மலேசியாகினி செய்தியாளருக்கு எதிராக தேச நிந்தனை விசாரணை

  பினாங்கை தளமாகக் கொண்ட மலேசியாகினி உதவி ஆசிரியர் சூசன் லூன் மீது தேச நிந்தனை சம்பந்தமாக விசாரணை நடத்த செய்யப்பட்டுள்ள முடிவை போலீஸ் உறுதிப்படுத்தியது. சூசன் லூனுக்கும் மலேசியாகினிக்கும் எதிராக பல்வேறு புகார்கள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து லூன் விசாரிக்கப்படுவார் என்று போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி…

சிலாங்கூர் எம்பி பதவிக்கு அஸ்மின் பெயர், மறுக்கிறது பிகேஆர்

  சிலாங்கூர் அரண்மனை மாநில எம்பி பதவிக்கு பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாற்றாக அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை நியமிக்கும் என்று ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளை பிகேஆர் மறுத்துள்ளது. நேற்று, அக்கட்சியின் தலைமைத்துவ மன்றம் இரண்டு முடிவுகளை மட்டுமே எடுத்தது. ஒன்று, அந்த உயர்…

மலேசியகினிக்கு எதிராக பெர்காசா போலீஸ் புகார்

  மலேசியாகியும் பினாங்கை தளமாகக் கொண்ட அதன் உதவி ஆசிரியர் சூசன் லூனும் போலீசாரின் பெயருக்கு களங்கத்தை உண்டுபண்ணி விட்டனர் என்று அவர்களுக்கு எதிராக 10 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. தங்களை "பினாங்கு மலாய்க்காரர் பிரதிநிதிகளின் கூட்டணி" என்று கூறிக்கொண்ட பெர்காசா மற்றும் 13 இதர அரச சார்பற்ற…

அம்பிகா: பிரதமரே, இது வீரம் அல்ல

  தமது நாட்டு மக்களையே கொடுமைப்படுத்துவது வீரமல்ல என்று பிரதமர் நஜிப் ரசாக்கை மலேசிய வழக்குரைஞர் மன்றம் மற்றும் பெர்சே இயக்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரான அம்பிகா சாடினார். துணிச்சல் என்பது குறைகூறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது என்பதாகாது, அது கொடுமைப்படுத்துதல் ஆகும் என்று கூறிய அம்பிகா,…

“திமிர் பிடித்த மலாய்க்காரர் அல்லாதவர்கள்” என்ற தாக்குதல் டிஎபியை இலக்காகக்…

  மலாய்க்காரர் அல்லாதவர் திமிர் பிடித்தவர்களாகி வருகிறார்கள் என்று தாம் விடுத்த அறிக்கை டிஎபியின் தலைவர்களையும், குறிப்பாக அதன் ஆதரவாளர்களையும் இலக்காகக் கொண்டது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கூறியதாக சொல்லப்படுகிறது. மலேசியாவின் பெரும்பான்மையான மலாய்க்காரர் அல்லாதவர்கள் மிதவாதிகள். அவர்கள் இதர இனத்தினரின் உணர்ச்சிகளுக்கு…

அரசாங்க பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழியில் தேர்வு கட்டாயமாக்கப்படுமாம்

  மலேசியாவின் பொதுப் பல்கலைக்கழகங்களில் பகசா மலேசியாவுடன் ஆங்கில மொழியில் தேர்வும் கட்டாயமாக்கப்படும் கொள்கை அமலுக்கு வரக்கூடும். இவ்விவகாரம் குறித்து தாம் பிரதமர் நஜிப்புடன் விவாதித்துள்ளதாக துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் கூறினார். பட்டதாரிகளிடம் ஆங்கிலத்தில் பேசும் மற்றும் எழுதும் ஆற்றல் இல்லை என்றால், அவர்களுக்கு…

