பிபிபி உறுப்பினர்கள் மலேசிய நண்பன் தலைமையகத்திற்குள் அத்துமீறல்

பிபிபி கட்சியை அவமானப்படுத்தியுள்ளதாக தாங்கள் கூறிக் கொள்ளும் ஒரு கட்டுரை மீது மலேசிய நண்பன் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரி நேற்று அந்தத் தமிழ் நாளேட்டின் தலைமையகத்தை அதிருப்தி அடைந்துள்ள 60 பிபிபி உறுப்பினர்கள் 'ஆக்கிரமித்து' கொண்டனர். அந்த ஐந்து மணி நேர 'முற்றுகை' நேற்று பிற்பகல்…

தி கியாட்: வேட்பாளர்களை முடிவு செய்பவர் பிரதமர், சொய் லெக்…

பாண்டான் எம்பி ஒங் தி கியாட், தம்மை வரும் தேர்தலில் வேட்பாளராக நியமனம் செய்வதில்லை என்ற மசீச முடிவால் கலக்கமடையவில்லை. ஏனென்றால்,  பிஎன் வேட்பாளர்கள் பற்றி இறுதி முடிவு செய்பவர் பிஎன் தலைவரான நஜிப் அப்துல் ரசாக்தான் என்கிறார் அவர். இன்று தம் சேவை மையத்தில் செய்தியாளர் கூட்டம்…

பாஸ்: அஜிஸான் கெடாவில் தேர்தலில் நிறுத்தப்படுவார்

கெடா மந்திரி புசார் உடல் நலப் பிரச்னைகளை எதிர்நோக்கிய போதிலும் வரும் பொதுத் தேர்தலில் அவரை நிறுத்துவது எனப் பாஸ் தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது. "அவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறார்," எனக் கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொன்னார்.…

முதலமைச்சர்: நஜிப் கையெழுத்திட்ட நேர்மை வாக்குறுதி ‘வெறுமையானது’

பிஎன் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி "ஏதுமில்லாத வெற்று அறிவிப்பு" என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வருணித்துள்ளார். தேர்தல் வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இருக்கும் என்பதற்கும் சொத்துக்கள் முழுமையாக பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்பதற்கும் தெளிவான கடப்பாட்டை அந்த வாக்குறுதி வழங்கவில்லை என்றும் அவர் சொன்னார். "நஜிப்பும்…

சிலாங்கூர் வழங்குவதை சாதகமாக பார்க்கும் Splash, மேல் விவரங்களைக் கோருகின்றது

சிலாங்கூரில் நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றான Splash எனப்படும் Syarikat Pengeluar Air Selangor Holdings Berhad, தனது நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்குச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ள தொகை குறித்து மேல் விவரங்களை அறிந்து கொள்ள மாநில அரசாங்கத்தைச் சந்திக்கும். மாநில…

எஸ்எம்இ-கள், குறைந்தபட்ச சம்பள அமலாக்கத்தை ஓர் ஆண்டு தள்ளிவைக்கலாம்

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள சிறிய நடுத்தரத் தொழில்கள் (எஸ்எம்இ-கள்), குறைந்தபட்ச சம்பளத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கினால் அதை ஓராண்டுக்குத் தள்ளிவைக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். இச்செய்தியை சின் சியு டெய்லியும் நன்யாங் சியாங் பாவும் பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. அமைச்சர் ஒருவர்…

நாட்டுப் பற்றுடையவை அல்ல எனக் கூறப்படுவதற்கு எதிராக இரண்டு அரசு…

பினாங்கைத் தளமாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு போராடும் இரண்டு அரசு சாரா அமைப்புக்கள் பிஎன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜாசா தலைமை இயக்குநர் புவாட் ஹசான் சொல்வதை அந்த இரு அமைப்புக்களும் வன்மையாகக் கண்டித்துள்ளன. ஜாசா என்பது தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் சிறப்பு விவகாரப் பிரிவு…

மாணவர்கள்: பின்வாங்க மாட்டோம், மீண்டும் பெக்கான் செல்வோம்

பெக்கான் நகரில் காலிகளால் மிரட்டப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் கெராக்கான் மஹாசிஸ்வா பிஆர்யு13 (ஜிஎம்13), அதைக் கண்டு அஞ்சவில்லை என்று கூறியதுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அந்தப் பாரம்பரிய நாடாளுமன்ற தொகுதியில் அவருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்துவதிலும் உறுதியாகவுள்ளது. அந்த இயக்கத்தின் தலைவர் ஸைஸ் அப்துல் காடிர் (படத்தில்…

நீதிமன்றம் செல்லத் தேர்தல் ஆணையம் தயார் என்கிறார் அதன் தலைவர்

தேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவற்றுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது. இதனை மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானிடம் தெரிவித்த இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், ஆணையம் சட்டத்தைப்…

விற்பனை நோக்கத்திற்காக ஈழம் குறித்த உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தாதீர்

மலேசியாவில் முக்கிய நாளிதழ்களாக கருதப்படும் இரு தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த முன்பக்க செய்தி இன்று மலேசிய தமிழர்கள் பலரைக் கலவரப்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காலையில் நாளிதழைப் பார்த்த உடனே ஏதோ ஒரு பாரமும் விவரிக்க முடியாதொரு துக்கமும் மனமெங்கும் விரவி விட்டதைத் தடுக்க முடியவில்லை. நேற்றைய…

வான் அஜிஸா, ஜுய் மெங்கை ஆதரிக்கிறார், பூ-வைக் கண்டித்தார்

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் அந்தக் கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் சுவா ஜுய் மெங்-கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் பிகேஆர், டிஏபி கட்சிகளுக்கு இடையிலான இட ஒதுக்கீடு தகராற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை கண்டித்துள்ளார்.…

