கம்போங் தண்டுவோவில் வான் தாக்குதலில் போர்விமானங்கள்

சாபாவின் லாஹாட் டத்துவில், கம்போங் தண்டுவோவில் பாதுகாப்புப் படைகள் தாக்குதலில் இறங்கியுள்ளன. இன்று காலை ஏழு மணிக்கு முதல்கட்டமாக வான் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கடலோர கிராமப்பகுதி பக்கம் மூன்று வெடிப்பொலிகள் செவிமடுக்கப்பட்டன. எஃப்/ஏ-18,  ஹோக் ரக போர்விமானங்கள் வான் தாக்குதலில் ஈடுபட்டன.  அதனை அடுத்து குழிபீரங்கிகள் குண்டுகள்…

டாக்டர் மகாதீர், ஊடுருவல்காரர்களுடைய சமயம் என்ன என்பது முக்கியமல்ல

'எட்டு மலேசியர்கள் உயிரிழந்துள்ளனர். அதனை அவர்களுடைய குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் விளக்குங்கள். அவர்களும் முஸ்லிம்கள் தான்' லஹாட் டத்து நிலவரத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதை டாக்டர் மகாதீர் ஒப்புக் கொள்கிறார் பிராமன்: "அதனால் தான் நாங்கள் முதலில் கவனமாகச் செயல்பட்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் முஸ்லிம்கள், நாமும்…

கம்போங் தண்டுவோ-வில் குண்டு வீச்சு தொடங்கியுள்ளது, கிராமவாசிகள் அந்தப் பகுதியிலிருந்து…

கடந்த மூன்று வாரங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிக்காரர்கள் பதுங்கியுள்ள கம்போங் தண்டுவோ-விலிருந்து அந்நிய ஊடுருவல்காரர்களை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. அந்தத் தகவலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை அறிவித்தார். அந்தப் பகுதியில் பதுங்கியுள்ள ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களைப் பிடிப்பது அந்த நடவடிக்கையின்…

மலேசிய இந்தியர்களின் விடியலுக்காக வேதமூர்த்தி உண்ணாவிரத பிரார்த்தனை

தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு மறுக்கப்பட்டிருக்கும்    மலேசிய இந்தியர்களுக்கான நீதியையும், உரிமையையும் , தன்மானத்தையும் மீட்டு நிலை நிறுத்தும் நோக்கத்தில்   ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி உண்ணாவிரத பிரார்த்தனை  மேற்கொள்வார் என்று ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் நா. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார். ஹிண்ட்ராப் போராட்டத்தின் மிக முக்கிய திருப்பு முனையாக இது…

டாக்டர் மகாதீர்: ஊடுருவல்காரர்கள் இஸ்லாத்துக்கு முரணாக நடந்து கொள்கின்றனர்

சபாவில் ஊடுருவியுள்ள ஆயுதமேந்திய நபர்களுடைய நடவடிக்கைகள் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானவை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கூறியிருக்கிறார். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. அவர்கள் செம்போர்ணாவிலும் லஹாட் டத்துவிலும் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களில் எட்டு போலீஸ் அதிகாரிகளைக் கொன்றுள்ளதாக அவர் சொன்னார். "நாங்கள்…

வெ. 32 லட்சம் என்ன ஆனது? கா. ஆறுமுகம் விளக்கம்

இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ மலேசிய அரசாங்கம் வழங்கிய நிதி என்ன ஆனது? அந்த நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது பற்றி கா. ஆறுமுகத்தை போலிஸ் விசாரிக்க வேண்டும் என்று முரளி சுப்பிரமணியம் போலிஸ் புகார் செய்திருந்தார். இது குறித்து வழக்கறிஞர் கா.…

செம்பூர்னாவில் ஒரு போலீஸ்காரரின் தலை துண்டிக்கப்பட்டதா?

