பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெண்ணுறுப்பு சிதைத்தலுக்கு ஐசிஸ் உத்தரவிட்டதாக கூறுகிறது ஐநா
இராக்கின் வடக்கே மோசுல் நகரிலும் சுற்றியுள்ள இடங்களிலும் சிறுமிகளும் பெண்களும் பெண்ணுறுப்பை சிதைக்கும் நடைமுறைக்கு உட்பட வேண்டும் என அப்பிராந்தியத்திலுள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. இந்த உத்தரவினால் பெரும் கவலை அடைந்துள்ளதாக இராக்கிற்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி ஜாக்குலின் பேட்காக் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு சம்பந்தமாக…
தைவானில் விமான விபத்து: 40க்கும் மேற்பட்டோர் பலி
சம்பவம் நிகழ்ந்த இடம் களேபரமாக காட்சியளிப்பதாக விமானப் போக்குவரத்து துறை இயக்குனர் ஷான் ஷேன் தெரிவித்துள்ளார். நெருக்கடியான சூழலில் தைவானில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தைவானின் ட்ரான்ஸ் ஏசியா விமானம் பெங்கு…
காசாவில் இஸ்ரேல் ‘போர்க் குற்றங்கள்’ புரிந்திருக்கலாம்- நவி பிள்ளை
காசாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். இந்த மோதல்களின்போது, பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பில், சந்தேகங்கள்…
இஸ்ரேல் – ஹமாஸ் கடும் சண்டை: 604 பாலஸ்தீனர்கள்; 29…
இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை 15ஆவது நாளாக நீடித்த சண்டையில் இதுவரை 604 பாலஸ்தீனர்களும், 29 இஸ்ரேல் வீரர்களும் உயிரிழந்தனர். இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இழுபறி நீடித்து வருகிறது. காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல்…
மெக்சிகோ எல்லையில் 1,000 ரோந்து வீரர்களைக் குவிக்க அமெரிக்கா திட்டம்
மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் ஆயிரக்கணக்கில் சிறார்கள் சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுப்பதற்காக மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 1,000 ரோந்து வீரர்களை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் ரிக் பெர்ரி கூறினார். இதுகுறித்து, டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:…
சுடப்பட்ட மலேசிய விமானம் : வலுக்கும் மோதல்கள்
உக்ரைனின் வான்பரப்பில் கடந்த வாரம் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு, சில நிமிடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உக்ரைனிய போர் விமானம் ஒன்று, அந்த மலேசிய விமானத்துக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைன் அரசிடமிருந்து இப்போது ரஷ்யா விளக்கம் ஒன்றைக்…
காசா பள்ளிவாசல்களில் இஸ்ரேலிய குண்டுவீச்சு; ஹமாஸ் ரொக்கெட் வீச்சு நீடிப்பு
மருத்துவமனை, பள்ளிவாசல் போன்ற இடங்களும் குண்டுவீச்சிலிருந்து தப்பவில்லை காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா சென்ற தமது படைவீரர் ஒருவரைக் காணவில்லை என்பதை உறுதிசெய்த இஸ்ரேலிய…
காஸாவில் மரண ஓலங்கள் – அமெரிக்காவின் ஆசிர்வாதமா?
காஸா மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு சர்வதேச ரீதியில் சட்ட அதிகாரம் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமரர் பென்ஜமின் நெட்டன்யாகூ தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து எறியப்படும் ரொக்கட்டுக்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை தமக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக போராடி வரும் தமக்கு வலுவான சர்வதேச ஆதரவு கிடைத்து வருவதாக…
தீவிரவாதிகள் அட்டகாசம்: 1800 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம்…
ஈராக்கின் முக்கிய நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்கு இஸ்லாமிய நாடு உருவாக்கியுள்ளனர். ஈராக்கின் மிகப்பெரிய இரண்டாவது நகரமான மொசூலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு கடும் நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டையும் விதித்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும். சிறப்பு வரி…
ஈரான் மீதான 8 பில்லியன் டொலர் முடக்கத்தை நீக்கியது அமெரிக்கா
அணுவாயுத திட்டப் பிரச்சினையில் ஈரானுடன் உடன்பாடு செய்து கொள்ள உலக வல்லரசு நாடுகள் கால அவகாசம் வழங்கியிருந்தன. இந்நிலையில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன்போது ஈரானுக்கான கால அவகாசத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க வல்லரசு நாடுகள் இணக்கம்…
மலேசிய விமானம் நொறுங்கிய தடயம் அழிக்கப்படுகிறது? உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு
மலேசிய விமானம் நொறுங்கிய இடத்தில் உள்ள தடயத்தை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் அழித்துவருவதாக உக்ரைன் அரசு பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடந்த 17ம் திகதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச்-17 விமானம் ரஷ்ய எல்லையில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
காஸாவில் இஸ்ரேல் தரைப் படை கடும் தாக்குதல்: உலக நாடுகள்…