பாஸ் முக்தாமார் புதிய இடத்தில் நடைபெறும்

இரண்டு  வாரங்களில்  நடைபெறவுள்ள  பாஸ்  பேராளர்  மாநாடு  ஜோகூர்  பாருவில்  ஏற்கனவே  திட்டமிடப்பட்ட  இடத்தில்  நடக்காது. சூத்ரா  மாலுக்கு  அருகில்  உள்ள  திறந்த  வெளியில்  அது  நடப்பதாக  இருந்தது. ஆனால்,  அதன்  உரிமையாளர் “சில  தரப்புகளின்  நெருக்குதலுக்கு ஆளானதால்” கட்சி  கொடுத்திருந்த  ரிம75,000 முன்பணத்தைத்  திருப்பிக்  கொடுத்து  விட்டார் …

பிகேஆரும் டிஏபியும் எம்பி பதவிக்கு அசிசாவைப் பரிந்துரைத்தன

டிஏபியும் பிகேஆரும்  சிலாங்கூர்  மந்திரி  புசார் வேட்பாளர்களின்  பெயர்களை  சிலாங்கூர்  சுல்தானிடம்  வழங்கியுள்ளன. “பிகேஆர், (வேட்பாளர்  பெயரடங்கிய) கடிதத்தை  நேற்று அரண்மனைக்கு  அனுப்பியது”, என பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுத்தியோன்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். ஒரே  ஒரு பெயர்தானா ஒன்றுக்கு  மெற்பட்ட  பெயர்கள்  அனுப்பப்பட்டனவா  என்று  கேட்டதற்கு  அவர் …

குலா: ஸாகிட்டா அல்லது நாங்களா என்று மஇகா, மசீச, கெராக்கான்…

  "போதும், இனிமேல் பொறுக்க முடியாது: ஒன்று ஸாகிட் வெளியேற்றப்பட வேண்டும் அல்லது நாங்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம்" என்று மஇகா, மசீச மற்றும் கெராக்கான் கட்சிகள் பிரதமர் நஜிப்பிடம் துணிந்து கூற வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று அக்கட்சிகளை கேட்டுக்கொண்டார். மலாய்க்காரர்கள் அல்லாதாருக்கு…

பெட்ரோல் குண்டு வீசியவனை பிடிப்பதற்கு உதவினால் ரிம 10,000 வெகுமதி

ஞாயிற்றுக்கிழமை  மெர்டேகா  கொண்டாட்டங்களுக்கு  15 நிமிடத்துக்கு  முன், பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  வீட்டில்  பெட்ரோல்  குண்டு  வீசியவனை அடையாளம்  காட்டுபவருக்கு  ரிம10,000  பரிசளிக்க  டிஏபி  எம்பிகளும்  சட்டமன்ற  உறுப்பினருமாக  ஐவர்  முன்வந்துள்ளனர். அக்குண்டு  வீச்சில்  எவரும் காயமடையவில்லை. முதலமைச்சர்  அப்போது  ஜார்ஜ்டவுனில்  வேறொரு  நிகழ்வில்  கலந்து …

கெராக்கான்: ஜாஹிட்மீதும் தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட வேண்டும்

மலாய்க்காரர்- அல்லாதாரைத்  திமிர் பிடித்தவர்கள்  என்று  குறிப்பிட்ட  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடிமீதும்  தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்க்  குற்றம் சாட்ட  வேண்டும்  என  கெராக்கான்  இன்று  கூறியது. “குறிப்பிட்ட  ஒரு   தரப்பினரைப்  பார்த்து  சொன்னாரா,  மலாய்க்காரர்- அல்லாத  அத்தனை  பேரையும்  நினைத்துச்  சொன்னாரா  என்று  தெரியவில்லை  ஆனால், …

ஹுசாம்: அம்னோ, சிலாங்கூரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஸ் விவகாரத்தில்…

