அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள்

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள்.

இந்தியர்களுக்குத் தேவை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள். அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்புடையை நிறுவனங்களில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிரிக்க வழி வகை செய்யுங்கள். அடுத்து PPRK வீடுகள் நகர்புற இந்திய ஏழைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யுங்கள். சிறிய நடுத்தர தொழில்துறைகளில் இந்தியர் மேம்பாடடைய வழிவகைகளைக் காணுங்கள். ‘செடிக்’ வழி கொடுக்கப்படும் மாநியங்களை மறுசீரமைக்கப் பாருங்கள். அவற்றைப் பெறுவோர் மக்களுக்கு எவ்வகையில் நேரடிப் பயனைச் சேர்க்க முடியும் என்பதனைக் காணுங்கள்.

தொழிளாலர் துறை அமைச்சில் உள்ளதால் இன்னும் தோட்டங்களில் வாழும் மக்களுக்கு அத்தோட்ட நிறுவங்கள் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டிக் கொடுத்து விற்கும் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்.

இவ்வாறு செய்வதை அவ்வப்போது பட்டியலிட்டு இந்தியர்களுக்கு பொது ஊடகங்களின் வழி தெரியப்படுத்துங்கள். அரசியல் விளம்பரம் இங்கே அவசியமாகின்றது. இல்லையேல் தங்கள் அரசாங்கம் இந்தியர்களுக்கு என்ன செய்தது என்று தெரியாது போகும்.

மாமன் மச்சான் என்று ஒட்டிக் கொண்டு வருபவர்களிடமிருந்து சற்றே ஒதுங்கி நில்லுங்கள். இல்லையேல் தாங்கள் வேண்டாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.

தேனீ