இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களை இந்த வாரம் பக்காத்தான் நிறைவு…

பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை இன்று வெளியிடப்படவிருக்கும் வேளையில் இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களை இந்த வாரம் நிறைவு செய்ய முடியும் என அது எதிர்பார்க்கிறது. "எங்கள் அடுத்த கூட்டம் புதன் கிழமை நடைபெறும். எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைப் பிரதமர் கலைக்கக் கூடும் என நாங்கள் எதிர்பார்ப்பதால்…

வழக்குரைஞர் மன்றம் பிகேஆர் தலைவர் ஒருவரை அழைத்துள்ளதை ஒரு வழக்குரைஞர்…

வழக்குரைஞர் மன்றம் நாளை நடத்தும் ஆய்வரங்கம் ஒன்றில் பேசுவதற்கு பிகேஆர் தலைவர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளதை வழக்குரைஞர் ஒருவர் தலைமையிலான சிறிய குழு ஒன்று ஆட்சேபித்துள்ளது. தேர்தல் மனுவைத் தயாரிப்பதற்கான வழி காட்டிகளும் நடைமுறைகளும் என்னும் தலைப்பில் பேசுவதற்கு பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர் ஸ்டீவன் சூங் அழைக்கப்பட்டுள்ளதை தாம்…

எதிர்க்கட்சிகளுக்கான ஒலிபரப்பு நேரம் குறித்து அமைச்சு இறுதி முடிவு எடுக்கின்றது

அடுத்த பொதுத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளுக்கான ஒலிபரப்பு நேரம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு இறுதி முடிவு செய்து வருவதாக அதன் துணை அமைச்சர் ஜோசப் சாலாங் அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான ஒலிபரப்பு நேரத்தையும் வாய்ப்புக்களை விநியோகம் செய்வது மீது ஆய்வு செய்யப்படுவதாக…

ஓர் எலும்புக் கூடு பொதுத் தேர்தலுக்குக் காத்திருக்கும் படம் பிரதமரை…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக காத்திருக்கும் ஒரு மனிதர் எலும்புக்கூடாக மாறும் படம் ஒன்று இணையத்தில் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. நெகிரி செம்பிலானில் பிஎன் அடித்தட்டு உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது  ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் (PR1MA) தலைவர் ஜமாலுதின் ஜார்ஜிஸ்…

‘உடனடி குடிமக்கள்’வாக்களிக்கக்கூடாது :பாஸ் எச்சரிக்கை

ஆளும் கட்சியால் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு “உடனடிக் குடிமக்கள்” ஆக்கப்பட்டவர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்று பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் முகம்மட் ஹட்டா ரம்லி எச்சரித்துள்ளார். அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண பாஸ், அசல் புக்கான் அம்னோ என்னும் என்ஜிஓ-வுடன் சேர்ந்து  முயன்று வருவதாகக் கூறிய ஹட்டா(வலம்), பிஎன்…

பக்காத்தானின் மக்கள் நலம் நாடும் கொள்கை விளக்க அறிக்கை

பக்காத்தான் ரக்யாட் ‘Manifesto Rakyat: Pakatan Harapan Rakyat’ (மக்கள் கொள்கை விளக்க அறிக்கை: பக்காத்தான் மக்களின் நம்பிக்கை) என்ற அதன் கொள்கைவிளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது  மற்றவற்றோடு மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதாகச் சொல்லி வாக்காளர்களின் கவனத்தைக் கவர முனைகிறது. இன்று, பக்காத்தான் மாநாட்டில் கொள்கை விளக்க…

ஊகத்துக்கு இடமளித்து வேடிக்கை பார்க்கிறார் நஜிப்

உங்கள் கருத்து ‘நஜிப் அவர்களே, உங்கள் உருமாற்றத் திட்ட இலக்குகளைச் சில மாதங்களில் அல்லது சில வாரங்களிலேயே  அடைய முடியும் என்கிறீர்களா?” நஜிப்: உருமாற்றத் திட்டங்கள் வெற்றி பெற்ற பின்னரே 13வது பொதுத் தேர்தல் ஜே டான்: மறுபடியும் அதேதான்; தேர்தல் தேதி தள்ளிப் போய்விட்டது. ஏதோ திட்டமிடுகிறார்கள்,ஐயா.…

