பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சேதுசமுத்திர திட்டத்துக்கு பதிலாக வேறு பாதை அமைக்க முயற்சி
சேது சமுத்திர திட்டம் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக இராமர் பாலத்தை சேதப்படுத்தாத புதிய கடற்பாதையொன்றை உருவாக்குவதற்கு இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தாத புதிய கடற்பாதையொன்றுக்கு இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் அனுமதியளிக்க உள்ளதென்றும் இந்திய செய்தித்தாளொன்று தெரிவித்துள்ளது. அந்தச்…
ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டாம், மோடிக்கு கோரிக்கை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு தொடர்ந்தும் போதுமான ஆதரவு வழங்க வேண்டும் என்று பல முக்கிய பொருளாதார வல்லுனர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில கட்டுப்பாட்டுகளை அறிமுகப்படுத்தி,…
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது: பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. சபை திட்டவட்டமாக நிராகரித்தது. நீண்ட நாள்களாக நிலவும் இப்பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சபை தெரிவித்து விட்டது. நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்…
இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகள் ஆலோசனை
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொலைபேசி வழியாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது, பாகிஸ்தான் படையினரின் கடுமையான தாக்குதல்களை, கடந்த இரண்டு வாரங்களாக எதிர்த்துப் போராடியதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து, இஸ்லாமாபாதில்…
காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தின் தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் ஆடிப்போனது. பாகிஸ்தான் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டதைத்…
தமிழின விரோதி சுப்பிரமணியன் சுவாமியின் வீடு முற்றுகைப் போராட்டத்தில் 300…
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினரால் இன்று மாலை பாராதீய ஜயதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் தமிழின விரோதியும், ராஜபக்சவின் ஆதரவாளருமான சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை நோக்கி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டபைபினரைச்…
ஜெயலலிதாவுக்காக 100 பேர் உயிர் தியாகம் செய்தார்களா? எழுப்பப்படும் சந்தேகங்கள்!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேதனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டது, 150ஐ எட்டிவிட்டது என கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்த பெருமிதம் பொங்க சொல்லி வருகின்றனர் அ.தி.மு.க.வினர். ஆனால் அவர்கள் சொல்லும் 100, 150 என்பது எல்லாம் பலியான உயிர்களின் எண்ணிக்கை என்பதுதான் சோகம். சொத்துக்குவிப்பு…
மகளிர் ஆணையத்துக்கு கைது அதிகாரத்தை வழங்க முடியாது: மத்திய சட்ட…
மகளிருக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் அதிகாரத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்க மத்திய சட்ட அமைச்சகம் மறுத்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் விவகாரத்தில், மனித உரிமைகள் அமைப்புக்கு நிகரான அதிகாரம்…
மோடியைத் துதிபாடுவது ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது: திக்விஜய் சிங்
""பிரதமர் நரேந்திர மோடியைத் துதிபாடுவது, மறைந்த ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது'' என்று பாஜகவை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எச்சரித்தார். இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், யாவத்மாலில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் 3 சித்தாத்தங்கள் உள்ளன. ஒன்று, காந்தி-நேரு-அம்பேத்கர் சித்தாந்தம். 2ஆவது, இடதுசாரி…
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகள்: மத்திய அரசு…
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகளை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த அவரிடம், "புதிய குடும்ப அட்டைகளை, அரசின் மற்ற சலுகைகளையும் பெறுவதற்கான அடையாள அட்டையாகப் பயன்படுத்தச் செய்வதை மத்திய…
சினிமாத்துறையே தமிழினத்தின் முதல் எதிரி – ரஜினிக்கு சுப.உதயகுமாரன் பகிரங்க…
தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதட்டத்தை பயன்படுத்தி ரஜினி துணையுடன் ஆட்சியைப் பிடிக்க அவசரம் காட்டுகிறது பாஜக. ரஜினியை கட்சிக்குள் இழுக்கும் அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி தலைவர்கள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கூடங்குள அணுஉலை எதிர்ப்புப் பேராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் ரஜினிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தின் விவரம் வருமாறு. “வணக்கம்.…
பெண் குழந்தைகளை பாதுகாக்க ஆலோசனை: இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள பிரதமர்…
