“ஆப்பிரிக்கர்களை நாய் போல நடத்துகின்றனர் இந்தியர்கள்”

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையிலும் சுற்றியுள்ள இடங்களிலும் தங்கியுள்ள ஆப்பிரிக்கர்கள், Read More

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அனாதையாகக் கிடந்த சூட்கேஸால் வெடிகுண்டுப் பீதி ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்ட உள்நாட்டு விமான முனையம் சமீபத்தில் தான் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு விமான புறப்பாடு பகுதியில் பயணிகள் வாகனங்களில் வந்து இறங்கும் இடத்தில் இன்று காலை 6…

தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே!

இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார் இந்திய எம்.பி.,க்கள்…

தமிழக அமைச்சரவை தீர்மானம் மூலம் 3 தமிழர்களையும் காப்பாற்ற முடியும்…

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில், தூக்கு தண்டனை பெற்ற தேவிந்தர் பால் சிங் புல்லாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை…

ராஜிவ் வழக்கு- 3 தமிழரை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்: பழ.…

சென்னை: ராஜிவ் வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தாம்…

மன்மோகன் சிங் ஆட்சி மகா மோசம்… மக்கள் மனசு கருத்துக்…

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக முடிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசின் ஆட்சி பற்றி மக்களிடம் நல்ல மதிப்பு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் மனசு என்ற பெயரில் விகடன் நடத்திய சர்வேயில்…

அரசியல் எதிரிகளின் கிண்டலை அலட்சியப்படுத்திய கர்ம வீரர்!

படிக்காத மேதை என்று சும்மாவா சொன்னார்கள். ஆட்சி நிர்வாகத்திலும் அதை நிரூபித்து வந்திருக்கிறார் காமராஜர். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம். கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது.…

இலங்கையில் மாணிக்க விநாயகம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து

தமிழுணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தான் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பின்னணி பாடகர் மாணிக்க விநாயம் தெரிவித்துள்ளார். இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25…

சஞ்சய் காந்தியைக் கொல்ல 3 முறை முயற்சி நடந்தது –…

டெல்லி: சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது. அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும்…

தமிழ்நாடு தனி நாடாவதை ஆதரிப்பீர்களா…? அமெரிக்காவிடம் கேட்ட திமுக!

சென்னை: இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று தமிழ்நாடு முடிவு செய்தால் அதை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அப்போதைய அமெரிக்கத் தூதரிடம், அப்போது திமுக அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த கே.ராஜாராம் கேட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கடிதத் தகவல் பரிமாற்றத்தில்…

பாலியல் குற்றம் புரிந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை நொசப்பாக்கத்தில் வசிப்பவர்கள் சாரதா - சந்திரன் தம்பதியர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சாரதா அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் சாஜி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.…

‘மிசா’ காலத்தில் இந்திரா வீட்டில் புகுந்த அமெரிக்க உளவாளி: விக்கிலீக்ஸ்

டெல்லி : இந்தியாவில் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்ட பின்னர் இந்திரா காந்தியின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாமல் ஒருபக்கம் அமெரிக்கா கடுமையாக திணறியபோதும், இந்திராவின் வீட்டுக்குள்ளேயே கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்திற்கு தனது உளவாளியை வைத்திருந்தது என்ற அதிர்ச்சித் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 1975ம் ஆண்டு முதல்…

வடகொரியா நான்காவது அணுசோதனை : தென்கொரியா குற்றச்சாட்டு

சீ‌யோல்: வடகொரியா தனது நான்காவது அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. வடகொரியா, தற்போது ஐ.நா.மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது மூன்றாவதுஅணு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் கண்டனம் தெரிவித்தன. தற்போது தென்கொரிய எல்லையில் ராக்கெட்…

இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு தமிழகத்தில் பிரசாரம்

தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். ஆனால், மத்திய அரசோ இதை கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான…

இடிந்தகரையில் அடுத்த கட்டப் போராட்டம் பற்றி ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் கூடங்குளம் அணுஉலை பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்வது குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 600 நாள்களுக்கு  மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை…

கூடங்குளத்தில் இம்மாதம் மின் உற்பத்தி துவங்கும்: நாராயணசாமி

கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த மாதமே செயல்படத் துவங்கும் என மத்திய அமைச்சர் நாராயணம்சாமி தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பரிசோதனை வெள்ளோட்டங்கள் நடந்துவருகின்றன என்றும், ஏப்ரலிலேயே அங்கு மின் உற்பத்தி ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்ய விஞ்ஞானிகள் உட்பட நிபுணர்கள் அணுமின் நிலையத்தின் பல்வேறு கட்டமைப்புகளையும்…

காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி கலைக்க சொன்னார் : ஜெயலலிதா

சென்னை: காங்கிரஸ் கட்சியையே மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்சியை நேற்று சட்டமன்றத்தில் வெளுத்து வாங்கினார். சட்டசபையில் அவர் நேற்று பேசுகையில், நேற்றுமுன்தினம் உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான…

இராமேஸ்வரம் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் விரட்டியடிப்பு

இராமேஸ்வரம் மீனவர்களின் மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்திவிட்டு மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 16 நாட்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டத்திற்கு பின்னர் திங்கட்கிழமையன்றுதான் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு பகுதியில்…

அனாதை குழந்தைகளின் கல்வி நிதிக்காக, செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்

அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர் ஒருவர், ஊர் ஊராக சென்று, பொதுமக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டுநன்கொடை சேகரிக்கிறார். சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் செல்வக்குமார், 32. இவருக்கு, மல்லிகா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், 3, என்ற…

தமிழகத் தீர்மானம் ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து அல்ல :…

இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தின் தீர்மானத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைப்பாடாக கருதமுடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம்…

தமிழகத்தில் புலிகள் இயக்கத்தை தொடங்குவோம்: மாணவ போராட்டக் குழு எச்சரிக்கை

தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு எச்சரித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள். இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்…

இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடத் தடை

சென்னை: "இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக…

தி.மு.கவிற்குள் உட்பூசல்; அடுத்த தலைவர் யார்?

இந்தியாவின் பிரபல அரசியல் கட்சியான மு.கருணாநிதியின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் தற்போது உட்பூசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு பொருத்தமானவரை தெரிவுசெய்வது  தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக 'த ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது. தி.மு.கவின் தலைமைத்துவம் தொடர்பில் மு.கருணாநிதியின் புதல்வர்களான…