‘ராஜீவ் நினைவுநாள் உறுதிமொழியை முதல்வர் எடுக்கவில்லை’

மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி தமிழக தலைமைச் செயலகத்தில் வழக்கமாக நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறவில்லை. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி தமிழகத்தின்…

மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ஷவுக்கு அழைப்பு குறித்து வைகோ எதிர்ப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பது குறித்து மதிமுக தலைவர் வைகோ எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே இலங்கைப் போரில் இந்திய அரசு இலங்கைக்கு உதவி செய்தது என்ற குற்றச்சாட்டை இந்தியாவை ஆண்ட…

வைகோவிற்கு கவுரவ பதவி வழங்க பாஜக திட்டம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பாஜக கவுரவ பதவி வழங்கி சிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று டெல்லியில் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள அவர், பின்னர் பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங், பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார். இதுபற்றி…

பாஜக என் தாய்க்கு சமம்: கண்ணீர் விட்டு அழுத மோடி

பாஜக நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி உருக்கமாக உரையாற்றியுள்ளார். நாடாளுமன்ற மத்திய அரங்குக்குள் நுழைந்தபோது படிகளில் மண்டியிட்டு வணங்கினார். பின்னர் மூத்த தலைவர் அத்வானியின் பாதம் பணிந்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து, நடந்த கூட்டத்தில் அத்வானி முன்மொழிய, பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு…

பாமகவுக்கு அமைச்சரவையில் இடம்? ” மோடி முடிவு செய்வார்”: அன்புமணி

"மோடிதான் முடிவெடுப்பார்" : அன்புமணி   இந்தியாவில் பாஜக தலைமையில் உருவாகவிருக்கும புதிய அமைச்சரவையில் , தமிழகத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளிலிருந்து வெற்றிபெற்ற பாமகவுக்கு இடம் கிடைக்குமா என்பது குறித்து மோடிதான் முடிவெடுப்பார் என்கிறார் முன்னாள் அமைச்சரும் , தர்மபுரி தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ்.…

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு

புதுடில்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி, வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது. போட்டிகளின்போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால், இந்த போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்…

தமிழகத்தில் உள்ள 17 நதிகளையும் இணைக்க வேண்டும்: ராம.கோபாலன் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள 17 நதிகளையும் பொதுமக்கள் பங்களிப்புடன் இணைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராம.கோபாலன் வலியுறுத்தினார். பொள்ளாச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வாக்கு வங்கி அரசியல் நடத்தி வருகின்றன. இதற்காக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக…

சோனியா, ராகுல் ராஜினாமாக்களை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துள்ளது

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர்.   நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திங்களன்று மாலை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. அந்த…

தமிழகத்திற்கு ஒத்துழைப்பு: ஜெ.,யிடம் மோடி உறுதி

சென்னை:லோக்சபா தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நரேந்திர மோடி தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க., 39க்கு, 37 இடங்களைப் பெற்று, மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.பா.ஜ., வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா,…

பா.ஜ.க. அரசின் செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஒரு போதும் தலையீடாது: ராம்…

நரேந்திரமோடியின் அரசு நிர்வாகத்திலோ அல்லது பாரதீய ஜனதா கட்சி செயல்பாட்டிலோ ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் தலையிடாது என ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக புதிதாக பதவியேற்க உள்ள பா.ஜ.க அரசின் அரசின் செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வழக்கம்போல் தலையிடும் என்றும் இதனால் குழப்பங்கள் ஏற்பட்டு,…

மோடியின் அதிரடி வெற்றியால் குவிந்துள்ள 1லட்சம் கோடி

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்து பங்கு சந்தையில் 1லட்சம் கோடி அளவிற்கு முதலீடு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அந்த கட்சி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, இதுவரை இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிறுவனங்கள் ஒரு…

ராஜினாமா முடிவை சில மணி நேரங்களில் திரும்ப பெற்றார் ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியை தழுவின. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு முழுவதும் விரிவான சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. தி.மு.க.…

நாளை மறுதினம் பிரதமராக தேர்வு அமைச்சர்களை தேர்ந்தெடுப்பதில் நரேந்திர மோடிக்கு…

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ. கட்சி, நாளை மறுதினம் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளது. ஆனால், அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. மூத்த தலைவர்களில் யார் யாருக்கு என்ன பதவி தருவது, கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா வேண்டாமா…

மு.க., ஸ்டாலின் விலக முடிவு ? ராஜினாமா கடிதம் கொடுத்தார்

சென்னை: தி.மு.க., வில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க., ஸ்டாலின் விலகியதாக கூறப்படுகிறது. தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சி தலைவர் கருணாநிதியிடம் வழங்கியதாகவும், ஆனால் கட்சி தலைமை இதனை இது வரை ஏற்று கொண்டதாக உறுதியான தகவல் இல்லை. சமீபத்திய லோக்சபா தேர்தலில் மோடி…

தமிழகத்துக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்குமா?

பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதால் தமிழகத்துக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 16-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.…

டீ கடையில் இருந்து பிரதமர் வரை நாட்டை ஆளப்போகும் நரேந்திர…

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். நரேந்திர மோடியின் பின்னாலும் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய சரித்திரம் அடங்கி உள்ளது. குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், 1950 செப்டம்பர் 17ல், உயர்தட்டு வகுப்பைச் சேர்ந்த வைசியா பிரிவின் உட்பிரிவான ‘மோத் கான்சி’ என்ற குஜராத்தில் மட்டுமே காணப்படும்…

அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது: அன்புமணி

அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் என்னை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு தலை வணங்கி என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.…

மக்கள் வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்: மோடி பேச்சு

ஆமதாபாத்: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் எனவும், நாட்டை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளதாாகவும் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறினார். பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேர்தலுக்கு முன்னர், குஜராத்தின் வளர்ச்சி திட்டங்கள்…

‘மோடி அலை’யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது, எதிர்க்கட்சி அந்தஸ்தை…

புதுடில்லி:பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எட்டே மாதங்களில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ.,வை, தனி பெரும்பான்மை பலத்துடன், மத்திய ஆட்சியில் அமரச் செய்துள்ளார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இதன் மூலம் நிலையான ஆட்சி மத்தியில் கைகூடியுள்ளது. நாடு முழுவதும் வீசிய, 'மோடி அலை'யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது. 16வது…

இதுபோன்ற தேர்தலை இதற்கு முன்பு பார்த்ததேயில்லை : அத்வானி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை போன்று இதற்கு முன்பு பார்த்ததேயில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போன்று இதுவரை நான் பார்த்ததேயில்லை என்றார். மேலும், இதுவரை…

மோடி அலை கடுமையாக வீசியுள்ளது; 65 ஆண்டு கால காங்கிரஸ்…

புதுடில்லி: நாடு முழுவதும் மோடி அலை கடுமையாக வீசியுள்ளது; இதனால் 65 ஆண்டு கால காங்கிரஸ் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டுள்ளது. 60 இடங்களைக் கூட காங்கிரஸ் கைப்பற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுவரை வெற்றி பெறாத தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் பாஜ.,…

தமிழகத்தில் அ.தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தொகுதிகள் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணி முதல் துவங்கி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க., தர்மபுரி, அரக்கோணம், திண்டுக்கல், மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், நாமக்கல், மத்திய சென்னை, ஈரோடு, நீலகிரி, கோவை , பொள்ளாச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி…

முள்ளிவாய்க்கால் நினைவு வீரவணக்க ஒன்றுகூடல் – பழ. நெடுமாறன்!

முள்ளிவாய்க்கால் நினைவு வீரவணக்க ஒன்றுகூடல் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்த மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழர்கள் மற்றும் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர்…