தமிழக பள்ளிகளில் தமிழ் அழிக்கப்பட்டு வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ் மொழியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் 29-ந்தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதையொட்டி தருண் விஜய் எம்.பி. திருவள்ளுவர் - கங்கை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தை அவர்…

முல்லைப் பெரியாறு சிக்கலை அரசியலாக்கக் கூடாது! கேரள கட்சிகளுக்கு ராமதாஸ்…

முல்லைப் பெரியாறு சிக்கலை கேரள கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்றும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு  கேரள அரசும், அம்மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்…

வரலாற்றிலே முதன் முறையாக போர் விமானங்கனை இயக்கும் இந்திய சாதனை…

இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக, போர் விமானங்களை இயக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பெண் விமானிகள் இன்று முதல் தங்களது பணியை தொடங்கியுள்ளனர். கடந்த 1991 ஆம்ஆண்டு முதன் முதலாக இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.இதுவரை ஹெலிகாப்டர்மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே பெண் விமானிகள் இயக்கி…

சொக்லேட் ராஜதந்திரம்: ஊடுருவலுக்கு பிறகு இந்திய ராணுவத்தை சமாதானப்படுத்திய சீன…

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக எல்லை பகுதியில் அடிக்கடி சீன ராணுவத்தினர் ஊடுருவி…

யார் போனாலும் சரி நான் தனியாக போராடி கொண்டே தான்…

அனைவரும் என் பின்னால் வருவார்கள் தேர்தலில் நிற்பார்கள் என்று நினைத்து இந்த பணியை நான் செய்யவில்லை, நீங்கள் எல்லோரும் என்னை விட்டு போய்விட்டால் கூட நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு…

கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை மீட்கப்படும்: ஆளுநர் உரையின்…

தமிழக சட்டசபைகூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கவர்னர் ரோசைய்யா உரையாற்றினார். 38 பக்கங்கள் கொண்டஅவரது உரையில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு..! கச்சத்தீவை மீட்டு பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும். மீனவர்களின் நலனுக்காக…

பழமையான காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் முருகன் சிலை மாயம் :…

காஞ்சிபுரம்: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உற்சவர் சிலையுடன் இணைந்த பாலமுருகன் திருட்டு போனதாக தற்போது வெளியான தகவல் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில். பழமை வாய்ந்த இந்த கோயிலில் உற்சவர் சிலையுடன் இணைந்திருந்த பாலமுருகன்…

கங்கை நதிக்கரையில் நிறுவ நாமக்கல்லில் இருந்து கிளம்பிய 12 அடி…

நாமக்கல்: ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் வைப்பதற்காக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மீது பற்று வைத்துள்ள பாஜக எம்.பி. தருண் விஜய் மேற்கொண்ட முயற்சியின் பலனாய் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையோரம் 12 அடி உயர திருவள்ளுவர்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: மோடியிடம் 29 அம்ச…

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை மனு அளித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர்…

குழந்தை தொழிலாளர்கள் உ.பி., மாநிலத்தில் அதிகம்

புதுடில்லி : நாட்டிலேயே, உ.பி., மாநிலத்தில் தான், குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதாக, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான உலக தினத்தையொட்டி, 'சைல்ட் ரைட்ஸ் அண்ட் யு' எனப்படும், க்ரை அமைப்பு, வெளியிட்ட ஆய்வு முடிவுகள் விவரம்: இந்தியாவில், உ.பி., மாநிலத்தில்…

“தங்கள் நாடு நினைத்தால் 5 நிமிடத்தில் இந்தியா மீது அணு…

லண்டன்: இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அணு ஆயதங்கள் அதிகமாக உள்ளன என்று ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. "தங்கள் நாடு நினைத்தால் 5 நிமிடத்தில் இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்த முடியும்' என்று பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கான் அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது பேச்சை…

இந்தியாவில் 5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம்- ஹூ அதிர்ச்சி…

டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பேர் மகப்பேறுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கால் உயிரிழக்கிறார்கள் என்றும் இதை தடுக்க இரத்த தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என்றும் உலக…

தீனதயாளன் வீட்டில் தோண்ட தோண்ட சிலைகள்: முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்?

