1எம்டிபி: பண்டிகார் நஜிப்பை வழிக்குக் கொண்டுவர வேண்டும்

மக்களவைத்  தலைவர் பண்டிகார்  அமின்  மூலியா,  சர்ச்சைக்குரிய  1எம்டிபி  கேள்விகளுக்குப்  பதிலளிப்பதைத்  தவிர்க்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை   அடக்கி வழிக்குக்  கொண்டுவர  வேண்டும். நாடாளுமன்றச்  சீரமைப்புப்  பற்றிப்  பேசும்   பண்டிகார்  இவ்விவகாரத்தில்    முடிவெடுக்க வேண்டும்  என்று  டிஏபி  பெருந்தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார். “பண்டிகார்  தலையிட்டு …

மகாதிர்: வரிக்காக என்னை விரட்டினார்கள், பணக்காரர்களை விட்டு விட்டார்கள்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  முன்பு தாம்  மருத்துவராக  தொழில் புரிந்தபோது  உள்நாட்டு வருமான  வரி  வாரியத்தின்  அதிரடிச்  சோதனைகளுக்கு  அடிக்கடி  ஆளானதாகவும்  இன்றோ  பெரும்  பணக்காரர்களாக  திகழும்  அமைச்சர்களோ  சுதந்திரமாக  திரிகிறார்கள்  என்றும்  அங்கலாய்த்துக்  கொண்டிருக்கிறார். “அரசாங்க  அதிகாரிகள்  வருமானத்தைமீறிய  வாழ்க்கை  வாழ்ந்தால்  வருமான  வரி …

ஷாபி: 1எம்டிபி பற்றி அமைச்சரவையில் கேள்வி கேட்டது உண்டு

புறநகர், வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  முகம்மட்  ஷாபி  அப்டால்,  1எம்டிபி  விவகாரத்துக்கு  அமைச்சரவை  மொத்தமும்  பொறுப்பேற்க  வேண்டும்  என்று  கூறப்படுவதை  நிராகரித்தார். அமைச்சரவைக்  கூட்டங்களில்  அமைச்சர்கள்  1எம்டிபி  பற்றிக்  கேள்வி  கேட்கத்  தவறியதில்லை   என்று  ஷாபி  கூறினார். “நாங்கள்  பொறுப்பான  அமைச்சர்கள். அதனால்தான்  கேள்வி  கேட்டோம்..... எங்களுக்கும்  தெரிந்து …

10வது திட்டத்தில் 40 விழுக்காடு நிறைவேற்றப்படவில்லை

பத்தாவது  மலேசிய  திட்டத்தில்  விவரிக்கப்பட்ட  திட்டங்களில்  சுமார் 40 விழுக்காடு  இன்னும்  முழுமையாக அமலாக்கப்படவில்லை. 10வது  மலேசிய  திட்டம்  சாதித்தது  என்ன  என்று  அறிந்துகொள்ள  விரும்பிய  ரந்தாவ்  பாஞ்சாங்  எம்பி-க்குப்  பிரதமர்துறை இவ்வாறு  எழுத்துப்பூர்வமாக  பதில்  அளித்துள்ளது. 10வது  மலேசியத்  திட்டத்தின்படி  இவ்வாண்டு  மே   11வரை  11,894 திட்டங்கள் …

அருள், ஷாரோல், எங்கே போனீர்கள்? டோனி புவா கேள்வி

1மலேசியா  மேம்பாட்டு நிறுவனத்  தலைமை  செயல் அதிகாரி(சிஇஓ)  அருள்  கந்தாவும்  முன்னாள்  சிஇஓ ஷாரோல்  ஹல்மியும்  பொதுக் கணக்குக்  குழுவிடம்(பிஏசி)  சாட்சியம்  அளிக்காமல்  எங்கே  சென்றார்கள்   என  அக்குழுவின்  உறுப்பினர்களில்  ஒருவரான  டோனி  புவா  வினவினார். “பிஏசி  சாட்சியம்  அளிக்க  வருமாறு  கூறியிருக்க  மே 25, 26-இல்  அவர்கள் …

பிஎசி: 1எம்டிபி விசாரணைக்கு பிரதமரும் அழைக்கப்படலாம்

  நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு (பிஎசி) அதன் 1எம்டிபி மீதான விசாரணைக்கு அழைக்கப்பட்ட 1எம்டிபியின் அதிகாரிகளுக்கு மிகக் குறுகிய கால அவகாசமே கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை அக்குழுவின் தலைவர் மறுத்தார். பிஎசியின் விசாரணைக்கு பிரதமர் நஜிப்பும் அழைக்கப்படலாம் என்று அக்குழுவின் தலைவர் நூர்   ஜஸ்லான் முகமட் மேலும்…

