PKR மகளிர் பிரிவு மற்றும் பெண்கள் உரிமை அமைப்பான SIS Forum, பேராக் அரசு திட்டமிட்டுள்ள ரிம 500 முதன்முறை திருமண ஊக்கத்தொகையை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இந்தத் திட்டம் 15 வயதுடைய சிறுவர்களுக்கும் பொருந்தும் வகையில் முன்மொழியப்பட்டதைத்…
பிகேஆர்: நஜிப், பல்டி அடித்தும்கூட வலச்சாரிகளைத் திருப்திப்படுத்த முடியவில்லை
அம்னோ தலைவர் நஜிப் ரசாக் தேச நிந்தனைச் சட்டத்தில் திடீர்-பல்டி அடித்து அம்னோவில் தம்மைக் குறைகூறுவோரின் வாயை அடைக்கலாம் என்று நினைத்தார். ஆனால் முடியவில்லை. அதனால் என்ன, அச்சட்டத்தை ஒட்டுமொத்தமாக அகற்றுவாரானல் அவர் தம் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்கிறது பிகேஆர். “நஜிப், தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச்…
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக இராஜேந்திரன் வரைவுத் திட்டம் பிரதமரிடம் இருக்கையில், கமலநாதன்…
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனவரி 16, 2015. கல்வித் துணை அமைச்சர் கமலநாதன் 11 வது தேசியத் திட்டத்தின் கீழ் கல்வி மேம்பாட்டிற்காக 5 முக்கிய அம்சங்களை முன் வைக்க விருப்பதாக அறிவித்திருக்கிறார். அவை 1) பாலர் பள்ளி, 2) தொடக்கப்பள்ளி, 3) இடைநிலைப்பள்ளி, 4) பாலிடெக்னிக் / மெட்ரிக்குலேசன் மற்றும் 5) உயர்க் கல்விக் கூடங்கள். அவர்…
ஹிஷாம் ரயிஸ் சிறை செல்லும் சாத்தியம் இருக்கவே செய்கிறது
தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ், தாம் சிறைக்கு அனுப்பப்படுவதைத்தான் பெரிதும் எதிர்பார்த்தார். அதற்கு மாறாக, நீதிமன்றம் அபராதம் மட்டுமே விதித்து அவரை விடுவித்தது. ஆனால், அந்த விடுதலை நீண்ட காலம் நிலைக்காதுபோல் தெரிகிறது. அரசு தரப்பு கடுமையான தண்டனை தேவை என்று மேல்முறையீடு …
அருள் மக்களுடன் கலந்துரையாடுவதே முக்கியமாகும்-புவா
1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தைக் குறைகூறுவோர் பலர் உண்டு. அவர்களில் கடுமையாகக் குறைகூறுவது யார் என்று பார்த்தால் அது டிஏபி எம்பி டோனி புவா-வாகத்தான் இருக்கும். இதை அந்த நிறுவனமும் அறியும். அதனால்தான் அந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பியை ஒரு கலந்துரையாடலுக்கு அழைத்திருக்கிறார் 1எம்டிபி-இன் புதிய தலைவர் அருள் …
சிருலால் ஒரு தர்மசங்கடமான நிலை
சிருல் அஸ்ஹார் உமர் விவகாரம் மலேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடையில் ஒரு தர்மசங்கடமான நிலையை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் அரச வழக்குரைஞர் மார்க் ட்ரோவல். இரு நாடுகளும் நல்லுறவைக் கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலிய சட்டம் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை அவரது தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதைத் தடுக்கிறது. “மலேசியா அவரைத் தூக்கில் போடுவதில்லை என்று …
ரோஸ்மாவின் அணைப்பு ஒரு ‘தாயின் அரவணைப்பு’
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய் உள்பட பல பிரபலமானவர்களைக் கட்டிப்பிடித்த சம்பவங்களைச் சமய அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு எதிராக அம்னோ தலைவர் ஒருவர் ரோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார். ரோஸ்மா பிரபலமானவர்களுடன் இருப்பதைக் காண்பிக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் …
மகாதிர்: 1எம்டிபி பணம் எங்கே?
