’13வது பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும் பிஎன் -னிடம் வழக்கமான…

கடந்த பொதுத் தேர்தல்களில் பிஎன் நல்ல வெற்றியை அடைவதற்கு பங்காற்றியுள்ள 'முன்னணி நிலை' இப்போது அந்தக் கூட்டணியிடம் இல்லை. 2008 தேர்தலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பிஎன் பெறாததால் அது தேர்தல் தொகுதி எல்லைகளை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போனதே அதற்குக்…

தகவல் துறை: பிரதமர் பதவி விலகினார் என்ற செய்தி பொய்யானது

தகவல் துறை, அதன் மின் இதழில் நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பதவியிலிருந்து விலகினார் என்று செய்தியை வெளியிடவில்லை என்று அதன் தலைமை இயக்குனர் இப்ராகிம் அப்துல் ரஹ்மான் மறுக்கிறார். அதன் இணையத்தளத்தில் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார் அவர். பிரதமர் பதவி விலகினார் என்ற அறிக்கை அதன் மின்…

‘டோங் ஜோங் ஏமாற்றமடையவில்லை, பிரதமரை அது விரைவில் சந்திக்கும்’

இன்று டோங் ஜோங் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சீனக் கல்விக்கு நல்ல செய்தி எதனையும் தெரிவிக்கவில்லை என்றாலும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் அதன் கோரிக்கைகளை பற்றி விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாக நஜிப் அந்த அமைப்பிடம் சொல்லியிருக்கிறார். அந்தத்…

டோங் ஜோங் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் பிரதமருடைய ‘அன்பளிப்புக்கள்’ ஏதும்…

டோங் ஜோங் என அழைக்கப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் நாளை நடத்தும் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்து கொள்வது முதன் முறையாக இருந்த போதிலும் அவர் அந்த சீனக் கல்வி போராட்டத்துக்கு எந்த அன்பளிப்பையும் கொண்டு செல்ல மாட்டார்…

குவான் எங்: பிரதமர் உயிருக்கு ஆபத்தா? எங்கே ஆதாரம்?

பினாங்கில் பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததாகக் கூறுவது அம்மாநிலத்தின் தோற்றத்தைக் கெடுப்பதால் அது பற்றி பிஎன் விளக்க வேண்டும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டிருக்கிறார். “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டதாக கூறியதை மாநில பிஎன் தலைவர் டெங் சாங்…

வாக்குகளை வாங்குவதற்கு எம்ஏசிசி ‘அங்கீகாரம்’ அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது

ஊழல் மீதான 1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்துக்கு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியுள்ள விளக்கம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதனை அவசியம் மறுக்க வேண்டும். பிப்ரவரி 13ம் தேதி சின் சியூ நாளேட்டில் வெளியான முதல் பக்கத் தலைப்புச் செய்தி இது: "தேர்தல்…

நஜிப்: ஊடுருவலுக்கு இரத்தம் சிந்தாமல் தீர்வு காணப்படும்

அரசாங்கம், லாஹாட் டத்துவில் பிலிப்பீனோ கும்பல் ஒன்று ஊடுருவல் செய்துள்ள விவகாரத்துக்கு இரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் தீர்வுகாண முயலும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். சாபாவின் கிழக்குக் கரையில் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக வருணித்த பிரதமர், பேச்சுகள் வழி அவ்விவகாரத்துக்குத் தீர்வுகண்டு சுமார் 100…

‘பொர்ன்திப்பை நிறுத்துவதற்கு நஜிப் தாய்லாந்து பிரதமருக்கு நெருக்குதல் கொடுத்தார்

போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப்பரிசோதனையை தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த் நடத்துவதை தடுப்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்டுள்ளதாக பிகேஆர் கூறிக்கொண்டுள்ளது. "நஜிப், சுகுமார் இரண்டாவது சவப்பரிசோதனை தொடர்பில் தாய்லாந்துப் பிரதமர் யிங்லுக் ஷினாவாத்ரா-உடன் தொடர்பு கொண்டார்,"…

Psy நிர்வாகம்: மலேசிய அரசாங்கம் அந்த நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்கவில்லை

