ஐரின் தீமைகளை எதிர்த்தவர், தன்னலமற்று வாழ்ந்தவர்

உங்கள்  கருத்து: ‘அவர்  ஒருவர். ஆனால், பலரை  எதிர்த்து  நின்றார். அவர், மலைபோன்ற கோலியாத்தை எதிர்த்து  வென்ற   நவீன-கால  டேவிட்’   மூத்த சமூக  ஆர்வலர்  ஐரின்  ஃபெர்னாண்டஸ் மறைந்தார்    அதிசயித்து  போனவன்:  தெனாகானிதா  தலைவர்  ஐரின்  பெர்னாண்டஸ்  அரிதினும்  அரிதாக வந்துதித்தவர். மலேசியா  பெற்றெடுத்த  வீரதீர  பெண்மணி. …

நஜிப்: நிதிப் பற்றாக்குறை என்பது கெடுதலான ஒன்றல்ல

உள்நாட்டு  நிதிப்  பற்றாக்குறை  என்பது  கெடுதலான  ஒன்றல்ல  என்கிறார்  பிரதமரும்  நிதி  அமைச்சருமான  நஜிப்  அப்துல்  ரசாக். தேசிய  கடன்   பெருகி  வருவதை  எதிரணியினர்  குறைகூறி  இருப்பதற்கு  பிரதமர்  இவ்வாறு  கூறினார். அஹ்மட்  ஹம்சா (பிஎன் -ஜாசின்)வுக்குப்  பதிலளித்த  நஜிப், “1990-களின்  பிற்பகுதியிலிருந்து  நிதிநிலை  பற்றாக்குறையாகத்தான்  வந்துள்ளது.  ஆனாலும், …

ஐஏடிஏ: விமானங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவீர்

அனைத்துலக  விமானப்  போக்குவரத்து  சங்கம் (ஐஏடிஏ),  அரசாங்கங்கள்  அனைத்துலக  சிவில்  விமானப்  போக்குவரத்து  அமைப்பு (ஐசிஏஓ) வரையறுத்துள்ள  பாதுகாப்பு நடைமுறைகளைப்  பின்பற்ற  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுத்துள்ளது. “நடந்துவிட்ட  துயரச்  சம்பவத்துக்குப்  பாதுகாப்பு  அம்சம்  ஒரு  காரணமோ  இல்லையோ,  இரண்டு  பயணிகள்  போலிக்  கடப்பிதழ்களை  வைத்து  ஒரு விமானத்தில்…

தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட வரைவு – காலத்தின் கட்டாயம், ஆனால்…

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு, பிரதமர் துறையின் கீழ் 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டு இந்த ஆண்டோடு ஈராண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய நிலையில், இந்த மேம்பாட்டுத் திட்ட வரைவு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை மீள்பார்வையிட வேண்டியது அவசியம்  என்கிறார் செம்பருத்தி கட்டுரையாளர் தமிழினி.   மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு…

செம்பனைத் தோட்டத் தொழிலாளர்களில் 77 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்

செம்பனைத்  தோட்டங்களில்  வேலை  செய்யும் 442,094  தொழிலாளர்களில்  77  விழுக்காட்டினர்  அந்நியர். இதனைத்  தெரிவித்த  தோட்டத்  தொழில்  மூலப்பொருள்  அமைச்சர்  டக்லஸ்  உக்கா எம்பா,  இது  செம்பனைத்  துறை  அந்நிய  தொழிலாளர்களையே  அதிகம்  நம்பி  இருப்பதைக்  காண்பிக்கிறது  என்றார். இப்பிரச்னைக்குத்  தீர்வுகாண  அத்துறையில்  உள்ளூர்  மக்களைக்  குறிப்பாக  இளைஞர்களைப் …

கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியுமா? சந்தேகம் என்கிறார் அதன் தயாரிப்பாளர்

