ஸாகிட்: முகைதின் வீடியோவை கசிய விட்டவருக்கு மன்னிப்பே இல்லை

  பகாங்கில் கடந்த சனிக்கிழமை  நடந்த அம்னோ உறுப்பினர்களுடனான பிரத்தியோக கூட்டத்தில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆற்றிய உரையின் வீடியோ பதிவை கசிய விட்ட அம்னோ தலைவருக்கு மன்னிப்பே கிடையாது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கூறினார். அந்த அம்னோ தலைவரின் பெயரை…

விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள்மீது பழிபோடும் பிரதமர் ஒரு கபடதாரி

பொருள், சேவை  வரி  நடைமுறைக்கு  வந்த  பின்னர்  விலைகள்  உயர்வதற்கு  வியாபாரிகளே  காரணம் என்று  பழியை  அவர்கள்மீது  போட  முயலும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  ஒரு  “கபடதாரி”  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா. சர்ச்சைக்குரிய  வரி  தொடர்பில்  புத்ரா  ஜெயாவை  குறைகூறும்போது  அது …

புவாட்: நான் ஷபரியின் ஏவலாள் அல்ல

தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  அஹ்மட்  ஷபரி  சிக்-கின்  உத்தரவுப்படிதான்  தம்  முன்னாள்  எஜமானர் முகைதின்  யாசினைத்  தாக்குவதாக கூறப்படுவதை  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  முகம்மட்  புவாட்  ஸர்காஷி  மறுத்துள்ளார். புதன்கிழமை  முகநூல்  பதிவு  ஒன்றில்  சாபா, கெனிங்காவில்  தொடக்கப்  பள்ளி  மாணவர்கள்  உடைந்த  மேசைகளைப்  பயன்படுத்துவதைக்  காண்பிக்கும்  படங்களைப்…

‘ஒரு மனிதருக்காக’ நஜிப் பதவி விலக மாட்டார்

இறுதியில், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்மைப் பதவி விலகச்  சொல்லும்  கோரிக்கைகளுக்கு  நேரடியாகவே  பதிலளித்துள்ளார். “ஒரு  மனிதரின்” பொருட்டு  பதவி  விலகப்  போவதில்லை  என்றவர்  கூறியதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அதை  ஆங்கில நாளேடான த ஸ்டார், ‘நான்  பதவி விலக  மாட்டேன்’  என்ற  தலைப்பிட்டு  முதல்பக்கச்  செய்தியாக  வெளியிட்டிருந்தது. …

பாஸ் பாக்கத்தானிலிருந்து தாராளமாகப் பிரியலாம், டிஎபி சவால்

  பாக்கத்தான் பங்காளிக் கட்சியான பாஸ் அக்கூட்டணியிலிருந்து எவ்விதத் தடையுமின்றி விலகிக் கொண்டு  அம்னோவுடன் சேர்ந்து ஓர் அரசாங்கத்தை அமைக்கலாமே என்று டிஎபி அக்கட்சிக்கு சவால் விட்டுள்ளது. பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இப்போதெல்லாம் அதிகப்படியாக ஓர் அம்னோ தலைவரைப் போல் நடந்து கொண்டு இன…

பொருளை வாங்கி இருப்பில் வைத்த பிறகும் ஜிஎஸ்டி-இலிருந்து தப்ப முடியவில்லை

ஏப்ரல் 1-க்கு  முன்  முன்யோசனையுடன்  நடந்து  கொண்டார்  நான்கு பிள்ளைகளுக்குத்  தந்தையான  எஸ்.அன்பா. “ஜிஎஸ்டி-யை  வெற்றிகொள்ள  நினைத்தேன். பொருள்களை  வாங்கி  இருப்பில்  வைத்துக்  கொண்டேன்”, என்றார்  அன்பா. பலரையும்  போலவே  அன்பாவும்  ஆறு  விழுக்காடு  இஎஸ்டி-இலிருந்து  தப்பிக்க  பொருள்களை  நிறைய  வாங்கி  வைத்துக்  கொண்டார். ஜிஎஸ்டி  நடைமுறைக்கு  வந்து …

