அரசியலமைப்பு சட்டமும் அரங்கேறும் நாடகமும் -பகுதி 1

நெட்டானியல் தான் -அரசியல் அரங்கில் இது பரபரப்பான காலம் – நூறு விதமான நாடகங்கள் ஒரே நேரத்தில் அரங்கேற்றமாகின்றன.

இந்த விநோதமான நேரத்தில் ஜோகூரின் மந்திரி பெசார் நியமனம் பற்றிய சட்ட ஆய்வை அலசலை நழுவ விடுவது எளிதாகி விடுகிறது.

இந்த அலசல் அதிக கவனத்தை ஈர்க்காததற்கு ஒரு காரணம், ஜோகூருக்கு வெளியே உள்ள பலர் (ஒருவேளை ஜோகூருக்குள்ளேயே ஒரு நல்ல எண்ணிக்கையிலானவர்கள் கூட) மந்திரி பெசார் யார் என்பதை உண்மையாகப் பொருட்படுத்தாமல் இருப்பது கூட சாத்தியமாகும்.

உண்மையைச் சொல்வதென்றால், சில வாரங்களுக்கு முன்பு ஜோகூரின்  மந்திரி பெசாரின் யார் என்பதைக்  குறிப்பிட முடியாது, அதோடு  தற்போதைய வரை பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை.

அரசியலில் என்ன நடக்கிறது

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான சில விவாதங்கள் உட்பட – வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பின் சில முக்கிய அம்சங்களை மறுபரிசீலனை செய்ய இது ஒரு நல்ல நேரம்.

வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பின் மையத்தில் ஒரு அரசியலமைப்பு முடியாட்சி என்ற கருத்து உள்ளது – இது ஒரு  சுவாரஸ்யமான கலப்பாகும். இது தனித்துவமாகப் பல கூறுகளை இணைக்கிறது.

அரசியலமைப்பு முடியாட்சியின் பரிணாமம் அதன் முன்னோடி,  முழுமையான முடியாட்சிகளிலிருந்ததாக கருதப்படுகிறது.

அரசியலமைப்பு முடியாட்சிகள் வரலாற்று மன்னர்களைப் பராமரித்து, ஒரு நாட்டின் நிர்வாகத்தில் அவர்களுக்கு சில நியமனங்களை வழங்குகின்றன, அதே நேரத்தில் உண்மையான ஆட்சி செய்யும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க ஜனநாயக அமைப்பையே பயன்படுத்துகின்றன.

இந்த அர்த்தத்தில், அரசியலமைப்பு முடியாட்சியை (Constitutional Monarchy)  ஒரு வகையான சமரசம் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்., ஒரு மன்னர் முழுமையான அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று நம்பாத நாடுகள்,  சில காரணத்திற்காகவும், ஒரு மன்னரின் கருத்தைப் பராமரிக்க விரும்புகின்றன.

இது உலகின் மிகவும் பிரபலமான முடியாட்சிகளில் ஒன்றான இங்கிலாந்து மற்றும் நமது சொந்த அரசியலமைப்பு முடியாட்சி மிகவும் நெருக்கமாக மாதிரியாக இருக்கும் அமைப்புக்குச் சொந்தமான பாதையாகும்.

ஆட்சி மற்றும் சட்டம் என்று வரும்போது ஆங்கிலேயர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தோன்றும் இரண்டு விஷயங்கள். அவை அரசியலமைப்பும் மரபு என்ற முன்னுதாரணமான நடைமுறையுமாகும்.

இவை அவர்களுக்கு மிகவும் நன்றாக வேலை செய்வதாகத் தெரிகிறது, இன்றுவரை, அரசியல்வாதிகள் தற்போதுள்ள மரபுகளுக்குச் சவால் விடும் வகையில் செயல்படத்  துணிந்த கடுமையான நெருக்கடி அவர்களுக்கு இல்லை என்பது போல் தெரிகிறது – அத்தகைய நடவடிக்கைகளை வெளிப்படையாகத் தடைசெய்யும் கடுமையான சட்டங்கள் இல்லாத போதும் கூட, மக்கள் மரியாதைக்குரியவர்களாக இருக்கும் இடத்தில், மரியாதையாகவே அந்த அமைப்பு முறை செயல்படுகிறது.

