பாட்ரிக் தியோவின் முகநூல் பதிவு தொடர்பில் போலீஸ் அவரது வாக்குமூலத்தைப்…

வானொலி அறிவிப்பாளரும் நடிகருமான பாட்ரிக் தியோ தமது முகநூல் பக்கத்தில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது மீது அவரது வாக்குமூலத்தைப் போலீசார் பதிவு செய்துள்ளனர். பிப்ரவரி 6ம் தேதி அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் அவர் தமது வாக்குமூலத்தைக் கொடுத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது தியோவின்…

பாஸுக்கு வாக்களித்தல் ‘ஹராமா’ன செயலாம்: கிளந்தான் என்ஜிஓ-கள் கூறுகின்றன

கிளந்தானில் உள்ள பல இஸ்மாமிய என்ஜிஓ-கள், 13வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு வாக்களிப்பது “ஹராம்” (அனுமதிக்கப்படாத செயல்) என்று கூறியுள்ளன. மிண்டா பொண்டோக், உஸ்தாஸ் மூடா மெம்பிலா அகாமா டான் தானா ஆயர் (உம்மதி), ஈக்காத்தான் செண்டிக்கியாவான் இஸ்லாம் கிளந்தான், பெண்டிடா ஆகிய என்ஜிஓ-கள் பாஸுக்கு எதிராக…

Psy நிர்வாகம்: மலேசிய அரசாங்கம் அந்த நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்கவில்லை

'காங்ணாம் ஸ்டைல்' பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற தென் கொரிய பாப் இசைக் கலைஞரான Psy அண்மையில் பினாங்கில் நடத்திய நிகழ்ச்சிக்கு மலேசிய அரசாங்கம் ஏற்பாடும் செய்யவில்லை, பணமும் கொடுக்கவில்லை என Psy-யை நிர்வாகம் செய்யும் Scooter Braun Projects நிறுவனம் கூறியுள்ளது. மலேசிய அரசாங்கம் பணம்…

அம்பிகாவின் குடியுரிமை பற்றி துஷ்டமான அறிக்கை விடுவதை மகாதீர் நிறுத்த…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 13, 2013. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை, அம்பிகாவுக்கு…

‘நஜிப் மோசமான ஆலோசகர்களைக் கொண்ட பலவீனமான தலைவர்’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'மோசமான ஆலோசகர்கள் சூழ்ந்துள்ள பலவீனமான தலைவர்' என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  கூறியிருக்கிறார். அவர் நேற்றிரவு பினாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நஜிப் மலேசியர்களுடைய நலன்களையும் உரிமைகளையும் பாதிக்கின்ற பல பிரச்னைகள் பற்றிப் பேசத் தவறி விட்டதாகச் சொன்னார்.…

உங்கள் கருத்து: இக்காட்டான சூழ்நிலை மகாதீருக்குத்தான், மலாய்க்காரர்களுக்கு அல்ல

"அவர் செய்த காரியங்களையும் அவர் பேசிய வார்த்தைகளையும் பார்க்கும் போது அவர் பிரிட்டிஷ் காலனித்துவாதிகளப் போன்று மலாய்க்காரரே அல்ல." மகாதீரும் அவருடைய 'இக்காட்டான மலாய் நிலையும் தேஹாசாப்பி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எவ்வளவுதான் வருத்தப்பட்டாலும் கவலைப்பட்டாலும் அவருக்கு உண்மையான அன்றாட மலாய் வாழ்க்கை முறையுடனும் மனப்பாங்குடனும்…

சுரேந்திரன் : பொர்ன்திப்புக்கு பதில் புதியவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்

சுகுமார் சடலத்தின் மீது இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்த விடுக்கப்பட்ட அழைப்பை தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜாசுனாந்த் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதால் புதியவரைத் தாங்கள் தேடிக் கொண்டிருப்பதாக சுகுமார் குடும்ப வழக்குரைஞர் என் சுரேந்திரன் கூறியிருக்கிறார். இன்று காலை மின் அஞ்சல் வழி பொர்ன்திப்…

கர்பால் : பினாங்கு மக்கள் பிஎன்-னை நிராகரிப்பது தெளிவாகி விட்டது

பினாங்கில் நேற்று நடைபெற்ற பிஎன் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது பிஎன் -னுக்குத் தயாரா என பினாங்கு மக்களைக் கேட்ட பிரதமர் நஜிப் ரசாக்கை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார். நஜிப் எழுப்பிய கேள்விக்கு கூட்டத்தினர் அளித்த பதில் பினாங்கு மக்கள் பிஎன் -னை…

