இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவிக்கு ஜோஹாரி அப்துல் கானி மற்றும் பொருளாதார அமைச்சர் பதவிக்கு அமீர் ஹம்சா அசிசான் ஆகியோரை நியமிக்கும் முடிவு, அரசாங்கத்திற்குள் பொருத்தமான வேட்பாளர்கள் இல்லாததால் ஏற்படவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். அரசாங்கத்திற்கு மாற்று வேட்பாளர்கள் பற்றாக்குறை இல்லை…
எம்பி: மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டும்தான் ஆங்கிலக் கல்வியா?
மலேசிய இடைநிலைப் பள்ளி மாணவர்களில் சுமார் 2 விழுக்காட்டினருக்கு மட்டுமே கிடைக்கும் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பு எல்லா தேசியப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என டிஏபி கம்பார் எம்பி கோ சுங் சென் கூறினார். மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரி(MRSM)களுக்குச் செல்லும் மாணவர்கள் மட்டுமே எஸ்பிஎம்,…
முகிலன் மஇகா இளைஞர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார்
மஇகா இளைஞர் பகுதி துணைத் தலைவரான வி.முகிலன், இளைஞர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்தார். “கட்சியை வலுப்படுத்தவும் ஒன்றுபடுத்தவும் தலைமைக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.”, என்று பெர்னாமாவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறினார். முகிலனை எதிர்த்துப் போட்டியிடுபவர் மஇகா…
பாஸ்: ‘ஆவி வாக்காளர்களா?’ பிஎன்னின் கூற்று அபத்தமானது
சுங்கை லிவாவ் இடைத் தேர்தலில் பாஸின் வெற்றிக்கு “ஆவி வாக்காளர்கள்” உதவினார்கள் என்று பிஎன் கூறிக்கொண்டிருப்பதில் உண்மை இல்லை என்று கெடா பாஸ் ஆணையர் மாபுஸ் ஒமார் இன்று கூறினார். “கண்ணில் படாத வாக்காளர்கள்” என்று பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறும் அந்த வாக்காளர்கள் இதற்குமுன் பல…
‘சொல்வதைச் செயலில் காட்டுங்கள்’-கர்பாலுக்கு மசீச பதிலடி
மற்றவர்களைக் குறைசொல்லுமுன்னர் டிஏபி தலைவர் கர்பால் சிங் சொந்த கொல்லைப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூத்த அரசியல்வாதியான கர்பால் “உண்மை நிலையை அறியாதிருக்கிறார்” என மசீச மத்திய செயலவை உறுப்பினர் லொ செங் கொக் சாடினார். இவ்வளவு பேசும் கர்பால் டிஏபி-இல் மலாய்க்காரர்களைக் கூடுதலாக சேர்க்கும்படி கூற வேண்டியதுதானே…
என்எப்சி போன்ற குளறுபடிகளைத் தடுக்க எம்ஏசிசி-இன் பரிந்துரைகள்
நேரடிப் பேச்சுகளின்வழி கொடுக்கப்படும் குத்தகைகளையும் அக்குத்தகைகளுக்கு வழங்கப்படும் கடன்களையும், அதிலும் “அரசாங்கத்தில் உள்ளவர்களின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட”திட்டங்களை அமைச்சரவை நுணுகி ஆராய வேண்டும் என மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நேற்று வெளியிடப்பட்ட அதன் 2012 ஆண்டறிக்கையில் முன்வைத்துள்ள எம்ஏசிசி, அதில் ஆதாய முரண் ( conflict of…
கேமரன் மலை வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு ஜ.செ.க-வின் நன்கொடை
அண்மையில் கேமரன் மலையில் நீர் அணைக்கட்டு திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பெர்த்தாம் வேலி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பினாங்கு ஜ.செ.க RM 50,000.00 வெள்ளியை நன்கொடையாக வழங்கியது. இந்நிதியை கேமரன் மலை ஜ.செ.க தலைவரான ஜெ.சிம்மாதிரி, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் லியோங் ஙா, மெந்தகாப்…
புவா: சுப்ரா பொய் சொல்லுகிறாரா அல்லது புரியாமல் பேசுகிறாரா?
பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சுகாதார சேவையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சுகாதார அமைச்சர் கூறியிருப்பதை டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் சாடியுள்ளார். டாக்டர் எஸ். சுப்ரமனியம் ஒன்று பொய் சொல்கிறார் அல்லது புரியாமல் பேசுகிறார் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கூறினார்.…
எம்ஏசிசி: என்எப்சி குத்தகை வழங்கப்பட்டதில் பல கோளாறுகள்
விவசாய அமைச்சு, நேசனல் ஃபீட்லோட் செண்டர் திட்டத்துக்கான குத்தகையைத் தொழில்நுட்பமோ, நிதிவசதியோ இல்லாத ஒரு நிறுவனத்துக்கு வழங்கியது என மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியுள்ளது. அந்தக் குத்தகை வழங்கப்பட்டதில் பல கோளாறுகள் காணப்படுவதாக அவ்வாணையம் அதன் 2012 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கக் கடன்கள்…
பாஸ் இளைஞர்கள்: ‘செலவுமிக்க’ இடைத்தேர்தல்கள் வேண்டாமே
இடைத் தேர்தல்கள், பெரும்பாலும் “செலவுமிக்கவை” என்பதாலும் பொதுவளங்களும் வீண் விரயமாகின்றன என்பதாலும் அவற்றைக் கைவிட்டு விடலாம் என்று பாஸ் இளைஞர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஒவ்வொரு இடைத் தேர்தலும் போட்டியிடும் கட்சிகளுக்கு மிகுந்த பொருள்செலவை ஏற்படுத்துகிறது என்று பாஸ் இளைஞர் பகுதி நிர்வாக மன்ற உறுப்பினர் சுஹாய்சான் கயாட் கூறினார். திங்கள்கிழமை…
எம்ஏசிசி-க்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கொடுத்தால் அதிகார அத்துமீறல் நிகழ்ந்து…
அரசாங்கம் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கு வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தைக் கொடுக்காது. அது “அதிகார அத்துமீறல்”களுக்கு இடமளித்து விடலாம். இவ்வாறு நாடாளுமன்றத்தில் கூறிய பிரதமர்துறை துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம், அப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தால் எம்ஏசிசி-யே விசாரணையாளராகவும் வழக்குத் தொடுப்பாளராகவும் ஆகிவிடும் என்பதால் குறுக்கிடு கட்டுப்பாடுகள் ( checks and…
அவசரகாலத்தில் இருந்ததைவிட இப்போது எஸ்பி அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம்
போலீஸ் படையின் சிறப்புப் பிரிவில் (எஸ்பி), அவசரகாலத்தில் இருந்ததைவிட நஜிப் ஆட்சியில் அதிகமான ஆள்கள் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இதைச் சுட்டிக்காட்டிய ஸ்டீபன் சிம் (டிஏபி- புக்கிட் மெர்தாஜாம்), 1954-இல் எஸ்பி பிரிவில் 459 பேர் பணியாற்றினர் என்றார். 2012-இல் 8,200 பேர் அதில் இருந்தனர்…
பாஸ்: கர்பாலை டிஏபி கண்டிக்க வேண்டும்
இனத்தையும் சமயத்தையும் அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் பதிவை இரத்து செய்ய வேண்டும் அல்லது அவற்றில் எல்லாரும் உறுப்பியம் பெற அனுமதிக்க வேண்டும் என்று டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் கூறியிருப்பது பாஸ் கட்சிக்குப் பிடிக்கவில்லை. கர்பாலின் பேச்சு பக்காத்தான் ரக்யாட் உணர்வுக்கு முரணானது…
கர்பால்: இன, சமய அடிப்படையிலான அரசியல் கட்சிகளுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி
அனைத்து இன மற்றும் சமய அடிப்படையிலான அரசியல் கட்சிகள் அல்லது மன்றங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது அவை எவ்வித வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என்று டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். "அனைத்து இனவாதக் கட்சிகளின், வருந்தும் வகையில் பாஸ் உட்பட, பதிவுகள்…
கெராக்கான்: பிஎன்னுக்கான சீனர் ஆதரவு 60-70 விழுக்காடு கூடியுள்ளது
நேற்றைய சுங்கை லிமாவ் இடைத் தேர்தல் முடிவு, பிஎன்னுக்கு சீனர்களின் ஆதரவு அதிகரித்து வருவதைக் காண்பிப்பதாக கெராக்கான் துணைத் தலைவர் சியா சூன் ஹாய் கூறுகிறார். அதில் பிஎன்னுக்குச் சீனர்களின் ஆதரவு 60-இலிருந்து 70 விழுக்காடுவரை உயர்ந்திருந்தது என சியா கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. சுங்கை லிமாவ்,…
டிஏபி: DEIA அறிக்கைக்கு ஒப்புதல் இல்லாமலேயே ஜோகூர் அணைக்கட்டு வேலைகளைத்…
