குழந்தைகளின் இணைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விரிவான அணுகுமுறையை வகுக்குமாறும், சமூக ஊடக வயதுத் தடைகளை விதிக்கும் அதன் திட்டத்தை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (Unicef) இன்று புத்ராஜெயாவிடம் அழைப்பு விடுத்தது. "சிறுவர்களை இணையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வயதுக் கட்டுப்பாடுகள் மட்டும்…
உள்துறை அமைச்சு குற்ற நிலவரம் பற்றி முரண்பாடான புள்ளிவிவரங்களைக் கொடுத்ததாம்
குற்ற நிலவரம் தொடர்பாக இரண்டு எம்பிகளின் கேள்விக்கு உள்துறை அமைச்சு முரண்பாடான புள்ளிவிவரங்களைக் கொடுத்திருப்பதாக கூலாய் எம்பி தியோ நை சிங் கூறியுள்ளார். குளுவாங் எம்பி லியு சின் தோங்-கும் பெங்காலான் செப்பா எம்பி டாக்டர் இஸானி உசேனும் 2013-இன் குற்ற நிலவரம் பற்றிய புள்ளிவிவரத்தைக் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குக் …
கிட் சியாங்: மெர்டேகா விளம்பரங்களில் காண்பதெல்லாம் வெறும் மாயை
மலேசியா, உண்மையான சுதந்திரம், வளப்பம், நல்லிணக்கம் ஆகியவற்றை அடைந்து விட்டதாக மெர்டேகா விளம்பரங்களில் காட்டப்படுவது வெறும் மாயை என்று கூறும் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், அவற்றை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றார். “அந்த விளம்பரங்கள் மலேசியர் வாழ்க்கையைப் பற்றி ஒரு …
தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவது ‘நீதிமன்ற விவகாரம்’ என்கிறது புத்ராஜெயா
எதிரணித் தலைவர்கள்மீது அடுத்தடுத்து தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்படுவது நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் அதற்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் பிரதமர்துறை அலுவலகம் இன்று கூறியது. “தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டுவதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. மலேசிய நீதித்துறை சுயேச்சையாக செயல்படுவது. அது பல வழக்குகளில் அளித்த தீர்ப்பே …
“தொலைவிலிருந்து முடுக்கிவிடப்படும்” ஆள் எம்பி ஆக முடியாது
சிலாங்கூர் அரண்மனை வட்டாரத்தை மேற்கோள் காட்டி இன்று வெளிவந்துள்ள ஓர் ஆங்கில நாளேட்டின் செய்திப்படி "தொலைவிலிருந்து முடுக்கிவிடப்படும்" ஆள் மாநிலத்தின் மந்திரி புசார் ஆவதை சுல்தான் விரும்பவில்லை. ஆங்கில நாளேடான த ஸ்டாரின் செய்திப்படி, அரண்மனை விரும்புவது அப்பதவியில் இருப்பவர் மக்களின் நலனில் அக்கறையுள்ளவராக இருக்க வேண்டுமே…
மாட் தயிப்: பிரதமர் ‘சுற்றுப்பயணியாக’ இருப்பது மகாதிருக்குப் பிடிக்கவில்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு அரசாங்கத் தலைவராக இருப்பவர் அடிக்கடி சுற்றுலா செல்வது பிடிக்காது என்பதால்தான் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சரமாரியாக தாக்குகிறார். சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசாரும் இப்போது பாஸ் உறுப்பினருமான முகம்மட் தயிப் ஹராகா டெய்லி-யிடம் இவ்வாறு கூறினார். “நடப்பு அரசாங்க நிர்வாகத்தில்…
பகாங்கில் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் மெர்டேகா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளத் தடை
பிகேஆர் செமம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சங், குவாந்தானில் நடைபெறும் மெர்டேகா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மெர்டேகா கொண்டாட்டங்களில் தாம் பங்கேற்பது தடுக்கப்பட்டிருப்பதாக லீ இன்று தெரிவித்தார். கடந்த வாரம் மாநிலச் செயலகம் ஒரு குறுஞ்செய்தி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெர்டேகா …
சிலாங்கூர் பாஸ்: எம்பி பதவிக்கு யாரையும் பரிந்துரைக்கவில்லை
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்குச் சிலரின் பெயர்களை கட்சியின் தலைமைக்குத் தான் பரிந்துரைத்ததாகக் கூறப்படுவதை சிலாங்கூர் பாஸ் மறுத்துள்ளது. சிலாங்கூர் பாஸ், கட்சியின் மத்திய தலைமைக்கு நான்கு பெயர்களை அனுப்பி வைத்ததாகவும் பாஸ் பிரதிநிதி ஒருவரையும் மந்திரி புசார் பதவிக்கு நியமனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும் உத்துசான் மலேசியாவில் வெளிவந்த…
பெங்காலான் குபோரில் செப்டமர் 25-இல் தேர்தல்
பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் செப்டம்பர் 25-இல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் (இசி) இன்று அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் செப்டம்பர் 13. தேர்தல் பரப்புரைக்கு 12 நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நூர் ஜஹிடி ஒமார் ஆகஸ்ட் 20-இல் காலமானதை அடுத்து …
நிக் நஸ்மி: பாஸுக்கு நன்றி, ஆனால் எனக்கு எம்பி பதவி…
பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், பாஸ் அவரை சிலாங்கூர் மந்திரி புசாராக நியமனம் செய்ய விரும்புவதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆனால், தம் ஆதரவு கட்சித் தலைவருக்குத்தான் என்றாரவர். “சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு என் பெயரைப் பரிந்துரைத்த பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் …
பாஸில் ஹாடியைக் கவிழ்க்கும் முயற்சியா?
