வான் அகமட்: சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படுவது பற்றி இசி-க்கு தெரிவிக்கப்படவில்லை

13வது பொதுத் தேர்தலிலிருந்து தனியாக மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவததற்கு எதிர்த்தரப்புக் கூட்டணியின் கீழ் உள்ள மாநிலங்களிடமிருந்து எந்த யோசனையும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு (இசி) வரவில்லை என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறுகிறார். "எடுத்துக்காட்டுக்கு சிலாங்கூர் அரசாங்கம் எங்களிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை.…

பிகேஆர்: நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக அமாலிலியோ ஜெயிலில் அடைக்கப்பட்டார்

பிலிப்பின்ஸில் குற்றச் செயல் ஒன்றுக்காக தேடப்பட்டு வந்த மானுவல் அமாலிலியோ பிலிப்பீன்ஸுக்கு திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்குச் "சௌகரியமாக" மலேசிய அதிகாரிகள் அவரை கோத்தா கினாபாலு மருத்துவமனை ஒன்றில் தடுத்து வைத்ததாக பிகேஆர் இன்று கூறியது. பிலிப்பின்ஸில் அமாலிலியோவின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பிகேஆர் குழு ஒன்று அங்கு சென்றிருந்த…

தீபக்கின் கூற்றைப் புறக்கணியுங்கள்: நஜிப்புக்கு மகாதிர் அறிவுரை

வணிகரான தீபக் ஜெய்கிஷன் என்னென்னவோ சொல்வார். அதற்கெல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”, என செராஸில் செய்தியாளர் கூட்டமொன்றில் மகாதிர் குறிப்பிட்டார். பிரதமர் என்ற முறையில்…

‘அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசமைப்பைத் திருத்த வேண்டும்’

அரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத் தலைவர் எஸ்.அம்பிகா போன்ற வழக்குரைஞர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டுமானால் அரசமைப்பைத் திருத்த வேண்டும். “ஒருவரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டுமானால் அரசமைப்பைத் திருத்தியாக வேண்டும். அரசமைப்பைத் திருத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்”, என்று முன்னாள் பிரதமர்…

FCAS-சைத் தேர்தல் பார்வையாளர் நிலையிலிருந்து அகற்றுங்கள்

அண்மையில் சபாவைச் சேர்ந்த ஒர் அரசு சாரா அமைப்பு பிஎன் -னுக்கு பிரச்சாரம் செய்திருப்பதால் அதனை வரும் பொதுத் தேர்தலில் பார்வையாளராக இருப்பதிலிருந்து விலக்கி வைக்குமாறு சபா பெர்சே தேர்தல் ஆணையத்தைக் (இசி) கேட்டுக் கொண்டிருக்கிறது. "தேர்தல் பார்வையாளர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக் கூடாது. அவர்கள்…

அஞ்சல் வழி வாக்களிக்க 1,700 வெளிநாட்டு மலேசியர்கள் பதிந்து கொண்டுள்ளனர்

அஞ்சல் வழி வாக்களிப்பதற்கு இது வரையில் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களிடமிருந்து 1,779 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளும் அந்த நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி தொடங்கியது. அந்த விண்ணப்பங்களில் அதிகமானவை ஆஸ்திரேலியாவிலிருந்து கிடைத்தவை என தேர்தல் ஆணையத் துணைத் தலைவர்…

நோங் சிக்-கின் லெம்பா பந்தாய் போராட்டத்தில் ஷாரிஸாட் நிழல் பின்…

"வாக்காளர்கள் எந்த ஒரு ஊழலையும் பொருட்படுத்தக் கூடாது என ராஜா நோங் சிக் சொல்கிறார். இது தான் புதிய வழக்கமா ? அல்லது ஊழல்களை நாம் பொருட்படுத்தாத அளவுக்கு நாம் என்ன ஜடங்களா (உணர்வு இல்லாதவர்களா) ?" என்எப்சி ஊழல் தம்மைப் பாதிக்காது என்கிறார் நோங் சிக் சின்ன…

