வழக்கறிஞர் கா. ஆறுமுகம், செம்பருத்தி.காம்
இந்தியர்களின் ஏங்கங்களை ஏந்தி வேதமூர்த்தி பிள்ளையார்தான் பிடிக்கிறார் என்று நம்பியபோது அது குரங்காக மாறியது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது.
கடந்த மார்ச் 10—ஆம் தேதி முதல், உயரிய நோக்கத்திற்காக தன் உடலை வருத்தி உண்ணாவிரதமிருந்த வேதமூர்த்தி, தன்னைப் பார்க்க வந்த மக்கள் கூட்டணி பிரதிநிதியுடன் பேச மறுத்து, நஜிப் என்றவுடன் கோட்டு சூட்டுடன் விழுந்தடித்துக்கொண்டு ஓட அப்படி என்ன நிர்பந்தம் அவருக்கு என்ற கேள்வியும் எழுகிறது. தேர்தலில் வெல்ல நஜிப் எதையும் செய்வார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலை இவர்களிடம் இருந்துள்ளதையும் காட்டுகிறது.
அதிலும் மூன்றில் இரண்டு (Two Third Majority) பெரும்பான்மையுடன் தேசிய முன்னணியை இந்தியர்கள் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று வேதமூர்த்தி அடித்த பல்டி, ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’என்பது போல் உள்ளது. ஒருவேளை இது அவர்களின் அந்த இரகசிய ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய சாரமாககூட இருக்கலாம்.
அம்னோ இனவாதம்
அம்னோ ஆதிக்க அரசியலை முழுமையாக அம்மணமாக்கி, அது எவ்வாறு அரசாங்கத்தையே இனவாதமாக்கியது என்று வாய் கிழியக் கத்தி ஹிண்ட்ராப் என தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட இந்த பல்டி அடித்த குழுவினரின் எப்படி இப்படி மாறினார்கள் என்பதில் பலத்த ஐயம் உள்ளது.
மலேசியாவின் அம்னோ இனவாத அரசியல், இனங்களுக்கிடையிலான உறவுகளைக் காயப்படுத்தி அதனுள்ளே வேற்றுமைகளை வளர்த்து அதனால் உருவாக்கப்படும் பயத்தைத் தனது அரசியல் ஆயுதமாக கொண்டுள்ளது.
இன்று போதுமான மலாய்க்காரர்கள் விழிப்புணர்ச்சியடைந்த நிலையில் சொந்த பெரும்பான்மை இனத்தையே சுரண்டும் அம்னோவுக்கு எதிராக போராடுகிறார்கள்.
ஆனால் சத்தியம், தர்மம், நீதி என்று பேசுபவர்கள் திடீரென்று இன்று ஒரு புதிய வியூகம் என்ற பல்லவியைப் பாடுகிறார்கள். அதன்வழிதான் நமக்கெல்லாம் விடிவெள்ளி என்கிறார்கள்.
ஹிண்ட்ராப் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், எங்களுக்குத் தேவை உரிமை; நம்பிக்கையல்ல என்று போட்ட கோசங்களுடன், “உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம். உணர்வை இழக்கலாமா” என்றும் “யுத்தங்கள் தோன்றட்டும், இரத்தங்கள் சிந்தட்டும், பாதை மாறலாமா… இரத்தத்தின் வெப்பத்தில், அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா” என உணர்ச்சி பொங்க ஆபாவாணன் இயற்றிய ஊமைவிழிகள் திரைப்பட பாடலைத் தங்களது இயக்கப்பாடலாக பாடி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் ஆதிக்க இனவாத வர்கத்தின் பிடியில் அம்மணமாக்கப்பட்ட தமிழர்களுக்கு விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் கொடுத்தார்கள். அவை என்னவாயின?
அரசியல் நாடகம்
அரசியல் நாடகத்தில் மீண்டும் பகடை காய்களாக நாம் நகர்த்தப்பட வேண்டும் என்ற முட்டாள்தனமான கொள்கைதானே இவ்வளவு காலம் நம்மை அடிமைத்தனத்தில் வைத்திருந்தது என்பதை மறந்து விட்டனரா? அல்லது தேர்தல் கால பணப்பட்டுவாடா அவர்களின் கண்களை மறைத்து விட்டதா?
