஎன் ஆதரவாளர்களிடமும் நியாயமாக நடந்து கொள்வதாக குவான் எங் வாக்குறுதி

முதலமைச்சர் லிம் குவான் எங், தமது பினாங்கு மாநில அரசாங்கம், ஞாயிற்றுக் கிழமை தேர்தலில் பிஎன் -னுக்கு ஆதரவு அளித்தவர்கள் உட்பட மாநிலத்தில் உள்ள எல்லா குடி மக்களிடமும் நியாயமாக நடந்து  கொள்ளும் என வாக்குறுதி அளித்துள்ளார். பினாங்கு மாநில முதலமைச்சராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு இன்று பதவி உறுதிமொழி…

உத்துசானின் முதல்பக்கச் செய்தியால் ஆத்திரமடைந்த வலைமக்கள் டிவிட்டரில் சாடல்

இன்றைய உத்துசான் மலேசியா, ‘Apa lagi Cina mahu?’(சீனர்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும்) என்ற தலைப்பில் அதன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது  அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா உள்பட பலரையும் ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. அவர்கள் டிவிட்டரில் பதிவிட்டு தங்கள் ஆத்திரத்தைக் கொட்டியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் …

தேர்தல் மோசடிகளை புலனாய்வு செய்யும் குழுவுக்கு ராபிஸி தலைமை தாங்குவார்

13வது பொதுத் தேர்தல் முடிவுகளை பக்காத்தான் ராக்யாட் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள வேளையில் தேர்தல்  மோசடிகளைப் புலனாய்வு செய்யும் குழுவுக்கு புதிய பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்குவார்  என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். "தேர்தல் ஆணையம் நியாயமான காரணங்களை தெரிவிக்கும்…

சிலாங்கூர் மந்திரி புசாரை பெயர் குறிப்பிடுவதை பக்காத்தான் தாமதிக்கிறது

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை அதன் நடப்பு பராமரிப்பு அரசாங்க மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வழி  நடத்துவாரா இல்லையா என்பது மீது இன்னும் முடிவு எடுக்கப்படாததால் அவருடைய நிலைமை இன்னும்  தெளிவாகவில்லை. அடுத்த தவணைக் காலத்துக்கு யார் மந்திரி புசாராக இருக்க வேண்டும் என்பது மீது விரைவில் கூட்டம்…

‘பக்காத்தானுக்கே புத்ரா ஜெயாவை ஆளும் தகுதி உண்டு’

பொதுத் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட்டே கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கும் தகுதி படைத்தது. “நாங்கள் வாக்குகளில் 51.4 விழுக்காட்டைப் பெற்றோம். பிஎன்னுக்குக் கிடைத்தது 48.6 விழுக்காடுதான். ஆனால், அரசாங்கத்தை அமைக்க எங்களுக்குப் போதுமான இடங்கள் இல்லை. அது எப்படி?”, என்று பினாங்கு பக்காத்தான் தலைவர் லிம்…

பேராக் மந்திரி புசாராக ஜாம்ரி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்

13வது பொதுத் தேர்தலில் சிறிய பெரும்பான்மை மூலம் அதிகாரத்தைப் பெற்ற டாக்டர் ஜாம்ரி அப்துல் காதிர்  பேராக் மாநிலத்தின் 12வது முதலமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். அவர் கோலா கங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்காண்டிரியாவில் பேராக் அரசப் பேராளர் ராஜா டாக்டர்  நஸ்ரின் ஷா முன்னிலையில் இன்று காலை மணி…

புதிய மலாக்கா முதலமைச்சராக இட்ரிஸ் ஹரோன் நியமிக்கப்பட்டார்

அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹரோன் மலாக்கா மாநில புதிய முதலமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை நிர்வாகம் செய்த முகமட் அலி ருஸ்தாமுக்குப் பதில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். இட்ரிஸ் இன்று காலை மலாக்கா யாங் டி பெர்துவா நெகிரி முன்னிலையில்…

‘தேர்தல் மோசடியை’ ஆட்சேபித்து நாளை பக்காத்தான் பேரணி நடத்தும்

நாட்டின் தேர்தல் நடைமுறையை சீர்திருத்தும் பொருட்டும் தாம் தோல்வி கண்ட தேர்தல் முடிவுகளை  ஆட்சேபித்தும் 'தீவிரமான இயக்கம்' ஒன்றைத் தாம் வழி நடத்தப் போவதாக எதிர்த்தரப்புத் தலைவர்  அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார். அதற்காக அவர் முதலில் இந்த வாரம் தமது ஆதரவாளர்கள் கலந்து  கொள்ளும் பேரணி ஒன்றுக்கும் அவர்…

பிஎன் அரசாங்கத்தில் மசீச-வின் பங்கு தொடர வேண்டும் என்கிறார் கைரி

பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைத் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு கொள்வதில்லை என செய்துள்ள முடிவை மசீச மறுஆய்வு செய்ய வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் கேட்டுக் கொண்டுள்ளார். மசீச-வை வாக்காளர்கள் ஆதரிக்காததால் அந்த சமூகத்தின் பேராளர்கள் இல்லாமல் பிஎன் அரசாங்கத்தை…

அன்வார்: இன்னொரு ‘செப்டம்பர் 16க்கு’ முயற்சி செய்யப் போவதில்லை

பிஎன்-னை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்கு 'செப்டம்பர் 16' பாணியில் இன்னொரு கட்சித் தாவலுக்கு முயற்சி செய்யப் போவதில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். என்றாலும் ஆட்சி புரிவதற்கு பிஎன்-னுக்கு உள்ள சட்டப்பூர்வநிலை இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொள்ள…

‘பாதிக்கும் மேற்பட்ட மலேசியர்கள் பிஎன்-னை நிராகரித்துள்ளனர்’

உங்கள் கருத்து : "நகர்ப்புற-கிராமப்புற பிளவு தெளிவாகத் தெரிகிறது. நகரங்களில் வசிக்கும் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை பக்காத்தான் பெற்றுள்ளது. அதே வேளையில் பிஎன் கிராமப்புறங்களில் உள்ள எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை வென்றுள்ளது. பிஎன் புத்ராஜெயாவை தக்க வைத்துக் கொண்டது அடையாளம்…

சிலாங்கூரில் பக்காத்தான் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது

பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டணியான பக்காத்தான் ரக்யாட், சிலாங்கூரில் 56 சட்டமன்ற இடங்களில் 46-ஐக் கைப்பற்றி ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இந்த 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னால் 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அம்மாநிலத்துக்கான முழு முடிவும் வெகு நேரம் கழித்துத்தான் தெரிய வந்தது. ஆகக் கடைசியாக அறிவிக்கப்பட்டது சுங்கை பினாங்…

பேராக் பக்காத்தான்: ‘ஆவி வாக்காளர்களே’ தோல்விக்குக் காரணம்

பேராக்கில் குறுகிய தோல்விகண்டு பக்காத்தான் ரக்யாட், மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. மாநில பக்காத்தான் தலைவர் முகம்மட் நிஜார் ஜமாலுடின் ‘ஆவி வாக்காளர்களும்'   வாக்காளர்கள் தொகுதி மாற்றம் செய்யப்பட்டதும்தான் தங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். பேராக் சட்டமன்றத்தின் 59 இடங்களில்…