சேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய “உண்மைகள் 10”…

சென்னை பெருமழைக்கு அதிகபட்ச பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பவை சென்னை சேரிகள்தான். பேரிடர் தருணங்களில் மட்டுமல்ல, அன்றாட பொழுதுகளிலும் சேரிகள் என்றால் பாதிப்புகளுக்கு ஆளானவையே! மழை, வெள்ளம், நிவாரணம், நிர்வாகக் கோளாறுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான விஷயம், சென்னையில் பெருகியுள்ள சேரி பகுதிகளை எப்படிக் கையாள்வது…

இந்தியா –பாக் அமைத்திப் பேச்சுவார்த்தையில் நேதாஜி: வெளியான புகைப்பட ஆதாரங்கள்

இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் நேதாஜி பங்கேற்றதற்கான புகைப்பட ஆதாரங்கள் அவரது மர்ம மரணத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி குறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பு ஒன்று பிரித்தானியாவின் தடயவியல் நிபுணருடன் இணைந்து நடத்திய சிறப்பு ஆய்வின் முடிவில் இந்த புதிய தகவல்கள் கிட்டியுள்ளது.…

மக்கள் தூங்கும் போது எக்கேடாவது கெட்டு போங்கன்னு ஏரியை திறந்துவிடுவதா?:…

சென்னை: மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது எக்கேடாவது கெட்டு போங்கன்னு செம்பரம்பாக்கம் ஏரியை எப்படி திறந்துவிடலாம்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை சீமான் வழங்கி வருகிறார். அண்ணா…

சென்னை சராசரி வாழ்க்கைக்கு திரும்புவதாக எழுத ஆரம்பித்திருப்பது ஆபத்தின் அறிகுறி!

கிட்டதட்ட அனைத்து ஆங்கிலப்பத்திரிக்கைகளும் சென்னை சராசரி வாழ்க்கைக்கு திரும்புவதாக எழுத ஆரம்பித்திருப்பது ஆபத்தின் அறிகுறி. அரசு நிர்வாகத்தின் சீர்கேடு குறித்தும், நிவாரணப்பணிகள் சீரமைக்கப்படாமலும், ஒருங்கிணைக்கப்படாமலும் மரணித்திருக்கும் அரசினை கேள்விக்குள்ளாக்கும் எந்த செய்தியையும் நாம் காணமுடிவதில்லை. ஜெயலலிதா படத்தினை ஒட்டி நிவாரணப்பொருட்களை அதிமுகவினர் சொந்தம் கொண்டாடும் அராஜகத்தினை நாம் வளைதளங்களில்…

மழை-வெள்ள பாதிப்பு: தமிழகம் முழுவதும் 347 பேர் மரணம்; இதுவரை…

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 347 பேர் இறந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பருவமழை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்தது. இதனால், அந்த மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு…

டெல்லியில் காற்று மாசுபாடு…டீசல் கார்களுக்கு முற்றிலும் தடை?

டெல்லி: டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாக டீசல் கார்களுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனப் பயன்பாட்டால் டெல்லி நகரமே மாசுபட்டு கிடக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் நிலையில் தலைநகர்…

45 கி.மீ பயணம் செய்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி:…

பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 45 கி.மீ தூரம் பயணம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் நிவாரணப் பொருட்கள் வழங்கியது பலரையும் நெகிழ வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுரேஷ், கொல்லுபட்டறை வைத்துள்ளார். சென்னை, கடலூர் மக்கள் பேரிடரால்…

சென்னை வெள்ள பாதிப்பு காரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையோடு ஏரிகளிலிருந்து திடீரென்று அதிகமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ள நீரும் சேர்ந்து உயிர், உடமை, கட்டமைப்புகள், சேதாரங்கள், வரலாறு காணாத அளவில் ஏற்பட்டிருக்கிறது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.…

சென்னை மழை வெள்ளத்தால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு

சென்னை, டிச. 10–சென்னையில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. தொழில்துறையினர் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணித்துள்ளனர். வெள்ள பாதிப்புக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமும் தப்பவில்லை. நவம்பர் 30–ந்தேதி, டிசம்பர் 1–ந்தேதி பெய்த அடை…

புண்ணிய நதியை அழித்த புண்ணியவான்கள்!

சென்னையில் நதிகள் என்ற பெயரில் இரண்டு சாக்கடை ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பெய்த மழையால் அடையாற்றை கண்டு சைதாப்பேட்டை அரண்டு போனதென்றால், மறுபுறத்தில் கூவத்தின் வேகம் அமைந்தகரை,சிந்தாதரிப்பேட்டையை மிரட்டி எடுத்தது. சென்னையின் மக்கள் பெருக்கம் கூவம் என்ற நதியை கழிவுநீர் சுமந்து செல்லும் ஆறாக மாற்றி விட்டது.…

நிவாரண பொருட்களை பறித்து செல்லும் கும்பல்- தவிக்கும் தன்னார்வ குழுக்கள்;…

கடலுார்: கடலூர் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு கருணை உள்ளத்துடன் சிலர் கொண்டு வருகின்ற நிவாரணப் பொருட்களையும் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பறித்துச் செல்வதாக மக்களிடையே புகார்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில் பெய்து வரும் கனமழையில் சென்னையை விட பெருமளவில் பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர். அங்கு…

மழையால் பாதிக்கப்பட்டது சென்னை மட்டும் அல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவும் தான்..!

