சிலாங்கூர் அம்னோ ஹுடுட் தீர்மானத்தை மீட்டுக்கொண்டது

ஹுடுட்  சட்டத்தை  அமல்படுத்தும்  சாத்தியக்கூறுகளை  ஆராய  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டு  சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்த  தீர்மானத்தை    சிலாங்கூர்  அம்னோ  திரும்பப்  பெற்றுக்  கொண்டிருப்பதாக  சிலாங்கூர்  சட்டமன்ற எதிரணித்  தலைவர்  முகம்மட்  ஷம்சுடின் லியாஸ்  கூறினார். அத்தீர்மானம்  “தப்பெண்ணத்தை”  ஏற்படுத்தியதுதான்  இந்தப் பல்டிக்குக்  காரணம்  என்று  ஷம்சுடின்  மலேசியாகினி  தொடர்புகொண்டபோது …

மசீசவும் கெராக்கானும் இன்று அமைச்சரவையில் இடம்பெறும்?

இன்று பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அமைச்சரவையை மாற்றி  அமைத்து  மசீச,  கெராக்கான்  தலைவர்களை  அமைச்சர்களாக  நியமிப்பார்  எனப்  பரவலாக  எதிர்பார்க்கப்படுகிறது. கெராக்கான்  தலைவர்  மா  சியு  கியோங்  பிரதமர்துறை  அமைச்சராகவும்  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாயும்  துணைத்  தலைவர்  வீ கா  சியோங்கும்  முறையே  போக்குவரத்து …

நஜிப்: குழந்தைகள் பராமரிப்பு தகராறுகளை உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்

  சமயம் காரணமாக ஏற்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு சர்ச்சைகளை பெடரல் நீதிமன்றத்தை பயன்படுத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று சம்பந்தப்பட்ட குடும்பங்களை கேட்டுக்கொண்டார். நீதிமன்றம் இந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என்றாரவர். "சட்டத்துறை தலைவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் கலந்தாலோசிப்பார். அனைவரும் நீதிமன்றத்தின்…

சமய வரம்புகளை மீறாதீர்கள்: பேராக் சுல்தான் அறிவுறுத்து

பேராக்  சுல்தானாக  அரியணை  அமர்ந்துள்ள  சுல்தான் நஸ்ரின் ஷா, தம்  முதலாவது  அரசவுரையில்,  இன, சமய  பிரச்னைகளால்  தோன்றியுள்ள  பதற்றநிலையைத்  தொட்டுப்  பேசியுள்ளார். மலேசியர்கள்  ஒருவர்  மற்றவரை  மதிக்க  வேண்டும்  என்றும்  சமய  எல்லைகளை  மீறக் கூடாது  என்றும்  அவர்  கேட்டுக்கொண்டார். பல  இனங்களை, சமயங்களை,  பண்பாடுகளைக்  கொண்ட …

இந்திராவின் குழந்தையைக் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

  பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை 30 நாள்களுக்குள் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள் என்று நேற்று ஈப்போ உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. குழந்தையைக் கண்டுபிடித்து கொண்டுவரத் தவறினால் ஏன் உத்தரவுக்கு கீழ்ப்படியவில்லை என்று போலீசார் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டும். நீதிமன்றம் இவ்வாறான உத்தரவு…

தியோ முஸ்லிம் அல்லர்: அவரது சடலத்தைத் திருப்பிக் கொடுக்க நிதிமன்றம்…

தியோ  செங்  செங் முஸ்லிம்  அல்ல  என்று  பினாங்கு  ஷியாரியா  நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. “சாட்சிகளின்  வாக்குமூலங்கள்  அவர்  இஸ்லாத்தைக்  கடைப்பிடிக்கவில்லை  என்பதைக்  காண்பிக்கின்றன”, என  நீதிபதி  ஸயிம்  முகம்மட்  யுடிம்  தீர்ப்பில்  குறிப்பிட்டார். எனவே,  அவரது  சடலத்தை  செங்  செங்-கின்  குடும்பத்தாரிடம்  ஒப்படைக்குமாறு  பினாங்கு  இஸ்லாமிய  விவகார  மன்ற(எம்ஏஐபிபி)…

