தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி

இருபது தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும்...  மத்திய அரசு நீதி விசாரணைக்கும் , சி.பி.ஐ புலன் விசாரணைக்கும் உத்திரவிட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி   அன்புடையீர் ,வணக்கம் சென்ற ஏப்ரல் 6ஆம் நாள் நள்ளிரவில், 7ஆம் நாள் அதிகாலையில்…

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது நடக்குமா?

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர அணுகுமுறையால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பினராவது என்ற, இந்தியாவின் நீண்ட கால கனவு, விரைவில் நிறைவேறும் சூழல் உருவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, மே மாதம் பதவியேற்றார். அதன்பின், 11 மாதங்களில், 16 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.…

காவிரியில் அனுமதியின்றி கர்நாடகம் அணை கட்டக் கூடாது: பிரதமரிடம் தமிழக…

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் புதிய அணை உள்பட எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…

அல்கொய்தாவின் இந்திய பிரிவு தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலி

அல்கொய்தா இயக்கத்தின் இந்திய கிளையின் துணை தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்பான அல்கொய்தா இந்தியாவிலும் தனது இயக்கத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அல்–ஜவாஹிரி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஏ.கியூ.ஐ.எஸ். என பெயரிடப்பட்டுள்ள இந்திய கிளைக்கு…

20 தமிழர்கள் சுட்டுக்கொலை: யாரையும் கைது செய்யாதது ஏன்?- ஆந்திரா…

ஹைதராபாத்: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரைக்கும் யாரையும் கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள ஆந்திர உயர்நீதிமன்றம், ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் விசாரணை தொடர்பான ஆவணங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. திருப்பதி அருகே ஷேசாசலம் வனப்பகுதியில் கடந்த…

திருநங்கைகளுக்கும் சம உரிமை.. வரலாற்று சிறப்பு மிக்க மசோதா ராஜ்யசபாவில்…

டெல்லி: திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேறியது. தனி நபர் மசோதா ஒன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது 46 வருடங்களிலேயே இதுதான் முதல் முறையாகும். ஆண் மற்றும் பெண்களைப்போலவே, திருநங்கைகளுக்கும், சமூகத்தில் சம…

சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க மீனவ குழுவினர் தில்லி பயணம்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை திங்கள்கிழமை (ஏப்.27) சந்தித்து முறையிடுவதற்காக, தமிழக மீனவர்கள் குழு வெள்ளிக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றது. கச்சத்தீவு, தனுஷ்கோடி பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள், இலங்கை கடற்படை, இலங்கை மீனவர்களிடம் சிக்கி…

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லபட்டதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய தோழர்…

ஆந்திரப்பிரதேசத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லபட்டதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக, தமிழ்த் தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் கைது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டனம்! ஆந்திரப்பிரதேசத்தில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக தமிழ்த் தேசியப் பேரியக்கத்…

ஆந்திர சம்பவம்: நீதி விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதியில், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஆந்திரப் பிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வுக் கூட்டம்…

நாடாளுமன்றத்தை உலுக்கியது விவசாயி தற்கொலை

ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள். ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உலுக்கியது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்…

விவசாயிகளின் உயிர் அனைத்திலும் மேலானது: மோடி

விவசாயிகளின் உயிரைக் காப்பதை விட மேலானது வேறு எதுவுமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார். விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண தகுந்த ஆலோசனைகளை யார் வழங்கினாலும், அதை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக மக்களவையில்…

தி.க.வை தடை செய்க.. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருக:…

டெல்லி: பிராமணர்கள் மீது, தி.க.வினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறி கண்டித்துள்ள பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்காக, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்று எச்சரிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில், பிராமணர்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து சு.சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தி.க.வை…

தமிழர் நலனுக்கு எதிரானவர் சுப்பிரமணியன் சுவாமி: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

புதுச்சேரி: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எப்போதும் தமிழர்கள் மற்றும் தமிழக நலனுக்கு எதிராக செயல்படுபவர் என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு, மேகதாது என்ற பகுதியில் அணை கட்டி நீரை தேக்க முயல்கிறது. இதை எதிர்த்து தமிழக அரசியல்…

அமெரிக்கா வாழ் தமிழருக்கு பத்திரிகை துறைக்கான புலிட்சர் விருது

தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு சர்வதேச புலிட்சர் (Pulitzer prize) விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவ துறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி கோவையை சேர்ந்த பொறியாளர் பழனி குமரன் ஆய்வு நடத்தியுள்ளார். அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal)…

நேருவின் ‘பாரதரத்னா’வை திரும்பப் பெறுங்கள்… நேதாஜியின் பேரன் ஆவேசம்

டெல்லி : முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என நேதாஜியின் உறவினர் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்த நிலையில், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

மூன்றாக பிரிக்கப்படுகிறது பெங்களூர் மாநகராட்சி.. தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு!

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவை 3 மாநகராட்சிகளாக பிரிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நிர்வாக வசதிக்காக பெங்களூரு மாநகராட்சியை மூன்றாக பிரிக்க சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுகுறித்து விவாதிக்க,…

செம்மரக் கடத்தலில் தமிழக, ஆந்திரா முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு? கைது…

திருப்பதி: செம்மரக் கடத்தலில் தொடர்பிருப்பதாக கூறி தமிழகம் மற்றும் ஆந்திராவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரை கைது செய்ய ஆந்திரா போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை ஆந்திரா போலீஸ் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த…

ஆந்திர சம்பவம்: மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்ற உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது. மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை காலையில் தொடங்கியது. அப்போது, மக்களவை அதிமுக குழுத் தலைவர் பி. வேணுகோபால் எழுந்து…

“இந்திய-சீனப் போர் குறித்த ரகசிய அறிக்கையை அரசு விரைவில் வெளியிடும்’

கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப் போர் குறித்த ஹெண்டர்சன் புரூக்ஸ் அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சுப்ரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய-சீனப் போர் குறித்த ஹெண்டர்சன்…

ஆந்திர சம்பவம்: முதல் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே சேஷாசலம் வனப் பகுதியில்  போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 20 பேரின் முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையை, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில், அந்த மாநில அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. ஹைதராபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, பி.வி.சஞ்சய்…

பாகிஸ்தானின் முதல் எதிரி இந்தியா தான்: ஹபீஸ் சயீத் கொக்கரிப்பு

இஸ்லாமாபாத், ஏப். 20- பாகிஸ்தானின் முதல் எதிரி இந்தியாதான் என்றும், ஜிகாதி படையின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்றும் ஜமாத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் முகமது சயீத் கூறியுள்ளான். மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் முகமது சயீத், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து…

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் ஸ்தீரமான தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்றைய தினம் நிறைவடைந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம்…

மேகதாதுவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும்:…

மேகதாதுவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகாவின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவே மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட 5 நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியுள்ளது.…