பேராக் மக்கள் பிஎன் மந்திரி புசார் யார் என்னும் பிரச்னையைத்…

'நஸ்ரி அவர்களே, மந்திரி புசார் பதவி பற்றியோ அல்லது அமைச்சராக வருவது பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல எதிர்த்தரப்பாகத் திகழ தயாராகுங்கள்" மூன்று அமைச்சர்கள் மந்திரி புசார் பதவி மீது 'மோகம்' கொள்ளவில்லை பல இனம்: பிஎன் கவலைப்பட வேண்டியதில்லை. பிஎன் -னுக்கு அந்த தலைவலி ஏற்படாமல்…

நஜிப் சிலாங்கூர் பிஎன் தேர்தல் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார்

இப்போது சிலாங்கூர் பிஎன் தலைவராக இருந்து வரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்த மாநிலத்துக்கான பிஎன் தேர்தல் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது, அந்த மாநில அம்னோவுக்குள் உட்பூசல் தீவிரமடைந்துள்ளது என்ற ஊகங்களை மேலும் வலுப்படுத்துயுள்ளது. இவ்வாறு சிலாங்கூர் பாஸ் துணைத் தலைவரும் ஷா அலாம் எம்பி-யுமான…

பிபிபி தேர்தல் வேட்பாளர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள்

13வது பொதுத் தேர்தலில் நிறுத்தப்படுவதற்கான மக்கள் முற்போக்குக் கடசியின் (பிபிபி) வேட்பாளர் பட்டியல் பாரிசான் நேசனலிடம் (பிஎன்) சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெரும்பாலோர் புதுமுகங்கள் ஆவர். அந்தத் தகவலை அந்தக் கட்சியின் முதுநிலை உதவித் தலைவர் மாக்லின் டென்னிஸ் டி குருஸ் வெளியிட்டார். என்றாலும் அந்த வேட்பாளர்களுடைய பெயர்களையோ…

தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா திரும்பினார்

கொலையுண்ட மங்கோலிய மாது அல்தான்துயாவுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தொடர்புபடுத்தி தாம் 2008 ஜுலை மாதம் வெளியிட்ட முதலாவது சத்தியப் பிரமாணமே உண்மையானது என தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் பகிரங்கமாக அறிவித்துள்ளார். நேற்று மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தவுடன் நிருபர்களிடம் பேசிய அவர்…

தபப223 பேரணி: 4 முழு அமைச்சர்கள் வேண்டும், அவ்வளவு பிரச்னைகள்

இந்நாட்டை வளப்படுத்திய இந்தியர்களை வந்தேறிகள் என்று கூறுகிறார்கள். அந்த இந்தியர்களின் உழைப்பால் ஓர் இனம் பலனடைந்து வருகிறது. இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உயிரோடு போலீஸ் நிலையத்திற்கு போன இந்தியர் பிணமாக வெளியில் வருகிறார் என்று நெகிரிசெம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் ரவி தமிழர் பணிப் படை பேரணியில் கூறினார். தமிழர்…

அம்பிகா: மலேசிய இந்தியர்களே, தவறாமல் வாக்களிப்பீர்களா?

13 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெர்சேயின் 8 கோரிக்கைகளும் ஏற்றுகொள்ளப்படாது என்ற நிலை தென்படுகிறது.  ஆனாலும், வாக்களிப்பது நமது கடமை என்று பெர்சே அமைப்பின் இணைத் தலைவர் அம்பிகா நேற்று இரவு கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற தமிழர் பணிப் படை பேரணியில் பேசுகையில்…

தபப223 பேரணி: தமிழர் தலைவராக இராமசாமி பிரகடனம் செய்யப்பட்டார்

தமிழர் பணிப் படை 223 பேரணி நேற்று கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் மாலை மணி 6.30க்கு மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கியது. 1,000 க்கு மேற்பட்டோர் அப்பேரணியில் பங்கேற்றனர். சங்கே முழங்கு என்ற பாடலுக்கான நடனத்துடன் பேரணி தொடங்கியது. மேடையில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி.…

தபப223 பேரணி: ஏன் ராஜபக்சேயை தடுத்து நிறுத்தவில்லை?