பிகேஆர்: அரசாங்கம் யுஐடிஎம் வளாகங்கள் அமைக்க 5மடங்கு அதிகமாகச் செலவிடுகிறது

அரசாங்கம், ஆறு  மாநிலங்களில் ஆறு மாரா  தொழில்நுட்பப்  பல்கலைக்கழகங்களைக் கட்டுவதற்கு  முதலில் மதிப்பிட்டதைவிட  ஐந்து  மடங்கு  அதிகமாகச்  செலவிடுகிறது  என  பிகேஆர்  கூறியுள்ளது. ஆறு  வளாகங்களைக்  கட்டுவதற்கு  ரிம1.8 பில்லியன்  செலவாகும்  என்பது  முதலில்  செய்யப்பட்ட  மதிப்பீடு. ஆனால், அவற்றைக்  கட்டி, பராமரிக்கும்  பொறுப்பு  தனியார்  நிறுவனங்களிடம்  ஒப்படைக்கப்பட்டதை …

ஜோகூர் சுல்தான்: மாநில விவகாரங்களில் தலையிட மாட்டேன்

ஜோகூர்  சுல்தான், சுல்தான்  இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டார், மாநில நிர்வாகத்தில்  தாம்  தலையிடப்போவதில்லை  என்கிறார். ஜோகூர்  வீட்டுவசதி, சொத்து  வாரிய  சட்டவரைவுகூட  மந்திரி  புசாரின்  ஆலோசனை பெறுவதைத்தான்  வலியுறுத்துகிறது  என்று  சுல்தான்  நியு  ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸு(என்எஸ்டி)க்கு  வழங்கிய  நேர்காணலில்  கூறினார். அந்தச்  சட்டவரைவுப்படி, அவ்வாரிய  உறுப்பினர்கள்  நால்வரை  நியமிக்கும் …

தந்தையிடமுள்ள பிள்ளைகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றால் என்னவாகும்?

குழந்தை  பராமரிப்பு  சர்ச்சையில்  நீதிமன்றத்  தீர்ப்பை  அமல்படுத்த  மறுக்கும்  போலீசாருக்குக்  கணடனம்  தெரிவிப்போர்  வரிசையில்  மஇகாவும்  சேர்ந்து  கொண்டிருக்கிறது. மஇகா   இளைஞர்  தலைவர்  சி.சிவராஜ்,  முஸ்லிமாக  மதம்  மாறிய  தந்தையரிடமிருந்து  பிள்ளைகளைக்  கவர்ந்து சென்று  அவர்களின்  தாய்மார்களிடம்  ஒப்படைத்தால்  என்னவாகும்  என்று  வினவினார். “அப்போதும்  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ் …

சிலாங்கூர் சட்டமன்றம் ஹுடுட் தீர்மானத்தை விவாதத்துக்கு ஏற்றுக்கொண்டது

ஹுடுட்டின்  சாத்தியக்கூறுகளை  ஆராய  அதன்மீது  விவாதம்  நடத்த  வேண்டும்  என்ற  சிலாங்கூர்  பிஎன்னின்  தீர்மானம்  ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகக்  கூறிய சட்டமன்றத்  தலைவர்  ஹன்னா  இயோ, அது   அடுத்த  வாரம்  தாக்கல்  செய்யப்படலாம்  என்றார். எதிர்வரும்  சட்டமன்றக்  கூட்டத்தில்  விவாதிப்பதற்கு  நான்கு  தீர்மானங்கள்  தாக்கல்  செய்யப்பட்டதாக ஹன்னா  கூறினார். “நான்கில்  மூன்றை …

ஏஜி: பைபிள் விவகாரத்தில் வழக்கு இல்லை; ஜாயிஸ் “செய்ய வேண்டியதைச்…

  மலேசிய பைபிள் மன்றத்திலிருந்து கடந்த ஜனவரியில் கைப்பற்றப்பட்ட பைபிள் பிரதிகள் சம்பந்தமாக அரசாங்கம் வழக்குத் தொடரப்போவதில்லை என்று சட்டத்துறை தலைவர் அலுவலகம் இன்று (ஜூன் 11) கூறியது. அந்த வழக்கு இப்போது மூடப்பட்டு விட்டது என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயில் இன்று கூறினார். அவர்…

நிறுவன முன்னாள் இயக்குநருக்கு 1,942 ஆண்டுகால சிறைத் தண்டனை

  ஒரு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர், லிம் லோங் இயு, 43, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் புரிந்த 481 குற்றங்களுக்கு இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு மொத்தம் 1,942 ஆண்டுகால சிறைத் தண்டனையும் ரிம1.596 மில்லியன் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அந்நிறுவனத்தின் இன்னொரு…