இவர்கள் கேட்டதில் தவறில்லை, ஆனால், இந்தியர்களின் ஓட்டுக்காக பேரம் பேசியதுதான் பிரச்சனைக்குறியது. மக்கள் கூட்டணி ஏற்கவில்லை அதனால் அம்னோவிடம் அடிபணிந்தோம் என்ற பரிதாப நிலைதான் இவர்களுக்கு இன்று. மஇகாவையும், இதர சில்லரை இந்திய பிரதிநிதி கட்சிகளையும் அம்னோ கூலிகள் என சாடிய இவர்களுக்கு இந்த புதிய ஞானோதயம் எப்பொழுது உருவானது?
மஇகா வரலாற்றில் சாமிவேலுவைவிட திறமையானவர்கள் இதுவரையில் இல்லை. அரசியலைச் சுவாசமாக கொண்டு அனைத்து இந்தியர்களின் பிரதிதிதியாக இருந்த அவரே, அம்னோ இனவாத அரசியலின் இடைவெளியில்தான் கெஞ்சிக்கூத்தாடி இந்தியர்களுக்கான உரிமைகளைச் சலுகைகளாக பட்டுவாடா செய்ய முடிந்தது. இவரைப் போன்றவர்கள் சோரம் போன சோகம் இன்னமும் மறையவில்லை.
சாக்கடையில் விழுந்தாலும் நாங்கள் சந்தனத்தைத்தான் தேடுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் முட்டாள்களாக இல்லை. வேண்டுமானால் வரட்டுத்தனத்துடன் பவனிவரும் அப்பாவிகளும், சுயநலவாதிகளும், எரியும் வீட்டில் எதையும் சுருட்டலாம் என்ற எண்ணம் கொண்டவர்களும் இனி உங்களுடன் உடன் வருவார்கள்.
மஇகாவும் – நம்பிக்கையும்
56 வருடங்களாக இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையை அம்னோவால் தீர்க்க இயலவில்லை. நஜிப்பின் அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தட்டுத்தள்ளாடி கடந்த வருட இறுதிவரையில் 6,590 இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்த்துள்ளதாக ‘நம்பிக்கை’ இணையத்தளம் பெருமை பட்டுக்கொள்கிறது. இப்பணிக்குப் பணம் தேவையில்லை, அரசியல் ஆளுமைதான் வேண்டும். அதைக்கொண்டிருந்த அம்னோவும் அதன் தலைவர் நஜிப்பும் எதனால் இதைச் செய்யவில்லை? வேதமூர்த்தியுடன் ஓட்டு சேர்க்க காத்திருந்தாரா? நாம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் நஜிப்பை வெல்ல வைத்தால்தான் செய்வாராம்.
2009ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக நஜிப் ஓர் அமைசரவை செயல்குழுவை அமைத்தார். அதில் ம இ கா பரிந்துரை செய்த சுமார் 50-க்கும் மேலான அனைத்து திட்டங்களையும் நஜிப் ஏற்றுக்கொண்டார். அதற்கு தலைமையாக அமைச்சர் மருத்துவர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். இதன் செயலாக்கத்தில் சுணக்கம் ஏற்பட்ட்தால், 2010 இல் இக்குழு மறுவடிவம் பெற்று SITF என்ற விசேச செயலாக்க பிரிவானது. இதற்கு இணைத்தலைவர்கள் சுப்பிரமணியமும் ஞானலிங்கமும் ஆவர். இதுவும் தடுமாற பழனிவேலுவின் தலைமையில் கொள்கை செயலாக்க பிரிவு அமைக்கப்பட்டது. தற்போது இதோடு முனைவர் இராஜேந்திரன் கல்வி பிரிவும் நஜிப்புடன் நேரிடை தொடர்பு கொண்ட அமைப்பாகும்.
இதில் உள்ள சுணக்கமும் செயலாக்க மலட்டுதன்மைக்கு மஇகா-வும் காரணம் என்றாலும், பெரிய முட்டுக்கட்டை அம்னோ அரசாங்கத்தின் இனவாத அமைப்பு முறையாகும். இதை அறியாது தெரியாது என்று மறுப்பவர் கிடையாது. எனவே ஹிண்ட்ராப் கொண்டுவரும் திட்டங்கள் எதுவும் புதிதானவை அல்ல. அடிப்படையை ம இ கா வலியுறுத்தியது ஆனால் ஹிண்ட்ராப் அதை அதிகமாக கோரியுள்ளது.