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அம்னோவுடன் சேர்ந்து சிலாங்கூரில் ஒற்றுமை அரசை அமைக்கும் முயற்சியில் கமுக்கமாக ஈடுபட்டார் என்ற செய்தி பாஸ் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து. அதன் விளைவாக அவருக்கு கட்சியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது, இந்த எதிர்ப்பு வலுவடைந்து அவரது பதவிக்கே முடிவு கட்டிவிடலாம். ஹாடி, சிலாங்கூர் …
பிகேஆர்: சுல்தானை “கட்டாயப்படுத்த” பாஸ் முன்பு தயங்கவில்லை!
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு இரு பெயர்களை அரண்மனைக்கு அனுப்ப பாஸ் எடுத்துள்ள முடிவிற்கு அது அளித்துள்ள காரணத்தை பிகேஆர் நிராகரித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஒரே ஒரு பெயரை மட்டும் சமர்ப்பிக்கையில் அவருக்கு மனசாட்சிக்குத்தல் ஏதும் இல்லை…
இரண்டு பெயர்களைத் தாக்கல் செய்யப்போவதாக பாஸ் பிடிவாதம்
மந்திரி புசார் பதவிக்கு பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் ஒரே ஒரு பெயரையே அரண்மனையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அன்வார் இப்ராகிமின் வேண்டுகோளை நிராகரித்த பாஸ், இரண்டு பேரைப் பரிந்துரைக்கப் போவதாகக் கூறியுள்ளது. சுல்தானின் ஆணைப்படிதான் பாஸ் நடந்துகொள்ளும் என அதன் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி மலேசியாகினியிடம் …
சுவா: அன்வார்தான் நடப்பில் எம்பி-ஆக இருப்பார்
டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசாரானால் அன்வார் இப்ராகிம்தான் மாநிலத்தை நிர்வகிப்பர் என முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளார். அசிசாவின் பின்னணியில் இருந்துகொண்டு அன்வார்தான் ஆட்டுவிப்பார் என்பதைச் சொல்ல ராக்கெட் இயல் படித்திருக்க வேண்டியதில்லை என்றாவர். அசிசாவுடன் தமக்குத் …
நிக் நஸ்மி: தலையை வெட்டுவேன் என்றவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை…
அரசாங்கம் பக்கத்தான் ரக்யாட் தலைவர்களுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது பாஸ் எம்பிகள் நால்வரின் தலையை வெட்டப் போவதாக மிரட்டிய பெர்காசா தகவல் பிரிவுத் தலைவர் ரஸ்லான் காசிமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காலிருப்பது ஏன் என்று பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கேட்கிறார்.…
அம்னோ எம்பி: பக்கத்தான், சுய நலமிகளின் கூட்டணி
பக்கத்தான் ரக்யாட்டில் தெளிவான கொள்கை இல்லாததும் அதில் உள்ள கட்சிகள் சுயநலத்துடன் செயல்படுவதும்தான் இன்றைய சிலாங்கூர் அரசியல் நெருக்கடிக்குக் காரணம் என அம்னோ எம்பி ஷம்சுல் அனுவார் நசாரா கூறினார். “சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் ஒவ்வொரு பக்கத்தான் கட்சியும் பொதுநல நோக்கின்றி சுயநலத்துடன் செயல்படுவதுபோல் தெரிகிறது. இதனால்தான்…
அன்வார்: பாஸ் ஆகஸ்ட் 17 முடிவை மதிக்க வேண்டும்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு வேட்பாளர்கள் நியமனம் செய்வதில் பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு பெயரைத்தான் முன்மொழிய வேண்டும் என்று ஆகஸ்ட் 17-இல் பக்கத்தான் தலைமை மன்றம் செய்த முடிவைப் பின்பற்றுமாறு பாஸ் கட்சியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மந்திரி புசார் பதவிக்கு…
சேவை செய்ய முடியாவிட்டால் மஇகா தலைவர் பதவி விலகுவது நல்லது