சபாவில் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சிக்கு மாறினர்

சபாவில் கடந்த வாரம் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சியில் இணைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பிஎன் பிரமுகர்கள் பலர் கட்சி மாறி வருகின்றனர். முன்னாள் சபா துணை அமைச்சர் யாப்பின் ஜிம்போட்டோன், முன்னாள் கூட்டரசுத் துணை அமைச்சர் அகமட் ஷா தம்பாக்காவ் ஆகியோர் புதிதாக…

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் அதிகரிப்பதாக ஆயர் எச்சரிக்கிறார்

"அரசியல் களத்தில் இரு புறமும் வேகம் கூடியுள்ள இந்தத் தேர்தலுக்கு முந்திய கால கட்டத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளதை" காண்பதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் எச்சரித்துள்ளார். "தேர்தல் காலத்தில் பொறுப்பற்ற பேச்சுக்களை நாம் ஒரளவுக்கு எதிர்பார்க்க வேண்டும் என்றாலும் நாகரீகமான வாக்குவாத…

“ஐஜிபி அவர்களே, லாஹாட் டத்துவில் நீங்கள் உண்மையில் என்ன தான்…

"நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் என்ன செய்கின்றீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. உங்கள் மனதில் இருப்பதை நாங்கள் உணர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா ?" லாஹாட் டத்துவில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்…

ஜொகூர் PSM கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’…

மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), ஜொகூர் நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’ நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (23.02.2013 ) மாலை மணி 7.30-க்கு ஜொகூர், ஜாலான் பீசாங் காபாஸ் 1-ல் அமைந்துள்ள செராம்பி தெராத்தாய் உணவகத்தில் (Restoran Serambi Teratai, Jalan Pisang…

போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்து கிள்ளானில் ஊர்வலம்

போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை மலேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மையில் கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (காணொளி) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம் பெரியோர் என சுமார்…

பினாங்கு மலாய்க்காரர்களை உண்மையிலேயே ஏமாற்றியது யார்?

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான், “மலாய்க்காரர்கள் செயல்முனைப்பற்றவர்களாக இருந்தால் மறைந்து போவார்கள்” என்று கூறியது குறித்து டிஏபி போலீசில் புகார் செய்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கீர் ஜோகாரி, ஜாலான் பட்டானியில் உள்ள வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்…

கோலாலம்பூரில் அனைத்துலகத் தாய்மொழி தினம்

அனைத்துலகத் தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் நாளை (பெப்ரவரி 21, 2013) கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் அனைத்துலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இவ்விழாவை மலேசிய செயல் கூட்டமைப்பின் (Gabungan Bertindak Malaysia) ஆதரவுடன் தமிழ் அறவாரியம் மலேசியா, லிம்…

சிலாங்கூர், நீர்வளச் சொத்துகளுக்காக ரிம9.65 பில்லியன் கொடுக்க முன்வந்தது

சிலாங்கூர் அரசு அம்மாநிலத்தில் நீர்வளத்தை நிர்வகிக்கக் குத்தகை பெற்றுள்ள நான்கு நிறுவனங்களையும் எடுத்துக்கொள்ள ரிம9.65 பில்லியன் கொடுக்க முன்வந்துள்ளது. ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட்(சபாஷ்), புஞ்சாக் நியாகா சென். பெர்ஹாட், கொன்சோர்டியம் அபாஸ் சென்.பெர்ஹாட், ஷியாரிகாட் பெங்குலுவார் ஆயர் சிலாங்கூர் ஹோல்டிங் (ஸ்ப்லேஷ்) ஆகிய நான்கு…

போலீசார்: லஹாட் டத்து இழுபறி கட்டுக்குள் இருக்கிறது

லஹாட் டத்துவில் ஊருருவியுள்ள ஆயுதமேந்திய நபர்களை வெளியேற்றுவதற்கு தாங்கள் உறுதியாகச் செயல்படவில்லை எனக் கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். "நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்," என அவர்கள் வலியுறுத்தினர். "நீங்கள் ஊகங்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நான்…

வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் குறைந்த கட்டணத்தில் ஏர்ஏசியா X-ல் பயணம்…

அதைத் தேசிய சேவை என்பீர்களோ அல்லது வியாபாரத் தந்திரம் என்று அழைப்பீர்களோ ஆனால், ஏர்ஏசியா X வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பதற்காக நாடு திரும்பும் மலேசியர்களுக்குக் குறைந்த கட்டணப் பயணச் சேவையை வழங்க முன்வந்துள்ளது. தேர்தல் எப்போது என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளில் உள்ள மலேசிய வாக்காளர்கள் நாடு திரும்ப…

‘UEC சான்றிதழை இப்போதே அங்கீகரியுங்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்ல’

UEC என்ற ஐக்கிய தேர்வு சான்றிதழை உடனடியாக அங்கீகரிக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பக்காத்தான் ராக்யாட் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை வாங்குவதற்கான தந்திரமாக அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அது கூறியது. பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுச் சேவைக்கும் நுழைவுத் தகுதியாக அந்த…

ஜுய் மெங்: கர்பால் குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன்

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை வெளிப்படையாக ஆதரித்துள்ளது குறித்தும் தமக்கு எதிரான விசாரணையைத் தொடங்குமாறு பிகேஆர் தலைமைத்துவத்தை கேட்டுக் கொண்டது குறித்தும் தாம் அவர் மீது 'மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக' ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங்…