அரசாங்கம் தாயிப்புக்கு ரோல்ஸ்-ரோய்ஸ் கார் வாங்கிக் கொடுக்கவில்லை

சரவாக்  ஆளுனர்  அப்துல்  தாயிப்  மஹ்மூட்  பயன்படுத்தும்  2012 ரோல்ஸ்-ரோய்ஸ்  ஃபெண்டம் கார்  அரசாங்கம்  வாங்கிக்  கொடுத்தது  அல்ல  என  அமைச்சர்  ஷஹிடான்  காசிம்  கூறினார். ரிம3.7மில்லியன்  மதிப்புள்ள  அக்காருக்கு  அரசாங்கம்  பணம்  கொடுக்கவில்லை.. சரவாக்  ரிப்போர்ட்-டில்  வெளிவந்துள்ள   செய்தி  பற்றிக்  கேட்டதற்கு, “அது  எனக்கே  ஒரு  புதிய …

ரபிஸி: பிஏசி நஜிப்பை விசாரணைக்கு அழைக்க வேண்டும்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்  சர்ச்சைக்குரிய நிதிச்  செயல்பாடுகள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  இணக்கத்தின்பேரில்தான்  நடந்துள்ளன  என்பதால்  பொது  விசாரணைக்  குழு  பிரதமரை  விசாரணைக்கு  அழைக்க  வேண்டும்  என்கிறார்  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி ரம்லி. 1எம்டிபி  நிறுவனத்துக்கு  முன்பிருந்த  திரெங்கானு  முதலீட்டு  நிறுவன (டிஐஏ)த்தின்  அமைப்பு  விதிக்…

ஜிஎஸ்டி-யால் சில கடைகள் மூடப்பட்டது உண்மையே

பொருள், சேவை  வரி  கொண்டுவரப்பட்ட  பின்னர்  சில  கடைகள், குறிப்பாக  வயதானவர்களால் நடத்தப்பட்டுவந்த  கடைகள்  மூடப்பட்டதை  நிதி  அமைச்சு  ஒப்புக்கொண்டது. “ஆனால், அவை  மூடப்பட்டதற்கு  ஜிஎஸ்டிதான்  முக்கிய  காரணம்  என்று  சொல்ல  முடியாது”.  நேற்று  நாடாளுமன்றத்துக்கு  வழங்கிய  எழுத்துப்பூர்வமான  பதிலில்  அமைச்சு  இவ்வாறு  கூறியது. “அவை  வயதானவர்களால்  நடத்தப்பட்டுவந்த …

எம்ஏசிசி: பெல்டா லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் தவறில்லை

மலேசிய  உழல்தடுப்பு  ஆணையத்தின்  தொடக்க  நிலை ஆய்வில்  பெல்டா  நிர்வாகம்  ரிம538 மில்லியன்  கொடுத்து  லண்டனில்  ஆடம்பர  தங்கும்  விடுதி  வாங்கியதில்  ஊழல்  நிகழ்ந்திருப்பதாகத்  தெரியவில்லை. “எம்ஏசிசி-இன்  தொடக்கநிலை  ஆய்வுகளில்  2009  மலேசிய  ஊழல்தடுப்புச்  சட்டத்தின்படி  குற்றம்  எதுவும்  நிகழ்ந்திருப்பதற்கான  சான்றுகள்  காணப்படவில்லை”, எனப்  பிரதமர்துறை  அமைச்சர் பால் …

மேல்முறையீட்டு நீதிமன்றம்: இந்திராவின் குழந்தைகளை மத மாற்றம் செய்த முறை…

  பாலர்பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளை மத மாற்றம் செய்ய பின்பற்றப்பட்ட முறை சரியானதா என்பதை புத்ராஜெயாவில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திராவின் முன்னாள் கணவர் அக்குழந்தைகளை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்தார். மத மாற்றம் செய்த…