மலேசிய இந்தியர்களுக்குச் சேவை செய்ய முடியாவிட்டால் மஇகா தலைவர் பதவி விலகுவதே நல்லது என அக்கட்சியின் இளைஞர் பகுதி முன்னாள் தலைவர் டி.மோகன் கூறியுள்ளார். “சமூகத்துக்குச் சேவை செய்யும் ஆர்வம் இல்லையென்றால், ஜி.பழனிவேல் தகுதியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து பதவி விலகுவதே நல்லது”, என மோகன் அறிக்கை ஒன்றில்…
நெகாரா கூ ஒரு சங்கமல்ல என ஆர்ஓஎஸ்ஸிடம் தெரிவிக்கப்பட்டது
நெகாரா கூ இயக்கக் குழு தலைவர் ஜைட் கமருடின், அது பதிவு செய்யப்படாத அமைப்பு என்று கூறப்படுவதன் தொடர்பில் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யைச் சந்தித்து அதன் நடவடிக்கைகள் பற்றி விளக்கியுள்ளார். நேற்றுக் காலை நெகாராகூ புரவலர் அம்பிகா ஸ்ரீநிவாசனுடன் ஜைட் ஆர்ஓஎஸ்சைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜைட்,…
கீர் மருத்துவமனையில்: அவரது ஊழல் வழக்கு மூன்றாவது தடவையாக ஒத்திவைப்பு
ஊழல் குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 12-மாத சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை, அவர் மருத்துவமனையில் இருப்பதால் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. கீர் உடல்நலம் குன்றியிருப்பதாக அவரின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா கூட்டரசு நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவருக்குக் …
செப்டெம்பர் 3 – எம்பி நியமனத்திற்கான கடைசி நாள்
மந்திரி புசார் பதவிக்கான பக்கத்தான் ராக்யாட்டின் வேட்பாளர்களின் பெயரை அரண்மனையிடம் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் அடுத்த புதன்கிழமை என்று அரண்மனை நிர்ணயித்துள்ளது. மலேசியாகினி பார்த்துள்ள இக்கடிதத்தில் செப்டெம்பர் 3 குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பாணி பக்கத்தான் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளார். இதனிடையே,…
எம்பி முட்டாள்தனமாக பேசுகிறார், கடிதத்தை வரைந்தது அவரது அலுவலகம்
சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களால் மட்டுமே பின்பற்றப்படும் அரசியல் சம்பிரதாயம் பற்றிய விவாதம் சூடேறி வருகிறது. இது குறித்து கருத்துரைத்த டிஎபி சிலாங்கூர் மாநில தலைவர் டோனி புவா பதவி விலகவிருக்கும் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் முட்டாள்தனமாக பேசுகிறார் என்று சாடியுள்ளார். 2008 மற்றும் 2013…
அன்வார் ஒன்று சொல்கிறார்; காலிட் வேறொன்று சொல்கிறார்
2008, 2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பக்கத்தான் ரக்யாட் அரண்மனையிடம் ஒரு பெயரைக் கொடுத்ததா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களையா? சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் சமர்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அன்வாரும் பிகேஆர் தலைவர் வான் அசிசா …
பக்கத்தானை ஆதரிக்காதவர்கள் பாஸிலிருந்து வெளியேறலாம்
பாஸ் கட்சி பக்கத்தான் ரக்யாட் கூட்டணியில் இருப்பதை விரும்பாதவர்கள், பிரச்னை செய்து கொண்டிருக்காமல் கட்சியிலிருந்து வெளியேறலாம் என பாஸ் மத்திய குழு உறுப்பினர் காலிட் சமட் கூறியுள்ளார். “அரசியல் ஒத்துழைப்பு என்பது பாஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவாகும். அதைச் செய்ய விரும்பாதவர்கள் பாஸை விட்டு வெளியேறி அம்னோ அல்லது …