சென்னை: உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கும் இந்தச் சூழ்நிலையில் நாட்டின் முக்கியப் பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் மழை வெள்ளம் மக்களை மட்டும் அல்லாமல் வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு உண்டாகும் அளவிற்கு மழை வெள்ளம் தமிழ்நாட்டைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது.…

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்……

லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்.. மழையளவு…

தண்ணீர் + கண்ணீர் வெள்ளம் ஒருபக்கம்.. மறுபக்கம் குப்பை.. லெப்டோஸ்பைரோசிஸ்…

சென்னை: மழை விட்டு விட்டது.. ஆனால் தூவானம் விடவில்லை என்ற கதையாக, ஊரெல்லாம் பெரும் குப்பை சேர்ந்து சென்னையே துர்நாற்ற நகரமாக மாறியுள்ளது. மலை மலையாக குப்பை தலைநகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கிறது. குப்பைகளை அகற்று மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. பெரும் சிரமமான பணியாகவும் மாறியுள்ளது.…

சென்னையில் மழையால் ஏற்பட்ட இழப்பு ரூ.1 லட்சம் கோடி? ஷாக்…

சென்னை: தமிழகத்தில், 100 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அளவில் மழை கொட்டித் தீர்த்துள்ளதால், ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். கன மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், 14 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கி உள்ளனர். சென்னை மாநகராட்சியின்…

பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்: அமெரிக்க நிபுணர்கள் கருத்து

சென்னையின் தற்போதைய நிலை நகர வடிவமைப்பாளர்களுக்கு பாடமாக அமையும் என அமெரிக்க வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதாலும், வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தினாலும் வெள்ள நீர் வடிவதில் தொடர்ந்து சிக்கல்…

மிதக்கும் உடல்கள்: தொற்று நோய் அபாயம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடல் போல் வெள்ளம் தேங்கியுள்ள நிலையில், உடல்களும் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக மழை, தனது ஆக்ரோஷ தாக்குதலை நிறுத்தி உள்ளதால், வெள்ள நீர் சற்று குறைந்து, மொட்டை மாடிகளில் தவம் கிடந்தோர், வெளியேற முயல்கின்றனர். இதனிடையே…

நீர் நிலைகளை ஆக்கிரமித்ததே சென்னை பேரழிவுக்கு முக்கியக்காரணம்: டில்லி அறிவியல்…

'வரைமுறையற்ற வளர்ச்சியே, சென்னை நகரில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு முக்கியக் காரணம்' என்று, டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது சென்னையில், வரலாறு காணாத அளவுக்கு, அதீத மழை பெய்ததற்கும், பருவநிலை மாற்றத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக, சூழல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து…

இலங்கையிலும் இந்தியாவிலும் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை மூழ்கும் அபாயம்! –…

அடுத்த  இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல  EL Nino சூழற்சிப்  புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 250 Cm…

சென்னை புறநகரில் ஒரேநாளில் வெள்ளத்தில் மிதந்த 98 சடலங்கள் மீட்பு….

சென்னை: வெள்ளம் மூழ்கடித்த சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 98 சடலங்கள் மீட்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சேலையூர், கிழக்கு தாம்பரம், முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்கள்தான் பெருமளவு…

மீட்புப் பணியில் ஈடுபடாத தமிழக அரசின் அலட்சியம்- சென்னையில் வீட்டுக்குள்…

சென்னை: அடையாறு ஆற்றின் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் மீட்புப் பணியில் தமிழக அரசு ஈடுபடாமல் செயலற்று இருந்ததால் ஏராளமானோர் ஜலசமாதியாகியுள்ளனர். நந்தம்பாக்கத்தில் 5 பேரும், தி. நகரில் பரணில் படுக்க வைக்கப்பட்ட மூதாட்டியும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் பெய்த…

வெள்ளம் பாதித்த சென்னைவாசிகளை கைவிட்ட தமிழக அரசு! நிவாரணத்தை வழிப்பறி…

சென்னை: உலக நாடுகளே சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்காக ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருக்கிறது... தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய எந்த ஒரு முறையான நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 'நிராதரவாக' நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல அலையவிட்டிருப்பதால் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர் மக்கள். நிவாரண உதவி…

100 ஆண்டுகளின் பின்னர் சென்னையில் ஏற்பட்ட பேரிடர்! பாராளுமன்றத்தில் ராஜ்நாத்…

சென்னை வெள்ள சேதம் மிக அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் முதல் விவாதம் நடந்து வந்தது. மேலும் புதுச்சேரி, ஆந்திரா வெள்ளச்சேதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்துக்கு…