அம்னோ அவசரக் கூட்டம் தேவையில்லை- ரீஸால்

முன்னாள்  தகவல்  அமைச்சர்   சைனுடின்  மைடின்  மொழிந்திருப்பதைப்போன்று   அம்னோ உச்சமன்றம்  அவசரக்  கூட்டம்  நடத்தி கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  அதன்  ஆதரவை  உறுதிப்படுத்த வேண்டிய அவ்சியமில்லை. உச்சமன்ற  உறுப்பினர்  ரீஸால்  மெரைக்கான்  நைனா  முகம்மட்  இவ்வாறு  கூறினார். “அவசரக்  கூட்டமெல்லாம்  தேவையில்லை. அம்னோவில் (நஜிப்புக்கு) ஆதரவு …

“தலைவரை நீக்க” அம்னோ உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனரா?

  பகாங்கில் நடைபெற்ற ஓர் அம்னோ நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆற்றிய உரை பரவி வருகிறது. அந்த உரையில் 1 மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் (1எம்டிபி) இயக்குநர்கள் நீக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு கசியப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த இன்னொரு…

‘11 வது திட்டத்தை யார் நினைக்கப் போகிறார்கள்; அம்னோ போர்…

அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அணிக்கும்  துணைப்  பிரதமர் முகைதின் யாசின்  அணிக்குமிடையில்  நிகழ்ந்துவந்த  பனிப்  போர்  இப்போது  வெளிப்படையான  போராக  வெடித்திருக்கிறது  என்று கூறும்  டிஏபி  பெருந்தலைவர்  லிம்  கிட்  சியாங், அதை  இனியும்  மூடிமறைக்க  முடியாது  என்கிறார். அடிநிலை உறுப்பினர்கள்  அணி  பிரிந்து  நின்று…

வாக்காளர் பதிவு இசி-இன் தனியுரிமையாக இருப்பதை டிஏபி சாடுகிறது

தேர்தல்  ஆணையம்  புதிய  வாக்காளர்களைப்  பதிவுசெய்யும் பணியை மெதுவாக  செய்கிறது  அதேவேளை அவர்களைப்  பதிவுசெய்ய  அரசியல்  கட்சிகளையும்  அனுமதிப்பதில்லை  என டிஏபி  சாடியுள்ளது. 2.6 மில்லியன்  தகுதிவாய்ந்த  வாக்காளர்கள் இன்னும்  பதிவு  செய்யப்படாமல்  இருக்கிறார்கள்  என  பலாகோங்  சட்டமன்ற  உறுப்பினர்  இங் தியென்  சீ  கூறினார். “வாக்காளர்களாக  பதிவு …

பின்னிரவு துப்பாக்கிச் சூடு பற்றி சிஎம் விளக்க வேண்டும்

புக்கிட்  மெர்தாஜாமில், பின்னிரவு  மணி  ஒன்றுக்குப்  பின்னரும்  ஒரு  கேளிக்கை  மையம்  செயல்பட  அனுமதித்தது  ஏன்  என்று பினாங்கு  முதலமைச்சர்  விளக்கம்  வேண்டும்  என  மலேசிய  குற்றக் கண்காணிப்புப் பணிப்  படை (மைவாட்ச்) தலைவர்  ஆர். ஸ்ரீசஞ்சீவன்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அக்கேளிக்கை  மையத்தில்  நிகழ்ந்த  துப்பாக்கிச்  சூட்டுச்  சம்பவத்தில்  ஒருவர் …

‘சோம்பேறி’ மைடின்: புவாட் சாடல்

முன்னாள்  கல்வி  துணை  அமைச்சர்  முகம்மட் புவாட்  ஸர்காஷி  தன்  முன்னாள்  எஜமானர்  முகைதின்  யாசினை “சோம்பேறி”  எனச் சாடியுள்ளார். சாபா,  கெனிங்காவில்  ஒரு  பள்ளியில்  மேசை- நாற்காலிகள்  உடைந்துபோய்க்  கிடப்பதை  அடிப்படையாக  வைத்து  அவர்  இவ்வாறு  சாடினார். கல்வி  அமைச்சரும்  அவரின்  இரு  உதவியாளர்களும்  பள்ளிகளுக்கு  நேரில் …

