எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது : சீமான்

திண்டுக்கல்லில்  நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தை, அந்த கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி ஆகியோர் நடத்தி வைத்தனர். முன்னதாக சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,   ‘’தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்தும், பழ.நெடுமாறன்…

மோடியை கொல்ல மனித வெடிகுண்டு: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

பாட்னா காந்தி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கில்தான் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தோம் என்று கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பாட்னாவில் நடந்த மோடி கூட்டத்தின்போது மோடி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 7 குண்டுகள் வெடித்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

தனித்தெலுங்கானா உருவாக்கப்பட்டால் ஆந்திராவில் ரத்த ஆறு பாயும்: முன்னாள் மந்திரி…

ஐதராபாத், நவ. 14- ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தனித்தெலுங்கானாவுக்கு சீமாந்திரா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா பகுதி காங்கிரஸ் கட்சியினர் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி தலைமையில் டெல்லி சென்று…

டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது : சமாஜ்வாடி கட்சி தலைவரின்…

லக்னோ : டீ விற்பனையாளர், நாட்டின் பிரதமராக முடியாது என்ற சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரின் கருத்து, அக்கட்சியிலேயே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் என…

பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் திருச்சி சிறையிலடைப்பு! வைகோ, சீமான்…

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன் உட்பட்ட 83 பேரும்  திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன், அயனாவரம் முருகேசன், பொன்னிறைவன், பொன்.வைத்தியநாதன், உத்திராபதி, மாசிலாமணி, உதயகுமார், விடுதலை…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு! ஜெயலலிதாவின் செயலுக்கு உலகத் தமிழர்கள்…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது என்று கடுமையான ஆவேசத்துடன் மதிமுக செயலர் வைகோ தெரிவித்தார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு! எதிர்த்து போராடிய பழ. நெடுமாறன்…

தஞ்சாவூர், விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர், விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி…

பொலிஸ் முற்றுகையில் முள்ளிவாய்க்கால் முற்றம்!

கருணாநிதியால் தமிழினத்துக்கு எந்த ஒரு நன்மையும் நேராது. இனி, ஜெயலலிதாவே துணை என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த தமிழின உணர்வாளர்களின் நம்பிக்கைகள் தவிடுபொடி ஆகிவிட்டது. முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழகக் காவல்துறை ஏற்படுத்திய அடுக்கடுக்கான நெருக்கடிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். நீதிமன்றம் சென்று தடையை உடைத்தாலும்கூட, நிகழ்ச்சிகள்…

மோடி செல்வாக்கை எட்டிப்பார்க்கும் அமெரிக்கா

நரேந்திர மோடியின் செல்வாக்கை அறிந்துகொள்ள அமெரிக்கா தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை அடுத்து மோடி மீது அமெரிக்கா கடும் வெறுப்பு கொண்டிருந்தது. மதவாதி மோடி என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் மோடிக்கு எந்த வகையிலும் விசா அளிக்க கூடாது…

இந்தியா உலக தமிழர்களின் நட்பை இழக்க நேரிடும்: தா. பாண்டியன்…

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நட்பை இழக்க நேரிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் எச்சரித்துள்ளார். இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும். இலங்கை ராணுவ வெறியர்களால் இசைப்பிரியா பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. இந்த நிலையில்,…

இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீண்டும் பின்வாங்கல்? தலைவர்கள், டெசோ அமைப்பினர்…

இலங்கைப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு மீண்டும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டெசோ அமைப்பினர் மற்றும் திமுகவினரே கருணாநிதியின் நிலைப்பாட்டால் அதிருப்தியில் உள்ளனர். கொமன்வெல்த் மாநாட்டு பிரச்சினையை, இது விவாதத்துக்குரியது என்ற எளிய வார்த்தைகளால் கருணாநிதி முடித்து விடுவார் என்று திமுகவினர் கூட நம்பவில்லை. இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த்…

காங்கிரஸ் கட்சிக்கு மோடி ஒரு சவால்தான்!

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சவால்தான் என்பதை நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார். கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்று வரும் "சிந்தனை திருவிழா'வின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவர் மேலும் கூறியது: "நாங்கள் (காங்கிரஸ்) ஒரு…

இந்தியாவின் புவியியல் அமைப்பையே மாற்றியது காங்கிரஸ்தான்: மோடி குற்றம் சாட்டினார்!

