ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
சீனப் பயண நிறுவனங்கள் எம்ஏஎஸ் பயணச் சீட்டு விற்பனையை நிறுத்தின
சீனாவில் இணையத்தளத்தில் செயல்படும் சில பயண நிறுவனங்கள் மலேசிய விமான நிறுவனத்தின் பயணச் சீட்டுக்களை விற்பனை செய்வதை நிறுத்திக் கொண்டிருக்கின்றன. “எம்எச் விமானப் பயணத்துக்கு என்ன ஆனது என்ற உண்மை தெரியும்வரை” எம்ஏஎஸ்-ஸைப் புறக்கணிக்கப் போவதாக சீனாவின் பயண நிறுவனங்கள் பல தெரிவித்துள்ளதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் …
எம்எச்370: தேடும் பணி தொடர்கிறது
காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி இன்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. நேற்று வானிலை மோசமாக இருந்ததால் தேடும் பணி இரத்துச் செய்யப்பட்டது. இன்றும் வானிலை மோசமாகத்தான் இருந்தது. ஆனாலும் பகலில் நிலைமை சீரடையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வானிலை மோசமடைந்திருந்தாலும் ஆறு கப்பல்கள் …
அன்வாரைத் தடுப்பதா, கூடாதா- அடினானின் தடுமாற்றம்
சரவாக் முதலமைச்சர் அடினான் சதேம், பிகேஆர் ‘சிறு’ தலைவர்கள் சரவாக்கினுள் நுழைவதைத் தடுத்து நிறுத்தினார். ஆனால் அதன் பெருந் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தடுக்கவில்லை. இது அரசியல் பார்வையாளர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. மார்ச் 25-இல், பாலிங்கான் இடைத் தேர்தலில் பரப்புரை செய்வதற்காக சென்ற பிகேஆர் தலைமைச் செயலாளர்…
லிம்: குளறுபடி செய்த துணை அமைச்சரைத் தூக்குவீர்
அரசாங்கத்தின்மீதும் நாட்டின்மீதுமுள்ள நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்ட தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி பதவி விலக வேண்டும் அல்லது பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று குமுறுகிறார் லிம் கிட் சியாங். மார்ச் 8-இல் எம்எச்370 விமானத்தை அரச மலேசிய ஆகாயப்படை இடைமறிக்காததற்கு துணை அமைச்சர் கூறிய …
நாளை முதல் பருவநிலையில் மாற்றம் ஏற்படலாம்
மலேசிய வானிலை ஆய்வுத்துறை மார்ச் 29-இலிருந்து மே மாதத் தொடக்கம் வரை பருவநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறது. பருவநிலை மாற்றத்தால், தீவகற்ப மலேசியாவின் மேற்கு கரையோர மாநிலங்களில் அடிக்கடி இடியுடன்கூடிய கனத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை ஆருடம் கூறியுள்ளது. பெரும்பாலும் பகலிலும் மாலை நேரங்களிலும் …
அமெரிக்காவின் தீர்மானம் அமோக வெற்றி! சங்கடத்தில் இலங்கை!
ஐக்கிய நாட்டு மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நேற்று அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் அமோக வெற்றி பெற்றது. அமெரிக்கா, பிரிட்டன், மெஸிடோனியா, மொரீஷியஸ், மொன்டேநேக்ரோ ஆகிய நாடுகள் முன்னின்று கொண்டுவந்த தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி…
இரண்டாவது பாலத்துக்கான கட்டணம் பரம இரகசியம்
பினாங்கின் இரண்டாவது பாலம் திறக்கப்பட்டு 27 நாள்கள் ஆனாலும்கூட அதற்கான சாலைக்கட்டணம் இன்ன்மும் “மர்மமாகவே” இருப்பது வருத்தமளிப்பதாக பிகேஆர் பாயான் பாரு எம்பி சிம் ட்சே ட்ஸின் கூறினார். இதன் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் பொதுப்பணி துணை அமைச்சர் ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லினுடன் “காரசாரமாக விவாதம்” நடத்தியதாக …
‘மலேசியாகினி, FZ ஆகியவை பத்திரிகை வடிவில் வந்தால் மக்களைக் குழப்பும்’
மலேசியாகினி செய்தித் தளம், FZ.com ஆகியவை செய்திதாள் உரிமம் கேட்டு செய்திருந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு விளக்கமளித்த உள்துறை அமைச்சர் “அளவுக்கு அதிகமான” செய்தித்தாள்கள் இருந்தால் மக்கள் “குழப்பமடைவர்” என்றார். நாடாளுமன்றத்தில் ஜோஹாரி அப்துலுக்கு (பிகேஆர்- சுங்கை பட்டாணி) வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “நாட்டில் …
பாஸ்: ‘ராஜா போமோ’ இன்னும் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவது ஏன்?