துணைப் பிரதமர்  முகைதின்  யாசினுடன்  தொடர்புள்ள  அம்னோ  தரப்பு  ஒன்று  சிலாங்கூரைக்  கைப்பற்றும்  நோக்கில்  பாஸ்  விவகாரங்களில்  தலையிட்டு  வருவதாகக்  கூறுகிறார்  பாஸ்  உதவித்  தலைவர்  ஹுசாம்  மூசா. பாஸை  பக்கத்தானை  ரக்யாட்டிலிருந்து  பிரித்து  விட்டால்  அதன்பின்னர்  அம்னோ  பாஸை  நெருங்குவதும்  அதனுடன்  ஒத்துழைப்பதும்  எளிதாகும்  என்று  அத்தரப்பு …

‘தயிப் மஹ்முட் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் அல்லர்’

சரவாக்கின்  முன்னாள்  முதலமைச்சர் மஹ்முட்  அபு  பெக்கிர்  தயிப்,  தம்  தந்தை  அப்துல்  தயிப்  மஹ்முட்  மலேசியாவின்  மிகப்  பெரிய  பணக்காரர்  என்பதை  மறுத்தார். கோலாலும்பூர்  ஷியாரியா  நிதிமன்றத்தில்,  தம்  முன்னாள்  மனைவி  ஷானாஸ் அப்துல்  மஜிட்  தொடுத்துள்ள வழக்கில்   சாட்சியமளித்த  அபு  பெக்கிர்  அவ்வாறு  கூறினார். மனைவியிடம் …

அசிசாவுக்கு முழு ஆதரவு கொடுத்ததை மறுக்கிறார் பாஸ் மகளிர் தலைவர்

பாஸ்  மகளிர்  தலைவர்  சித்தி  ஸைலா  முகம்மட்  யூசுப், சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  டாக்டர்  வான்  அசிசாவுக்கு  நிபந்தனையற்ற  ஆதரவு  தெரிவிக்கும்  அறிக்கையில்  தாம்  கையெழுத்திடவில்லை  என்கிறார். அந்த  அறிக்கை,  டிஏபி, பிகேஆர்  மகளிர்  தலைவர்கள்  சொங் எங்,  ஸுரைடா  கமருடின்  ஆகியோருடன்  சித்தி  ஸைலாவின்  ஒப்புதலையும்…

ராயர் கைது செய்யப்பட்டார்

  பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் இன்று (செப்டெம்பர்1) சங்கங்கள் சட்டத்தின் கீழ் ஜாலான் பட்டானியிலுள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிற்பகல் மணி 3.00 அளவில் போலீசார் அவரை வாக்குமூலம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர் என்று கூறிய ராயர், அதன் பின்னர் அவர் கைது…

நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் செல்வோம்: அமைச்சருக்கு பாஸ் இளைஞர்கள் பதிலடி

பாஸ் தன்னார்வப்  படையான  யுனிட்  அமாலுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்பட்டால்  நீதிமன்றம்  செல்வோம்  என பாஸ்  இளைஞர்  தலைவர்  சுஹாய்ஸான்  காயாட்  சூளுரைத்தார். பாஸின் யுனிட்  அமால்-மீதும்  போலீசார்  நடவடிக்கை  எடுப்பது “நிச்சயம்”  என உள்துறை  அமைச்சர் அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறியதற்கு  சுஹாய்சான்  இவ்வாறு  எதிர்வினையாற்றினார். யுனிட் …

ஜாஹிட்: பாஸ் யுனிட் அமாலுக்கும் இதே கதிதான்

பினாங்கு  தன்னார்வக்  காவல்  படை(பிபிஎஸ்)-க்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்பட்டதுபோல்  பாஸின்  தன்னார்வப்  படையான  யுனிட்  அமால்-மீதும்  போலீசார்  நடவடிக்கை  எடுப்பது “நிச்சயம்”  என்கிறார்  உள்துறை  அமைச்சர். “போலீஸ் இதேபோன்ற  நடவடிக்கையை  எடுக்கும். அது  உறுதி”, என  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  கூறினார். பிபிஎஸ்-சுக்கும்  யுனிட்…