'காங்ணாம் ஸ்டைல்' பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற தென் கொரிய பாப் இசைக் கலைஞரான Psy அண்மையில் பினாங்கில் நடத்திய நிகழ்ச்சிக்கு மலேசிய அரசாங்கம் ஏற்பாடும் செய்யவில்லை, பணமும் கொடுக்கவில்லை என Psy-யை நிர்வாகம் செய்யும் Scooter Braun Projects நிறுவனம் கூறியுள்ளது. மலேசிய அரசாங்கம் பணம்…

‘நஜிப் மோசமான ஆலோசகர்களைக் கொண்ட பலவீனமான தலைவர்’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'மோசமான ஆலோசகர்கள் சூழ்ந்துள்ள பலவீனமான தலைவர்' என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  கூறியிருக்கிறார். அவர் நேற்றிரவு பினாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நஜிப் மலேசியர்களுடைய நலன்களையும் உரிமைகளையும் பாதிக்கின்ற பல பிரச்னைகள் பற்றிப் பேசத் தவறி விட்டதாகச் சொன்னார்.…

பினாங்கு மக்களைக் கவருவது -நஜிப், ரோஸ்மா பாணி

அந்தத் திடலில் பின்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் சொன்னதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் செவிமடுத்திருந்தால் அவர் நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருப்பார். பினாங்கு ஹான் சியாங் கல்லூரி திடலில் நிகழ்ந்த அந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பேசிய நஜிப், கொரிய பாப் இசைக் கலைஞருடைய நிகழ்வைக் காண…

லிம் கிட் சியாங் : எப்போதுதான் தென் கொரியாவுக்கு இணையாவோம்?

இன்று பினாங்கில் பிரதமர் நடத்தும் சீனப் புத்தாண்டுப் பொது உபசரிப்பில் தென் கொரியாவின் ‘சூப்பர் ஸ்டார்’பாடகர் Psy கங்னாம் ஸ்டைல் பாடலைப் பாடி மகிழ்விக்கும் வேளையில், மலேசியா எப்போது தென்கொரியா அளவுக்கு முன்னேறும் என்றோ இரு நாடுகளுக்குமிடையிலான இடைவெளி  எப்போது குறையும் என்றோ நஜிப் அப்துல் ரசாக் ஓர்…

முஸ்லிம்கள் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என நஜிப் விருப்பம்

இந்த நாட்டில் மேலும் இணக்கமான எதிர்காலத்துக்காக தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். காசாவில் ஹாமாஸுக்கும் பாத்தாவுக்கும் இடையில் நிகழும் பூசலைச் சுட்டிக் காட்டிய அவர் இறையாண்மை கொண்ட ஒர் அரசாங்கம் மதிக்கப்படுவதற்கு ஒற்றுமையே நிலைக்களனாகும் என்றார் அவர்.…

தேர்தலில் பிரதமரை எதிர்த்து மாணவர் அமைப்பு ஒன்று வேட்பாளரை நிறுத்தும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அவரது பெக்கான் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவரை முன்மொழியப் போவதாக மாணவர் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. நஜிப் நிர்வாகத்தை நிராகரிப்பதாக தான் கூறிக் கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக தான் தேர்தலில் களம் இறங்குவதாக "Gerakan…

தீபக்: எனது நிறுவனத்தை வாங்குமாறு பிரதமர் Boustead-க்கு ஆணையிட்டார்

கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், தமக்குச் சொந்தமான Asta Canggih Sdn Bhd-டை Boustead Holdings Bhd வாங்கியதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ளார். குளறுபடியான நிலப் பேரத்தில் சம்பந்தப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக நஜிப் அதனைச் செய்தார் என தீபக்…

‘பிரதமர் சம்பந்தப்பட்டது என்பதற்காக சட்டத்தை மீறுவது சரியாகுமா?’