1மலேசிய மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) கேய்மன் தீவில் போட்டு வைத்திருந்த ரிம8.3 பில்லியனை மீட்டுக்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மட்டும் போதாது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “அந்த விளக்கம் எதையும் தெளிவுபடுத்தவில்லை. “அப்பணம் இப்போது எந்த வங்கியில் வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரிய வேண்டும். பில்லியன் கணக்கான …
சந்திரன் மரணத்தில் போலீசார் சட்டப்படி நடக்கவில்லை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
கோலாலும்பூர் கொரோனர் நீதிமன்றம், போலீசார் தடுப்புக் கைதி பி.சந்திரனுக்கு மருந்துகளைக் கொடுக்காமலும் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமலும் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொரோனராக அதாவது மரண விசாரணை அதிகாரியாக செயல்பட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஹமட் பாச்சீ, சந்திரன் 2012, செப்டம்பர் 10-இல் …
அல்டான்துன்யாவின் கொலையாளிகளைச் சந்தியுங்கள்
அப்பாடா, ஒரு வழியாக அல்டான்துன்யாவின் கொலையாளிகளின் முகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மங்கோலியப் பெண்ணின் மரணம்தான் பெரும் மர்மமாக இருந்தது என்றால் கொலையாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட இரு போலீஸ்காரர்களும் மர்ம மனிதர்களாக நீதிமன்றத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். வழக்கு தொடங்கியதிலிருந்து அவர்கள் ஊடகங்களுக்கு முகம் காட்டியதில்லை. இப்போது …
QZ8501: விமானத்தின் உடல்பகுதியில் உடல்கள் தேடப்படுகின்றன
இரண்டு வாரங்களுக்குமுன் 162 பேருடன் கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் உடல் பகுதியில் இறந்தவர்களின் சடலங்கள் உள்ளனவா என இந்தோனேசிய கடல்படை முக்குளிப்பாளர்கள் தேடி வருகின்றனர். நேற்று கடல்படை கலமொன்று, விமானத்தின் வால் பகுதி கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தள்ளி, அதன் உடல் …
முகைதின்: பள்ளிகள் சொந்த சட்டங்களைக் கொண்டிருக்கக் கூடாது
பள்ளிகள் கல்வி அமைச்சின் ஒப்புதலைப் பெற்றிராத சட்டங்களை அமல்படுத்தக் கூடாது எனத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். செராசில் மூன்றாம் படிவம் பயிலும் முஸ்லிம்-அல்லாத மாணவி ஒருவர், ‘பாஜூ குரோங்’ அணிந்திருந்ததால் பள்ளிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட சம்பவம் பற்றி வினவியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். ‘பாஜு குரோங்’கை …
ஐஜிபி ‘பாரபட்சமின்மை’ வேடத்தைக் கலைக்க வேண்டும்
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், அவர் அணிந்துகொண்டிருக்கும் “பாரபட்சமின்மை” என்ற முகமூடியைக் கழற்ற வேண்டும் என்று இடித்துரைத்த டிஏபி, அம்னோ/பிஎன் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு விவகாரங்களில் அவர் பாரபட்சமாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறிற்று. முதலாவதாக, உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, சூதாட்ட மன்னர் …
புவா சம்பந்தப்பட்ட திட்டங்கள் ‘மிக இரகசியமானவை’
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, சூதாட்ட மன்னர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தேசிய பாதுகாப்புத் திட்டங்கள் பற்றி விவரிக்க மறுத்தார். அவை “மிக இரகசியமானவை”. அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்டவை என்றாரவர். “பால் புவா தேசியப் பாதுகாப்பில் அரசாங்கத்துக்கு உதவினார் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். எப்படி என்பதை வெளியிட …
‘சூதாட்ட மன்னரை’ப் பாதுகாத்தேனா? மறுக்கிறார் ஜாஹிட்
உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, அமெரிக்கப் புலனாய்வுத் துறைக்கு எழுதிய கடிதம் பற்றி இதுவரை கடைப்பிடித்து வந்த மெளனத்தைக் கலைத்திருக்கிறார். அமெரிக்காவில் வழக்கை எதிர்நோக்கியுள்ள பால் புவாவைப் பாதுகாக்கும் நோக்கில் அதைத் தாம் எழுதவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். பால் புவாவின் நிலையையும் மலேசியாவில் 14கே இரகசியக் கும்பல் …
சிருல் கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலியா சென்றாராம்
மங்கோலிய பெண் அல்டான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான போலீஸ் கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் கடந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியா சென்றதாக தெரிய வந்துள்ளது. குடிநுழைவுத் துறையினருடன் விசாரித்துப் பார்த்து அதைத் தெரிந்து கொண்டதாக கோலாலும்பூர் சிஐடி தலைவர் முகம்மட் சாலே கூறினார்.…
எப்பிஐ-க்கு எழுதிய கடிதம் பற்றி ஜாஹிட் அளித்த விளக்கத்தை அமைச்சரவை…
சூதாட்ட மன்னர் என்று அழைக்கப்படும் பால் புவாவுக்கு ஆதரவாக தாம் அமெரிக்கப் புலனாய்வுத் துறைக்கு எழுதிய கடிதம்மீது உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி-இன் விளக்கத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவ்விவகாரம் பற்றி ஜாஹிட் அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கியதாக வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் இன்று தெரிவித்தார். ஆனால், என்ன …
தெய்வச் சிலைகளை உடைத்தவருக்கு ‘இவ்வளவு எளிய தண்டனையா?’