மலேசிய  விமான  நிறுவத்தின்  எம்எச்370  விமானத்தில்  இருந்த  கருப்புப்  பெட்டியைக்  கண்டெடுப்பது  சிரமமான  செயலாகும்  என்கிறார்  கருப்புப்  பெட்டி  தயாரித்த  குழுவில்  இடம்பெற்றிருந்த  ஓர்  அறிவியலாளர். “விழுந்தது  எந்த  இடம்  எனத்  தெரியாத  நிலையில்  ஆயிரம்  சதுர  கிலோ  மீட்டர்  பரப்பில்,  ஆழமான  கடலில்  கருப்புப்  பெட்டியைக்  கண்டெடுப்பது …

2வது பாலத்துக்குக் கட்டணம் ரிம8.50 மிக அதிகம் என்று மக்கள்…

சுல்தான்  அப்துல்  ஹாலிம்  மு’ஆட்ஸாம்  ஷா  பாலத்தைப்  பயன்படுத்தும்  கார்களுக்கு  ரிம8.50  கட்டணம்  என்று  அறிவிக்கப்பட்டிருப்பது  குறித்து  பினாங்கு  மக்கள்  அதிருப்தி  அடைந்துள்ளனர். மார்ச்  முதல்  நாள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கால்  திறந்து  வைக்கப்பட்ட  அப்பாலத்தை  மோட்டாரோட்டுனர்கள்  ஒரு  மாத  காலமாக  இலவசமாக  பயன்படுத்தி  வந்தனர். அந்த …

ஸ்ரீபிரடானா ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு…ரிம2.8மில்லியன்!

  கடந்த 2009 ஆண்டிலிருந்து ஸ்ரீபிரடானா ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புக்கு அரசாங்கம் செலவிடும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். சாதாரண குடிமக்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் இவ்வேளையில் பிரதமரும் அவரது அமைச்சர்களும் வீணாகச் செலவு செய்யக்கூடாது என்று…

“வாக்காளர் இன ஒதுக்கீடு” விவகாரம்: ஷகிடான் காசிம் உடனடியாக பதவி…

  பிரதமர்துறை அமைச்சர் ஷகிடான் காசிம் "வாக்காளர் இன ஒதுக்கீடு" முறை வேண்டும் என்று ஆலோசனை கூறியதற்காக அவர் உடனடியாக அவரது அமைச்சர் பதவியத் துறக்க வேண்டும் என்று டிஎபி செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட மலேசியர்கள்…

கர்பாலும் அன்வாரும் எம்பி-களாக தொடர்ந்து இருக்கலாம்

அன்வார்  இப்ராகிமும்  கர்பால் சிங்கும்  குற்றவாளிகள்  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும்  அவ்விருவரும்  முறையே  பெர்மாத்தாங்  பாவ்  மற்றும்  குளுகோர்  எம்பிகளாக  தொடர்ந்து   இருக்கலாம்  என  மக்களவை  துணைத்  தலைவர்  இஸ்மாயில்  முகம்மட்  சைட்  கூறினார். நீதிமன்ற  நடைமுறைகள்  முடிவுறும்வரை  அவ்விருவரும்  எம்பிகளாக  இருக்கத்  தடையில்லை. கூட்டரசு  அரசமைப்பின்படி  தங்களின்  எம்பி …

அன்வார் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம், தப்பில்லை

அன்வர் இப்ராகிம்  குதப்புணர்ச்சி  வழக்கில்  குற்றவாளி  என்று  தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும்  கட்சித்  தலைவர்  பதவிக்குப்  போட்டியிடலாம்  என்கிறார்  பிகேஆர்  இளைஞர்  பகுதி:  உதவித்  தலைவரும்  ஒரு  வழக்குரைஞருமான  ரட்ஸ்லான்  ஜலாலுடின். குற்றவாளி  என்று  தீர்ப்பளிக்கப்பட்டவர்  ஓர்  அமைப்பில்  பொறுப்பான  பதவி  வகிக்கக்கூடாதுதான்.  ஆனால், சங்கப்  பதிவதிகாரியிடமிருந்து  விலக்குபெற்று  தலைவராக  பதவி …

ஐரின் ஃபெர்னாண்டஸ் காலமானார்

மூத்த  சமூக  ஆர்வலர் ஐரின்  பெர்னாண்டஸ்,67,  இன்று  காலமானார். இருதயக்  கோளாறு  காரணமாக  அவர்  கடந்த  செவ்வாய்க்கிழமை  செர்டாங்  மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்தார். ஐரின்  இன்று காலை  10.50க்குக்  காலமானதாக  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  கூறினார். ஐரின்,  அரசுசாரா  அமைப்பான  தெனாகானிதா-வை  நிறுவிய  மலேசியாவில்  குடியேறியவர்களின் …

