நஜிப்: ஜோகூரை பிஎன் இழந்தால் பெரும் திட்டங்கள் காணாமல் போய்விடும்

பக்காத்தான் ரக்யாட் ஜோகூரைக் கைப்பற்றினால், மாநில அரசின் ‘ஜோகூர்பாணி’யும் “பெரும் திட்டங்களும்” காணாமல் போய்விடும் என்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். ஜோகூர் பிஎன் தலைவர்கள் வாக்காளர் ஆதரவைப் பெற அடிக்கடி பயன்படுத்தும் ‘ஜோகூர்பாணி’ என்பதன் பொருள் பற்றிய வினவியதற்கு விளக்கமளித்தபோது நஜிப் இவ்வாறு கூறினார்.…

Umcedel ஆய்வு முடிவுகளை நஜிப் நிராகரிக்கிறார்

பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், தாம் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமைக் காட்டிலும்  நான்கு புள்ளிகள் பின்னால் இருப்பதாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் ஒரு துறை நடத்திய ஆய்வு  முடிவுகளை நிராகரித்துள்ளார். "நான் அந்தக் கருத்துக்கணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் சொந்தக் கருத்துக்கணிப்பை பெற்றுள்ளோம்," என்றார்…

எதிர்க்கட்சிகளின் ‘Ubah’ சுலோகத்தை மாயாஜாலம் என நஜிப் நிராகரிக்கிறார்

எதிர்க்கட்சிகளின் 'Ubah' சுலோகம் மக்கள் கவனத்தை பெறுவதற்கான எதிர்க்கட்சிகளுடைய மாயாஜாலம் என்று  நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். அதற்கு பலியாகி விட வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். உண்மையில் அந்த சுலோகத்திற்கு பின்னணியில் உள்ள அமிழ்தம் எனக் கூறப்படுவது உண்மையில் விஷம்  என பராமரிப்பு அரசாங்கப்…

அன்வார்: ஒர் இந்தியர் கொடுத்த முத்தம் சுல் நூர்டினைக் காப்பாற்றாது

ஒரு முத்தம் வெறும் முத்தம் தான். பிஎன் ஆதரவாளரான ஒர் இந்தியர் கொடுத்த முத்தம் பிஎன் ஷா அலாம் நாடளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுல்கிப்லி நூர்டினைக் காப்பாற்றப் போதுமானது அல்ல என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "முழுக்க முழுக்க இன வெறி, மற்ற சமயங்களை இழிவுபடுத்துவது…

நஜிப்: சுல் நோர்டின் இந்தியர் நலனுக்காக பாடுபடுவார்

பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் இந்துக்கள் குறித்துத் தெரிவித்த கருத்துகளால் ஏற்பட்டுள்ள  ஆத்திரத்தைத் தணிக்கும் முயற்சியில் இன்று  ஈடுபட்டார்.  இந்தியர்கள் இப்போது சுல்கிப்ளியுடன் நட்புடன் இருப்பதாக அவர் கூறினார். “இந்தியர்களில் சிலர் அவருக்கு முத்தம்கூட கொடுத்திருக்கிறார்கள்”, என்று குறிப்பிட்ட நஜிப்,…

நஜிப்: பிஎன் வேட்பாளர் பட்டியல் ‘இறுதியானது’.

13வது பொதுத் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர் பட்டியல் இறுதியானது என பிஎன் தலைவர் நஜிப் அப்துல்  ரசாக் இன்று அறிவித்துள்ளார். அந்த ஆளும் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களிடம் வேட்பாளர் பெயர்ப் பட்டியலை வழங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார். "இது இறுதிப் பட்டியல். நாங்கள் எந்த மாற்றத்தையும்…

நஜிப்: நாட்டின் கட்டமைப்பு வசதிகள் பிஎன் ஏற்படுத்தியவை

இந்த நாட்டில் அனைத்து பெரிய கட்டமைப்பு வசதிகளும் கடந்த காலத்தில் பிஎன் ஏற்படுத்தியவை என்பதை  பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொது மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். மே 5ம் தேதி வாக்களிப்பதற்கு முன்னர் மக்கள் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். "கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA)…

BR1M பெற்றவர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் கடிதம் அனுப்பியுள்ளார்

