பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்கள் பட்டியலில் லண்டன் முதலிடம்
லண்டன் மிக அதிக எண்ணிக்கையிலான கோடிஸ்வரர்களைக் கொண்ட நகராக உருவாகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வு தென் ஆப்ரிக்காவில் இருந்து இயங்கும் ஆலோசனை நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டிருக்கிறது. லண்டன் மக்கள் தொகையில் மூன்று சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மிலியன் டாலர்களுக்கும் மேலான நிகர சொத்துக்களை வைத்திருப்பதாக…
ரஷியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதாரத் தடை
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையின் தாக்கத்தை அந்நாடு உணரத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறது என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்க வெள்ளை மாளிகைச் செய்தித்…
உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்
ஆப்ரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா வைரஸ். இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய ஆப்பிரிக்கா நாடுகளில் 1,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 672 பேர் பலியாகியுள்ளனர். பரவிய விதம் விலங்கிலிருந்து இந்த வைரஸ்…
லிபியாவில் உள்நாட்டுச் சண்டை தீவிரம்
லிபியாவில் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டில் இருந்து தனது நாட்டவர் 110 பேரை கடற்படைக் கப்பல் மூலம் பிரிட்டன் அரசு திங்கள்கிழமை பாதுகாப்பாக வெளியேற்றியது. இதுதொடர்பாக லிபியாவுக்கான பிரிட்டன் தூதர் மிச்செல் ஆரோன், டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய தரைக்கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த…
இஸ்ரேல் தாக்குதல்: தீவிரவாதத் தலைவர் பலி
காஸாவிலிருந்து இஸ்ரேல் தனது ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், திங்கள்கிழமை இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலில் ஜிஹாத் தீவிரவாதக் குழுவின் முக்கிய தலைவரான டேனியல் மன்சூர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,820ஆக உயர்ந்துள்ளது.…
காஸாவிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெறுகிறது இஸ்ரேல் அரசு
காஸாவின் ரஃபா பகுதியிலுள்ள ஐ.நா. பள்ளி மீது ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்கும் உறவினர்கள். காஸா பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், காஸாவிலுள்ள ஐ.நா.பள்ளி மீது ஞாயிற்றுக்கிழமை அந்நாடு நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.…
சீனாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 37 பேர் பலி
சீனாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஜின்ஜியாங் மாகாணத்தின் ஷாஜி பகுதியில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குலின்போது போலீஸார் நடத்திய எதிர் தாக்குதலில்…
ஒருவருக்காக, நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட இஸ்ரேல்
காஸாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட இஸ்ரேலிய வீரர் மரணித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.. 23 வயதான ஹடார் கோல்டின் என்ற அவர் நேற்று முன்தினம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அவரை ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்றதாக கூறி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 72 மணித்தியால மோதல் தவிர்ப்பையும் மீறி காஸா…
பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா
பொருளாதார மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் முடிவை உக்ரைன் எடுத்தபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புத்தின் அதனை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரிவினை மோதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியத்தில் ஒன்றான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு இடையே ரஷ்யாவுடன் தன்னை…
இபோலா: உலக சுகாதார நிறுவனம் நூறு மில்லியன் டாலர் திட்டம்
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது என்றும் ஆனால் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மந்தகதியிலேயே நகர்கின்றன என்றும் உலக சுகாதார கழகத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் கூறியுள்ளார். இந்த நோயினால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள கினீ, லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளின்…
போர்நிறுத்தம் முடிந்தது, தாக்குதல் ஆரம்பமாகிறது: இஸ்ரேல்
காசாவில் போர்நிறுத்தத்தை முடித்துக்கொண்டு தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என அது எச்சரித்துள்ளது. இன்று முன்னதாக 72 மணி நேர போர்நிறுத்தம் காசாவில் அமலுக்கு வந்திருந்தது. மோதலில் ஈடுபடும் இஸ்ரேலிய இராணுவமும் ஹமாஸும் தமது படைகள் தாக்குதலில்…
இஸ்ரேலிய பிரதமரின் பகிரங்க எச்சரிக்கை – அதிர்ச்சியில் உலக நாடுகள்
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் போராளிகளின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் தகர்க்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் எச்சரித்துள்ளார். காஸா பகுதியில் நிலைகொண்டுள்ள ஹமாஸ் போராளிகளை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் மும்முனைத் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனிய மக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,…