நாசிர்: 1எம்டிபி வராததை ஏற்றுக்கொள்ள முடியாது

பிரதமரின்  சகோதரர்  நாசிர்  ரசாக்,  இன்று பொதுக் கணக்குக்குழுவின்  விசாரணைக்கு 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி) வந்து  சாட்சியம்  அளிக்கத் தவறியதை  ”ஏற்றுக்கொள்ள  முடியாது”  எனக்  கூறினார். “உங்கள்  நிறுவனம்  தேசிய  நெருக்கடி ஒன்றை  உருவாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தைச்  சந்திக்க  உங்களுக்கு  நேரமில்லையா? ஏற்றுக்கொள்ள முடியாத  காரணம்”, என்றவர்  இன்ஸ்டாகிராமில் …

திடீர் தேர்தல் நடத்தி மகாதிர் வாயை மூடுவீர்: நஜிப்புக்கு பாஸ்…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  சொந்தக்  கட்சிக்கே  நம்பிக்கை இல்லாமல்  போய்விட்டது  என்பதால்  அவர்  திடீர்  தேர்தலை  நடத்திப்  புதிய அதிகாரத்தைப்  பெறுவது  அவசியம்  என்கிறார்  எதிரணி  எம்பி  ஒருவர். அப்படிச்  செய்வதன்வழி  நஜிப்,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  உள்பட  அவரைக்  குறைகூறுவோரின்  வாயை  அடைக்க  முடியும் …

குடியேறிகளின் கொலையில் மலேசிய அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம்

தாய்லாந்து- மலேசிய  எல்லையில்  புதைக்கப்பட்டிருக்கும்  நூறுக்கு  மேற்பட்டவர்களின்  இறப்புக்கு  மலேசியா  அமலாக்க  அதிகாரிகள்  உடந்தையாக  இருந்திருக்கலாம்  அல்லது  பொறுப்பாளர்களாகவும்கூட  இருக்கலாம் என  உள்துறை  அமைச்சு  சந்தேகிக்கிறது. மலேசிய  அதிகாரிகள்  குடியேறிகளைக்  கொன்றிருக்கும்  சாத்தியம்  அல்லது  அவர்களின்   மரணத்துக்குக்  காரணமாக  இருக்கும்  சாத்தியம்  உண்டா  என்று  வினவப்பட்டதற்கு “உண்டு” என்று …

குடைப் புரட்சி இயக்கவாதியை மலேசியா நாடு கடத்தும்

குடைப்புரட்சி  இயக்கத்தைச்  சேர்ந்த  ஜோசுவா  வோங்  இன்று  காலை  பினாங்கு  விமான  நிலையத்தில்  வந்திறங்கியதும்  தடுத்து  வைக்கப்பட்டார். வோங், ஹாங்காங்கில்  சீன எதிர்ப்பியக்கத்தைத்  தூண்டிவிட்டவர்.  அதற்காகவே  டைம்ஸ்  சஞ்சிகை  அவரது படத்தை  அதன்  அட்டையில்  வெளியிட்டுப்  பிரபலப்படுத்தியிருந்தது. “என்னை  உள்ளே  விடக்கூடாது  என்றும் அடுத்த  விமானத்திலேயே  திரும்பிச்  செல்ல …

Secret Recipe நிறுவனத்தின் ஹலால் சான்றிதழ் இரத்து

பிரபல கேக்  தயாரிப்பு    நிறுவனமான  சீக்ரெட்  ரெசிபிக்குக்  கொடுக்கப்பட்டிருந்த  ஹலால்  சான்றிதழை மலேசிய இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாக்கிம்) இரத்துச்  செய்துள்ளது. அதே  வேளையில்,  ஹலாலற்ற  பொருள்களை  அந்நிறுவனம்  பயன்படுத்தவில்லை என்பதையும்  ஜாக்கிம்  விளக்கியுள்ளது. “சுத்தக்குறைவு, சரியான தயாரிப்புமுறை  கடைப்பிடிக்கப்படாமை  ஆகியவையே ஹலால்  சான்றிதழ்  இரத்தானதற்குக்  காரணம். “பொருள் …

அருள் கந்தா கந்தசாமியை உடனடியாக நீக்க வேண்டும், ரபிஸி

  1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் (1எம்டிபி) தலைவரும் செயல்முறை இயக்குனர் அருள் கந்தா கந்தசாமி மற்றும் அதன் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஷாருல் ஹமிலி ஆகிய இருவரும் நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் (பிஎசி) கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்ற அவர்களின் முடிவு ஓர் அவமதிப்பு…

