ஹைதராபாத்தில் மதக் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

ஹைதராபாத்தில் இரு மதத்தினரிடையே ஏற்ப்பட்ட வன்முறையை அடுத்து, பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரப் பிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஹதூர்புரா என்ற பகுதியில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கொடியை எரித்ததால் இந்தக் கலவரம் நடந்ததாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து அங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…

பாஜக அணி ஆட்சியைப் பிடிக்கும்: வாக்குக் கணிப்புகளின் முடிவு

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 280க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒன்பது கட்டமாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 543 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு…

இந்திய ஆடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நிலை படுமோசம்

இந்தியாவின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில், ஒப்பந்த ஊழியர்கள் என்ற பெயரில் நடக்கும் நவீன கொத்தடிமை முறை உட்பட பல்வேறு தொழிலாளர் உரிமை மறுப்புகளும் மனித உரிமை மீறல்களும் நடப்பதாக மனித உரிமைகளுக்கான சர்வதேசக் கூட்டமைப்பு எஃப் ஐ டி ஹெச் (Federation Internationale de Droits Human) என்ற…

இலங்கை- இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தோல்வி

இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்துள்ளது. கரிட்டாஸ் இலங்கை-செடெக் நிறுவனத்தில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு கோரிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் முரண்பட்ட நிலைமையே காணப்பட்டதால் பேச்சுவார்த்தை சுமார் 11 மணிநேரம்…

முடியும் தருவாயில் தேர்தல் வன்முறை; மே.வங்கத்தில் மோதல்: துப்பாக்கிச்சூடு

கோல்கட்டா: பார்லி., தேர்தல் இன்றுடன் 9வது கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. இது வரை பெரிய அளவில் வன்முறை ஏதும் இல்லாமல் 8 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. ஆனால் இன்று இறுதிக்கட்ட தேர்தலில் மேற்குவங்கத்தில் பெரும் மோதல் வெடித்தது. ஆளும் திரிணாமுல் காங்., இடதுசாரி கட்சியினர் இரு பிரிவுகளாக மோதிக்கொண்டனர்.…

பெரியாறு அணையில் நீர்மட்ட அளவுகளை குறிக்கும் பணியில் தமிழக அதிகாரிகள்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அணையின் மதகு பகுதியில் நீர்மட்ட அளவுகளை குறியிடும் பணியில் தமிழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தலைமையில் 4 ஊழியர்கள், அணையின் மதகு பகுதியில் நீர்மட்ட…

மோடியுடன் மட்டுமே போட்டி; காங்கிரஸ் போட்டியிலேயே இல்லை : கேஜ்ரிவால்

வாராணசி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அந்த தொகுதியில் எனக்கும் மோடிக்கும் தான் போட்டி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிலேயே இல்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய  கேஜ்ரிவால், பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை…

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு வலுக்கிறது : அலங்காநல்லூரில் கடையடைப்பு

அலங்காநல்லூர்: விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு இடங்களிலும் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. மதுரை மாவட்டம், ஜல்லிக்கட்டுக்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில்…

வரைமுறை தாண்டிப் பேசுகிறார் மம்தா: அருண் ஜேட்லி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தினமும் ஏதேனும் ஒரு வார்த்தையைக் கூறி, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து வரைமுறை தாண்டிப் பேசுவதாக அக்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சகோதரியின் (மம்தா) மாற்றம் நல்லாட்சிக்காகவோ, வளர்ச்சிக்காகவோ அல்ல. அவரது…

நூற்றாண்டு பழமையான கோயிலில் அனைவரும் அர்ச்சகர் ஆகிறார்கள்

இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் ஒன்றில் முதன்முறையாக பெண்களும் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூர் என்ற நகரில் உள்ள, மாநில அரசுக்கு சொந்தமான புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலிலேயே காலியாக உள்ள அர்ச்சகர்கள் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் கோரி…

ஜெயலலிதா ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சி

புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எதிர்பார்த்தப்படி தனிபெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஜெயலலிதா, நவீன் பட்நாயக் உள்ளிட்ட மாநில தலைவர்களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. இதற்காக அவர்களிடம் ஆதரவு கேட்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பா.ஜ., அழைப்பு : லோக்சபா தேர்தல்…

டெல்லியில் நான் இருந்திருந்தால், மோடியின் இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு…

மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, முர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது,  பா.ஜ.,வுக்கு எதிராகவும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. மோடிக்கு பணிந்து அக்கட்சி உள்ளது. காங்கிரஸ் இடத்தில் நான் டெல்லியில் இருந்திருந்தால், மோடியின்…

முல்லைப் பெரியாறு பிரச்சனையை இனிமேலும் அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க…

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்யாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

காங்கிரஸ் இடத்தில் நான் இருந்திருந்தால் மோடியை சிறைக்கு அனுப்பியிருப்பேன்

மேற்குவங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும், பாடகருமான இந்திரநீல் சென்னுடன், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி.  "மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இருந்திருந்தால் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் இடுப்பில் கயிற்றைக் கட்டி சிறைக்கு அனுப்பியிருப்பேன்' என்று மேற்கு வங்க…

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை தேவை; வெற்று…

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கால நேரத்தை விரயமாக்கும் வெற்று அறிக்கைகள் வேண்டாம் என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்திய உச்ச நீதிமன்றம்…

மே-18 கேளிக்கை நாள் அல்ல! அது துக்க நாள்: ஐபிஎல்…

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது உச்சகட்ட இனப்படுகொலை நடந்தேறிய மே18ம் நாளினை ஒர் கேளிக்கை நாளாக கொள்ளாமல் துக்க நாளாக கொண்டு, சென்னையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு தமிழகத்தில் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் உள்ள காவல்துறை ஆணையரிடம் புகார்…

இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் புழல் சிறையில்…

சென்னையில் பதுங்கி இருந்த இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கியூ பிரிவு போலீசார் விசாரணைக்கு எடுத்து இன்றுடன் 3 நாட்கள் முடிவடைந்தது. இதனையடுத்து ஜாகீர் உசேன் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் கடந்த…

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு : அலங்காநல்லூரில் கருப்புகொடி

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பதை தொடர்ந்து அலங்காநல்லூர் கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது. இந்த உத்தரவு அலங்காநல்லூர் உள்பட மதுரை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் உள்ள ஜல்லிக்கட்டு…

எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பணப் பட்டுவாடா நடந்துவிட்டது : பிரவீன்குமார்…

மதுரை: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பணம் பட்டுவாடா நடந்துவிட்டது. இதை எந்த கட்சி செய்தது என கூற முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும்…

தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, நெய்வேலி பழுப்பு…

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி, மே.7– தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நலவாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் நடைபெற்றன. தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட…

முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு…

புதுடெல்லி, மே. 7– முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக - கேரள அரசுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2006–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை…

மின்வெட்டுப் பிரச்னையால் நோயாளிகள் பலி: இதைவிட தமிழகத்தில் வேறு கொடுமை…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின் தடையாலும், ஜெனரேட்டர் இயங்காததாலும் செயற்கை சுவாக கருவிகள் வேலை செய்யவில்லை.  இதனால் விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வந்த பத்திரிகையாளர் பொன்முருகன் பரிதாபமாக பலியானார். மேலும், மாங்காட் டைச்சேர்ந்த ரவீந்திரன் என்பவரும் பலியானார். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்…