ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
புதிய திருப்பம்: ராடாரிலிருந்து மறைந்த பின்னரும் விமானம் சில மணி…
எம்எச்370 பயணக் கதையில் புதிதாக ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் ராடாரின் கண்காணிப்பிலிருந்து மறைந்த பின்னரும் நீண்ட நேரம் பறந்திருக்க வேண்டும் என அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விமான இயந்திரம் அனுப்பி வைத்த தகவல்களிலிருந்து இது அறியப்படுகிறது. அந்த போயிங் 777 விமானத்தின் இயந்திரங்கள் பராமரிப்பு-கண்காணிப்பு வசதிக்காக …
இலாபத்துடன் செயல்படும் நெடுஞ்சாலைகளுக்கு இழப்பீடு கொடுப்பது ஏன்?
2014-இல் சாலைக்கட்டணத்தை உயர்த்தாமலிருப்பதற்காக கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகுந்த இலாபத்துடன் செயல்படும் நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுக்கு மிகவும் அதிகமான இழப்பீட்டை வழங்குவது ஏன் என்று டிஏபி சிரம்பான் எம்பி அந்தோனி லோக் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் லோக்கிற்கு எழுத்து வடிவில் வழங்கப்பட்ட பதிலில் அரசாங்கம் 14 நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுக்கு …
வியட்னாம் செயற்கைக்கோள் படங்கள் காண்பிக்கும் பகுதியில் மீண்டும் தேடிப் பார்க்கும்
சீன செயற்கைக்கோள்கள் காட்டும் கடல்பகுதிகளில் வியட்னாம் ஏற்கனவே தேடிப் பார்த்து விட்டது. ஆனாலும், இப்போது செயற்கைக்கோள் படங்கள் சில பொருள்கள் மிதப்பதைக் காண்பிப்பதால் அப்பகுதியில் மீண்டும் தேடிப்பார்க்க ஒரு விமானம் அனுப்பப்பட்டிருப்பதாக வியட்னாமிய இராணுவ அதிகாரிகள் கூறினர். “கடந்த மூன்று நாள்களாக விமானங்களை அனுப்பித் தேடிப் பார்த்தோம். “இன்று …
எம்பி: எம்எச்370 விவகாரத்தில் ஒரு பேச்சாளர் போதும்; பலர் தேவையில்லை
காணாமல்போன எம்எச்370 பற்றி அனைத்துலக ஊடகங்களுக்குத் தகவல் சொல்ல ஒரு பேச்சாளர் மட்டுமே இருக்க வேண்டும் என டிஏபி-இன் செகாம்புட் எம்பி லிம் லிப் எங் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். பலரும் அதைப் பற்றிப் பேசும்போது ‘குட்டையைக் குழப்பி’ சில நேரங்களில் மலேசியாவுக்கு “தர்மசங்கடமான நிலையை” …
புகை மூட்டம் மோசமடைகிறது; 13 பகுதிகள் ‘சுகாதாரத்துக்குக் கேடானவை’
நாட்டில் புகைமூட்ட நிலை மோசமடைந்து வருகிறது. காலை 9-க்கு காற்றின் தரத்தை அளவிட்டபோது 13 பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்துக்குக் கேடு செய்யும் வகையில் இருந்ததாக பதிவாகி இருந்தது. இவற்றில் ஏழு பகுதிகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் இருப்பதாக சுற்றுச்சூழல் துறை இணையத்தளத்தின் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு (அப்பி) காட்டுகிறது.…
ஐஜிபி: திருட்டுக் கடப்பிதழ்கள் பற்றி என்னிடம் கேட்காதீர்
இரண்டு ஈரானியர்கள் திருட்டுக் கடப்பிதழ்களை வைத்து எம்எச்370-இல் பயணம் செய்தது பற்றி முரண்பாடான தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் அது பற்றி இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரிடம் கேட்டு தெளிவு பெறலாம் என்றால் அவரும் கையை விரித்து விட்டார். “என்னை ஏன் கேட்கிறீர்கள்? குடிநுழைவுத் துறையைக் கேளுங்கள்,…
செயற்கைக் கோள் படங்களில் காணப்படுபவை எம்எச்370-இன் பாகங்களா?