22 டெனுடின் தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர ஒப்பந்தம்

செமிஞ்கி டெனுடின் தோட்ட முன்னாள்  தொழிலாளர்கள் 22 பேருக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தருவதற்கு இன்சே கென்னத் தோட்டத்துடன் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இன்று காலை மணி 10.30 க்கு அந்த ஒப்பந்தம் இஞ்சே கென்னத் தோட்ட உரிமையாளருக்கும் சம்பந்தப்பட்ட 22 முன்னாள் தொழிலாளர்களுக்கும் இடையில் காஜாங் நகராட்சி மன்ற…

விவாதத்திற்கு வாருங்கள் என நுருல் இஸ்ஸா, ராஜா நோங் சிக்-கிற்குச்…

லெம்பா பந்தாய் தொகுதியில் நிலவுகின்ற வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தவறி விட்டதாக கூறப்படுவது மீது தம்முடன் விவாதம் நடத்த வருமாறு கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ஜைனல் அபிடினுக்கு பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி  நுருல் இஸ்ஸா அன்வார் சவால் விடுத்துள்ளார்.…

பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக யாசிட், ஹலிமா ஆகியோர்மீது குற்றச்சாட்டு

பாதுகாப்புக் குற்றச் சட்ட(சோஸ்மா)த்தின்கீழ் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர்மீது பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்ததாக இன்று அம்பாங் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. “நீங்கள் ஒரு சித்தாந்த நோக்கில் தெரிந்தே பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்து வந்துள்ளீர்கள். உங்கள் செயல்கள் சீரியா நாட்டு சிவிலியன்களுக்குப் பாதகமானவை”, என்று யாசிட் சுவாட் (வலம்)…

லிம் குவான் எங்: துணைப் பிரதமர் சொன்ன ‘முட்டாள்’ என்ற…

பினாங்கில் நடத்தப்படும் பிஎன் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்கு மக்கள் மூன்று வண்ணங்களிலான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட  முதலமைச்சர் லிம் குவான் எங் 'முட்டாள்' துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறிய கருத்து 'இனவாதத் தன்மையைக்' கொண்டது எனச் சாடப்பட்டுள்ளது. அந்த…

ரோனி லியுவின் உதவியாளர் திடீர் பதவி விலகல்

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியுவின் சிறப்பு உதவியாளர் ஜப்ரி நோர்டின், இன்று திடீரென பதவி விலகினார். ரோனிமீதும் டிஏபிமீதும் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாகவே பதவி விலகுவதாக அவர் இன்று பினாங்கில் அறிவித்தார். தம் குடும்பம் மற்றும் தமது பாதுகாப்பை எண்ணி அஞ்சித்தான் பதவி விலகல் அறிவிப்பை சிலாங்கூரில்…

குறைபாடுள்ள சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள் என எம்னெஸ்டி சாடல்

உலக அளவில் உரிமைகளுக்காக போராடும் தரப்பான எம்னெஸ்டி இண்டர்நேசனல், மலேசியாவில், பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி “பெரும் குறைபாடுடைய” புதிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரையும் விடுவிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என மலேசியாவை வலியுறுத்தியுள்ளது. இரு ஆடவரும் ஒரு பெண்ணும் “பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு”த்…

13வது பொதுத் தேர்தலுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என இசி…

13வது பொதுத் தேர்தலுக்கு சுமூகமாக நடைபெறும் பொருட்டு அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் (இசி) பெர்சே 2.0ன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனை கடுமையாக எச்சரித்துள்ளது. வெளிநாட்டு மலேசிய வாக்காளர்கள் தொடர்பான அம்பிகா அறிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நாட்டின் ஜனநாயக நடைமுறைகள் மீதான…

பெர்சே vs என்எஸ்டி வழக்கு : முக்கிய நாளேடுகளை நாம்…

"உண்மையில்லாத விஷயங்களும் அப்பட்டமான பொய்களும் நிறைந்த கறை படிந்த ஊழல் மலிந்த அந்த ஊடகங்களை தூய்மைப்படுத்த நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும்" என்எஸ்டி-க்கு எதிராக பெர்சே அவதூறு வழக்கு தொடர்ந்தது சராஜுன் ஹுடா: நம்ப முடியாத அளவுக்கு பொறுப்பற்ற இதழியலுக்கு அது இன்னொரு உதாரணம். அந்த முக்கிய…