விளக்குக் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த சீனப் புத்தாண்டு வாழ்த்துகூறும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதாகைகளை அகற்றிய ஊராட்சி மன்ற  ஊழியர்களைக் கண்டித்த சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கடுமையாக சாடப்பட்டார். ஊழியர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள்.  அவர்களைக் கண்டித்தது “சட்டத்தை மதிக்காமல் அவர்களை அவமதிக்கும்…

பிகேஆர் : பிரதமர் அன்பளிப்புகளைக் காட்டி இந்தியர்களைக் கனவுகாண வைக்கிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்திய மலேசியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்று “பாலிவூட் திரைப்படங்களில் வருவதுபோல் ‘சீன் போடுகிறாராரே’ தவிர அவர்களின் வருந்தத்தக்க நிலைமைக்குத் தீர்வுகாண முயலவில்லை” என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார். “ஆயிரக்கணக்கானோர் சட்டப்படி தகுதி இருந்தும் குடியுரிமை பெறாதிருக்கும் நிலையில் சொத்துரிமை…

“பிரதமருக்கு நெருக்கமானவங்க யாராவது இருந்தா, இதை அவர்கிட்ட சொல்லிருங்கப்பா…”

இந்தக் கட்டுரையை எழுத முழு முதற்காரணம் இரக்கம்தான். ஆமாம், நமது நாட்டு பிரதமர் மேல் கொண்ட இரக்கம்.  தேர்தல் முடிந்த பின்பு அவர் பிரதமராக இல்லாமல் போவதற்கான  சாத்தியங்கள் இருந்தாலும், இருக்கும் வரையாவது அவர் மனம் குழம்பாமல் இருப்பதை பாதுகாப்பது நமது கடமை அல்லவா? "வரும் தேர்தலில் ஆட்சியைப்…

புத்ராஜெயா சபாஷ்-க்கு கூடுதலாக 120 மில்லியன் ரிங்கிட்டை வழங்குகிறது

சிலாங்கூரில் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உதவும் பொருட்டு சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air  Selangor-க்கு கூடுதலாக 120 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். அவர் இன்று ஒரே மலேசிய மக்கள் உதவி 2.0 திட்டத்தை (BR1M 2.0) கோலாலம்பூருக்கு அருகில் உள்ள…

பிரதமர்: தேர்தல் தேதி கேட்டு தொல்லைப்படுத்த வேண்டாம்

தேர்தல் எப்போது என்பது ஒரு மர்மாகவே இருக்கிறது. பொதுத் தேர்தல் எப்போது என்பதைச் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிவடைந்து அறிவிக்காது போனால், சட்டமன்றத்தைக் கலைக்கப்போவதாக சிலாங்கூர் அரசு மிரட்டியுள்ள போதிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அது பற்றி வாய் திறக்கவில்லை. “எனக்குத் தொந்திரவு கொடுக்க.வேண்டாம். (சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்…

நஜிப்: ‘நிர்வாக மாற்றம் பொருளாதாரக் குழப்பத்தை விளைவித்து விடும்’

நாட்டு நிர்வாகத்தில் ஏற்படும் எந்தத் தீவிரமான மாற்றமும் கடுமையான பொருளாதாரக் குழப்பத்தை விளைவித்து விடும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். "தீவிரமான மாற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாது போனால் நாணய மதிப்பு வீழ்ச்சி அடையும். பண வீக்கம் அதிகரிக்கும். சுற்றுலாத் தொழில் முடங்கி விடும். நாட்டின் பாதுகாப்புக்கு…

‘ஹத்தி ரக்யாட்’ திட்டங்களுக்கு அரசு ரிம50 மில்லியன் ஒதுக்கீடு

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சின் ‘ஹத்தி ரக்யாட் (மக்கள் இதயம்)’ திட்டங்களுக்காக அரசாங்கம் ரிம 50 மில்லியனை ஒதுக்கியுள்ளது.  அத்திட்டங்கள் அடுத்த மாதம் தொடங்கும். இதை, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார். பிரதமர், இன்று கோலாலும்பூரில் டேவான் பெர்டானா…

‘தேர்தலில் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது’

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுதல் என்பது “நடவாத காரியம்” என்று கூறும் ஓர் ஆய்வு அதன் விளைவாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகலாம் என்றும் கூறுகிறது.. யுனிவர்சிடி மலாயா ஜனநாயக மற்றும் தேர்தல் மையம் (Umcedel) முந்தைய தேர்தல் முடிவுகளையும் நடப்பு…