இரு கட்சி ஆட்சி முறை
அமைச்சரவை ஏற்றுக்கொண்ட அடிப்படையை கூட செய்ய வக்கற்ற நிலைமைக்கு காரணம் இனவாத ஊறிப்போன அரசாங்கம் அமைப்பு முறையாகும். அதனால்தான் அரசாங்கத்தை மாற்றுவோம் என்பது சாமான்ய மக்களின் குரலாக ஒலிக்கிறது.
மக்கள் கூட்டணி இலவச கல்வி என்கிறார்கள், ஹிண்ட்ராப் இந்தியர்களுக்கு 30 விழுக்காடு கல்விக் கடனுதவியை அதிகரிக்க கோரும் திட்டம் ஏற்புடையதா? இது என்ன முட்டாள்தனம்?
தேசிய முன்னணியாகட்டும், மக்கள் கூட்டணியாகட்டும் – உரிமை போராட்டம் என்பது காலவரையற்றது. அதை யாராலும் பறித்துவிட முடியாது.
இந்த வேதமூர்த்தி – நஜிப் ஒப்பந்தத்தில், நவம்பர் 25 ஹிண்ராப்ட் போராட்டத்தில் கலந்து கொள்ளாத, உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் கைதாகாமல் தப்பி சென்ற வேதமூர்த்தி, ஏழை இந்திய வாக்காளர்களைக் இறுதி நேரத்தில் பணயம் வைக்கும் வகையில் நடந்து கொண்டது ஏமாற்றத்தை அளிக்கிறது.
இராமர் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று கூறும் இவர்களின் அரசியல் ஆயுதமும் பிரம்மாஸ்திவாரமும் இந்த நஜிப்பின் ஒப்பந்தம் என்றால், இவர்களுக்குப் பொருந்தும் வேடம் சகுனியாகும்.
என்னைப்போல் பலருக்கும் இதுபோன்ற ஆதங்கமும் ஒருவகையான அருவருப்பும் உருவாக காரணம் நாம் இவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கைதான்.
தேர்தலுக்குப் பிறகு பாரிசான் மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வென்றால் நீங்கள் செய்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இனவாத அரசியல் அமைப்பு முறை இடம் தராது. அரசியல் பலம் முன்னே ஹிண்ட்ராப், கைக்கூலிகள் போல கைக்கட்டிதான் நிற்க வேண்டும். காலம்காலமாக இந்திய பிரதிநிதிகள் எண்ணிலடங்கா அளவில் கைக்கட்டி விசுவாசத்துடன் கால்கடுக்க காத்துக்கிடப்பதைத்தான் வழிமுறையாக்கியுள்ளனர்.
உடனே, நீங்கள் போராட்டம் நடத்துவீர்களா? அல்லது தனேந்திரன் போல், இன்னோர் இத்யாதியாக பணப்பட்டுவாடா செய்வீர்களா? இதில் நீங்கள் போராட முற்பட்டால் யார் உங்களுடன் வருவார்கள் – அல்லது பின்னால் வருவார்கள்? மாற்றத்திற்குப் போராட துணிந்த மக்களைப் புறக்கணித்த உங்களை மதிக்க மக்கள் முன்வரமாட்டார்கள்.
இறுதியாக, இந்த தேர்தலில் பாரிசான் மீண்டும் வென்றால். மலேசியர்களுக்கு இரு கட்சி ஆட்சி உருவாக கிடைத்த பொன்னான தருணத்தைக் கெடுத்த பாவிகள் என்றும் சோரம் போனவர்கள் என்றும் ஹிண்ட்ராப்பை நான் சாடத்தேவையிலை, அதை வரலாறு செய்யட்டும்.
விடுங்க சார். இந்த பண்ணிகளை என்ன தான் குளிப்பாட்டினாலும் அது மலத்தை நாடியே செல்லும். ஹிண்ட்ராப் என்றாலே சகுனிகள் என்று தான் Malaysia இந்தியர்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனரே…
தமிழனை நம்புவதை விட பாஸ்காரனுக்கு ஒட்டு போடுவதே உத்தமம்.
தேர்தலுக்கு பிறகு இந்த மூஞ்சி எல்லாம் இயற்கையாகவே காணமல் போய்டும், கவலை வேண்டாம். இப்ப நம்ம இலக்கு எல்லாம் UBAH தான். அதிலே குறியாக இருப்போம்.
அருமையான கட்டுரை,
. நன்றி
நண்பரே
….