காஸா பகுதியில் இலக்குகளைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலின் ராணுவ ஹெலிகாப்டர். காஸா மீது இஸ்ரேல் தரைப்படை கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக மாபெரும் தாக்குதலை வியாழக்கிழமை தொடங்கியது. இதனால், உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. காஸாவில் இஸ்ரேல் பீரங்கிப்படையும், விமானப்படையும் ஹமாஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து வியாழக்கிழமை…
விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச விசாரணையாளர்கள்
கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்த இடத்திற்கு சர்வதேச விசாரணையாளர்கள் சென்றடைந்துள்ளனர். வியாழன் மதியம் பறந்துகொண்டிருந்தபோது சுடப்பட்டு இந்த விமானம் கீழே விழுந்ததாகத் தெரிகிறது. ஓ எஸ் சி இ ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த முப்பது நிபுணர்கள் சம்பவ இடத்தை ஹெலிகாப்டரில் சென்றடைந்துள்ளனர்.…
யுக்ரேனிய போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்திவிட்டதாக புகார்
யுக்ரெயின் ராணுவம் (ஆவணப்படம்) யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில் ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த எஸ்.யு 25 ரக விமானம் புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார்…
காசாவில் ஐந்து மணி நேர ” மனித நேயப்” போர்…
ஐந்து மணி நேர போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி சந்தையில் பொருட்கள் வாங்கக் குழுமியிருக்கும் காசாவாசிகள் பாலத்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஒன்பது நாட்களாக நடந்த மோதலுக்குப் பின்னர், காசாவில் ஐந்து மணி நேர மனித நேயப் போர் நிறுத்தம் இப்போது அமலில் இருக்கிறது. காசாவாசிகள் அத்தியாவசியப்…
பல மக்களை கொன்று குவித்த “போகோ ஹரம்” அமைப்பின் தளபதி…
போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பின் தளபதியை நைஜீரிய பொலிசார் கைது செய்துள்ளனர். நைஜீரியாவில் கடுமையான முஸ்லிம் சட்டங்களை அமல்படுத்தும்படி, போகோ ஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். அந்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் அல்லாதவர்களை கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்கின்றனர். சிபோக் பகுதியில் உள்ள…
உலகை உலுக்கும் ராட்சத பள்ளம்: பீதியில் மக்கள்
சைபீரியாவில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது. இயற்கை மற்றும் எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியே உலகின் கடைசி பகுதி என்றும் சமீப காலமாக அழைக்கப்பட்டு வருகிறது. ஏனெனில்…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டும்: இந்தியா, பிரேசில் வலியுறுத்தல்
பிரேசில் அதிபர் மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்கும் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெஃப். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பது உள்ளிட்ட ஐ.நா. சபை சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃபும் கூட்டாக வலியுறுத்தினர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…
உலகளவில் எய்ட்ஸால் ஏற்படும் மரணங்கள் குறைகின்றன
உலகளவில் எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்கள் மற்றும் அதன் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை, கடந்த தசாப்தத்தை ஒப்பிடும்போது, மூன்றில் ஒரு பங்கு அளவைவிட கூடுதலாக குறைந்துள்ளன என்று, இது தொடர்பிலான ஐ நா அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 15 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்…
பல ஆண்டு முற்றுகையில் காசாவில் வாழ்க்கை
சுமார் 1.7 மிலியன் மக்கள் தொகை கொண்ட காசா நிலப்பரப்பு, 40 கிமீ நீளமும், 10 கிமீ அகலமும் கொண்டது. மத்தியதரைக்கடல், இஸ்ரேல், எகிப்து ஆகியவற்றால் சூழப்பட்ட பகுதி. முற்றுகையில் வாழும் காசா மக்கள் முதலில் எகிப்தால் ஆக்ரமிக்கப்பட்டது காசா நிலப்பரப்பு. எகிப்து இன்னும் காசாவின் தென் எல்லையைத்…
திக்ரித் நகருக்குள் முன்னேறியது இராக் ராணுவம்
இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகருக்குள் ராணுவம் செவ்வாய்க்கிழமை முன்னேறிச் சென்றது. திக்ரித்தின் தென்பகுதியில் தீவிரவாதிகளின் வசமிருந்த முக்கிய அரசுக் கட்டடங்களையும் ராணுவம் மீட்டுள்ளது. இது குறித்து ஏ.எஃப்.பி. செய்தியாளரிடம் சலாஹிதின் மாகாண ஆளுநர் அகமது அப்துல்லா ஜுபூரி…
இஸ்ரேலிய அதிரடிப்படை முதல் தடவையாக எல்லை கடந்து காசா பகுதிக்குள்…
நேற்றிரவு இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய ஏவுகணை தாக்குதல் பற்றி கட்டுரையில் எழுதியிருந்தோம் அல்லவா ? அந்த தாக்குதல் நடந்து சிறிது நேரத்தில், தரை மார்க்கமாக காசா பகுதிக்குள் புகுந்தது, இஸ்ரேலின் சிறப்புஅதிரடிப் படைப்பிரிவு ஒன்று ! கடந்த சில தினங்களாக "எஸ்கலேட்" பண்ணிவரும்…
மத்தியகிழக்கில் போர்நிறுத்த முயற்சி தோல்வி; சண்டைகள் மீண்டும் ஆரம்பம்
ஒருவார இஸ்ரேலிய தாக்குதலில் காசாவில் பல கட்டிடங்கள் நிர்மூலம் ஆகியுள்ளன காசாவில் பாலஸ்தீன ஆயுததாரிகளின் நிலைகள் இருபதுக்கும் மேலானவற்றை தாம் வான் தாக்குதல் நடத்தி அழித்திருப்பதாக இஸ்ரேலிய ஆயுதப்படைகள் கூறுகின்றன. ஹமாஸும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் குண்டுகளை வீசி வருகிறது. போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு எகிப்து முன்மொழிந்த…