ஜோகூர் கேலாங் பாத்தா டிஏபி வேட்பாளராக லியு சின் தொங்

ஜோகூர் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு என்பதில் பிகேஆருக்கும் டிஏபிக்குமிடையில் தகராறு நிலவினாலும் டிஏபி, மசீசவின் கோட்டையாக திகழும் அத்தொகுதியில் போட்டியிட புக்கிட் பெண்டேரா எம்பி லியு சின் தொங்கின் பெயரைப் பரிந்துரைத்துள்ளது. லியுதான் அத்தொகுதியில் போட்டியிட மிகவும் பொருத்தமான வேட்பாளர் என்று டிஏபி துணைத் தலைவர்…

சொஸ்மா கைது பிலிப்பீன்ஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதா ?

2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் மூவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு பிலிப்பின்ஸில் மலேசியப் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் தொடர்புடையது என நம்பப்படுகின்றது. போலீசார் தங்கள் வீட்டில் சோதனை செய்த போது பயங்கரவாதி எனக் கூறப்பட்ட முகமட்…

டாக்டர் மகாதீர் மீண்டும் திசை திருப்புகிறார், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்…

"தகுதி இல்லாத குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமையும் வாக்களிக்கும் உரிமையும் கொடுத்தது அப்போதும் தப்பு இப்போதும் தப்பு. அவ்வளவு தான்" டாக்டர் மகாதீர்: அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டவர்கள் பிஎன் -னுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமில்லை கொதிக்கும் மண்: அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்ட அந்தக் குடியேற்றக்காரர்கள் பிஎன் -னுக்கு வாக்களித்தார்களா…

எரியூட்டுவேன் எனச் சொன்னதற்காக வோங் தாக் மன்னிப்புக் கேட்டார்

கடந்த சில நாட்களில் பெரும் சர்ச்சையை மூட்டி விட்ட ஹிம்புனான் ஹிஜாவ் இயக்கத் தலைவர் வோங் தாக்,  லைனாஸ் அரிய  மண் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எரியூட்டப் போவதாக தான் சொன்னது தவறு என ஒப்புக் கொண்டுள்ளார். தமது கருத்து இளைய தலைமுறை மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும்…

அன்வாருடன் விவாத மேடை – 14.2.2013

தேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால்  அரசியல் கொள்கைகள் எவ்வாறு அமையும் என்பதை எதிரணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் விளக்கக் கோரும்  விவாத மேடையொன்றை  செம்பருத்தி.கொம் இணையத்தளம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் 14.2.2013 வியாழக்கிழமை  மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் மாலை மணி 7.30-க்கு நடைபெறும் என…

முன்னாள் இசா கைதி, புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து…

2012ம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் முன்னாள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) கைதியான யாஸிட் சுபாட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் முதலாவது நபர் அவராக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. அவரையும் அவரது சக…

பிஎன் -னுக்கு ஆதரவளிக்குமாறு சீன செல்வந்தர்களுக்கு முஸ்தாப்பா வேண்டுகோள்

பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட், வரும் தேர்தலில் பிஎன் -னை ஆதரிக்குமாறு சீன செல்வந்தர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். கோலாலம்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மலேசிய கூட்டு சீன வர்த்தக, தொழிலியல் சங்கத்துடன் இணைந்து இன்று அவரது அமைச்சு…

Muafakat: மலாய் பைபிள்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை தற்காக்க…

மலாய் மொழி பைபிள்களில் இறைவன் என்ற சொல்லுக்கு மலாய் மொழி பெயர்ப்பாக 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதைத் தற்காக்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்பு ஒன்று சமயங்களுக்கு இடையிலான ஆலோசனை மன்றத்தை எச்சரித்துள்ளது. கூட்டரசு அரசமைப்புக்கு முரண்பாடாக இருக்கும் தங்கள் அறைகூவல்களினால் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகள் பற்றி  MCCBCHST…