சிறீலங்கா அதிபர் ராஜபக்சே மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் இஸ்லாமிய பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் இதில் கலந்துகொள்வதற்கு ஆர்வத்துடன் இருந்தார். தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மலேசிய நாட்டில் காலடி வைக்க அனுமதிக்க மாட்டோம். அவர் இந்நாட்டிற்கு வருகை அளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் தடை விதிக்க…

தபப223 பேரணி: வேட்பாளராகும் வாய்ப்பை வலுப்படுத்துவதற்கு அல்ல

தமிழர் பணிப் படை (தபப) நேற்று (223) ஒரு பெரும் பொதுக்கூட்டத்திற்கு கோலாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழ் நாடு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை மணி 6.30 க்கு அப்பொதுக்கூட்டம் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் தொடங்கியது.…

அமைச்சர்கள் மந்திரி புசார் பதவிக்காக ‘அலையவில்லை’

பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், தாமும் தற்காப்பு அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி ஹனட்ஸ்லாவும்  பேராக் மந்திரி புசார் ஆவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறுவது “கிறுக்குத்தனமானது” என்று குறிப்பிட்டுள்ளார். புத்ரா ஜெயாவிலிருந்து ஈப்போவுக்குச் செல்வது பதவி இறக்கமாகும்…

நஜிப்: உருமாற்றங்கள் வெற்றி அளித்த பின்னரே 13வது பொதுத் தேர்தலுக்கான…

தேசிய உருமாற்றக் கொள்கைகள் உண்மையில் வெற்றியடைந்து மக்களுக்கு முழுமையாக நன்மை அளித்திருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புவதால் 13வது பொதுத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்கிறார். மக்களுடைய போராட்டத்தை முன்னின்று நடத்தவும் நாட்டுக்கு நன்மையைக் கொண்டு வரவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு…

‘அல்லாஹ்’ விவகாரம் பொதுத் தேர்தலுக்குப் பின்பு வரை இழுக்கப்படலாம்

'அல்லாஹ்' பிரச்னை மீது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சிவில் நீதிமன்றங்களில் இறுதித் தீர்வு காணப்படும் என யாரும் எதிர்பார்த்தால் அவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள். கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரால்ட் வழக்கில் அரசாங்கமும் உள்துறை அமைச்சும் செய்து கொண்ட முறையீடு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிர்வாகத்துக்கு…

சினாரைப் போல் ரிதுவான் டீ-யும் மன்னிப்பு கேட்க வேண்டும்

உங்கள் கருத்து: ‘சினார் ஹரியான் எதற்கு முந்திக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். அது பின்னால் மன்னிப்பு கேட்டால் போதும். கட்டுரையை வெளியிட்டிருந்ததுதான் அது.. ஆனால், எழுதியது அதுவல்லவே’ ‘இனவாதக் கட்டுரைக்காக சினார் ஹரியான் மன்னிப்பு கேட்டது அப்சலோம்: நாளேட்டின் செய்தி நிர்வாக ஆலோசகர் அப்துல் ஜலில் அலி,(கட்டுரையை எழுதிய…

13வது பொதுத் தேர்தலையொட்டி போலீஸ் நாடு முழுக்கப் பயிற்சி மேற்கொண்டுள்ளது

போலீஸ் 13வது பொதுத் தேர்தலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள நேற்றும் இன்றும் 'Ex Ballot III'என்ற பெயரில் பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. நாடு முழுக்க மேற்கொள்ளப்படும் இப்பயிற்சி சாபாவில் மட்டும் மேற்கொள்ளப்படாது. அங்கு, இரண்டு வாரங்களுக்குமுன்பாக தாவாவுக்கு அருகில் கம்போங் டண்டுவோவுக்குள்  ஊடுருவிய பிலிப்பினோ கும்பல் ஒன்றின்மீது போலீஸ் கவனம்…

நஸ்ரி: நேரம் வரும் போது நான் நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திடுவேன்

 மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பின் தேர்தல் நேர்மை வாக்குறுதியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பின்பற்றித் தாமும் கையெழுத்திடப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறியிருக்கிறார். "நேரம் வரும் போது நான் அதில் கையெழுத்திட்டு நான் ஊழல், குற்றச் செயல்கள் ஆகியவற்றில் சம்பந்தப்படவில்லை என்பதை…

பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகின்றது

பாரிசான் நேசனல் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு இப்போது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. பிஎன் தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சரியான நேரத்தில் அதனை வெளியிடுவார் என பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறினார். வெற்று வாக்குறுதிகளை வழங்கும் எதிர்க்கட்சிகளைப் போல் அல்லாமல்…