மாணிக்கவாசகத்தின் இடைநீக்கம் இரத்து

பிகேஆர்,  சிலாங்கூர்  மந்திரி புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமுக்கு   எதிர்ப்புத்  தெரிவித்துப்  பேசிய  காப்பார்  முன்னாள்  எம்பி  எஸ்.மாணிக்கவாசகத்தின்  இடைநீக்கத்தை  மீட்டுக்கொண்டிருக்கிறது. அவரது  விளக்கத்தைக்  கேட்ட  பிறகு  கடும்  எச்சரிக்கை  விடுத்தால்  போதுமானது  என்று  முடிவு  செய்து அவரது  இடைநீக்க  உத்தரவு  உடனடியாக  மீட்டுக்கொள்ளப்பட்டது  என  பிகேஆர் ஒழுங்குநடவடிக்கைக் …

சட்டத்தை நிலைநாட்டுக: ஐஜிபிக்கு கைரி நினைவுறுத்து

குழந்தைப்  பராமரிப்பு  விவகாரத்தில்  ஷியாரியா,  சிவில்  நீதிமன்றங்களின்  தீர்ப்புகள்  முரண்படுவதால்  தாம்  “நடுவுப்  பாதை”யில்  செல்லபோவதாக  அறிவித்துள்ள  போலீஸ்   தலைவர்  காலிட்  அபு  பக்காருக்கு  சட்டத்தை  நிலைநாட்டுவதுதான்  போலீசின்  கடமை  என்பதை  கைரி  ஜமாலுடின்  நினைவுபடுத்தியுள்ளார். காலிட்டின்  அறிக்கை  பற்றிக்  கருத்துரைக்குமாறு  இளைஞர்,  விளையாட்டு  அமைச்சர்  கைரியிடம்  செய்தியாளர்கள்…

பிஎன் எம்பி: ஒற்றுமையைக் கட்டாயப்படுத்தித் திணிக்கக் கூடாது, அது இயல்பாக…

சட்டம்போட்டு  ஒற்றுமையையும் இணக்கத்தையும் ஏற்படுத்த  நினைப்பது  மக்களைக்  குறிப்பிட்ட  ஒரு  சமயத்தைப்  பின்பற்றுமாறு  கட்டாயப்படுத்துவதற்கு  ஒப்பாகும்  என்கிறார்  பிஎன்னின்  பூலாய்  எம்பி  நூர்  ஜஸ்லான்  முகம்மட். நாடாளுமன்றத்தில் இன்று  பொதுக் கணக்குக்குழு  கூட்டத்துக்குத்  தலைமைதாங்கிய  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  அவர்,  அரசாங்கம்  தேசிய   ஒற்றுமைக்காக  சட்டம்  கொண்டு  வருவது …

பெட்ரோல்மீது ஜிஎஸ்டி ; கடைசிநேர அதிரடி அறிவிப்பு செய்யப்படலாம்

அரசாங்கம் பெட்ரோல், டீசல்மீது  பொருள்,  சேவை  வரி )ஜிஎஸ்டி) விதிப்பது  பற்றி  தாமதித்து  அறிவிப்பு  செய்யலாம்  என  பிகேஆர்  கூறுகிறது. இன்று  செய்தியாளர் கூட்டத்தில்  பேசிய  பிகேஆர்  வியூக இயக்குனர்  ரபிஸி  ரம்லியும்  கிளானா  ஜெயா  எம்பி  வொங்  சென்னும்,   பெட்ரோலும்  டீசலும்  ஜிஎஸ்டிக்கு  மிகப்  பெரிய  பங்களிப்பைச் …

ஜரினா சமயத்தை நிரூபிக்க நீதிமன்ற ஆணை பெற வேண்டும்

ஜரினா  அப்துல்  மஜித்   தம்  சமய  தகுதிநிலையை நிரூபிக்க  நீதிமன்ற ஆணை பெற  வேண்டும்  என்ற  தேசிய பதிவுத்துறை(என்ஆர்டி)யின்  நிபந்தனை  சட்டப்படியும்  அரசமைப்புப்படியும்  சரியானதே  என்று  முஸ்லிம்  என்ஜிஓ  இக்ராம்  கூறுகிறது. ஜரினா முஸ்லிம்  குடும்பத்தில்  பிறந்தவர்  என்று  அவரின்  தந்தை அப்துல்  மஜித்  குலாம்  காதர்  கூறி…