‘பேசாமல் உண்மையைச் சொல்லிடுங்க’-பிரதமருக்கு அம்பிகாவின் இலவச ஆலோசனை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம் பிம்பத்தை  மேம்படுத்திக்கொள்ள தம்  ஆலோசகர்களை  அதிகம்  நம்பியிருக்கக்  கூடாது  என்று மலேசிய வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  கூறுகிறார். நஜிப்பைக்  கேலி  செய்யும்  வகையில் டிவிட்டரில்  பதிவிட்டிருக்கும்  அம்பிகா,  பிரதமருக்கு  இலவச ஆலோசனை ஒன்றைத்  தெரிவித்திருந்தார்: ‘பேசாமல்  உண்மையைச் …

ஸூனார் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுக: உலக என்ஜிஓ-கள் கோரிக்கை

அனைத்துலக  என்ஜிஓ-களின்   கூட்டமைப்பு  ஒன்று, கேலிச்சித்திர  ஓவியர்  ஸூனார்மீது  சுமத்தப்பட்டிருக்கும்  ஒன்பது   குற்றச்சாட்டுகளையும்  கைவிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. அவை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எழுதிய  கடித்தத்தில்  1948 தேச  நிந்தனைச்  சட்டத்தையும்  இரத்துச்  செய்யுமாறு  வலியுறுத்தின. “கருத்துச்  சுதந்திரம்  மக்களாட்சி  சமுதாயத்தின்  இன்றியமையாத  கூறாகும்.  இந்த  உரிமையை, அரசாங்கத்தைக் …

முகைடின் யாசின்: 1எம்டிபி விவகாரத்தை தள்ளிப்போட முடியாது

  1எம்டிபி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கணக்காய்வு முடிவடைய வேண்டும் என்று அரசாங்கம் மக்களிடத்தில் அடிக்கடி கூறிவரும் வேளையில், கசியவிடப்பட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அந்த வீடியோ கடந்த வாரம் பகாங்கில் நடைபெற்ற ஒரு…

11வது மலேசியத் திட்டத்தில் 1எம்டிபி-யைக் காணோம்

ஐந்தாண்டுகளுக்குமுன்  10வது  மலேசியத்  திட்டத்தைத்  தாக்கல்  செய்த  நஜிப்  அப்துல்  ரசாக், கோலாலும்பூர்  அனைத்துலக  நிதி  மாவட்டமும் (இப்போது  துன் அப்துல் ரசாக் எக்ஸேஞ்ச்)  பண்டார்  மலேசியாவும்  நாட்டின்  உருமாற்றத்  திட்டத்துக்கு உதவப்  போகும் முக்கிய  வளர்ச்சித்  திட்டங்கள்  என்றார். ஐந்தாண்டுகளுக்குப்  பிறகு,  நஜிப்பால்  உருவாக்கப்பட்டு  இன்று  கடனில் …

1எம்டிபி பற்றி மக்களுக்கு விளக்கமளிக்கும் கடப்பாடு நஜிப்புக்கு உண்டு- அன்வார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  தொடர்பான  பிரச்னைகளுக்குத்  தீர்வு  காண  வேண்டும்  என  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கேட்டுக்கொண்டிருக்கிறார். இன்று  நீதிமன்றம்  வந்திருந்த  அன்வார்  இப்ராகிம், தம்  மகள்  நூருல் இஸ்ஸா  மூலமாக விடுத்த  அறிக்கையொன்றில், அவ்விவகாரம்  குறித்து  மக்களுக்கு  விளக்கமளிக்கும் …

பண்டிகார் இன்னமும் அவைத் தலைவராக இருப்பதில் நஜிப்புக்கு மகிழ்ச்சி

பதவி விலக  விரும்பிய மக்களைவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா பதவியில்  தொடர்ந்திருக்க  முடிவு  செய்திருப்பது  மகிழ்ச்சி  அளிப்பதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். இன்று  நாடாளுமன்றத்தில்  11வது  மலேசியத்  திட்டத்தைத்  தாக்கல்  செய்த  உரையாற்றிய  நஜிப், பண்டிகாரைக்  குறிப்பிட்டும்போது  “அவைத்  தலைவர்  அவர்களே”  என்று  சொல்லிச் …

