பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
திருமண பந்தத்தில் நுழைகிறார் இரோம்.. ஜூலையில் கல்யாணம்.. தமிழகத்தில் செட்டிலாகிறார்
இம்பால்: மணிப்பூரின் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா திருமண பந்தத்தில் நுழையவுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த அவரது நீண்ட கால காதலரை வரும் ஜூலை மாதம் திருமணம் செய்யவுள்ளார். தமிழகத்தில் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்குப் பின்னர் தமிழகத்திலேயே அவர் செட்டிலாகவுள்ளார். இரோம் ஷர்மிளா, இங்கிலாந்தைச் சேர்ந்த டெஸ்மான்ட் கோடின்ஹாவை…
சிறையில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்: உண்மையை வெளியிட்ட பெண் காவலருக்கு…
பழங்குடி பெண்கள் சிறையில் எந்தளவுக்கு சித்தரவதை செய்யபடுகிறார்கள் என்பதை சமூகவலைதளத்தில் எழுதிய துணை சிறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறையில் துணை சிறை அதிகாரியாக பணி புரிபவர் வர்ஷா டோங்ரே. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிகம் நடமாடும் அம்மாநிலத்தில், சந்தேகத்தின் பேரில் பழங்குடி…
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்… தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க…
சென்னை: தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் இழுத்து மூடப்பட்டன. இந்த கடைகளை குடியிருப்புகளில் திறக்க அரசு முடிவு செய்தது. கடும் எதிர்ப்பு ஆனால்…
அதிமுகவைத் தொடர்ந்து திமுகவுக்கு குறிவைக்கும் டெல்லி: சமாளிப்பாரா மு.க.ஸ்டாலின்?
அதிமுகவைத் தொடர்ந்து திமுகவுக்கும் டெல்லி குறிவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூலை மாதம் 2ஜி வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து திமுகவினர் மீது ரெய்டுகள் ஏவிவிடப்படலாம் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு போடும் ஆட்டம் தமிழகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிறது. எதையும் சாதித்துவிடலாம்…
தமிழக மீனவர்கள் தொடர்பில் ஆராய்கிறார் சுஸ்மா
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை ஆராயும் முகமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நாளை புதுடில்லியில் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை மற்றும் அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்படுகின்றமை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது. இதேவேளை இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களின்…
மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை கைது செய்வதா? ராமதாஸ் கண்டனம்
சென்னை: சிவகாசியில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக மாநிலத் துணைத்தலைவர் திலகபாமா உள்ளிட்ட 14 பெண்களையும், 7 ஆண்களையும் காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகாசியில் நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடையை…
தமிழக எல்லைக்குள் சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை…
இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீனக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் இன்று காலை விரட்டியடிக்கப்பட்டது. தற்போது இதற்கான காரணத்தை இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத சீனக்கப்பல் ஒன்று மர்மமான முறையில் இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்றது. தமிழகம் வழியாக நுழைய…
விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட புத்திக்கூர்மையுள்ள இந்திய வம்சாவளி சிறுமிக்கு பிரித்தானியாவில்…
விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி சிறுமியை பிரித்தானியா மென்சா சங்க தங்கள் சங்கத்தில் சேரும் படி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் டாக்டர் சுராஜ்குமார் பவார். இவரது மகளான ராஜ்கவுரி(12)அல்டிரின்சம் பகுதியில் உள்ள இலக்கண பள்ளியில் படித்து வருகிறார். இவர் பிரித்தானியா மென்சா நடத்திய…
முதியோர் – விதவைகளுக்கு அடுத்த மாதம் முதல் வீடு தேடி வந்து…
புதுச்சேரி: முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- புதுவையில் முதியோர், விதவைகள், மாற்று திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையை நேரில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாரதி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேரில் வீடு, வீடாக வந்து உதவி தொகையை வழங்குவார்கள்.…
தண்ணீர் வேண்டுமா?… அப்ப வெப்சைட்ல பதிவு செய்யுங்க… இது சென்னை…
சென்னை : லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இந்த முறை வரும் 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்டது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம்…
ஆதார்: உங்கள் வீட்டுக்குள் ஊடுருவிய உளவாளியா, காவல்காரனா?
