13 பேருடன் 6 நாட்களாக மாயமான விமானம்- தகவல் அளிப்பவர்களுக்கு…

13 பேருடன் மாயமான விமானம் பற்றி தகவல் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என விமானப்படை அறிவித்துள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. அது கிளம்பிய ½ மணி…

உள்ளதும் போச்சே.. சென்னை புழல் ஏரி முற்றிலும் வறண்டது.. குடிநீர்…

சென்னை: சென்னையை அடுத்த புழல் ஏரி முற்றிலும் வறண்டது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 ஆண்டுகளாக பொய்த்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.…

ஆளில்லா விமானம் மூலம் அனுப்பப்படும் ரத்த மாதிரிகள்!

உத்தரகாண்டில் ரத்த மாதிரிகளை ஆளில்லா விமானம் மூலம் அனுப்பி மருத்துவர்கள் சோதனை நடத்தினர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தின் தொலைதூர பகுதியான நண்ட்கானில் இருந்து டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகளை ஆளில்லா விமானம் மூலம் அனுப்பி சோதனை நடத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட இடையூறுகள் இன்றி…

பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்!

காஷ்மீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி தீர்வுகாண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி, இம்ரான்கான் இடையே தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர்…

எட்டு வழிச் சாலை: ஒத்துழைப்பு கேட்கும் தமிழக முதல்வர்; கேள்வி…

எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தரும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேற்கு மாவட்டங்களான சேலம் , ஈரோடு ,திருப்பூர் ,நாமக்கல் மற்றும் கோவை தொழில் வளம் நிறைந்த பகுதி என்றும், அருகாமையிலுள்ள கேரள மாநிலத்திலிருந்து வரும்…

உலகிலேயே அதிக வெப்பமான நகரம் இந்தியாவில்தான் உள்ளது -அதிர்ச்சி தகவல்!

உலகிலேயே அதிக அளவிலான வெப்பமடைந்த நகரம் இந்தியாவில்தான் உள்ளது எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எங்கு என்பதை பார்ப்போம். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. காலை வேளையில் பணிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் வெயிலின் கொடூரமான தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வெப்பமயமாதலால்…

இன்னும் 3 வாரம்தான்.. மாயமான முகிலன் பற்றி முழு தகவலும்…

சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது, தொடர்பான விவரங்களை சீலிட்ட உரையில் வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீஸ் சமர்ப்பித்துள்ளது. முகிலன் வழக்கு தொடர்பாக முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி கூறியுள்ள நிலையில், சீலிட்ட உரையில், என்ன இருக்கிறது என்ற ஆர்வம் எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி…

தமிழகத்தில் 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா காண்பிக்கலாம்.. தமிழக…

சென்னை: தமிழகத்தில், 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா படங்களை திரையிட்டுகொள்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு 28ம் தேதி அரசாணை வெளியிட்டது. அது தற்போது அரசிதழிலும் இடம் பெற்றுள்ளது.…

24 மணி நேரம் கடைகள் இயங்க உத்தரவு: தொழிலாளர்களுக்கு வரமா…

தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசாணைக்கு முன்னர், கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், சிறிய…

தோல்விக்கு காரணம் சபரிமலை; ஒப்புக்கொண்டது இந்திய கம்யூ.,

திருவனந்தபுரம்: 'கேரளாவில் கம்யூ., கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்னைதான் காரணம்' என இந்திய கம்யூ., பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலில் கேரளாவில் 20 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே, ஆளுங்கட்சியான இடது முன்னணி வென்றது. தோல்வியை ஆராய இந்திய கம்யூ., சார்பில் குழு அமைக்கப்பட்டது. நேற்று நடந்த மாநில நிர்வாகக்குழுவில்…

பாக்., மக்களுக்கு தண்ணீர் தந்த இந்தியர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வறுமையிலும், வறட்சியிலும் வாடும் மக்கள் வசிக்கும் பகுதியில் 600க்கும் மேற்பட்ட அடி குழாய்களை அமைத்து, அப்பகுதி மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துள்ளார் இந்திய வம்சாவளி தொழிலதிபரான ஜோஜிந்தர் சிங் சலாரியா. இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரான சலாரியா, 1993 ம் ஆண்டு துபாயில் குடியேறி, போக்குவரத்து வாகன…

தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் முடங்கிய கட்டுமான துறை.. 50 லட்சம்…