‘அன்வாரும், பாக் லா-வும் புரஜெக்ட் ஐசி-இல் சம்பந்தப்படவில்லை’

1980-களிலும் 1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் புரஜெக்ட் ஐசி-இன் சூத்திரதாரிகளில் இருந்த ஒருவர், அன்வார் இப்ராகிமுக்கும் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவிக்கும் அத்திட்டத்தில் சம்பந்தம் இருந்ததில்லை என்கிறார். 1980ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், கோட்டா கினாபாலுவில் பேங்க் பெர்தானியன் நிர்வாகியாக இருந்த மாட் ஸ்வாதி அவி, புரஜெக்ட் ஐசியில் தாமும்…

லிம் குவான் எங்: ‘இல்லை’ என்ற பதிலை நஜிப் எதிர்பார்த்திருக்க…

பிரதமர் நஜிப் ரசாக், கூட்டத்தினரை நோக்கி நீங்கள் பி என் -னுக்குத் தயாரா என வினவிய போது அதற்கான பதிலையும் எதிர்பார்த்திருக்க வேண்டும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். ஆளும் கூட்டணி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என கேட்கப்பட்டிருந்தாலும் மக்கள் அழுத்தம் திருத்தமாக 'இல்லை…

பஸ் நிறுவனங்கள்: “பின்கதவு தேசிய மயத்தால்” நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்

அரசாங்கத்துடன் தொடர்புடைய பஸ் நிறுவனங்களுக்குக் காட்டப்படும் சலுகையாலும் கடுமையான நடைமுறைகளினாலும் தனது உறுப்பினர்கள் பொதுப் போக்குவரத்துத் துறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்படுவதாக அகில மலேசிய பஸ் உரிமையாளர் சங்கம் கூறிக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் துடிப்புடன் இயங்கிய தனியார் பஸ் தொழில் துறை "பின்கதவு தேசிய மயத்தால்" கடுமையாக…

ஷாபி: பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகும்

மாற்றரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகும் மக்கள் இப்போது அனுபவிக்கும் வாழ்க்கை பாழாகும் என்கிறார் அம்னோ உதவித் தலைவர் முகம்மட் ஷாபி அப்டால். மாற்றரசுக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்டவை என்றும் அவற்றால் நாட்டின் நிர்வாகத்தில், ஏன் யார் பிரதமர் என்பதில்கூட ஒன்றுபட்டு செயல்பட…

மகாதீர் தொடர்ந்து மலேசிய இந்தியர்களைச் சிறுமைப்படுத்தி வருகிறார்- எஸ் ராமகிருஷ்ணன்

அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய குடியுரிமையை ரத்துச் செய்யப் போவதாக மருட்டியதின் மூலம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எல்லா இந்தியர்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். சபாவில் கள்ளக் குடியேறிகளுக்கு நீல நிற அடையாளக் கார்டுகளையும் வாக்குரிமைகளையும் வழங்கப்பட்டதில் தமக்கு பங்கு இல்லை என மறுத்து வந்த மகாதீர் கையும்…

புத்ரா ஜெயா செல்லத் தயாரா? டிஏபி கேட்க ஆம் என்றது…

இன்று பினாங்கில் டிஏபி நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில்,  முந்திய நாள் நடந்த சம்பவத்தைச் சொல்லி பிஎன்னைக் கிண்டல் செய்தது. மாநில டிஏபி தலைவர் செள கொன் இயோ, உரையாற்றியபோது நேற்று ஹன் சியாங் கல்லூரியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டுப்…

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்கக் கூடாது என்கிறார் ஆயர்

மலேசியர்கள் தங்கள் வாக்குகளைப் பெறுவதற்குப் போராடும் எந்தக் கூட்டணிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுக்கக் கூடாது என்பதற்கு மிகவும் வலுவான காரணத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வழங்கியுள்ளதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கூறுகிறார். "ஏனெனில் அத்தகைய பெரும்பான்மை மெர்தேக்கா…

நஜிப் கன்னத்தில் விழுந்த அறை

"அந்த நிகழ்வு அரசியல் சார்பற்றது எனப் பிரதமர் சொன்னதாக எனக்கு நினைவிருக்கிறது. அப்படி இருக்கும் போது பிஎன் -னுக்கு தயாரா என அவர் ஏன் கூட்டத்தினரைக் கேட்க வேண்டும் ?" பிரதமர் கேட்கிறார்: "நீங்கள் பிஎன் -னுக்குத் தயாரா ?" என்று. கூட்டம் சொல்கிறது 'இல்லை !' என.…

எஸ்ஏபிபி, பிகேஆர் சின்னத்தில் போட்டியிடத் தயார் ஆனால்….