பக்காத்தான்: ‘முன்னுக்குப்பின் முரணாகப் பேசிய’ துணை அமைச்சர்மீது நடவடிக்கை தேவை

பக்காத்தான்  ரக்யாட்  எம்பிகள்,  தற்காப்புத்  துணை  அமைச்சர்  அப்துல்  ரஹிம்  பக்ரியை  நாடாளுமன்ற  உரிமைகள், சலுகைகள்  குழுவின்  விசாரணைக்கு  அனுப்ப  வேண்டும்  எனப்  பரிந்துரைத்துள்ளனர். அப்துல்  ரஹிம்  கடந்த  வாரம்  பேசுகையில்,  எம்எச்370  விமானம்,  கட்டுப்பாட்டுக்  கோபுரத்தின்  உத்தரவின்பேரில்தான்  திரும்பி  வருவதாக  அரச  மலேசிய  ஆகாயப்படை  “அனுமானம்”  செய்துகொண்டது …

நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்யப்பட்டது

2015-இலிருந்து  பொருள்,  சேவை  வரி (ஜிஎஸ்டி)யைக்  கொண்டுவரப்போவதாகக்  கூறிக்கொண்டிருந்த  அரசாங்கம்  இன்று  நாடாளுமன்றத்தில் கிஎஸ்டி  சட்டமுன்வரைவைத் தாக்கல்  செய்தது. பொருள், சேவை  வரி   சட்டமுன்வரைவு  2014,  என்றழைக்கப்படும்  அதனை  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  தாக்கல்  செய்தார்.

ஆஸி பிரதமர்: நஜிப் சொன்னது சரியே

ஆஸ்திரேலியப்   பிரதமர்   டோனி  அப்பட்,  எம்எச்370  இந்தியப்  பெருங்கடலில்  விழுந்ததாக  மலேசியப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் கூறியதைத்  தற்காத்துப்  பேசியுள்ளார். “கிடைத்துள்ள  ஆதாரங்கள்  விமானம்  தொலைந்து  போனதையும்  இந்தியப்  பெருங்கடலின்  தென்பகுதியில்  அது காணாமல்  போயிருக்க  வேண்டும்  என்பதையும்  காண்பிக்கின்றன. “அளவுக்கு  அதிகமாகவே  கிடைத்துள்ள  ஆதாரங்களின்  அடிப்படையில் …

புத்ராஜெயா மன்னிப்பு கோரவேண்டும், எம்எச்370 சீன பயணிகளின் உறவினர்கள் கோரிக்கை

  காணாமல் போன மாஸ் எம்எச்370 தின் பயணம் இந்திய பெருங்கடலில் முடிந்து விட்டது என்று பிரதமர் நஜிப் ரசாக் வெளியிட்ட அகாலமான அறிக்கைக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று அந்த காணாமல் போன விமானத்திப் பயணித்த சீன பயணிகளின் உறவினர்கள் கூறுகின்றனர். அதில் எவரும் உயிருடன்…

மலேசியாவுக்கு தேவை புதிய அரசாங்கம், புதிய ராடார் சிஸ்டம் அல்ல!

  அரச மலேசிய ஆகாயப்படைக்கு தேவைப்படுவது புதிய ராடார் அமைவுமுறை அல்ல. மாறாக அதற்குத் தேவைப்படுவது புதிய அரசாங்கம் என்று பாஸ் கட்சியின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாகிட் யுசுப் ராவா நேற்று பினாங்கில் கூறினார். அடையாளம் காணப்படாத விமானங்களை கண்டுபிடிப்பதற்கு அரச மலேசிய ஆகாயப்படைக்கு புதிய…

சரவாக் பாலிஞியான் தொகுதி இடைத் தேர்தலில் பிஎன் வெற்றி

  சரவாக் மாநில பாலிஞியான் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளர் யுஸ்ஸிப்நோஸ் 8,194 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அப்துல் ஜாலில் புஜாங் 1,283 வாக்குகளைப் பெற்றார். செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் யுஸ்ஸிப்நோஸ் 84 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். பிஎன் பெரும்பான்மை வாக்குகள்…

நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி: ம.இ.காவினற்கு ஒரு சவால் !