விடுங்க சார்…!நம் சமுதாயத்துக்கு நல்லது செய்வுதுன்னு நினைச்சி அதுங்கதான் சகதியா ஆவுதுங்க,ஆரம்பத்துல இருந்து ம இ கா கூட்டம் நமக்கு ஆப்பு வெச்சிக்கிட்டு இருக்காங்க அப்புறம் ஒருசில குள்ளநரி துரோகிகள் கூட்டம்,இப்ப நடமுரையுள் சதிகார வேத கூட்டம்.இதுங்க எல்லாம் சூடு சொரணை இல்லாத கூட்டம்,இனியும்,இனிமேலும் யாரும் நம்மவரிடம் அவர்கள் வாலை தூக்கிக்கொண்டு வரவும் முடியாது சார்!
ஹிண்ட்ராப் போரட்டங்களில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன், போலிஸ் விசாரணை வரை சென்றவன்- அப்போ நாங்கள் பட்டது இப்பொழுதுதான் வலிக்கிறது .(வேதாவுக்கு இது தெரிய வாய்பு இல்லை-அவர்தான் லண்டனுக்கு ஓடிட்டரே) போராட துணிந்த மக்களைப் புறக்கணித்த உங்களை மதிக்க, மன்னிக்க மக்கள் முன்வரமாட்டார்கள்.
சார்! இந்த பன்னி லண்டனில் இருந்து கொல்லை புறமா வரும்பொழுதே நினச்சேன்.
நண்பர்களே,
முதலியில் நம் இந்தியர்கள் ஒன்றுமையாக சேருவோம்.நாமும் மாறுவோம் புதிய மலர்ச்சிய கொண்டு வருவோம்.உரிமையை விட்டு கொடுக்காமல் போராடுவோம்.நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு துணிந்து சிறந்த மாற்றத்தை கொண்டுவருவோம்.மக்களை முட்டாளாக்கிய துரோகி சாமிவேலு,பழனிவேலு,தனேதிரன்,உதயகுமார் அவனுடைய தம்பி வேதாமூர்த்தி ( பச்சோந்தி ).வேதா கூலிம் நகரத்துக்கு ( பாய பெசார் ) வந்தால் செருப்பு அடி கண்டிப்பா இருக்கு.சாமிவேலுக்கு கருமாதி செய்ததுபோல் உனக்கு செய்யா நினைக்கிறோம்.மன்னிப்பு கிடையது.ஹிந்ட்ரப் துரோகி…..
கவலைப்படவேணாம் நண்பர்களே. நம்பிக்கை துரோகம் செய்தவன் நல்லா வாழ்ந்தாதா சரித்திரமே இல்லே.இவர்கள் கண்டிப்பாக நமக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.காலம் வரும் நம்மிடம் மன்னிப்பு கேட்க.அப்புறம் கச்சேரி வெச்சிக்குவோம்.உடல் மண்ணுக்கு, உயிர் பக்கடானுக்கு, இதை உறக்க சொல்வோம் பாரிசானுக்கு.
நம்பிக்கை துரோகியும் எட்டப்பனும் தமிழன் இனத்துக்கு புதுசு இல்லை. இதுல வேதா மட்டும் விதிவிலக்கா….
இந்த ஒற்றுமை மட்டும் இன்னும் நம் இனத்தில் காணமுடியவில்லை ….
இந்தியர்கள் என்றென்றும் அடிமைகளாகவே இருக்கவேண்டுமென்று அம்னோ விரும்புகிறது, அதற்கு வேதமூர்த்தி துணை போகிறான், இவனைப்போன்ற சமுதாய துரோகிகளை, நம் சமுதாயத்தை அம்நோவிடம் அடமானம் வைத்தவனை, சமுதாயத்திற்கு துரோகம் செய்துவிட்டு பின் மன்னிப்பு கேட்டுவிட்டால் மக்கள் மன்னித்துவிடுவார்கள் என்று நினைக்கும் இவனைப்போன்ற எட்டப்பன்களை மக்கள் விரட்டியடிக்கவேண்டும், ஒருபோதும் மன்னிக்ககூடாது, யாருக்கு ஒட்டு போடவேண்டுமென்று நமக்கு தெரியும், பாரிசானுக்கு ஒட்டு போடுங்கள் என்று சொல்ல இவன் யார் ?