தென்சீனக் கடலில் சில பொருள்கள் மிதப்பதைச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் தலைவர் இன்று கூறினார். “சீன செயற்கைக்கோள்கள் புகை மண்டலத்தையும் பொருள்கள் மிதப்பதையும் படம் பிடித்துள்ளன.....ஆனால், அவற்றை காணாமல்போன விமானத்துடன் சம்பந்தப்படுத்த இப்போதைக்கு எங்களிடம் ஆதாரமில்லை”, என லி ஜியாஸியாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தாக …
நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்கள் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு கோரிக்கை விடுக்க வலியுறுத்தப்பட்டனர்
நாட்டில் முதல் தமிழ் இடைநிலப்பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசிய நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றாக இனைந்து ஒரு நாடாளுமன்ற குழுவை அமைக்க வேண்டும் என்று பினாங்கு இந்து மன்றம் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அம்மன்றத்தின் சுமார் 29 உறுப்பினர் டத்தோ கிராமாட் தபால் நிலையத்தில் கூடி…
திருட்டுக் கடப்பிதழ்கள் குறித்து முரண்பாடான தகவல்கள்
எம்எச்370-இல், பயணம் செய்ய ஈரானிய ஆடவர்கள் பயன்படுத்திய திருட்டுக் கடப்பிதழ்கள் பற்றி குடிநுழைவுத் துறையும் இண்டர்போலும் கூறும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலோயா மாமாட்-டின் கூற்றுப்படி அவ்விரு ஈரானியர்களும் திருடுபோன இத்தாலிய, ஆஸ்ட்ரிய கடப்பிதழ்களைக் கொண்டு மலேசியாவுக்குள் வந்தனர். ஆனால், அவ்விருவரும் டோஹாவிலிருந்து …
‘ஏர் பிரான்ஸைக் கண்டுபிடிக்க ஐந்து நாள் ஆயிற்று’
எம்எச்370 விவகாரத்தைக் கையாளும் விதம் சரியல்ல என்று உலக நாடுகள் குறைகூறும் வேளையில், காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்க நீண்ட காலம் பிடிப்பது ஒன்றும் வழக்கத்துக்கு மாறானது அல்ல என்கிறார் தற்காப்பு துணை அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி. “ஏர் பிரான்ஸின் உடைந்த பகுதிகளைக் கண்டுபிடிக்க ஐந்து நாள் …
லாக்-அப்பில் சியா சின் லீ இறந்தது எப்படி?
கடந்த ஆகஸ்டில் தஞ்சோங் தோக்கொங் போலீஸ் நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்து போனார் சியா சின் லீ. அவர் எந்த லாக்-அப்பில் இறந்தாரோ அந்த லாக்-அப்பைப் பார்ப்பதற்கு அவரின் குடும்பத்தாருக்கும் அவரின் வழக்குரைஞருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு சென்று பார்த்தால் அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வரலாம்…
அவைத் தலைவர்: எம்எச்370மீது விவாதம் தேவையில்லை
239 பயணிகளுடன் மலேசிய விமான நிறுவனத்தின் விமானமொன்று காணாமல் போனது பற்றி நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா நிராகரித்தார். இன்று காலை கேள்வி நேரத்துக்குப் பின்னர், மாபுஸ் ஒமார்(பாஸ்- பொக்கொக் சேனா) தாம் முன்வைத்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது …
கடலில் மிதக்கக் காணப்பட்ட பொருள் எம்ஏஎஸ் விமானத்தினுடையதா?
சீனக் கப்பல் ஒன்று கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு பொருளை மீட்டெடுத்துள்ளது. அது காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் விமானத்தைச் சேர்ந்த பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அப்பொருள் விமானம் காணாமல்போனதாக சொல்லப்படும் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. சீனக் கப்பலின் பணியாளர்கள் எனக் …
நஜிப்: எம்எச்370 எல்லாம் ஆண்டவன் செயல்
கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போயிருக்கும் எம்எச்370 பயண விமானத்தை தேடும் நடவடிக்கையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் நஜிப், அம்முயற்சி வெற்றி பெற ஒவ்வொருவரும் பிராத்தனை செய்ய வேண்டும் என்றார். "அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளோடு நாம் இணைந்து கொள்ள வேண்டும், ஒன்றுபட வேண்டும், பிராத்தனை…
எம்எச் 370 பற்றி வதந்திகளைப் பரப்பாதீர், நடவடிக்கை எடுக்கப்படும்:அரசாங்கம் எச்சரிக்கை
காணாமல்போன எம்ஏஎஸ் விமானம் பற்றி வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜொஹாரி கூறினார். உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதுடன் விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாரின் உணர்வுகளையும் காயப்படுத்தலாம் என்றாரவர்.