1எம்டிபி: அமைச்சரவை தெரியாது என்று சொல்லித் தப்பிக்க முடியாது

1மலேசியா  மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) குழப்படிக்கு  அமைச்சரவை  மொத்தமும்தான்  பொறுப்பு என்கிறார்  முன்னாள்  நிதி  அமைச்சர்  தெங்கு ரசாலி  ஹம்சா. அவ்விவகாரத்துக்கு  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  மட்டுமே  பொறுப்பாக்குவது  சரியல்ல. “அமைச்சரவையில்  உள்ள  அனைவருமே  அப்பிரச்னைக்குக்  கூட்டுப்  பொறுப்பேற்க  வேண்டும். யாரும்  ‘அது  உங்கள்  பிரச்னை  என் பிரச்னை …

அமைதி காப்பீர்: பங்காளிக்கட்சிகளுக்கு பிகேஆர் வேண்டுகோள்

பாஸ்  கட்சியில்  தேர்தல்  நடப்பதையொட்டி  பக்கத்தான்  ரக்யாட்டில்  மூன்று  வாரங்களுக்கு “அமைதி காக்க வேண்டும்”  என  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  வலியுறுத்தியுள்ளார். “பக்கத்தானைப்  பாதுகாக்க நிலைமையை  ஆறப்போடுவதுதான்  சிறந்த  வழி. “இரண்டு  மூன்று  வாரங்கள்  அமைதி  காத்து  மக்களின்  எதிர்பார்ப்புகளையும்  அவாக்களையும்  நினைத்துப்  பார்ப்போம்”, என்றாரவர்.…

குவான் எங்: அம்னோவிடம் இருக்கிறது ஹாடியின் இதயம்

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங் பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான் அசிசா  வான்  இஸ்மாயிலை  ஆதரிக்க  மறுப்பது  அவர்  அம்னோவுடன்  இருப்பதையே  விரும்புகிறார்  என்பதைக்  காண்பிக்கிறது. இதைத்  தெரிவித்த  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்,  “ஹாடி  பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தல்  பரப்புரைக்குச்  செல்லவில்லை …

பிஏசி சந்திப்பைத் தவிர்க்கிறார் 1எம்டிபி தலைவர் அருள்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன (1எம்டிபி)த் தலைவரும்  செயல்முறை  இயக்குனருமான  அருள் கந்தசாமி நாளை  பொதுக் கணக்குக்குழு(பிஏசி)க்  கூட்டத்தில்  கலந்துகொள்ள  மாட்டார். அருளும் முன்னாள்  தலைமை  செயல்  அதிகாரி(சிஇஓ)  ஷாரோல் ஹல்மியும்   சந்திப்பைத்  தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொண்டிருப்பதாக  சில  வட்டாரங்கள்  மலேசியாகினியிடம்  தெரிவித்தன. பிஏசி  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  அது…

தாயிப் மஹ்மூட்டுக்கு ரிம3.7 மில்லியன் ரோல்ஸ் ரோய்ஸ்

சரவாக்  ஆளுனர்  அப்துல்  தாயிப்  மஹ்மூட்டுக்கு-   கோலாலும்பூரில்  இருக்கும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக- விலையுயர்ந்த  புதுக்  கார் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு 2012 ரோல்ஸ்  ரோய்ஸ்  ஃபெண்டம். அதுவே  தாயிப்பின்  அதிகாரத்துவ  காராம். அந்தரங்க  விசயங்களை   அம்பலப்படுத்திவரும்  சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளம்  கூறியுள்ளது. அது  சரவாக்  முதலமைச்சரான அடினான்  சாதேம் …

சுபாங் ஜெயாவில் பிடிபட்டது‘ராட்சத’ எலி அல்ல

யுஎஸ்ஜே  11-இல் “ராட்சத எலி” பிடிபட்டதாகக்  கூறும்  செய்திகளும்  படங்களும்  இணையத்தளத்தில்  உலா  வந்தாலும்  அவற்றில்  உண்மை  இல்லை  என்கிறார் சுபாங் ஜெயா  சட்டமன்ற  உறுப்பினர் ஹன்னா  இயோ. எலி  படம்பிடிக்கப்பட்ட  கோணம்  அதன்  தோற்றத்தைப்  பெரிதுபடுத்திக்  காட்டுவதாக  சிலாங்கூர்  சட்டமன்றத்  தலைவருமான  அவர்  தெரிவித்தார். இன்னொரு  கோணத்தில் …