‘இந்த தேர்தலில் பாரிசான் மீண்டும் வென்றால். மலேசியர்களுக்கு இரு கட்சி ஆட்சி உருவாக கிடைத்த பொன்னான தருணத்தைக் கெடுத்த பாவிகள் என்றும் சோரம் போனவர்கள் என்றும் ஹிண்ட்ராப்பை நான் சாடத்தேவையிலை, அதை வரலாறு செய்யட்டும்’ — மிக மிக அழகான வார்த்தைகளால் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் இவன் ஒரு நவீன எட்டப்பன் என்று.
இளிச்சவாயன்கல் இருக்கும் வரைக்கும், தமிழன் எமற்றுபடுவான். இந்த சமுதாயம் தன்னை தானே உயர்ததிகொல்லவேண்டும். வருங்கள இனம் பொது அறிவு நிறைந்தவர்கள மாறனும்.
MGR பாடல் நீஇவுக்கு வருது. எதனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
சற்று கூர்ந்து கவனித்தால்,அம்னோ எப்படி ஹிண்ட்ராப்வை கொன்றார்கள் என்று எல்லோருக்கும் புரியும்.2007 இல் ஹிண்ட்ராப் இந்தியர்கள் நாடியாக இருந்து இன்று பேடியாக மாற்றி உள்ளனர் அம்னோ குள்ளநரிகள்(அரசியல் நாடகம் சரியாக நடந்து இருக்கிறது).அப்படி என்றால் ஏமாந்தவர்கள் ஹிண்ட்ராப்! ஏமாற்ற பட்டவர்கள் ஹிண்ட்ராப்! இதில் இருந்து தெரிய வருவது இனி வரும் காலங்களில் அனைத்து இந்தியர்களின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள், செயல்கள் அனைத்தும் பொது மக்களின் பார்வைக்கு வைத்த பிறகே அவைகளை செயலாக்க அனுமதிக்க வேண்டும்.இந்நாட்டு இந்தியகளின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சரிவர அமைய எல்லோரின் ஒப்புதல் மிக மிக அவசியம்!!!
அண்ணன்னும் , தம்பிய்ய்மாக , சேர்ந்து ஆப்பு வைதுடாணுங்க, இனிமேல் , MIC, HINDRAF, மற்றும் BN சகா கலையோ நம்பி மோசம் போக வேண்டாம் , ஏமார்ந்தது போதும், இனிமேல் PAS, KEADILAN, DAP இவர்களியாவது ஆதரித்து வேண்டியதை பெற்று கொள்வோம், இன ரீதியாக வாழ்வதை மாற்றி , பல் இன மக்களோடு சேர்ந்து வாழ்வோம்
எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது .மலேசிய இந்தியர்கள் யாவரும் வரும் பொது தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு திரளாக சென்று தவறாது நமது ஓட்டுக்களை போடவேண்டும் … மலாய்க்காரர்கள் மூன்று கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் ! சீனர்கள் மிகவும் சாதுர்யாமாக பாகாடானுக்கு தான் அவர்கள் ஓட்டு என்று விடாப்பிடியாக உள்ளனர் . மலேசிய இந்தியர்கள் விமோசன் வேண்டுமாயின் அம்னோ வையும் நம்மவர்களை இழிவுபடுத்தி காலம் காலமாய் ஏமாற்ற துணைபோன மா ஈ கா , பி பி பி , ஐ பி எப் , கெராக்கான் எந்த கட்சிக்கும் நமது ஆதரவை கொடுக்ககூடாது ! புத்ரா ஜெயாவை கைபற்றினால் தான் நம் வருங்கால சந்ததி இந்த நாட்டில் தன்மானத்தோடு வாழவைக்க mudiyum
எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது .மலேசிய இந்தியர்கள் யாவரும் வரும் பொது தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு திரளாக சென்று தவறாது நமது ஓட்டுக்களை போடவேண்டும் … மலாய்க்காரர்கள் மூன்று கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் ! சீனர்கள் மிகவும் சாதுர்யாமாக பாகாடானுக்கு தான் அவர்கள் ஓட்டு என்று விடாப்பிடியாக உள்ளனர் . மலேசிய இந்தியர்கள் விமோசன் வேண்டுமாயின் அம்னோ வையும் நம்மவர்களை இழிவுபடுத்தி காலம் காலமாய் ஏமாற்ற துணைபோன மா ஈ கா , பி பி பி , ஐ பி எப் , கெராக்கான் எந்த கட்சிக்கும் நமது ஆதரவை கொடுக்ககூடாது ! புத்ரா ஜெயாவை கைபற்றினால் தான் நம் வருங்கால சந்ததி இந்த நாட்டில் தன்மானத்தோடு வாழவைக்க முடியும் . ஓட்டு போடுவது நமது கடமை … 12 தடவை நம்பி போட்ட ஓட்டு நம்மை ஓட ஓட விரட்டியது போதும் . இந்த தடவை அதை தடுத்து நிறுத்தி நம்முடைய நிலைபாட்டை உறுதி செய்வோம் … மக்கள் கட்சி நாட்டை வழி நடத்த … மாற்றம் தான் நிரந்தரம் …..