சென்னையில் தீனதயாளன் வீட்டில் இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளன் கடந்த வாரம் பொலிசில் சரணடைந்தார். பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல சிலைகளை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.…

20 தமிழர்கள் படுகொலை- விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர…

ஹைதராபாத்: 20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆந்திரா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி காட்டுப் பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். திருவண்ணாமலையை சேர்ந்த 12 பேர், தர்மபுரியை சேர்ந்த 7 பேர்…

எழும்பூரில் இருந்து கோட்டை நோக்கி பேரணி : அற்புதம் அம்மாளுடன்…

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டு காலம் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி சென்னை எழும்பூரில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணி தொடங்கியுள்ளது. பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் திரைப்படத்துறையினர், நடிகர்கள், தமிழ்…

சட்டவிரோத சிறுநீரக விற்பனை கும்பலின் தலைவன் கொல்கத்தாவில் கைது

இந்தியாவில் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலின் தலைவனாகக் கருதப்படும் டி ராஜ்குமார் ராவ் என்பவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். வறியவர்களிடம் பணத்தாசை காட்டி சிறுநீரகம் பெறப்பட்டு, அவை பெரும் விலைக்கு விற்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, தில்லி அப்பல்லோ மருத்துவமனயின் ஐந்து ஊழியர்கள்…

இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் சிறைபிடித்து…

இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் சிறைபிடித்து சென்றுள்ளனர். நேற்று இராமேஸ்வரத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வர்கள் கடலுக்கு மீன்பிடிகக சென்றிருந்தனர். அவர்கள், நேற்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரத்தை சேர்ந்த சிங்கம் லியோன்…

சாலை விபத்தில் ஒருநாளைக்கு 400 பேர் பலி: மத்திய அமைச்சர்…

இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 400 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கவலை தெரிவித்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு…

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக…

மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவுமே காரணம்என முதன் முறையாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது உலகநாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடந்த 2008 ஆம் ஆண்டு, கடல் மார்க்கமாக நுழைந்த லஷ்கர் இதொய்பா தீவிரவாதிகள் 10…

டெல்லிவாசிகளின் ஆயுட்காலத்தை 6 ஆண்டுகள் குறைக்கும் காற்று மாசு: ஆய்வில்…

டெல்லியில் நிலவும் காற்று மாசு அந்த நகரத்தில் வசிப்பவர்காளின் ஆயுட்காலத்தை 6 ஆண்டுகள் வரை குறைப்பதாக காற்று ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலகின் அதிக மாசு கொண்ட மிகப்பெரிய நகரமாக டெல்லி உள்ளது. நுண்ணிய துகள்கள் அடங்கிய அதிக நச்சுத்தன்மையை கொண்ட காற்றை சுவாசிக்கும் மக்கள் டெல்லி…

ஆண்களும் இனி பாலியல் பலாத்கார புகார் அளிக்கலாம்: யு.ஜி.சி. அறிவிப்பு!

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண்களும் இனி புகார் அளிக்கலாம் என பல்கலைக் கழக மானியகுழு (யுஜிசி) வழிவகை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒருபெண்ணின் மீது பாலியல் ரீதியாக நிகழ்த்தப்படும் தாக்குதலைக் குறிக்க பாலியல் துன்புறுத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம். பொதுவாக இந்த வார்த்தை பெண்களோடு மட்டுமே தொடர்பு…

மீனவர்களை கடத்தும் இலங்கை கடற்படையினர்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வதாக ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 5ம் திகதியன்று இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே ஜெயலலிதா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.…

ஏழைகளின் பசியாற்ற கேரள பெண்ணின் புதுமையான யோசனை!

கேரளாவில் பெண்மணி ஒருவர் ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக புதுமையான முயற்சியை கையாண்டுள்ளார். கொச்சியில் ஓட்டல் நடத்தி வரும் மினு பவுலின் என்ற பெண், தனது உணவக வாசலில் 420 லிட்டர் கொள்ளவு கொண்ட குளிர்சாதனப் பெட்டியை வைத்துள்ளார். அந்த குளிர்சாதனப் பெட்டியில், சாப்பிட வழியில்லாமல் இருக்கும் 50 மக்களுக்கு தினமும்…