சனிக்கிழமை, செம்பூர்னா, கம்போங் ஸ்ரீ ஜெயா சிமுனுலில் ஆயுதம் தாங்கிய கும்பலுடன் நிகழ்ந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியின் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை போலீசார் மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை. இன்று லாஹாட் டத்துவில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் இஸ்மாயில் ஒமார், தாம் இன்னமும் பிண ஆய்வு அறிக்கையைப்…

“டி. மோகன் என் மீது வழக்கு தொடுக்கலாம்”, அழைக்கிறார் சேவியர்

மஇகாவின் டி. மோகன் மக்களின் நலனுக்குப் போராடுவது உண்மையானால் அவர் தமக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் Read More

வாக்காளர் பட்டியல் மறுஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ள விலக்கு ‘அரசமைப்புக்கு முரணானது’

லிக்காஸ் தேர்தல் முடிவுகள் செல்லாது என நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து 1958ம் ஆண்டுக்கான தேர்தல் சட்டத்தில் 9ஏ பிரிவு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது அரசமைப்புக்கு உட்பட்டதா என வழக்குரைஞர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து நீதிமன்றங்கள் கேள்வி எழுப்ப முடியுமா முடியாதா என்பதும்…

பாதுகாப்புப் படைகள் நடமாட்டம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என…

சபா, செம்போர்ணாவிலும் லஹாட் டத்துவிலும் ஆயுதமேந்திய பிலிப்பினோ படையெடுப்பாளர்களுடைய ஊடுருவலை முறியடிக்க Read More

நஸ்ரி: இசி பணிகளில் பிரதமர் தலையிடுவதில்லை

பலரும் நினைப்பதுபோல், தேர்தல் ஆணைய (இசி)த்தின் பணிகளில் பிரதமர் தலையிடுவதில்லை என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். இசி ஆணையர்களைப் பிரதமர் நியமனம் செய்வதில்லை. “பேரரசர் மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்தபின்னர் இசி உறுப்பினர்களை நியமனம் செய்வதாக அரசமைப்பு கூறுகிறது. அதில் பிரதமரின் பங்கு பற்றி…

ஆர்சிஐ விசாரணை மார்ச் 18க்கு தள்ளி வைக்கப்பட்டது

நாளை தொடங்கவிருந்த சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச  ஆணைய விசாரணை லஹாட் டத்து நிலவரம் காரணமாக மார்ச் 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆர்சிஐ நடவடிக்கைகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ள தகவலை அந்த விசாரணைய நடத்தும் அதிகாரியான டிபிபி மனோஜ் குருப் தொடர்பு கொள்ளப்பட்ட போது…

சூலு நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நடவடிக்கை ஆமை வேகத்தில் நடப்பதாக கீர்…

முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் கீர் தோயோ, லாஹாட் டத்துவில் பாதுகாப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள ஒரு விவகாரத்துக்குத் தீர்வுகாண அரசாங்கம் நீண்ட காலம் எடுத்துக்கொண்டிருப்பதைச் சாடியுள்ளார். லாஹாட் டத்துவுக்குள் அடக்கி வைத்திருக்கப்பட வேண்டிய ஊடுருவல் இப்போது அக்கம்பக்கப் பகுதிகளுக்கும் பரவிவிட்டது. “ஆயுதம் தாங்கிய உள்நாட்டு வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் …

சபாவில் தலையிடுமாறு ஒஐசி-க்கும் ஐநா-வுக்கும் வேண்டுகோள்

சபா இழுபறியில் தலையிட்டு கோலாலம்பூருக்கும் சுலு சுல்தானுக்கும் இடையில் பேச்சுக்கள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு மொரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF), ஒஐசி என்ற இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தையும் ஐநாவையும் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த பேச்சுக்களில் மணிலா சேர்க்கப்படக் கூடாது என்றும் MNLF கூறியது. அந்தத் தகவலை இன்று…