என்னை எப்போது கைது செய்யப்போகிறீர்கள்? ஐஜிபி-யைக் கேட்கிறார் குவான் எங்

பினாங்கு  தன்னார்வக்  காவல்  படையைச்(பிபிஎஸ்)  சேர்ந்த  156 பேரைக்  கைது  செய்த போலீசார்  அடுத்து  தம்மைக்  கைது  செய்யலாம்  என்று நினைக்கிறார்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங். “இப்படிக்  கேட்கலாம்  என்று  நினைக்கிறேன். ‘என்னை எப்போது  கைது  செய்வீர்கள்?’ அவருக்காக (போலீஸ் படைத்  தலைவர் காலிட்  அபு …

அசிஸ் பாரி: 1992 ஆம் ஆண்டு பிரகடனப்படி அஸிசாவை எம்பியாக…

  சிலாங்கூர் மாநில சுல்தான் மாநில மந்திரி புசாராக வான் அஸிஸா வான் இஸ்மயில் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும், ஏனென்றால் 1992 ஆம் ஆண்டில் அவரது தந்தை, அப்போது சுல்தானாக இருந்தார், கையொப்பமிட்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு இவருக்கு உண்டு. அரசமைப்பு கோட்பாடுகள்…

கைரி: பிபிஎஸ் ஆபத்தானது, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியே

அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்,  பினாங்கு  தன்னார்வக்  காவல்  படைமீது  போலீசார்  நடவடிக்கை  எடுத்திருப்பது  சரியானதே  என்கிறார். அது  ஓர் “ஆபத்தான” கூட்டம்  என்றவர்  வருணித்தார். மாநிலப்  போலீசாரின்  பணிகளை அந்தத்  தன்னார்வப்  படையினர்  செய்யத்  தொடங்கி விட்டார்கள்  என  இளைஞர், விளையாட்டு  அமைச்சரான  கைரி  கூறினார்.…

எக்ஸ்கோவிடம் 4 மணிநேர விசாரணை; ‘குற்றவாளி’போல் நடத்தப்பட்டார்

நேற்று  கைதான  பினாங்கு  தன்னார்வக்  காவல்  படைத்(பிபிஎஸ்)  தலைவர்  பீ போன்  பூ, போலீசார்  நான்கு மணி  நேரம்  தம்மிடம்  விசாரணை  நடத்தியதாகவும் ஒரு  குற்றவாளியைப் போல்  நடத்தினார்கள்  என்றும் கூறினார். “ஒரு  குற்றவாளியிடம்   நடந்துகோள்வதுபோல்  பல மாதிரி  கேள்விகளைக் கேட்டனர். படம்  பிடித்தனர். கைரேகையைப்  பதிவு  செய்தனர்”,…

ஒப்ஸ் லாலாங் போன்றதொரு இயக்கம் தொடங்கியுள்ளது

அரசாங்கம்  ஒபராசி  லாலாங்  போன்றதொரு  நடவடிக்கையைத்  தொடங்கியிருக்கிறது.  பினாங்கில்  தன்னாரவக்  காவல்  படையினர் (பிபிஎஸ்) 156 பேர்  கைது  செய்யப்பட்டிருப்பது இதைத் தெளிவாகக்  காண்பிக்கிறது  என  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கூறினார். 1987-இல், டாக்டர்  மகாதிர்  ஆட்சியில்  ஒபராசி  லாலாங்  தொடங்கப்பட்டு 107பேர்  கைது  செய்யப்பட்டதுபோல்  இப்போதைய …

அஸ்மி ஷரும் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

  அரசாங்கத்தின் அதிகரித்து வரும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு இப்போது கல்விமான்களையும் விட்டுவைக்கவில்லை. மலாயா பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளரான அஸ்மி ஷரும் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நாளை குற்றம் சாட்டப்படவிருக்கிறார். சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரம் குறித்து அவர் மலே மெயில் ஓன்லைனில் ஆகஸ்ட் 14 இல்…