கிரிமினல் நஜிபின் சதி வலையில், முதலில் பேரா பாக்கத்தான் அரசாங்கத்தை கவுத்தது,நல்லா,தனேந்திரன்,வாங்கியது,தீவிரவாத பெர்கசவை கூட்டு வைத்தது,
இனத்துரோகி அரசியல் வேசி
வேதாவை விலைக்கு வாங்கியது,,இன்னும் பல!!!!! இந்த சதிகாரன மிண்டும் நமக்கு பிரதமர்,, ?????????
ம.இ.கா. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை! அதன் இடத்தை இண்ட்ராப் நிரப்பும் என்னும் பேச்சிக்கே இடமில்லை! மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு வேதமூர்த்தி மீண்டும் லண்டனுக்கே ஓடிவிடுவார்! அங்கே இருந்து கொண்டு இந்நாட்டு இந்தியர்களுக்காக போராடுவார்!
இராமன் ஆண்டாள் என்ன ராவணன்
ஆண்டாள் என்ன என்ற
கோட்பாடு நாட்டு
பற்று
இல்லாத
தன்னலத்தையே குறிக்கிறது. தேர்தல் முடிந்து பதவி கிடைத்தவுடன், இந்தியர்கள் இருந்தால் என்ன
அழிந்தால் என்ன
என்ற சந்தோசம்தான்!!! சந்தர்ப்ப பட்சொந்தி
சார் தங்களுக்கு உள்ள நிதானம் இந்த MIC , PPP , IPF , GERAKAN காரனுக்கு கொச்சம் கூட இல்ல. எல்லாம் சுயநலவாதிகள் சமுதயாட்டை அடகு வைத்து ஏப்பம் விடுறாங்கள். என்ன கொடுமை சார் இது.
சார் இந்த வேதமூர்த்தி ஏக்கனவே லண்டனில் இவன்னுக்கு தேவையானதெல்லாம் சேர்துட்டான் பின் தோற்டுடன் இவன்,ஜம்புலிங்கம்,கணேசன் எல்லோரும் லண்டனுக்கு ஓடி போய்விடுவார்கள்.
நாம் சிங்கமாய் வரும் என்று நினைத்தோம்…. ஆனால் அது புலி தோல் போர்த்திய பன்னி என்று பிறகுதான் தெரிந்தது….. என்ன செய்வது… தேர்தலுக்கு பிறகு பன்னியை ஓட ஓட விரட்ட வேண்டும்… வெற்றி PAKATANUKKE ….
சில நேரங்களில் நம் சில தமிழ்களை பார்க்கும் பொழுது ,கோவம் வருது , கவலையும் கூட , கொஞ்சம் கூட , நாட்டு நடப்புகளை அறிந்திடாமல் , ஏனோ , தானோ, வென்று , Astro Vanavil சீரியல் நாடகங்களை பார்த்து , சீரழிகிறார்கள்., இவர்களை திருத்த முடியாது , திருந்தவும் மாட்டார்கள், இப்போதெல்லாம் வயதான சீன மாதர்கள் , மூதாட்டிகள் கூட , எதிர் கட்சி பிரசாரத்திற்கு குடும்பதிட்டன் சென்று வருகிறார்கள். நடப்பு விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள், நம்மவர்கள் எவன் ஆண்டாள் என்ன, இராவணன் ஆண்டாள் என்ன, நான் serial பார்த்தல் போதும் வென வாழ்கிறார்கள் , எப்போது திருந்துவார்களோ ?