சபா இழுபறி தொடர்பில் நாடாளுமன்றம் கூட வேண்டும் என பக்காத்தான்…

அண்மையில் கிழக்கு சபாவில் நிகழ்ந்துள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற்றி விவாதிப்பதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் அறைகூவல் விடுப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அத்துடன் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் "அந்த விவகாரம் மீது புரிந்துணர்வு ஏற்படுவதற்கு"…

அரை மில்லியன் புதிய வாக்காளர்களில் 28விழுக்காட்டினரின் அடையாளம் தெரியவில்லை

2008-க்குப் பிறகு சிலாங்கூரில் பதிவுசெய்து கொண்டிருக்கும் 500,000 புதிய வாக்காளர்களில் 28 விழுக்காட்டினரை அடையாளம் காண இயலவில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறுகிறார். “வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த ஒத்துழைக்கத் தயார் எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினோம், ஆனால் அவர்கள் அது சிலாங்கூர்…

இயல்புநிலைக்குத் திரும்பத் தடுமாறுகிறது லாஹாட் டத்து

அதன் கடற்கரைப் பகுதிகளில் சூலு அரச இராணுவம் ஊடுருவல் செய்ததால் நிலைகுலைந்துபோன லாஹாட் டத்து வழக்கநிலைக்குத் திரும்பத் தடுமாறிக்கொண்டிருக்கிறது. 130கிலோ மீட்டர் தொலைவில் கம்போங் தண்டுவோவில் 17-நாள்களுக்குமுன் வந்திறங்கிய ஊடுருவல்காரர்களுக்கும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததை அடுத்து சாரிசாரியாக இராணுவ ஊர்திகள் வரத் தொடங்கியதைக் கண்டு…

‘ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்துவதற்கு முதலில் வழியைப் பாருங்கள்’

"பாதுகாப்பு கடுமையாக மீறப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் அரசியலாக்க வேண்டுமா ?" அன்வார்: லஹாட் டத்துவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை சின்ன அரக்கன்: சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் நமது இராணுவ, போலீஸ் வீரர்களை கொன்றுள்ள வேளையில் அந்த ஊடுருவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆதரவு அளிப்பதாகக் கூறி பிரச்னைக்கு…

மனோகரன்: தெய்வம், கோயில் உண்டு; நீதி கேட்க இடம் இல்லை

"இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க" என்று  நாம் வாழ்த்துகிறோம். ஆனால் நாம் நடுத்தெருவில் தள்ளப்படுகிறோம் என்று இன்று நண்பகல் ஸ்கோட் தெரு கந்தசாமி கோயிலின் முன் நடுச்சந்தியில் நடந்த சிறீலங்காவுக்கு எதிரான கண்டனப் பேரணியின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் மிகுந்த வருத்தத்துடன் கூறினார். "எனக்குப்…

சிறீலங்காவுக்கு எதிராக மலேசியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்றைய உலகில் மிகக் கொடூரமான இன ஒழிப்பு, தமிழ் இன ஒழிப்பு, அரசாங்கமான சிறீலங்கா அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கவும், அக்கொடிய சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐநா மனித உரிமை மன்றத்தில் மலேசிய அரசாங்கம் ஒரு தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவும் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல்…

ராஜபக்சே தூக்கிலிடப்பட்டார்!

இன்று நண்பகல் மணி 12.35 க்கு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சே  கோலாலம்பூர், ஸ்கோட் தெருவில், கந்தசாமி கோயிலின் முன் நடுச்சந்தியில் தூக்கிலிடப்பட்டார்! ( Video | 4:59min ) சிறீலங்கா அரசாங்கத்தையும், அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயையும் கண்டித்து, சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனிவா மனித…

இலங்கை தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும்; மலேசியா அதை முன்னெடுக்க…

இன்று காலை 11.00 மணியளவில் கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் கருப்பு உடை கண்டன ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. செம்பருத்தி இணையத்தளம் எற்பாடு செய்திருந்த இந்த கண்டன ஊர்வலத்தில் சுமார் 800-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஜொகூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், கேமரன் மலை, சிலாங்கூர் மற்றும்…