ஒட்டுமொத்த 1எம்டிபி வாரியம் நீக்கப்பட வேண்டும்

துணைப்பிரதமர்  முகைதின்  யாசின், 1எம்டிபி  இயக்குனர்கள்  விலக்கப்பட்டு  அவர்களைப்  போலீசார்  புலனாய்வு  செய்ய  வேண்டும்  என விரும்புகிறார். “இது  என்  தனிப்பட்ட  கருத்து”, என  இன்று  நாடாளுமன்றத்தில்  சந்தித்தபோது  தெரிவித்தார். இதற்கு  நஜிப்  என்ன  சொன்னார்  என்று  வினவியதற்கு, “ஒன்றுமில்லை. நான்  சொன்னதை  மட்டுமே  கவனியுங்கள்”, என்றார்.. மேலும் …

பின்வாங்கப்போவதில்லை: நஜிப் சூளுரை

தம் கொள்கைகளையும்  ஆட்சிமுறையையும்  போற்றுபவர்  போற்றட்டும்  புழுதிவாரி  தூற்றுபவர்  தூற்றட்டும்  அதற்காக  முன்வைத்த காலைப் பின்னுக்கு  இழுக்கப்போவதில்லை  என்பதில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உறுதியாக  இருக்கிறார். “அண்மைக்  காலமாக  பலவித  சவால்களும் தடங்கல்களும்  எதிர்பட்டபோதும் அரசாங்கமும்  நானும்  தேர்ந்தெடுத்துள்ள  பாதை  ஒன்றே  ஒன்றுதான் -முன்னோக்கிச் செல்லல். “நாங்கள் …

மஇகா: உடைக்கப்பட்ட கோயிலுக்கு சிலாங்கூர் அரசு நிலம் தர வேண்டும்

  சமீபத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) உடைத்த சிறீ மகா மதுரை வீரன் கோயிலுக்கு சிலாங்கூர் அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பக்கத்தான் ரக்யாட் அனைத்து வழிபாட்டுதலங்களுக்கும் நிலம் வழங்க உறுதி அளித்திருந்தது. ஆகவே, இக்கோயிலுக்கு உதவ வேண்டும் என்று மஇகா…

நிழல் அமைச்சரவை: டிஏபி எதையும் அறிவிக்குமுன்னர் உள்ளுக்குள் கலந்து ஆலோசிக்க…

டிஏபி  தலைமைச்  செயலாளர்  நிழல்  அமைச்சரவை  பற்றிக்  கருத்துரைக்குமுன்னர்  அக்கட்சியின்  ஏற்பாட்டுக் குழுச்  செயலாளர்  அந்தோனி  லோக்கிடம் ஆலோசனை  கேட்க வேண்டும்  என்று  பாஸ்  தகவல்  தலைவர்  மாபூஸ் ஒமார்  கூறினார். பக்கத்தான்  ரக்யாட்  பரஸ்பர  மரியாதையின்  அடிப்படையில்  உருவானது  என்று  குறிப்பிட்ட  மாபூஸ்,  பக்கத்தானில்  நிழல்  அமைச்சரவை …

‘மரியாதை குறைந்தது அதனால் மகாதிர்-நஜிப் சர்ச்சை மோசமடைந்தது’

ஒருவரை  மற்றவர்  மரியாதையாக  சாடுவது  என்ற  வகையில்தான் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்  முகம்மட்டுக்குமிடையிலான  சர்ச்சை  தொடங்கியது. இப்போது  சேற்றை  வாரி  இறைக்கும்  அளவுக்குச்  சென்று  விட்டது. மரியாதைப் பண்பு  குறைந்ததுதான்  இதற்குக்  காரணம்  என்கிறார்  முன்னாள்  அமைச்சர்  ரயிஸ்  யாத்திம். மரியாதைப்…