தற்போதைய நிலையில் வேதா (பெயரை சொல்லவே நா கூசுகிறது )சமுதாய நன்மையை விட தன் சுய நலனை முன்வைத்து காய் நகர்த்தி யுள்ளார்.இது மலேசியா வாழ் இந்தியர்களுக்கு நன்கு புரியும்.இவருடன் இருக்கும் கூடம் சிறியது.கல்வி அறிவு இல்லா மற்றும் சில சுயநல,தங்களுக்கு உதவிகள் வேதா மூலம் கிடைக்கும் என நம்பி இக் கூடம் தொடர்கிறது.தேர்தல் முடிந்தவுடன் எவனும் இந்த துரோகியிடம் இருக்கமாட்டார்கள்,பொறுத்திருந்து பாருங்கள்.சிலகாலம் சிலரை ஏமாற்றலாம் எக்காலமும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.சமிவேலுவைபோல்,ஒரு கொம்பனே செருப்படி அளவில் சென்ற காலத்தை கண்டோம்.இவர் ஒரு ஜுஜுபி.நாம் எதிர்கட்சிக்கு வாகளிபோம்.நமது சந்ததி இந்நாட்டில் உரிமையுடன் வாழ.நன்றி.
இனிமேலாவது எவனாவது புதுசா கட்சி கப்படானு ஆரம்பிச்சா, காசு கெடைக்கும், நெலம் கெடைக்கும்னு நம்பி கண்ணா மூடிக்கின்னு பின்னாலேயே போவாதீங்க சாமீ
*** இந்த வேதமூர்த்தி – நஜிப் ஒப்பந்தத்தில், நவம்பர் 25 ஹிண்ராப்ட் போராட்டத்தில் கலந்து கொள்ளாத, உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் கைதாகாமல் தப்பி சென்ற வேதமூர்த்தி, ஏழை இந்திய வாக்காளர்களைக் இறுதி நேரத்தில் பணயம் வைக்கும் வகையில் நடந்து கொண்டது ஏமாற்றத்தை அளிக்கிறது.***
*** இராமர் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று கூறும் இவர்களின் அரசியல் ஆயுதமும் பிரம்மாஸ்திவாரமும் இந்த நஜிப்பின் ஒப்பந்தம் என்றால், இவர்களுக்குப் பொருந்தும் வேடம் சகுனியாகும்.***
*** என்னைப்போல் பலருக்கும் இதுபோன்ற ஆதங்கமும் ஒருவகையான அருவருப்பும் உருவாக காரணம் நாம் இவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கைதான்.***
இந்த கட்டுரை நல்லதோர் ஆய்வு …,நம்பிக்கை துரோகிகளின் …
ஏழைத் தமிழர்களின் பலவீனத்தில் மீன் பிடித்து உண்ணும் வஞ்சகர்களை நன்கு விமர்சித்துள்ளார் .
தமிழர்களே விழிப்போடு இருங்கள் …காலம் காலமாக நம்மை முன்
வைத்து இரத்தம் குடிக்கும் நரிக்கூட்டத்திடம் விலை போய்விடாதீர்கள் !!!
இவன் விருதம் ஆரம்பித்தது 10ஆம் தேதி ஆனால் ROS இவன் அமைப்புக்கு 8ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது என்று இப்போது வெளிச்சதிற்கு வந்துவிட்டது! என்ன நாடகம்! என்ன நாடகம்!
மானங்கெட்ட ம இ கா t mohan,saravanan,எப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்! ஒரே பொய் செய்தியை பல தமிழ் செய்திதாள்களில் போட்டு மக்களை எரிச்சல் மூட்டுகிறார்கள்! 5 நிமிடத்தில் கட்சி மாறிய கதை எல்லாம் எங்களுக்கு நன்றாக புரியும்! இந்நாட்டு இந்திய மக்களின் மனதை புண்படுத்திய ஜுல்கிப்ளியை தேர்வு செய்தது அம்னோ/பின்! ஏன் அவனை மட்டும் தோற்கடிக்க வேண்டும்? எங்களை பொறுத்த வரை இதுவே WW3, ஒட்டு மொத்த அம்னோ/பின் ஆட்சியை வேரோடு அழிக்க முச்சு இருக்கும் போராடுவோம்!!!
நண்பர் கண்டிப்பா இந்த தடவை மஇகாவுக்கு ஒட்டு மொத்தமா அப்பு வைப்போம்.