ஜோகூரில், கஹாங் அணைக்கட்டு மீதான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (DEIA) அறிக்கைக்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பே கட்டுமான வேலைகள் தொடங்கப்படுவது குறித்து மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் டான் ஹொங் பின் கவலை தெரிவித்தார். அந்த அறிக்கை ஆகஸ்ட் 25-இல் குளுவாங், ஜோகூர் பாரு, புத்ரா ஜெயா ஆகிய இடங்களில்…
குளுவாங் எம்பி தீபாவளி சந்தைக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்
இவ்வாண்டு தீபாவளிக்கு முந்திய நாள் (நவம்பர் 1) குளுவாங், ஜாலான் ஸ்டேசனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபவளி பசாருக்கு வருகை மேற்கொண்டு அங்கு சென்ற குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியுவ் சின் தோங், மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் டான் ஹோங் பின் மற்றும் வழக்குரைஞர் கே.சீலதாஸ் ஆகியோர் அச்சந்தைக்குச் சென்ற போது…
மாசிங்: மலேசியா உருவான விதத்தை அறியாதிருப்பது வருத்தமளிக்கிறது
தீவகற்ப மலேசியர்கள், மலேசியக் கூட்டரசு உருவாக சாபாவும் சரவாக்கும் எவ்வாறு உதவின என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்கிறார் பார்டி ரக்யாட் சரவாக் (பிஆர்எஸ்) தலைவர் ஜேம்ஸ் மாசிங். அது, தப்பெண்ணம் உருவாவதைத் தவிர்க்க உதவும் என்றவர் நினைக்கிறார். மாசிங், மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில், கிழக்கு மலேசிய மாநிலங்களின்…
சைபுடின்: அம்னோ வலச்சாரிக் கட்சியாக மாறிவருகிறது
நஜிப் அப்துல் ரசாக், 2009-இல் பிரதமர் பொறுப்பு ஏற்றதிலிருந்து நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோவை மிதவாதப் பாதையில் செலுத்தவே முயன்று வந்திருக்கிறார். ஆனால், கட்சியில் இப்போது வலச்சாரிகளின், மலாய்க்காரர்களின் சிறப்புரிமைகளின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்வோரின் குரலே ஓங்கி ஒலித்து வருகிறது. அண்மைய பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு…
எம்பி: செந்தூல் காங்கிரீட் ஆலையின் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும்
செந்தூலில் உள்ள சிமிண்டையும் காங்க்ரீட்டையும் கலக்கும் ஆலையை மூடி அதனால் சுகாதாரக் கேடு இல்லை என்பது உறுதியான பின்னரே திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பகுதிகளுக்கு அனுப்புவதற்காக காங்க்ரீட்டை உருவாக்கிக் கொடுக்கும் அந்த ஆலையிலிருந்து வெளிப்படும் சிறுசிறு துகள்கள் உடல்நலனுக்குத் தீங்கு செய்யக்கூடியவை என பத்து எம்பி…
மாட் சாபு:: வாத்துகளும் மாடுகளும் வந்தன; ஆனால் பாஸ் வெற்றி…
சுங்கை லீமவ் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஸ் வேட்பாளர் முகமட் அஸ்சாம் சாமாட் எதிர்வரும் 18 ஆம் தேதி கெடா மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார். ஆயிரக்கணக்கான பாஸ் ஆதரவாளர்கள் தங்களுடைய புதிய சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து வாழ்த்துக் கூற டூலாங் கெச்சிலில் குழுமியிருந்தனர்.…
சுங்கை லிமாவ்: பாஸ் கட்சியின் முகமட் அஸாம் சாமாட் வெற்றி…
சுங்கை லீமாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பு முடிவுற்று, வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இரவு மணி 10.00 அளவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத் தேர்தலில் பிஎன்னின் அஹ்மட் சொகைமி லாஸி, 53, மற்றும் பாஸ்சின் முகமட் அஸாம் சாமாட், 37, ஆகிய இருவருக்கிடையிலான…
பிரதமரே! இரண்டு நாள் வேணும்!
தீபாவளியை மலேசிய இந்தியர்கள் மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்திய பிரமருக்கு நன்றி என்கிறார் மருத்துவர் சுபா. ஆனால், பிரதமருக்கு நன்றி கூறிய ம இ கா தலைவர் பழனிவேல் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என கேட்டது வியப்பாகவுள்ளது என்கிறார். “பல நிலைகளில் சரிவு கொண்டுள்ள நிலையிலும், அரசாங்கம்…
லண்டனில் ஹோட்டல் வாங்கியதைத் தற்காத்துப் பேசுகிறார் பெல்டா தலைவர் இசா
கூட்டரசு நில மேம்பாட்டு வாரியம் (பெல்டா )லண்டனில் ஹோட்டல் வாங்கியதைத் தற்காத்துப் பேசிய அதன் தலைவர் இசா சமட், அதற்குக் கொடுக்கப்பட்ட விலை அதிகம் என்று சொல்லி டிஏபி மட்டுமே அதைக் குறை கூறுகிறது என்றார். தாபோங் ஹாஜி, தொழிலாளர் சேமநிதி வாரியம் போன்றவைகூட லண்டனில் சொத்து வாங்கி…