நஜிப்: அமைச்சரவை மாற்றமா, யான் அறியேன்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அமைச்சரவை திருத்தி  அமைக்கப்படும்  என்று கூறும்  செய்தியை  மறுத்தார். வெள்ளிக்கிழமை  அமைச்சரவை திருத்தி  அமைக்கப்படும்  என்று  நாளேடு  ஒன்றில்  வெளிவந்த  தகவல் பற்றி  நஜிப்பிடம்  வினவப்பட்டதற்கு, “யான்  அறியேன்” என்று  சுருக்கமாக  மறுமொழி  கூறினார். துர்க்மினிஸ்தான்  பயணத்தை  முடித்துக்கொண்டு  கோலாலும்பூருக்குத்  திரும்புமுன்னர்  அஷ்கபாத் …

வரம்பு மீறிய ஐஜிபியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்

  மத மாற்ற விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் பராமரிப்பு குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட வேண்டும். எது நியாயம் என்பதை தாம் நிர்ணயிக்கலாம் என்று காலிக் நினைப்பாரானால், அவர் அவரது அதிகார வரம்பை…

மசீச: பக்காத்தான் மாநிலங்களில் மணம் செய்ய முடிவதில்லை; நிம்மதியாக சாகவும்…

மசீச,  சிலாங்கூரிலும்  பினாங்கிலும்  இஸ்லாமிய  அதிகாரிகளின்  நடவடிக்கைகளைச்  சாதகமாகப்  பயன்படுத்திக்கொண்டு  பக்காத்தான்  ரக்யாட்டைச்  சாடத்  தொடங்கியுள்ளது. பினாங்கு  மசீச  துணைத் தலைவர்   டான்  தெக் செங்,  அவர்களின்  மாநிலங்களில்  முஸ்லிம்-அல்லாதாரை  ஒட்டுமொத்தமாக  ஒழித்துக்கட்டுவதுதான்  எதிரணியினரின்  நோக்கமா என்று  வினவியுள்ளார். “பக்காத்தான்  நிர்வாகத்தில்  மாநில  இஸ்லாமிய  சமயத்துறை  அதிகாரிகள்  முஸ்லிம்-அல்லாதாருக்குத் …

ஐஜிபி-இன் நடுநிலை போக்கைச் சாடுகிறார் இந்திராவின் வழக்குரைஞர்

எம்.இந்திரா  காந்தியின்  வழக்குரைஞர்களில் ஒருவரான  ஏ.சிவநேசன்,  வெவ்வேறு  சமயத்தவருக்கிடையில்  குழந்தை பராமரிப்புமீது  எழும்  சர்ச்சைகளில்  போலீஸ்  நடுவுப்பாதையைக்  கடைப்பிடிக்கும்  என்று  கூறிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரைச்  சாடினார். போலீசின் நிலைப்பாடு  சட்டமீறலாகும்  என  சுங்கை  சட்டமன்ற  உறுப்பினருமான  சிவநேசன்  கூறினார். “புகார்  செய்யப்பட்டதும்  விசாரணை …

குழந்தை பராமரிப்பு சர்ச்சையில் ‘நடுவுப்பாதை’யே ஐஜிபி-இன் வழியாகும்

குழந்தை  பராமரிப்பு  விவகாரத்தில்  ஷியாரியா,  சிவில்  நீதிமன்றங்கள்  வழங்கும்  தீர்ப்புகள்  முரண்படும்போது போலீஸ்  நடுவுப்பாதையைக்  கடைப்பிடிக்கும்  என  இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறுகிறார். போலீஸ், ஷியாரியா அல்லது  சிவில்  நீதிமன்ற  உத்தரவுகளை  அமல்படுத்தாமல்,    பாதிக்கப்பட்ட  பிள்ளைகளைக்  குழந்தை பராமரிப்பு  இல்லத்தில்  வைத்திருக்கும்,  அதுவே …

வழக்குரைஞர் மன்றத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்

மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்,  பக்காத்தான்  ரக்யாட்டின்  சட்டப்  பிரிவுபோல்  நடந்துகொள்வதாகவும்  எதிரணி-ஆதரவு  அறிக்கைகள் விடுவதன்வழி  அதன்  அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுவதாகவும்  ஒரு  வழக்குரைஞரான  முகம்மட்  கைருல்  அஸாம்  அப்துல்  அசீஸ்  குற்றஞ்சாட்டியுள்ளார். “அது  நியாயமாக  நடந்துகொள்வதை  உறுதிப்படுத்த  வழக்குரைஞர்  மன்றத்தின்  அதிகாரத்தைக்  கட்டுப்படுத்துவது   அவசியம்”, என்றாரவர். மலேசியாகினிக்கு  எதிரான…