தம்மை ‘ராஜா போமா’ (போமோக்களின் அரசன்) என்று கூறிக்கொள்ளும் இப்ராகிம் மாட் ஜைன், எம்எச்370 தொடர்பில் தொடர்ந்து சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவது ஏன் என பாஸ் இளைஞர் பகுதி கேள்வி எழுப்பியுள்ளது. பேராக், பூலாவ் செம்பிலானில், “கடலிலிருந்து பிணங்களை மேலே கொண்டு வருவதற்கான” சடங்கு ஒன்றை அவர் செய்வதாகக்…
ஒவ்வொரு பயணிக்கும் ரிம580,000 இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்
பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டப்படி எம்எச்370 பயணிகள் ஒவ்வொருவருக்கும் மலேசிய விமான நிறுவனம் சுமார் ரிம580,000 இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும். பயணத்தின்போது இறக்கும் பயணிகளுக்கு சட்டப்படியான கோரிக்கை எதுவுமின்றியே விமான நிறுவனங்கள் யுஎஸ்$175,800 வழங்க வேண்டும் என மொண்ட்ரியோல் சட்டம் கூறுகிறது. பயணிகளின் குடும்பத்தார் வழக்கு தொடுத்து …
தாய் செயற்கைக்கோள் 300 பொருள்களைக் கடலில் கண்டது
காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் இடத்துக்கு 200 கிலோ மீட்டர் தென்மேற்கே சுமார் 300 பொருள்கள் இந்தியப் பெருங்கடலில் மிதப்பதை தாய்லாந்தின் செயற்கைக்கோள் கண்டிருக்கிறது. கடலில் மிதக்கும் பொருள்கள் பற்றிய செயற்கைக்கோள் படங்களைக் காண்பிக்கும் ஐந்தாவது நாடு தாய்லாந்து. ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், …
மோசமான வானிலையால் தேடும் பணி இரத்து
தென் இந்தியப் பெருங்கடலில் காணாமல்போனதாக ஊகிக்கப்படும் மலேசிய விமான நிறுவனத்தின் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த விமானங்கள் அனைத்தும் திருப்பி அழைக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதியில் கடலில் கொந்தளிப்பு மிகுந்திருப்பதாகவும் எதையும் பார்ப்பதற்கே சிரமமாக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. “அங்குள்ள விமானங்கள் எல்லாம் திரும்பி வருகின்றன. மேற்கொண்டு தேடும்பணி இரத்துச் செய்யப்பட்டுள்ளது”, …
பெர்காசா: விமானத்தைத் தேடுவதில் ஓஐசி உதவாதது ஏன்?
காணாமல்போன எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணியில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (ஓஐசி) அவ்வளவாக உதவவில்லை என்று பெர்காசா குறைகூறியுள்ளது. நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, காணாமல்போன விமானத்தைத் தேடும் பணியில் உதவிய 26 நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதேவேளை ஒஐசி …
மலேசிய இலக்கியத்தின் மற்றுமொரு நகர்ச்சி : பறை
16.3.2014ல் 'புத்தகச் சிறகு' நிறுவனம், இலக்கிய நிகழ்வொன்றை கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நிகழ்த்தியது. இணையம் எவ்வகையான விரிந்த வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை அறிய 'புத்தகச் சிறகு' இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் அனைத்தையும் இணையம் மூலமே செய்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை 100 பேரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வல்லினம் பதிப்பகத்தின்…
கட்டுப்பாட்டு கோபுரம் விமானத்தைத் திருப்பி அழைத்ததாக ஆகாயப் படை “நினைத்துக்கொண்டது”
மார்ச் 8ஆம் நாள், மலாக்கா நீரிணைக்கு அப்பால் இராணுவ ரேடாரில் எம்எச்370 விமானத்தைக் கண்டுகொண்ட அரச மலேசிய ஆகாயப்படை (ஆர்எம்ஏஎப்) அதை இடைமறிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் இருந்துவிட்டது. சிவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம்தான் அந்த விமானத்துக்குத் திரும்பி வருமாறு உத்தரவிட்டிருக்கிறது என்று ஆர்எம்ஏஎப் “நினைத்துக்கொண்டது”தான் இதற்குக் காரணமாகும்.…