பெளத்த, இந்து தெய்வச் சிலைகளை உடைத்த முகம்மட் பிர்டோஸ் சைட்டுக்கு நீதிமன்றம் வழங்கிய ‘எளிய தண்டனை’ பலருக்கு வியப்பளிக்கிறது. இஸ்லாத்துக்கு எதிராகக் குற்றமிழைத்தோருக்கு வழங்கப்பட்ட தண்டனையுடன் ஒப்பிட்டால் பிர்டோஸுக்கு வழங்கப்பட்ட தண்டனை “பொருத்தமற்றதாக” தோன்றுகிறது என ஷம்சேர் சிங் திண்ட் கூறினார். தனியார் கல்லூரில் விரிவுரையாளராக பணியாற்றும் ஷம்சேர்,…
2015-இல் போலீஸ் காவலில் இறந்துபோன முதல் ஆள் ஜோகூரைச் சேர்ந்தவர்
ஜோகூரைச் சேர்ந்த 31-வயது இந்திய ஆடவர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்து போனார். இவரே, 2015-இல் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன முதல் ஆள் என சுவாரா ராக்யாட் மலேசியா (சுவாராம்) கூறியது. ஜனவரி 7-இல், ஆயர் மொலேக் போலீஸ் லாக்-அப்பில் வைக்கப்பட்டிருந்த அவர், வயிறு வலிப்பதாக கூறியதைத் …
கிளந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொள்கலன் வீடுகள்
கிளந்தானில் வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு தற்காலிகமாக கொள்கலன் வீடுகளை உருவாக்கிக் கொடுக்க பெர்துபோஹான் பெலிண்டோங் கஜானா (பெக்கா) என்னும் அமைப்பு தீர்மானித்துள்ளது. 500 சதுர அடி கொண்ட ஒரு கொள்கலன் வீடு இரண்டு குடும்பங்கள் தங்குவதற்கு ஏற்ப ஒரு கழிப்பறை, இரு அறைகள், ஒரு கூடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.…
புத்ரா ஜெயா கோயிலின் நுழைவாயில் பந்திங்கை நோக்கி இருப்பதே நல்லது
மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் இடத்தில் இந்து ஆலயம் கட்டப்படுவது ஏன் எனக் கேள்வி எழுப்புகிறது பெர்காசா இளைஞர் பிரிவு. அதன் தலைவர் இர்வான் பாஹ்மி, புத்ரா ஜெயா பிரிசிண்ட் 20-இல், கட்டி-முடிக்கப்படும்- தருவாயில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை ஆலயம் “பொருத்தமற்ற இடத்தில் அமைந்துள்ள”தாகக் கூறினார். “புத்ரா ஜெயாவில் இந்துக்கள் அதிகமில்லை.…
இஸ்லாத்திற்கு மாறிய வீரன் தடைஉத்தரவு பெற்றார்
இஸ்லாத்திற்கு மாறிய என். வீரன் என்ற இஸ்வான் அப்துல்லாவுக்கும் அவரது முன்னாள் மனைவி எஸ். தீபாவுக்கும் இடையிலான குழந்தைகள் பராமரிப்பு வழக்கில் தீபாவுக்கு சாதகமாக சிரம்பான் உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு எதிராக தடைஉத்தரவு கோரி இஸ்வான் பெடரல் உச்சநீதிமன்றத்திடம் செய்திருந்த மனுவை பெடரல் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டு தடைஉத்தரவு…
பொங்கல் நல்வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து தமிழர்களுக்கும் மலேசியர்களுக்கும் அதன் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது
மரினா பேச்சுக்கு பொதுப் பல்கலைக்கழகம் தடைபோட்டது
ஒரு பொதுப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சமூக ஆர்வலர் மரினா மகாதிரைச் சொற்பொழிவாற்றுவதற்காக அழைத்திருந்தார்கள். ஆனால், மரினாவுக்கு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய அனுமதி இல்லை என்று பல்கலைக்கழக மாணவர் விவகாரத் துறை அவர்களிடம் கூறிவிட்டது. “அரசாங்கப் பல்கலைக்கழகம் ஒன்று எனக்குத் தடைபோடுவது இது ஐந்தாவது தடவையாகும். நான் மிகவும் சக்தி …