பெண் குழந்தைகளைப் பாதுகாக்க ஆலோசனைகளைத் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் அக்டோபர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்தியாவிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. இந்த நிகழ்வையொட்டி பிரதமர் நரேந்திர…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் “முன்மாதிரி கிராமம்’ திட்டம்: பிரதமர் மோடி…
"முன்மாதிரி கிராமம்' திட்ட வழிகாட்டுதல்களை, தில்லியில் சனிக்கிழமை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. உடன், (இடமிருந்து) பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா. மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் "முன்மாதிரி கிராமம்' திட்டத்தை பிரதமர்…
பாகிஸ்தான் போர்நிறுத்த மீறலை அரசியலாக்குவதா?: ராஜ்நாத் சிங்
பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கியது, நமது வீரர்களின் மன உறுதியைக் குறைத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். ஹரியாணா மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தின் தாத்ரி, பிவானி பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து…
மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்துகள் விரைவில் முடக்கம்
தயாநிதி மாறன் - கலாநிதி மாறன் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், அவரது நிறுவனங்களில் நிர்வாகிகளாக இருக்கும் இருவரின் குடும்பத்தினர் ஆகியோரின் ரூ.742 கோடி அளவுக்கான சொத்துகளை முடக்கி வைக்க மத்திய…
இலங்கையிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக் கொள்ள விருப்பம்: இந்தியப் பாதுகாப்பு…
இலங்கையிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மாதுர் தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆர்.கே.மாதுர் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் பல்வேறு இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான பயிற்சிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர். இலங்கையிடமிருந்து ஏராளமான பல…
இந்திய- பாக். துப்பாக்கிச் சண்டை ஓய்ந்துள்ளது
கடந்த ஒன்பது நாட்களாக இந்தியாவின் காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தானிய படையினருக்கும் இடையே நடைபெற்றுவந்த கடுமையான துப்பாக்கிச் சண்டை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கதுவா மாவட்டத்தில் மட்டும் 20 நிமிடங்கள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது' இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள…
தாக்குதல் நீடித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: அருண் ஜேட்லி
"எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை அந்நாட்டால் தாங்கிக் கொள்ள முடியாது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர், வியாழக்கிழமை கூறியதாவது: இந்தியாவின் கடுமையான எச்சரிக்கை பாகிஸ்தானைச் சென்றடைந்துவிட்டது. எல்லைப் பகுதியில்…
ரூ.6 லட்சம் கோடி அன்னிய முதலீடு காத்திருக்கிறது: மோடி
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வியாழக்கிழமை சர்வதேசமுதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான். உடன், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், தொழிலதிபர்கள். ""இந்தியாவில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதற்கு அன்னிய நிறுவனங்கள்…
ரஜினியை தமிழக முதல்வராக்குவதற்கு மோடி தீவிரம்!
நடிகர் ரஜினியை பாரதீன ஜனதா கட்சிக்கு கொண்;டு வருவதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஹைதரபாத்தில் தங்கியிருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் இரகசிய கருத்து கேட்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன…
மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்! திமுக வலியுறுத்தல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் (இடமிருந்து) கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து இருப்பதாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய…
பாகிஸ்தான் அத்துமீறலுக்கு விரைவில் தீர்வு: மோடி உறுதி
பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு விரைவில் சுமுகத் தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உறுதி தெரிவித்தார். அதேசமயம், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தினால், மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பாகிஸ்தான் தனது அத்துமீறலை நிறுத்தும்வரை பதிலடி நடவடிக்கை தொடரும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.…
மக்கள் முதல்வர்’ ஜெயலலிதாவா?- விஜயகாந்த் கண்டனம்!
ஊழல் வழக்கில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை 'மக்கள் முதல்வர்' என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், "அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகள், திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அரசு விளம்பரங்கள், அம்மா உணவகங்கள், குடிதண்ணீர் போத்தல்கள் போன்ற பலவற்றிலும் இன்னும் குற்றவாளி…
