ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
வான் ஜுனாய்டி: பாலியல் வல்லுறவு பற்றிய கருத்துகளை நாடாளுமன்றப் பதிவேட்டிலிருந்து…
பாலியல் வல்லுறவை மலாய்க்காரர்-அல்லாதார் பெரிய குற்றமாகக் கருதுவதில்லை என்றுரைத்து சர்ச்சையை உண்டாக்கிய உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜாப்பார், தம் கருத்தை நாடாளுமன்றக் பதிவேட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அக்கருத்து சிலரின் மனத்தைப் புண்படுத்தி இருக்கலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனாலும், அதற்காக அவர் …
எம்ஏஎஸ் தலைவர்: பதவி விலகல் பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்
மலேசிய விமான நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அஹ்மட் ஜவுஹாரி யஹ்யாவைப் பொறுத்தவரை, பதவி விலகல் பற்றி யோசிக்க நேரமில்லை, காணாமல்போன எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கே முன்னுரிமை. “நான் பதவி விலகுவேனா? அது நான் செய்ய வேண்டிய முடிவு. அதைப் பிறகு பார்க்கலாம்”, என கேஎல் அனைத்துலக விமான …
எம்எச்: பெய்ஜிங்கில் பயணிகளின் குடும்பத்தார் போலீசுடன் மோதல்
காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தார், மலேசிய அரசாங்கமும் விமான நிறுவனமும் நடந்தது என்னவென்பதை விளக்க வேண்டும் என்று கோரி பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது அவர்களுக்கும் போலீசுக்குமிடையில் மோதல் நிகழ்ந்தது. தூதரகத்தைச் சுற்றி மனிதச்சுவர் போல் நின்று பாதுகாப்பளித்துக் …
எம்எச் 370: நஜிப் முக்கிய அறிவிப்பை இரவு 10 மணிக்கு…
காணாமல் போன மாஸ் விமானத்தின் பயணம் எம்எச் 370 தேடும் பணி இன்றுடன் 17 நாளை எட்டியுள்ளது. பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இச்சூழ்நிலையில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்றிரவு மணி 10.00 க்கு ஒரு முக்கியமான…
தி கியாட்: காஜாங்கில் கடும் தோல்வி என்பதை மசீச ஒப்ப…
மசீச, நேற்றைய காஜாங் இடைத் தேர்தலில் சீனர் ஆதரவு ஓரளவு கூடுதலாகக் கிடைத்ததை ஒரு வெற்றி எனக் காண்பிக்க முயன்றாலும் உண்மையில் அது ஒரு “கடும் தோல்விதான்” என்ற உண்மையை கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என அதன் முன்னாள் தலைவர் கூறியுள்ளார். அதிக செலவையும் கடும் தோல்வியையும்…
மகாதிர்: 2020க்குள் மலேசியா உயர்-வருமான நாடாக மாறும்
இப்போது நடுத்தர-வருமான நாடாக உள்ள மலேசியா 2020க்குள் உயர்-வருமானம் பெறும் நாடாக மாறுவது திண்ணம் என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். மலேசிய அரசாங்கம் அதற்காக விரிவான திட்டங்களைப் போட்டு அவற்றை ,முறையாகச் செயல்படுத்தி வருவதாக அவர் சொன்னார். நேற்று, காட்மண்டுவில் நேப்பாள் வணிகர்களிடையே உரையாற்றிய மகாதிர் தம் பதவிக்காலத்தில் …
காஜாங் வெற்றியால் அரசின் கட்டமைப்பு மாறாது
நேற்றைய இடைத் தேர்தல் வெற்றி “காஜாங் திட்டத்தின்” வெற்றி எனப் போற்றப்பட்டாலும் காலிட் இப்ராகிமைப் பொறுத்தவரை அதனால் தம் மந்திரி புசார் பதவிக்கு ஆபத்து ஏதுமில்லை என்றே நம்புகிறார். இடைத் தேர்தலில் வென்ற பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தம்மை ஆதரிப்பவர் என்பதும் அவரின் …
கொரியா சென்ற எம்ஏஎஸ் விமானம் மின்சாரக் கோளாற்றினால் ஹாங்காங்கில் இறங்கியது
தென் கொரியாவின் இஞ்சியோனை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த மலேசிய விமான நிறுவனத்தின் (எம்ஏஎஸ்) ஏ-330-300 ஏர்பஸ் விமானத்தில் “மின் ஆக்கி செயலிழந்ததால்” அது ஹாங்காங்கில் அவசரமாக தரை இறங்கிற்று. இதை உறுதிப்படுத்திய எம்ஏஎஸ் தரையிறங்கியதில் “பிரச்னை எதுவுமில்லை” என்றது. மின்னாக்கிதான் விமானத்துக்கு மின்சாரத்தை விநியோகிக்கிறது. “ஆனால், துணை மின்…