தேர்தல் தொகுதிகளைக் கண்காணிக்கும் புது அமைப்புக்கு பக்காத்தான் வரவேற்பு
மலேசியாவில் தேர்தல் தொகுதிகள் திருத்தி அமைக்கப்படுவதைக் கண்காணிக்க பிரிட்டனின் தொகுதி எல்லை நிர்ணய ஆணையம் போன்ற ஒன்று உருவாக்கப்படுவதை பக்காத்தான் ரக்யாட் குழு ஒன்று ஆதரிக்கிறது. தேர்தல் ஆணையத்தில் “நேர்மையும் சுதந்திரமும் இல்லாதிருப்பதால்” அப்படி ஓர் அமைப்பு தேவைதான் என அந்தத் தொகுதி நிர்ணய குழு அறிக்கை ஒன்றில் …
காணாமல்போன சொத்துக்கள் பற்றி போலீசின் விளக்கம் ஏற்கப்பட்டது
தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த காணாமல்போன போலீஸ் சொத்துக்கள் பற்றி போலீசார் கொடுத்த விளக்கத்தால் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) “திருப்தி அடைந்துள்ளது”. இன்று பிஏசி-இன் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட், போலீஸ் படையின் சொத்துக்கள் காணாமல்போகும் விவகாரத்தைக் கவனிப்பதாக …
எம்ஏஎஸ் தலைமை அதிகாரி விலக வேண்டும்: யூனியன் கோரிக்கை
மலேசிய தேசிய விமானப் பயணப் பணியாளர் சங்கம் (நுபாம்) எம்எச் பேரிடர் தொடர்பில் மலேசிய விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஹ்மட் ஜவுஹாரி யாஹ்யா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பில் அஹ்மட் ஜவுஹாரியுடன் நீண்ட காலமாகவே பல மோதல்களில் ஈடுபட்டு …
எம்எச்370 பற்றிக் கருத்துரைத்த ஏர் ஏசியா X விமானி பணிநீக்கம்
ஏர் ஏசியாவின் சரக்கு ஏற்றிச்செல்லும் விமான நிறுவனமான ஏர் ஏசியா X, காணாமல்போன விமானத்தைத் தேடும் பணி குறித்து இணையத்தில் கருத்துத் தெரிவித்த அதன் விமானி ஒருவரைத் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. “ஏர் ஏசியா X-இன் அந்த மூத்த அதிகாரி, முகநூலில் பதிவிட்டதன்வழி நிறுவனக் கொள்கைகளை மீறினார் என்பதால், …
வானிலை சீரடைந்தது; தேடல் தொடர்கிறது
மலேசிய விமானத்தைத் தேடும் பணி தெற்கு இந்தியப் பெருங்கடலில் இன்று மீண்டும் தொடங்கியது. 18 நாள்களுக்குமுன் காணாமல்போன விமானத்தின் உடைந்த பகுதிகள் கிடைத்தால் அது ஏன் பயணப்பாதையை விட்டு ஆயிரக்கணக்கான மைல் விலகிச் சென்றது என்பதற்கான மர்மம் துலங்கும் என்று கருதப்படுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், …
இயந்திரத்தில் தீ பற்றியதால் விமானம் திரும்பி வந்தது
இன்று காலை. மெலிண்டோ விமானமொன்றின் இயந்திரத்தில் தீ பற்றிக் கொண்டதால் அது மீண்டும் சுபாங் விமான நிலையத்துக்கே திரும்பி வந்தது. அவ்விமானத்தில், மற்றவர்களோடு திரெங்கானு கால்பந்துக் குழுவினரும் இருந்தனர். அவர்கள் நேற்றிரவு ஆயுதப்படையினரைத் தோற்கடித்த பின்னர் திரெங்கானுவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். திரெங்கானு மத்திய திடல் ஆட்டக்காரர் ஃபயிஸ் சுப்ரி,…
6.48 மில்லியன் பேர் ரிம3.37 பில்லியன் பிரிம் உதவித் தொகை…
இவ்வாண்டில் 6.48 மில்லியன் பேர் 1மலேசிய மக்கள் உதவித் திட்டத்தைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் ரிம3.37 மில்லியன் வழங்கப்பட்டதாக இரண்டாவது நிதி அமைச்சர் அஹமட் ஹுஸ்னி கூறினார். அந்த உதவித் தொகையைப் பெறத் தவறியவர்கள் ஏப்ரல் 1 தொடங்கி அதற்கு முறையீடு செய்யலாம். அதற்கான விண்ணப்பப் பாரங்கள் வருமான …
‘லியோ போக்குவரத்து அமைச்சராக இருந்திருந்தால்…..’
எம்எச்370 விமானம் காணாமல்போனதால் ஏற்பட்ட நெருக்கடியை இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் திறமையாகக் கையாள்வதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஒங் தி கியாட் பாராட்டியுள்ளார். அதேவேளை, மசீச தலைவர் லியோ தியோங் லாயை மறைமுகமாக குத்திக்காட்டவும் அவர் தவறவில்லை. “நல்ல வேளையாக ஹிஷாமுடின் போக்குவரத்து அமைச்சராக இருக்கிறார்......…