BR1M என்ற ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) பெற்றவர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்  கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று அவர்களுக்கு அந்தக் கடிதங்கள் கிடைத்தன. "BR1M, அரசாங்கத்தின் அக்கறையைக் காட்டுகின்றது. உங்கள் நல்வாழ்வை உறுதி செய்ய வாழ்க்கைச் செலவுச்  சுமையைக் குறைக்கும் முயற்சியே அதுவாகும்." "வரும்…

‘நஜிப் மூன்று இளம் பக்காத்தான் வேட்பாளர்களைக் குறி வைத்துள்ளார்’

கிள்ளான் பள்ளத்தாக்கில் போட்டியிடும் பக்காத்தான் ரக்யாட்டின் இளம் வேட்பாளர் மூவரைக் கவிழ்க்க வேண்டும் என்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்  தம் கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்ற தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.. “லெம்பா பந்தாயில் போட்டியிடும் நுருல் இஸ்ஸா, பாண்டானில்…

நஜிப்பின் சிலாங்கூர் பணிப்படைக்கு இலவசத் தலைக்கவசங்கள்

சிலாங்கூரில் பிஎன் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்களை அதிகரிக்கும் பொருட்டு சிலாங்கூரில் உள்ள 22,000   இளைஞர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் மோட்டார் கைக்கிள் தலைக்கவசங்களை  வழங்கியுள்ளார். அந்தத் தலைக்கவசத்தின் முன்புறத்தில் 'IM4U' என எழுதப்பட்டுள்ளது. பின்புறத்தில் பிஎன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தத் தலைக்கவசங்களை விநியோகம் செய்வதற்கு Kelab…

ஆட்சிமாற்றம் அமைதியாக நடைபெறும் என உறுதி கூறினார் நஜிப்

13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் மாற்றம் ஏற்படுமாயின் அது எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியாகவே நடைபெறும். இன்று காலை 12வது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதைத் தொலைகாட்சியில் அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இவ்வாறு உறுதி கூறினார். “நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள், அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்பவர்கள், மக்கள் குரலுக்கு மரியாதை…

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது (விரிவான செய்தி)

பல மாதங்களாக வாக்காளர்களை ஊகிக்கவிட்டு வேடிக்கை பார்த்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். இன்று காலை பேரரசரைச் சந்தித்த பின்னர், காலை மணி 11.30க்கு தொலைக்காட்சியில் நஜிப் அந்த அறிவிப்பைச் செய்தார். இனி, தேர்தல் ஆணையம் (இசி) தேர்தலுக்கான நாளை நிர்ணயம் செய்யும்.…

பிரதமர் வாக்களிப்பு வழிகாட்டியான ‘Jom Bertindak’ கையேட்டை அறிமுகம் செய்துள்ளார்

மலேசியர்கள் 13வது பொதுத் தேர்தலில் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு உதவியாக நஜிப் அப்துல் ரசாக் 'Kit Jom Bertindak' (நாம் செயல்படுவோம் கையேடு) என்னும் கையேட்டை அறிமுகம் செய்துள்ளார். மார்ச் 18ம் தேதி பிரதமரது முகநூல் பக்கம் வழியாக அறிமுகம் செய்யப்பட்ட அந்தக் கையேட்டில் வாக்களிப்புக்கு வழிகாட்டியாக எளிதாக புரிந்து…

காப்பி அடித்ததாக ராபிஸி சொல்வது காலம் தாழ்த்தியது என்கிறார் நோ

டாக்ஸி அனுமதிகளை தனி நபர்களுக்கு வழங்கிய பிரதமருக்கு ஆதரவாக அமைச்சரான நோ ஒமார் பேசியுள்ளார். அது அரசியல் மாயாஜாலம் அல்ல என்றும் பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளை அது 'காப்பி அடிக்கவில்லை' என்றும் அவர் சொன்னார். பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது…

அந்நியப்பட்டுபோன மஇகா-விற்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

கடந்த 12வது பொதுத் தேர்தல் வரை மலேசிய இந்தியர்களின் காவலனாகவும் அவர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே கட்சியாகவும் மஇகா விளங்கியது. ஆனால், 12-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் இந்தியர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் இந்தியர்களின் அரசியல் பார்வையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்…