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க நேரிடும்: ஜி-7 நாடுகள்…
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று ஜி-7 நாடுகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியை சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி கடந்த சில மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும்…
ரமலான் பண்டிகையில் திகிலூட்டும் காணொளியை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்
ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பண்டிகையையொட்டி ஷியா பிரிவினர் சிலர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காணொளியை இணையதத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஈராக்கை கைபற்றி தினந்தினம் அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் இஸ்லாமிய மதத்தின் பண்டிகையான ரமலான் நாளிலிலும் வெறிச்செயலிற்கு விடுமுறை அளிக்கவில்லை. நேற்று…
இஸ்ரேலின் வெறியாட்டம் – 1321 பேர் பலி
காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்தி வரும் மும்முனைத் தாக்குதல்களில் நேற்று மட்டும் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 260க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர். கான் யூனிஸ் நகரின் பிரபல வர்த்தகப் பகுதி மீது இஸ்ரேல் படைகள் நடத்திய உக்கிர தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கு அதிகமானோர் காயமடைந்தனர். வடக்கு காஸாவின் ஜபாலியா…
உலக நாடுகளை உளவு பார்க்கும் அமெரிக்கா செயற்கைகோள்
சீனா மற்றும் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை உளவு பார்க்க அமெரிக்கா செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து ‘டெல்டா 4‘ என்னும் ஒரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 63 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை யுனைட்டட் ஏலியன்ஸ்…
சீனாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்: 12-க்கும் மேற்பட்டோர் சாவு
சீனாவில் சிறுபான்மை முஸ்லிம் உய்கர் சமுதாயத்தினர் அதிக அளவில் வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். சாச்சே கவுண்டியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்திற்குள் கத்திகளுடன் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களையும் சரமாரியாக வெட்டினர். இதில் உய்கர் மற்றும்…
இருளில் மூழ்கும் அபாயத்தில் காஸா! என்ன நடக்கப் போகிறது?
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் இருந்த ஒரே ஒரு மின் நிலையமும் சேதமடைந்ததால் தற்போது அந்நகரமே இருளில் மூழ்கும் ஆபாயத்தில் உள்ளது. கடந்த 7ம் திகதி காஸாவில் தாக்குதலை நடத்த தொடங்கிய,இஸ்ரேலை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது. எனினும்…
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை அதிகரிக்கும் ஜப்பான்
உக்ரைனின் கிழக்குப் பகுதியின் நிலைமை மோசமடைந்ததற்கும், கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கும் காரணமானவர்களின் மீது தங்களது பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. அண்மையில் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்தது. பொருளாதார மேம்பாட்டிற்காக உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது மறுக்கப்பட்டபோது ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து கிரிமியா ரஷ்யாவுடன்…
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு பெண் கொடுக்க ரெடியா? இதோ பெண்தேடும் படலம்
ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு மணமகள் தேடும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் திட்டமாகும். எதிர்காலத்தில் ஈராக்கின் அண்டை நாடுகளான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல்,…
டொனெட்ஸ்க் நகரை மீட்க தாக்குதலைத் தொடங்கியது உக்ரைன்
ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் நகரை மீட்க உக்ரைன் அரசு சனிக்கிழமை தாக்குதலைத் தொடங்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து உக்ரைன் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரிய் லிசென்கோ கூறுகையில், ""டொனெட்ஸ்க் நகரின் வடக்குத் திசையில் உள்ள ஹார்லிக்வா புறநகர்ப் பகுதியில் உக்ரைன் படைகள்…
போகோஹாரம் தீவிரவாதிகள் அட்டகாசம் – துணை பிரதமரின் மனைவி கடத்தல்
கேமரூன் நாட்டின் துணை பிரதமரின் மனைவியை, போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர் நைஜீரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் போகோஹாரம் தீவிரவாதிகளை ஒடுக்க உலக நாடுகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த கேமரூன் அரசாங்கம், தங்கள் நாட்டு இராணுவத்தை நைஜீரியாவுக்கு அனுப்பியது. இதனால் கோபமடைந்த தீவிராவாதிகள் கேமரூன் நாட்டின் துணை…
எண்ணெய் வளம் கொழிக்கும் தெற்கு சூடானில் கடும் உணவுப் பஞ்சம்…
தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 39 லட்சம் மக்கள் உணவின்றி பசியில் வாடுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏராளமான குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் தெற்கு சூடானுக்கு அறிவித்த நிதிகளை உடனடியாக வழங்கி அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை காக்குமாறு ஐ.நா.…