வரும் பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி வெற்றி பெற்றால் சபாவுக்கு சுயாட்சி உரிமை வழங்குவதாக எதிர்த்தரப்புத் தலைவரும் பிகேஆர் மூத்த தலைவருமான அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்தால் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எஸ்ஏபிபி என்ற சபா முன்னேற்றக் கட்சியின் தலைவர் யோங் தெக் லீ தயாராக இருக்கிறார். சபா…

பினாங்கு மக்களைக் கவருவது -நஜிப், ரோஸ்மா பாணி

அந்தத் திடலில் பின்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் சொன்னதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் செவிமடுத்திருந்தால் அவர் நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருப்பார். பினாங்கு ஹான் சியாங் கல்லூரி திடலில் நிகழ்ந்த அந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பேசிய நஜிப், கொரிய பாப் இசைக் கலைஞருடைய நிகழ்வைக் காண…

‘Gangnam Style’ Psy-யைக் காண ஆயிரக்கணக்கான மக்கள்

பினாங்கு பிஎன் ஏற்பாடு செய்துள்ள திறந்த இல்ல உபசரிப்பில் தென் கொரிய இசைப் பாடகரான Psy உலகப் புகழ் பெற்ற தமது "ஒப்பா கங்ணம் பாணியில்" நடத்தும் நிகழ்வைக் காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். ஹான் சியாங் கல்லூரித் திடலில் நடத்தப்படும்…

லிம் கிட் சியாங் : எப்போதுதான் தென் கொரியாவுக்கு இணையாவோம்?

இன்று பினாங்கில் பிரதமர் நடத்தும் சீனப் புத்தாண்டுப் பொது உபசரிப்பில் தென் கொரியாவின் ‘சூப்பர் ஸ்டார்’பாடகர் Psy கங்னாம் ஸ்டைல் பாடலைப் பாடி மகிழ்விக்கும் வேளையில், மலேசியா எப்போது தென்கொரியா அளவுக்கு முன்னேறும் என்றோ இரு நாடுகளுக்குமிடையிலான இடைவெளி  எப்போது குறையும் என்றோ நஜிப் அப்துல் ரசாக் ஓர்…

முஸ்லிம்கள் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என நஜிப் விருப்பம்

இந்த நாட்டில் மேலும் இணக்கமான எதிர்காலத்துக்காக தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். காசாவில் ஹாமாஸுக்கும் பாத்தாவுக்கும் இடையில் நிகழும் பூசலைச் சுட்டிக் காட்டிய அவர் இறையாண்மை கொண்ட ஒர் அரசாங்கம் மதிக்கப்படுவதற்கு ஒற்றுமையே நிலைக்களனாகும் என்றார் அவர்.…

இசி-யைப் போன்று தேர்தல் பார்வையாளர்களும் பிஎன் சட்டைப் பைக்குள்

"இசி நீண்ட காலமாக பிஎன் பக்கமே சாய்ந்துள்ளது, அதன் பிடியில் உள்ளது. அதனால் அது தூய்மையான, நியாயமான தேர்தல்களை நடத்தும் அரசமைப்பு பொறுப்பை நிறைவேற்றப் போவதில்லை" சபா அரசு சாரா அமைப்பை பார்வையாளர் தகுதியிலிருந்து விலக்குங்கள் என பெர்சே கோரிக்கை சின்ன அரக்கன்: 13வது பொதுத் தேர்தலுக்கு பார்வையாளராக…

நிக் அஜிஸ்: அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் நிராகரிப்பதாகச்…

13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் கட்சியின் syura மன்றம் விரும்பாது எனக் கூறப்படுவதை அந்தக் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மறுத்துள்ளார். அத்தகைய பொய்கள் பக்காத்தான்…