” மஇகா இடத்தை, ஹிண்ட்ராப் நிரப்புகிறது!” what???? ஏன் தலை முடி யை தான் பிடுங்கு கிறது ,
மேலே படத்தை பாருங்க! போங்கடா சொனகிரிங்க்கள! நல்ல ஏமாந்தீங்கள? என்று சொல்வது போல இல்லை? நமக்கு வேணும்..இதுவும் வேணும்..இன்னமும் வேணும்…… இனியாவது முன் எச்சரிக்கையாக இருப்போமா??
ஐயா , நீங்க சொல்வதுபோல் தான் நடக்கப் போகிறது இந்த தேர்தலோடு MIC கூடாரம் காலியாகிறது . அந்த இடத்தை நிரப்ப ஹிண்ட்ராப் இனத் துரோகிகள்தான் அமரப் போகிறது.
இப்பொழுது தெரிகிறதா இந்த வேதா ஒரு இனக்கொடுங்க்கோலன் என்று இந்தியர்களே இன்னும் விழிக்க வில்லை என்றால் இந்த நாட்டில் நம்மை ஏமாற்ற நிறைய இந்திய கட்சிகள் உதயமாகும் ஜாக்கிரத்தை .
கடந்த ஒரு வாரமாஹ் தமிழ் தினசரியில் ஹிந்ட்ரப் கட்சி முழு பக்க அறிவரிக்கை கொடுத்து வருகிறது. எது இவளுவு பானம் திடீர் என்று. வேதா திடீர் பணக்காரன் ஆஹி விட்டன. சலும் டாக் மில்லியனோர் ஆஹி விட்டான் என்று தோன்றுகிறது.
நம் சமுதாயம் பிரச்னை வந்தால் ஒன்று கூடுவோம் ,பணம் பட்டம் பதவி கிடைததும், நண்டாக உறுமரிவிடுகிறோம் . சம்திங் wrong . Anneh
ஹிந்ட்ரப் மேல் அதிகம் நம்பிக்கை வைடிரிதேன் ஈப்படயும் ஒரு தமிழன் இருக்கின்றன ஈந்த மலேசியா மண்ணில், அனல் கடைசில் நன்பிக்கை துரோகம் செயடுவிண்டன் அவன் தான் வேதமுர்ஹி. நான் அதிகம் வருத்தம் படுகிறேன். நீ வல்கே. உனக்கு கால்கள் பதில் சொல்லடும்.
இந்த வேதா என்ற கழிசடையை அரசியலில் செல்லாக் காசாக்கி துக்கி எறியுங்கள் உண்மை தமிழர்களே.
எல்லாரும் என் அன்வர் ஒப்புக் கொள்ள் வில்லை என்று கேட்கவில்லை ?
தேர்தல் முடியட்டும்,அவர்களை பிடித்து விசாரணை கூண்டில் நிறுத்தி piece piece ஆகா டர்ர்! யாரை முட்டாளாக்க பார்க்கிறார்கள்? ROS ஒப்புதல் 8ஆம் தேதி,10 ஆம் தேதி பொறம்போக்கு முதேவிமூர்த்தி குடும்பம் உண்ணாவிருத நாடகம்? என்ன விலைக்கு மலேசியா இந்தியகளை பேரம் பேசினான்? அனைத்தும் சீக்கிரத்தில் வெளிவரும்! ஆட்சியை மாற்றுவோம் அம்னோ/பின் ஆனவக்காரகள் ஆட்சிக்கு முற்று புள்ளி வைப்போம்! சூறையாடப்பட்ட நம் உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்துவோம்,
சம உரிமையே சமுத்தாயத்தின் உரிமை!!!
பி கே ஆரும் பி என் போன்று இனவாத கட்சியாக இருந்தால் கேட்கலாம். மேலும் வேதா தான் ஒரு புற வழி வியாபாரி என்பதை திருபித்து விட்டான். இனி எதற்கு இவன் ந சமுதாயத்தை வழி நடத்த?
நல்லது . இதே வேகம் பாக்கத்தான் ஆட்சிக்கு வந்தாலும் இருக்கட்டும். உரிமை நிலை நாட்டப்படவில்லையென்றால் கேள்வி கேட்க தயாரா ? பாக்கத்தான் 100 நாட்களுக்குள் 350,000 இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையை தீர்காவிட்டல் என்ன செய்வதாக உத்தேசம் ?
எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுது! சார், குடுத்தால் தானே தெரியும் முடியும்மா,முடியாத என்று! நான்னே இருப்பேன் என்றால் எப்படி,சுயநலம் தானே!