வான் அசிசா: காஜாங் திட்டம் ஒரு வெற்றியே
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காஜாங் சட்டமன்ற உறுப்பினரான பிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தம் கட்சியின் “காஜாங் திட்டம்” பலத்த சர்ச்சைக்குள்ளானாலும் அது ஒரு வெற்றியே என்று கூறினார். “இளம் வாக்காளர்கள் (எங்களுக்கு வாக்களித்தது) அந்த நம்பிக்கையைத் தந்திருக்கிறார்கள். “அதுதான் ‘காஜாங் திட்டத்தை’ வெற்றிபெற வைத்துள்ளது”. …
2013 -க்கு ரிம2.39 பில்லியன் கூடுதல் பட்ஜெட்
அரசாங்கம் 2013ஆம் ஆண்டுக்கு மேலும் ரிம2.39 பில்லியன் கேட்டுக் கூடுதல் பட்ஜெட் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்த ரிம2.39 பில்லியனில் பெரும்பகுதி, ரிம2 பில்லியனுக்கும் கூடுதலாக கருவூலத்துக்கு ஒதுக்கப்படும். அதற்கு அடுத்து ரிம55 மில்லியன் பொதுச் சேவைத் துறைக்கு, பொதுப்பணி அமைச்சுக்கு ரிம53 மில்லியன், தொடர்பு, பல்லூடக அமைச்சுக்கு …
சீன விமானம் ‘சந்தேகத்துக்குரிய பொருள்களை’க் கண்டது
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி இன்று 17வது நாளில் அடியெடுத்து வைக்கிறது. கில்லியன் புயல்காற்று வீசலாம் என்று அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் விமானங்களும் கப்பல்களும் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தேடும் நடவடிக்கையைத் தொடர்கின்றன. நேற்று பிரான்ஸ் அதன் செயற்கைக்கோள் கடலில் சில பொருள்களைக் கண்டதாகவும் …
வான் அஸிசா வெற்றி பெற்றார்
காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளர் வான் அஸிசா வான் இஸ்மாயில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ முடிவுகள்: பிகேஆர்: 16,741 பிஎன் : 11,362 பெரும்பான்மை: 5,379 வெற்றி பெற்ற வான் அஸிசாவை தோல்வியுற்ற மசீசவின் உதவித் தலைவர் சியு மெய் ஃபன் பாராட்டி…
காஜாங் இடைத் தேர்தல்: வான் அஸிசா முன்நிலையில் இருக்கிறார்
இன்று முடிவுற்ற காஜாங் இடைத் தேர்தலில் 72 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 2013 ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 16 விழுக்காடு குறைவாகும். இரவு மணி 8.00: அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்: பிகேஆர் : 16,086 பிஎன் : 10,407 பெரும்பான்மை : 5,679 இதுவரையில்…
காஜாங் இடைத் தேர்தல்: வெற்றி யாருக்கு?
பிற்பகல் மணி இரண்டு அளவில் 53.71 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் வாக்குச் சாவடிகள் மூடப்படும் வேளையில் 87 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர். குறைந்த எண்ணிக்கையிலான வாக்களிப்பு பிகேஆரை பாதிக்கும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். வாக்காளர்களை உடனடியாக வாக்களிக்க வருமாறு அன்வார் இப்ராகிம் டிவிட்டரின் வழி தொடர்ந்து…
காஜாங் இடைத் தேர்தல்: வெற்றி யாருக்கு?
இன்று காலையில் தொடங்கிய காஜாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் 39,278 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இது ஒரு பல்லின தொகுதியாகும். முன்னதாக வாக்களிக்கும் தகுதி பெற்ற 1,188 வாக்காளர்கள் கடந்த புதன்கிழமை வாக்களித்து விட்டனர். எஞ்சியுள்ள 38,055 வாக்காளர்கள் இன்று வாக்களிப்பர். மொத்த வாக்காளர்களில் 80 விழுக்காட்டிற்கு…
இனவாதி வான் ஜுனைடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் !