இந்தியாவில், ஆதார் என்பது அடையாள அட்டை என்பதைத் தாண்டி, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் என்ன நடக்கிறது, ஒவ்வொரு தனி மனிதனும் எங்கு, எப்படி, எதனால் செல்கிறார்கள் என்பதுவரை கண்டுபிடிக்கும் ஓர் உளவாளியைப் போல பயன்படுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக, பல்வேறு தரப்பிலும் கவலைகளும், கண்டனங்களும்…
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம்…
புதுடெல்லி, முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசு மனு முல்லைப்பெரியாறு அணை பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி…
காஷ்மீரில், பயங்கரவாதிகளை பிடிக்க 3 ஆயிரம் ராணுவ வீரர்கள், போலீசார்…
ஸ்ரீநகர், காஷ்மீரில், பயங்கரவாதிகளை பிடிக்க 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். சமூக வலைத்தளங்கள் காஷ்மீரில், போலீசாரை தாக்கி துப்பாக்கிகளை பறிப்பது, வங்கிகளை கொள்ளையடிப்பது என பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள…
30 வருடங்களாக…! இயற்கையை நேசிக்கும் இந்த மாமனிதரை பற்றி தெரியுமா?
தமிழ்நாட்டில் நபர் ஒருவர் இதுவரை 3 லட்சம் செடிகளை விதைத்துள்ளதோடு, மற்றவர்களுக்கும் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர் யோகநாதன் (47), அரசு பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். யோகநாதன் எட்டாம் வகுப்பு படித்த போது செடிகள் நட்டு…
விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் தமிழக அரசுக்கு உச்ச…
விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மே 04, 05:45 AM விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு…
இந்தியாவில் 770 பில்லியன் டொலர்(RM 3.332 trillion) கருப்பு பணம்:…
இந்தியாவுக்குள் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 770 பில்லியன் டொலர் கருப்பு பணம் ஊடுருவியுள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலக பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று கருப்பு மற்றும் சட்டவிரோத பண நடமாட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2005 ஆம்…
இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்: நான்கு மீனவர்கள் படுகாயம்
இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்கள் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் அருகே வேதாரண்யத்திலுள்ள ஆறுகாட்டுத் துறையை சேரந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையி்ல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது, கட்டையால் தாக்கியுள்ளனர். இத்…
ராமானுஜரை போற்றும் மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா? கி.வீரமணி
சென்னை: தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்த ராமானுஜரைப் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய அளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் கொண்டு வருவாரா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமானுஜர் அமுல்படுத்திய சீர்திருத்தங்கள், இன்னும் பல…
நாளை இந்த நிலை நமக்கும் வரும்! அனைவரும் கட்டாயம் பார்க்க…
நீரின்றி அமையாது உலகு! இது பழமொழி. ஆனால் தற்போது உலகளவில் நிலவும் தண்ணீர் பற்றாகுறையால் நீருக்கு தவிக்குது உலகு என தான் சொல்ல தோன்றுகிறது. இப்படி தண்ணீரின்றி தவிக்கும் ஒரு ஊர் தான் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டம் ஆகும். அங்கு தண்ணீரை மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர்கள்…
இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி தமிழ்!
இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து கருத்துக்கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ்…
காவிரியின் குறுக்கே ராட்சத கிணறுகள் அமைத்த கர்நாடக அரசு -முத்தரசன்…
சென்னை: தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கிணறுகள் அமைத்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வன்மையாக கண்டித்துள்ளார். சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், பன்னூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஆறு ராட்சத…
ரூ.1 கோடி அபராதத்தை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு கொடுங்க.. தமிழக அரசுக்கு…
சென்னை: மருத்துவ கல்லூரிகளின் மேல் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 கோடி அபராதத்தை கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்காததை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் டாக்டர் காமராஜ்…
இந்திய எல்லைக்குள் ஊடுருவி ராணுவ வீரர்கள் தலையை துண்டித்த பாகிஸ்தான்
இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ சிறப்பு படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரின் தலையை துண்டித்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பயங்கரத்தை அரங்கேற்ற ஏதுவாக, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அமைந்துள்ள 2 ராணுவ முகாம்கள் மீது…
