மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் நுருல் இஸ்ஸாவுக்கு ஹீரோ வரவேற்பு

லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கு ஒன்றில் நேற்று பேசவிருந்தது அரசாங்க நெருக்குதலைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்ட பின்னர் அந்த நிகழ்வுக்குச் சென்ற அவருக்கு ஹீரோ வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒருவராக அதில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று பிற்பகல் விரிவுரை மண்டபத்துக்குள்…

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை!

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சி யுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என 'The Independent'  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச்…

மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக போர்க்கொடி!

இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை கூட்டத்தில்  சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை நாடாளுமன்ற கூட்டமைப்பு நிறைவேற்றியதின்வழி சிறீலங்கா மீதான மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பலத்த மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறீலங்கா சிங்கள அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல் எஞ்சியிருக்கும் தமிழர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அவர்களையும்…

ஹிஷாமுடின்: லாஹாட் டத்து ஊடுருவல் மீது பேச்சுக்களுக்கு இன்னும் வாய்ப்பு…

லாஹாட் டத்துவில் உள்ள கம்போங் தண்டுவோவில் பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து நீடிக்கும் ஊடுருவல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு காண பேச்சுக்கள் நடத்த இன்னும் வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். விரும்பத்தகாத சம்பவங்கள், ரத்தக் களறி அல்லது மரணங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பேச்சுக்களுக்கு இன்னும்…

தெரெசா: வெள்ளத்துக்குக் காரணம் எல்ஆர்டி திட்டம், சிலாங்கூர் தவறு அல்ல

பூச்சோங்கில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளத்துக்கு அங்கு மேற்கொள்ளப்படும் எல்ஆர்டி திட்டம் காரணமாகும். கால்வாய்களை சிலாங்கூர் அரசாங்கம் முறையாக பராமரிக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது காரணமல்ல என சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தெரெசா கோக் கூறுகிறார். அந்தத் திட்டத்துக்கான கட்டுமானப் பொருட்கள் அந்தப் பகுதியிலிருந்து நீர் வெளியேறுவதை…

மலாயாப் பல்கலைக்கழக கருத்தரங்கு மீது அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது என்கிறார்…

மலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜனநாயக, தேர்தல்கள் மய்யம் ஏற்பாடு செய்த தேர்தல் மீதான கருத்தரங்கை ரத்துச் செய்யுமாறு அரசாங்கம் அழுத்தம் கொடுத்த பின்னர் சில திருத்தங்களுடன் இன்று நடத்தப்பட்டது. அந்த உத்தரவு பிரதமர் அலுவலகத்திடமிருந்தும் உயர் கல்வி அமைச்சிலிருந்தும் வந்ததாக அந்த மய்யத்தின் இயக்குநர் முகமட் ரெட்சுவான் ஒஸ்மான்…

ஜோகூரில் டிஏபி, பிகேஆர் தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு

நேற்று ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவும் அவரின் பிகேஆர் சகாவான சுவா ஜுய் மெங்கும் வெளிப்படையாக சர்ச்சையிட்டுக்கொண்டதை அடுத்து இருவருக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. “பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தொடர்பு கொண்டேன். சுவாவும் பூ-வும் ஜோகூரில் மாநில டிஏபி, பிகேஆர் உறவுகள் பற்றி அதிலும்…

விஸ்வரூபம் படத்தைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டது

உள்துறை அமைச்சு விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதித்திருந்த தடையை அகற்றியுள்ளது. இஸ்லாத்தைத் தவறாகச் சித்திரிப்பதாகக் குறைகூறப்பட்ட அப்படத்தில் மேலும் சில காட்சிகள் நீக்கப்பட்டுத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் அப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் ராஜா அஸஹார் ராஜா அப்துல் மனாப் கூறினார். “சம்பந்தப்பட்ட…

பக்காத்தான், கூட்டுக் கொள்கை விளக்க அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடும்

எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் மாற்றரசுக்கட்சியான பக்காத்தான் ரக்யாட் அடுத்த வாரம் அதன் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்க ஆயத்தமாகிறது. “கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்படுவது 13வது பொதுத் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாகவும் அமையும்.”, என்று கூறிய பிகேஆர் வியூக…

பெர்சே: தேர்தல் பரப்புரை விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை

தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் கூட்டமைப்பான பெர்சே, பரப்புரைக்கான காலம் ஒதுக்கப்படுவதற்குமுன்பே பரப்புரைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் குற்றச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஜோகூர் பாருவில், ‘Undilah Barisan Nasional’(பிஎன்னுக்கு வாக்களியுங்கள்) என்ற சொற்களுடன் பிஎன் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.…

’13வது பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும் பிஎன் -னிடம் வழக்கமான…

கடந்த பொதுத் தேர்தல்களில் பிஎன் நல்ல வெற்றியை அடைவதற்கு பங்காற்றியுள்ள 'முன்னணி நிலை' இப்போது அந்தக் கூட்டணியிடம் இல்லை. 2008 தேர்தலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பிஎன் பெறாததால் அது தேர்தல் தொகுதி எல்லைகளை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போனதே அதற்குக்…

‘சிறுபான்மை இனங்களுடைய பண்பாடுகளைப் பாதுகாக்கும் கட்சியை ஆதரியுங்கள்’

சிறுபான்மை இனங்கள் தங்களது பண்பாடுகளை எந்த விதமான தடையுமின்றி பின்பற்றுவதை உறுதி செய்யும் கட்சிக்கு மக்களுக்கு வலுவான ஆதரவை அளிக்க வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். எதிர்க்கட்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் தங்களது பண்பாடுகளையும் பாராம்பரியங்களையும் பின்பற்றுவதற்கான தங்கள் சுதந்திரத்துக்குக்…

ஜோகூரில் பிகேஆர் கட்சியுடன் டிஏபி நடத்தும் போராட்டத்தில் கர்பால், பூ-வை…

ஜோகூரில் டிஏபி-க்கு எதிராக அந்த மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த மாநில டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துள்ளார். ஜோகூரில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்புக்கு…

தண்டா புத்ரா வழி நஜிப் வாழ்வா தாழ்வா என்ற நிலைக்கு…

"இந்த நாடு குழப்பத்தில் மூழ்கும் அபாயம் இருந்தாலும் கூட, அதிகாரத்தை என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தை தக்க வைத்துள்ள நஜிம் போராடுகிறார் என்பதையே அந்த நடவடிக்கை காட்டுகின்றது" மே 13 திரைப்படம் பெல்டா குடியேற்றக்காரர்களுக்குக் காட்டப்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார் கைரோஸ்: பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மட்டும் மே…

தைப்பூச திருவிழா குறித்த ரித்துவான் தீ-யின் இனவாதக் கருத்தை பிகேஆர்…

தைப்பூச திருவிழா குறித்து யூனிவர்சிட்டி பெர்தகனான் நேசனல் விரியுரையாளர் ரித்துவான் தீ அப்துல்லா எழுதி சினார் ஹரியான் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையை இனவாதமானது என்று பிகேஆர் கடுமையாகச் சாடியுள்ளது. அக்கட்சியின் மனித உரிமைகள் மற்றும் சட்டப் பிரிவின் துணைத் தலைவர் எஸ். ஜெயதாஸ் அக்கட்டுரையில் ரித்துவான் திருவிழா…

‘மே 13 திரைப்படம் பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு காட்டப்பட வேண்டும் எனப்…

பிஎன் -னுக்கான ஆதரவைப் பெருக்கும் நோக்கத்துடன் இன்று நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய தாண்டா புத்ரா ( Tanda Putera ) திரைப்படம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு  சிறப்பாக திரையிடப்பட்டது. அந்த பெல்டா கூட்ட நிகழ்ச்சி நிரலில் அந்தத் திரைப்படத்தை திரையிடும் நிகழ்வு இல்லை என்றாலும் பிரதமர்…