-மு. குலசேகரன், மார்ச் 29, 2014. தமிழ் இடைநிலப்பள்ளி ஒன்று இந்த நாட்டில் கட்டப்பட வேண்டுமென்பது  இந்நாட்டில் உள்ள தமிழர்களின்  நெடு நாளைய வேண்டுகோள். இந்தக் கனவு  நிறைவேறினால்  இந்திய மாணவர்கள் தங்களின் கல்வியை தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளில் இருந்து  இடைநிலைப்பள்ளிகளில் அதே சூழலில் தொடர வாய்ப்பு அளிக்கும்.  …

இம்மார்சாட்: கடலில் விழுந்ததாக நாங்கள் சொல்லவில்லை

பிரிட்டனைச்   சேர்ந்த  செயற்கைக்கோள்  நிறுவனமான  இம்மார்சாட்,  எம்எச்370  “இந்தியப்   பெருங்கடலில்  விழுந்தது”  என்ற  மலேசிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அறிவிப்புக்கும்  தனக்கும்  தொடர்பில்லை  எனக்  கூறியுள்ளது. இம்மார்சாட் வழங்கிய  தகவல்களை  வைத்து  அப்படியொரு  முடிவை  எடுத்தது  மலேசிய  அரசாங்கம்தான்  என  இம்மார்சாட்  பேச்சாளர்  ஜோனதன்  சின்னாட்  தெரிவித்தார்.…

பாலிங்கானில் பாதிக்கு மேற்பட்டோர் காலை 11 மணிக்குள் வாக்களித்தனர்

பாலிங்கான்  இடைத்  தேர்தலில்  தகுதிபெற்ற  வாக்காளர்களில்  பாதிக்கு  மேற்பட்டோர்  வாக்களித்து  விட்டனர். காலை  மணி  11-க்கு, 13,233 வாக்காளர்களில்  7,085 பேர்  வாக்களித்து  விட்டனர்  என  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது. பாலிங்கானில்,  12-நாள்  பரப்புரைக்குப்  பின்னர்  இன்று  காலை  8மணிக்கு  வாக்களிப்பு  தொடங்கியது. பாலிங்கான்  இடைத்  தேர்தல்  பிஎன்னின் …

பிகேஆர் தலைவர் பதவிக்கு அன்வார் போட்டி

பிகேஆர்  தலைவரான  பின்னர்  சங்கப்  பதிவதிகாரியால் அதிலிருந்து  நீக்கப்படும்  அபாயம்  உள்ளபோதிலும்   அன்வார்  இப்ராகிம்  அப்பதவிக்குப்  போட்டியிடுகிறார். இதற்கான  வேட்புமனுவை  அவர்  சார்பாக  பிகேஆரின்  துணை  பொருளாளர்  லோ  சீ சோங்  கட்சித்  தலைமையகத்தில்  இன்று  காலை  சமர்ப்பித்தார். அன்வாரின்  நடவடிக்கைக்கு  நேர்முரணாக  கர்பால்  சிங், அரசநிந்தனை  வழக்கில் …

கடப்பிதழ்களை இண்டர்போலின் தரவுத்தளத்தில் சரிபார்க்க 0.2 வினாடி போதும்

அனைத்துலக  போலீஸ்  அமைப்பான இண்டர்போல்,  அதன்  தரவுத்தளத்தில் கடப்பிதழ்களைச்  சரிபார்ப்பது  சிக்கலான  வேலை  என்று  மலேசியா  கூறி  இருப்பதை  நிகாரித்துள்ளது. மலேசிய  உள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடி,  புதன்கிழமை  நாடாளுமன்றத்தில்  இண்டர்போலின்  தரவுத்தளத்தில்  கடப்பிதழ்களைச்  சரிபார்க்கத்  தொடங்கினால்  குடிநுழைவுத்துறையின்  வேலை  வேகமாக  நடக்காது  என்று  கூறியதை  அடுத்து  அது …