சென்னை: தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமான தொழில் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாடு, ஜிஎஸ்டி வரி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில் ஏற்கனவே தடுமாற்றத்தில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளுக்கே தண்ணீர்…

நீட் தேர்வு தோல்வியால் தமிழக மாணவிகள் மரணம்.. மத்திய-மாநில அரசுகளின்…

சென்னை: நீட் தேர்வு தோல்வியால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை மாணவி வைஷியா மரணம் அடைந்தது மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூரைச்…

இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி பெறும்- உலக வங்கி…

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2019-20 நிதியாண்டில் (2019 ஏப்ரல் 1ம் தேதி முதல், 2020 மார்ச் 31 வரை) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி…

உலக சுற்றுச் சூழல் தினம்: உயிரினங்களைக் காப்பாற்ற இந்தியா போதிய…

காஷ்மீர் பகுதியில் உள்ள இமயமலையின் சிறிய மான் இனமான ஹங்குல், ஆந்திரப்பிரதேசத்தில் விஷத்தன்மை வாய்ந்த கூட்டி டாரன்டுலா என்ற சிலந்தி, தமிழகத்தில் வாச்செல்லியா போலெய் என்ற அவரை இனம் போன்றவை இந்தியாவைச் சேர்ந்தவை என்பதைத் தாண்டி அவற்றுக்குள் உள்ள பொதுவான அம்சம் என்ன? சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி பார்த்தால், இவற்றின்…

இந்தித் திணிப்பு எதிர்ப்பு: மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்?

புதிதாக உருவாக்கப்படும் தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் தயாரித்த கஸ்தூரி ரங்கன் குழு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாய மொழியாக கற்பிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. தமிழகத்தில் தொடங்கி பல மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இந்த வரைவு…

எல்லாவற்றிலும் சண்டைபோடும் திமுக- அதிமுக.. இந்த ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக…

சென்னை: எல்லாவற்றிலும் சண்டைபோட்டுக்கொள்ளும் திமுக அதிமுக.. இந்தி எதிர்ப்பில் மட்டும் ஒன்றுபடுவது ஏன்? தமிழை காப்பாற்றுவதற்காகவா அல்லது தேசிய கட்சிகள் அரசியல் செய்வது தமிழகத்தில் எளிதாகிவிடும் என்று பயப்படுவதான் காரணமா என்ற கேள்வி எழுகிறது. 1938 மற்றும் 1965இல் இந்தி எதிர்ப்பு என்பது, உணர்வு பூர்வமான பிரச்னையாக இருந்தது.…

ராஜஸ்தானில் கடும் வறட்சி- தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கும்…

ராஜஸ்தானில் உள்ள பரஸ்ரம்புரா கிராமத்தில் நீர் திருட்டை தடுக்க மக்கள் தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. இந்நிலையில் தண்ணீர் திருட்டை தடுக்க ராஜஸ்தான் மாநிலத்தின் ஹர்தா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரஸ்ரம்புரா கிராமத்து…

ஒரு கிட்னி கொடுத்தால் ரூ.3 கோடி – தனியார் ஆஸ்பத்திரி…

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி கிட்னி வாங்குவதாக கூறி சுமார் 500 பேரிடம் பல கோடி மோசடி செய்திருப்பதாக ஈரோடு போலீசார் தெரிவித்தனர். ஈரோடு சம்பத் நகரில் கல்யாணி கிட்னி கேர் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி சார்பில்…

இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் –…

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்கு மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் பெயர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார். சீக்கிய பிரிவினைவாதிகள் காலிஸ்தான் எனும் தனிநாடு கோரி ஆயுத…

இந்தியாவை சுட்டெரிக்கும் வெயில்: 50 டிகிரி செல்ஸியஸை தொட்ட வெப்பநிலை

இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் அளவு 45 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. தீவிர அனல் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள சுரு என்ற நகரம் இந்தியாவின் வெப்பமான நகரமாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு வெப்பநிலை 50.8 டிகிரி செல்சியஸ் வரை சென்றதாக இந்திய வானிலை…

கடும் எதிர்ப்புக்கு பின்னர் பணிந்தது மத்திய அரசு.. தமிழக பள்ளிகளில்…

டெல்லி: தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என திருத்தம் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள…

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை: உயர் நீதிமன்றம் விதித்த…

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றம். சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நிறைய தவறுகள்…