இதன் ஒரு விளைவு என்னவெனில், இந்த பாரம்பரியத்தில், ஆங்கிலேயர்கள் பல சூழ்நிலைகளில், குறியிடப்பட்ட  சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை  விவரமாக எழுதப்பட வேண்டிய அவசியமில்லை என்று தோன்றியது.  ஏனெனில் இந்த சூழ்நிலைகள் எழும்போது, ​​அவர்கள் அவற்றை சுமுகமாகத் தீர்க்கும் நடைமுறைகளைச் சட்டங்களாக ஏற்றுக்கொண்டனர். – இந்த அமைப்பு உடைக்கப்படவில்லை. (தொடரும்)

தெளிவற்ற வார்த்தைகள்

மாமன்னர் பிரதமரை நியமிப்பதற்கான அதிகாரத்தை விவரிக்கும் மலேசியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பின் 43(a) பிரிவின் வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்:

“யாங் டி-பெர்டுவான் அகோங் தனது கணிப்பில் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறும் ஒரு உறுப்பினரை அமைச்சரவைக்குத் தலைமை தாங்கும் பிரதமராக  நியமிக்க வேண்டும்”

ஆங்கில மொழியைப் பற்றி நியாயமான புரிதல் உள்ள எவரும் இங்குள்ள வார்த்தைகளில் பல தெளிவின்மைகளைக் கவனிக்கலாம்.

குறிப்பாக, “தனது கணிப்பில்” மற்றும் “பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறும்” என்ற சொற்றொடர்கள் தெளிவற்றதாகத் தெரிகிறது.

மீண்டும், ஆங்கிலேயர்கள் இத்தகைய தெளிவற்ற மொழியை அனைவரும்  வேதவாக்காகப்  பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் அதை பின்பற்றுகிறார்கள்.

மலேசியாவில், 2009 பேராக் நெருக்கடியிலிருந்து தொடங்கிப் பல நெருக்கடிகளில் நாம் பார்த்தது போல, பெரும்பான்மையினரின் நம்பிக்கையை யார் சரியாகக் கைப்பற்றுவது என்பது குறித்த உறுதியான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தெளிவாக இல்லாதது மிகவும் சர்ச்சைக்குரிய சிக்கலாக  2009 இல் பேராக் மற்றும் 2020 இல் ஷெரட்டனுக்குப்  பிந்தைய சிக்கல் உட்படப் பல உள்ளன.

சாமானிய கருத்தில் கூட ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளிலிருந்து வெகு தொலைவில் இவை உள்ளன என்று நம்பலாம். வெஸ்ட்மின்ஸ்டர்  அமைப்பில், இந்த செயல்முறை எப்படிச் செயல்பட வேண்டும்.

குடிமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கிறார்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு ய்கிறார்கள்; அந்த நபரை அவர்களின் பிரதிநிதியாக அரசாங்கத்தை அமைக்க அழைப்பதன் மூலம் மாமன்னர் இந்தத் தேர்வை உறுதிப்படுத்துகிறார்.

இதுதான்  சட்டத்தின் வாய்மை. மற்றும் அரசியலமைப்பு முடியாட்சியின் வாய்மை என்று நாம் நம்ப வேண்டும்.மலேசியாவில், நாம் மேலே பார்த்தபடி, இது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைத் தெளிவாக  குறியிடும் சட்டத்தின் விளக்கம் எதுவும் இல்லை; அத்தகைய உறுதி இல்லாத நிலையில், பல நிச்சயமற்ற தன்மைகள் வெளிப்பட்டன.

நிச்சயமாக, தொங்கும் (Hung)  நாடாளுமன்ற வழக்குகள் உள்ளன, அதில் தெளிவான பெரும்பான்மையைத் ர்மானிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் இக்கட்டுரைக்கு அப்பாற்பட்டவை. (தொடரும்)