இந்தியாவின் பிரிவினைக்கு அனுமதி அளித்து நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியதும், நாட்டுக்காகப் பாடுபட்ட முக்கிய தலைவர்களைப் புறக்கணித்து, நேரு குடும்பத்தினரின் புகழ் பாடி வரலாற்றை மாற்றியதும் காங்கிரஸ்தான் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் வரலாறு-புவியியலை பாஜக மாற்றிவிட்டதாக குற்றம்…

கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததற்கு வெளியுறவு அமைச்சர் மழுப்பலான பதில்

கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காததற்கு, இலங்கை தமிழர் பிரச்சினை மட்டும் காரணமல்ல என மழுப்பலாக, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இலங்கையில்  கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு இம்மாதம் 15ல் தொடங்கி, 17 வரை நடக்கிறது. இலங்கையில் 2009ல் நடந்த உள்நாட்டு…

சவுதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்…

சவுதியில் வேலை இழந்து தவிக்கும் தமிழர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு  அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்லார். இதுற்குறித்து அவர் வெளியிட்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சவுதி அரேபியாவில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட நிதாகத் சட்டத்தால் அங்கு…

இந்தியப் பெண்ணுக்கு ஐ.நா விருது

இந்தியாவை சேர்ந்த சமூக சேவகி மார்தா தோத்ரேக்கு ஐக்கிய நாடுகள் சபை, உலக தலைமை பண்பு விருது வழங்கி கௌரவித்தது. ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் சமூகசேவைகளில் ஈடுபட்டவர்களுக்கு ஐ.நா உலக தலைமை பண்பு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா…

பிரபாகரன் படத்துடன் பானர் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!- பழ.நெடுமாறன், காசி ஆனந்தன்…

உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்வின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்துடன் பானர் வைக்கப்பட்டிருந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தஞ்சை…

10 இலட்சத்திற்காக தந்தையை சுட்டுக்கொன்ற மகன்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் 63 பேர் பலியானார்கள். முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள…

‘தம்’ அடித்தால் அரசு வேலை கிடையாது: அரசு உத்தரவு

ராஜஸ்தான் மாநில அரசுப் பணிகளில் சேருவோர் புகை பிடிக்கக் கூடாது என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1ம் திகதி நடைபெற உள்ளது. இதனால் கடந்த 5ம் திகத முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதே நாளில் ராஜஸ்தான் மாநில…

பல்லாயிரம் மக்கள் புடை சூழ முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிகழ்வுகள் எழுச்சியுடன்…

தமிழக அரசின் மாணவர் கைது உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைக்கு மத்தியில் தமிழக மாணவர்கள் தங்கள் முள்ளிவாய்க்கால் பரப்புரை சுடரினை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் இருந்து மாணவர்களின் சுடர் பயணம் தொடங்கப்பட்ட போது அதனை தமிழக காவல்துறையினர் தடுத்து மாணவர்களை கைது செய்துள்ளதுடன்…

‘பாதரச விநாயகர்’: சித்த வைத்தியரின் 40 ஆண்டு முயற்சி வெற்றி

பாதரசத்தால் விநாயகர் சிலை செய்ய வேண்டும் என்ற ஆசைக்கு 40 ஆண்டுகாலத்தை அர்ப்பணித்து தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியில் வெற்றியும் பெற்று விட்டார் சித்த வைத்தியர் ஒருவர். பாதரசம் என்பது ஒரு திரவ நிலை உலோகம். நீரைவிட பல ஆயிரம் மடங்கு அடர்த்தியானது. குறைந்த வெப்பக் கடத்தி. ஐ.நா.சபையால் பட்டியலிடப்பட்ட…

தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள்

தமிழ்நாட்டில் இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் மூன்று பேர், தேயிலை ஆராய்ச்சிக்காக குன்னூரில் தங்கியிருந்தனர். இதனை தமிழ் அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து சிங்களவர்கள் மூவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பெங்களூரு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்: டில்லியில் தமிழக பா.ஜ.க, வேண்டுகோள்

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மீறி, கொமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால், அது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு சமமாக ஆகிவிடும் என்று, தமிழக, பா.ஜ.க, கூறியுள்ளது. இலங்கையில், இம்மாதம் நடைபெற போகும், கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில், இந்தியா…