பிரதமர் ஏழ்மைநிலை 1.7விழுக்காடு என்பது அப்பட்டமான ஏமாற்றுவேலை

உருமாற்றம் மீதான அரசாங்கத்தின் அறிக்கையில் ஏழ்மைநிலையை 1.7விழுக்காட்டுக்குக் குறைத்திருப்பதாக சொல்லிப் பிரதமர் ஏமாற்றுகிறார் என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சாடியுள்ளார். அவ்வாறு சொல்லப்பட்டிருப்பதை “நம்ப முடியாத, அடிப்படையற்ற ,அப்பட்டமான மோசடி” என்று வருணித்த சுரேந்திரன் (வலம்) மலேசியாவில்  வறுமை விகிதம் உண்மையில் 19 விழுக்காடு என்றார். “நஜிப்…

நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்ற வதந்திகளை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பார் எனப் பரவியுள்ள வதந்திகளை பிரதமர்  அலுவலகம் மறுத்துள்ளது. அந்த வதந்திகள் 'முழுக்க முழுக்க உண்மையில்லாதவை' என அந்த அலுவலகத்தின் டிவிட்டர் பக்கத்தில் (@PMOMalaysia) தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிரதமர் நஜிப் ரசாக் இன்று நண்பகல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை அறிவிப்பார் என்ற வதந்தி…

PNB ஊழியர்களுக்கு கூடுதல் போனஸை பிரதமர் அறிவித்தார்

PNB எனப்படும் Permodalan Nasional Berhad-ன் 200,000 நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களுக்கு 2012ம் ஆண்டுக்குக் கூடுதலாக மேலும் ஒரு மாத போனஸ் வழங்கப்படும். அதனை அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அந்த PNB குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடுமையாக உழைக்கவும் கடந்த 35 ஆண்டுகளில் அடைந்த சாதனையை…

நஜிப் 2 ஆவது எஸ்டி-யைத் தயாரிக்க எப்ராஹாமுக்கு உத்தரவிட்டார் (விரிவாக)

தனியார் துப்பறிவாளர்(பிஐ) பி.பாலசுப்ரமணியம் செய்த இரண்டாவது சத்திய பிரமாணத்தை(எஸ்டி) வழக்குரைஞர் சிசில் எப்ராஹம் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.  பிரதமரின் உத்தரவின்பேரில் அவ்வாறு  செய்ததை அவரே தம்மிடம் தெரிவித்ததாக வழக்குரைஞர் அமெரிக் சிங் சித்து கூறினார். காலஞ்சென்ற பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞரான அமெரிக், இன்று கோலாலும்பூரில் நடைபெற்ற மலேசிய  வழக்குரைஞர் மன்ற ஆண்டுக்கூட்டத்தில்(ஏஜிஎம்)…

2 ஆவது எஸ்டி-இல் சம்பந்தமுண்டு என்பதை சிசில் எப்ரேஹம் ஒப்புக்கொண்டாராம்

தனியார் துப்பறிவாளர்(பிஐ) பி.பாலசுப்ரமணியம் செய்த இரண்டாவது சத்திய பிரமாணத்தை(எஸ்டி) வழக்குரைஞர் சிசில் எப்ராஹம் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.  பிரதமரின் உத்தரவின்பேரில் அவ்வாறு செய்ததை அவரே தம்மிடம் தெரிவித்ததாக வழக்குரைஞர் அமெரிக் சிங் சித்து கூறினார். காலஞ்சென்ற பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞரான அமெரிக், இன்று கோலாலும்பூரில் நடைபெற்ற மலேசிய வழக்குரைஞர் மன்ற ஆண்டுக்கூட்டத்தில்(ஏஜிஎம்)…

தீவிரவாதிகள் சரணடையாத வரையில் சண்டை நிறுத்தம் இல்லை

மூன்றாவது சுல்தான் ஜமாலுல் கிராமின் தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை மலேசியா நிராகரிப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். லஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அவர் கோரினார். "சண்டை நிறுத்தம் செய்ய முன் வந்ததற்கு மலேசியாவின் பதில் என்ன…

ஆத்திரமடைந்துள்ள டிஏபி நஜிப்புக்கு எதிராக போலீசில் புகார் செய்தது

இஸ்லாம் மீதான டிஏபி நிலை எனக் கூறப்பட்டு சுமத்தப்பட்ட "தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள்" தொடர்பில் பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக டிஏபி இன்று போலீசில் புகார் செய்தது. நஜிப் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதாரமில்லாதவை என அந்தப் புகாரைச் செய்த டிஏபி…