திருட்டு கடப்பிதழில் பயணித்த ஈரானியருக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இல்லை
எம்எச்370 பயணிகளில் திருட்டு கடப்பிதழ்களை வைத்திருந்த இருவரில் ஒருவர் ஈரான் நாட்டவர் என்றும் அவர் ஜெர்மனிக்குச் சென்று கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. பெளரியா நூர் முகம்மட் மெஹர்டாட் என்பதுதான் அந்த 19 வயது இளைஞனின் பெயர் என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.…
ஒரு கர்பாலை ஒழித்தால் 100 கர்பால்கள் எழுவர்
டிஏபி தலைவர் கர்பால் சிங், அரசாங்கம் ஒரு கர்பாலைத் தீர்த்துக் கட்டினால் 100 கர்பால்கள் எழுவர் என எச்சரித்துள்ளார். தமக்கு எதிரான அரசநிந்தனை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து கருத்துரைத்த கர்பால், புக்கிட் குளுகோரில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றையும் எதிர்நோக்க பிஎன் தயாராக வேண்டும் என்றார். இன்று கோலாலும்பூர் …
கேஜெ: அசிசாவுக்கு இரக்கம் காட்டாதீர்; அவர் அன்வாரின் கைப்பாவை
வாக்காளர்கள் காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசாவிடம் ஏமாந்து விடக்கூடாது என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். அதிகார ஆசை பிடித்து அலையும் அன்வார் இப்ராகிம், அசீசாவை ஒரு “கைப்பாவை” ஆக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என கைரி குறிப்பிட்டார். “அன்வாரைப் புறக்கணிக்க …
எம்எச் 370 சுபாங் நோக்கித் திரும்பி வந்தது?
காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் அது சுபாங்கை நோக்கித் திரும்பி வந்திருக்கக் கூடிய சாத்தியமும் இருப்பதாக ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேடும் நடவடிக்கை விமானம் சென்ற பாதையில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக எம்ஏஎஸ்…
முகைதின்: தீர்ப்புக்கும் பிஎன்னுக்கும் சம்பந்தமில்லை
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்பணர்ச்சி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கும் பிஎன்னுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார் துணைப் பிரதமர் முகைதின் யாசின். “நீதிமன்றங்கள் சுயேச்சையாக இயங்குகின்றன. அவற்றுக்கும் பிஎன்னுக்கும் தொடர்பில்லை. எல்லா வழக்குகள் போலவே இதுவும் நடந்துள்ளது. “அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதற்கும் பிஎன்னுக்கும் தொடர்பில்லை”, என்றாரவர்.…
அரச நிந்தனை செய்த கர்பாலுக்கு ரிம4,000 அபராதம்
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் கர்பால் சிங் அரசநிந்தனைக் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதால் அவருக்கு ரிம4,000 அபராதம் விதிப்பதாக இன்று தீர்ப்பளித்தது. நீதிபதி அஸ்மான் அப்துல்லா, தீர்ப்பு அளிக்குமுன்னர், வழக்கின்போது முன்வைக்கப்பட்ட வாதங்களையும் மக்கள் இவ்வழக்கில் காட்டும் ஆர்வத்தையும் கர்பாலின் உடல்நிலையையும் கவனத்தில் கொண்டதாகக் கூறினார். டிஏபி தலைவரான கர்பால், …
முள்கம்பி வேலியால் ஆத்திரமடைந்தார் ரபிஸி
இன்று காஜாங்கில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட காஜாங் முனிசிபல் மன்ற விளையாட்டு வளாகத்துக்கு வெளியே பிகேஆர்-பிஎன் ஆதரவாளர்களைப் பிரித்து வைப்பதற்காக போலீசார் முள்கம்பி வேலி அமைத்திருந்ததை பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி இஸ்மாயில் கண்டித்தார். “பிரதமர் நஜிப்( அப்துல் ரசாக்)பையும் அவரின் துணையிரான ரோஸ்மா(மன்சூர்)வையும் பாதுகாப்பதற்காக மக்களை எதிரிகள்போல் …
காஜாங்கில் பிகேஆர், பிஎன் நேரடி போட்டி
காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலும் மசீசி உதவித் தலைவர் சியு மெய் பன்னும் களமிறங்குவர். வேட்பு மனு தாக்கல் நேரம் காலை மணி 10-க்கு முடிவுக்கு வந்த போது அவ்விருவரையும் தவிர்த்து வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, …