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மார்ச் 22, 2014. உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடி வான் ஜாபார், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்து ஒட்டுமொத்த மலேசியர்களையே முட்டாள்களாக்கி அவர் மிகவும் புத்திசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார். நாடாளுமன்றத்தின் உள்ளே இது போன்று வான் ஜுனைடி பேசியிருந்தால் அதற்கு…
முதலாவது பெண் பிரதமரா? அது பக்காத்தானின் வீண் கனவு
பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் நாட்டின் முதலாவது பெண் பிரதமராகலாம் என்று டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருப்பதற்கு, அது பகல் கனவு என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி நறுக்கென்று பதிலளித்தார். இன்று காஜாங்கில் போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் …
80 விழுக்காட்டு வாக்காளர்களை எதிர்பார்க்கிறது இசி
நாளை, காஜாங் இடைத் தேர்தலில், அங்குள்ள 38,055 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் வாக்களிக்க வருவார்கள் எனத் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. வார இறுதி தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க திரண்டுவருவது வழக்கம் என்று இசி செயலாளர் அப்துல் கனி சாலே கூறினார். அது, 13வது பொதுத் தேர்தலில் பதிவான …
ஆய்வு: பிகேஆரின் பெரும்பான்மை குறையும்
நாளை காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆரின் பெரும்பான்மையில் 2,000 குறையலாம் என யுசிஎஸ்ஐ பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று காண்பிக்கிறது. யுசிஎஸ்ஐ கருத்துக்கணிப்பு மைய நிறுவனர் இங்கேரிங் மியாங் ஹொங், 400 பேரிடம் தொலைபேசி வாயிலாகவும் நேரடிப் பேட்டி மூலமாகவும் கருத்துக் கேட்கப்பட்டதற்கு அவர்களில் 54.25 விழுக்காட்டினர் மட்டுமே பிகேஆரின் …
எம்எச்370: ரேடாரின் பலவீனத்தை வெட்டவெளிச்சமாக்கியது
வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு பெரிய ஜெட் விமானம் மலேசிய ரேடார் கருவிகளில் பட்டு விடாமல் மாயமாய் மறைந்து விட்டது. விமானத் தயாரிப்பில் எவ்வளவோ முன்னேற்றங்கள் காணப்பட்டு அதிநவீன விமானங்கள் எல்லாம் வந்துவிட்டன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவை வானில் பறப்பதற்கு நிலத்தில் உள்ள பழைய ரேடார் கருவிகளைத்தான் நம்பி …
எம்எச்370: தேடும் பணி தொடர்கிறது
பெர்துக்குத் தென்மேற்கே, இந்தியப் பெருங்கடலில் செயற்கைக்கோள்கள் பார்த்த மிதக்கும் பொருள்களைக் கண்டுபிடிக்கும் ஆஸ்திரேலியாவின் தேடும் நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தேடலுக்கு உதவியாக நீண்ட தூரம் பறக்கக் கூடிய நவீன ஜெட் விமானங்கள் இரண்டைச் சேர்த்துக் கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் இன்று காலை அறிவித்தது.…
என்.எஸ்.ராஜேந்திரனின் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்டவரைவு ஒரு தேர்தல் நாடகம்!
-அண.பாக்கியநாதன், மார்ச் 22, 2014 மலேசிய வரலாற்றில் இந்திய சமுதாயத்தை ஏமாற்ற எத்தனையோ டத்தோகளையும், பேராசிரியர்களையும், முனைவர்களையும் முன்நிறுத்தி பாரிசான் நடத்திய நாடகங்களுக்கு அளவே இல்லை. படித்தவர்கள், பட்டதாரிகள் மீது இச்சமுதாயம் கொண்டுள்ள மாயையால், மதிப்பால் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசாங்கம் அவர்களைப் பயன்படுத்தும்? ஆனால், பாரிசான் ஏமாற்று…
ஐயோ, நம்புங்கள்: நஜிப் சொன்னதைச் செய்வாராம்!
மஇகாவின் உதவித் தலைவர் எஸ். சோதிநாதன் இந்தியர்கள் பார்சான் நேசனலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசாங்கத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர்கள் அமைப்பு உறுப்பினர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பில் கூறியதாக நேற்றைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறுகிறார். அதிகமான இந்தியர்கள் அரசாங்க…