சுவா நீக்கப்பட வேண்டும் என ஜோகூர் மாநில டிஏபி விரும்புகிறது

ஜோகூரில் இட ஒதுக்கீடுகள் மீது டிஏபி-க்கும் பிகேஆர் -கட்சிக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் தகராறு வெளிப்படையான மோதலாக வெடித்துள்ளது. சுவா ஜுய் மெங்-கிடமிருந்து ஜோகூர் மாநில பிகேஆர் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அந்த மாநில டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், பிகேஆர்…

பக்காத்தான் இண்ட்ராபின் செயல்திட்டத்தை ‘இன்னமும் பரிசீலிக்கிறது’

பக்காதான் தலைவர்கள் இண்ட்ராபின் செயல் திட்டத்தை “அமலாக்கத்தக்கக் கொள்கைகளாகவும் சட்டத் திருத்தங்களாகவும்” மாற்றும் வழிமுறைகளை இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். பக்காத்தான் “கொள்கை அளவில்” ஆதரிக்கும் அத்திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். “செயல்திட்டம் எங்களின் தேர்தல் கொள்கை அறிக்கையுடன் ஒத்துப்போக வேண்டும். இல்லையேல்…

ஹேபியஸ் கார்ப்புஸ் மனுவை சொஸ்மா கைதி சமர்பித்தார்

2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் கைது செய்யப்பட்ட முகமட் ஹில்மி ஹஷிம், தாம் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுள்ளதாக கூறி தமது வளர்ப்புத் தயார் வழி ஹேபியஸ் கார்ப்புஸ் பாதுகாப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். சொஸ்மா அரசமைப்புக்கு முரணான சட்டம் என்றும் தமது…

உங்களுக்கு ஊட்டும் கரங்களைக் கடிக்க வேண்டாம் என மகாதீர் குடியேற்றக்காரர்களுக்குச்…

பெல்டா திட்டங்கள் மூலம் தாங்கள் அடைந்துள்ள நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு வரும் பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பெல்டா குடியேற்றக்காரர்களை கேட்டுக் கொண்டுள்ளார். "சில தரப்புக்கள் பெரிதுபடுத்தி வரும் விஷயங்களுக்குப் பலியாக வேண்டாம். அந்த உணர்வுகள்…

பாஸ் தலைவர்களை அன்வார் சிறுமைப்படுத்துவதாக காட்டும் காணொளியை பிகேஆர் நிராகரிக்கிறது

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பாஸ் தலைவர்களான அப்துல் ஹாடி அவாங்கையும் நிக் அப்துல் அஜிஸையும் சிறுமைப்படுத்துவதைக் காட்டுவதாகக் கூறப்படும் காணொளி 'நடவாத விஷயம்' என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் அதனை நிராகரித்துள்ளார். அவர் அந்த காணொளியை இன்னும் பார்க்கவில்லை என்றாலும் அது பற்றி…

தகவல் துறை: பிரதமர் பதவி விலகினார் என்ற செய்தி பொய்யானது

தகவல் துறை, அதன் மின் இதழில் நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பதவியிலிருந்து விலகினார் என்று செய்தியை வெளியிடவில்லை என்று அதன் தலைமை இயக்குனர் இப்ராகிம் அப்துல் ரஹ்மான் மறுக்கிறார். அதன் இணையத்தளத்தில் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார் அவர். பிரதமர் பதவி விலகினார் என்ற அறிக்கை அதன் மின்…

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தப்படுவதை காலிட் வரவேற்கிறார்

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், மாநிலச் சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைக்கப்போவதாகக் கூறியிருந்தாலும், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைத்  தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் நடத்துமானால் அதை அவர் வரவேற்பார். மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கும் உரிமை மந்திரி புசார், சுல்தான், சட்டமன்றம் ஆகியோருக்கு உண்டு என்றாலும் தேர்தலை எப்போது…