தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைக்கு அரசு பணி

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைக்கு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திருநங்கை குணவதி (வயது 23). இவர் எம்.ஏ.(ஆங்கிலம்) முதுகலை பட்டப் படிப்பு மற்றும் கணிப் பொறி ஆசிரியர் பயிற்சி படித்துள்ளார். முதுகலை பட்டம் பெற்று இருந்தாலும், குணவதி திருநங்கையாக இருந்ததால் பல…

கடிதம் படித்து கண்ணீர் வடித்த ஆஸ்திரேலிய பிரதமர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜூலியா கில்லர்டு தனது திட்டங்கள் பற்றி விளக்கிக் கொண்டிருக்கையில், மக்கள் எழுதிய கடிதம் ஒன்றை படித்து உணர்ச்சி வசப்பட்டு அழுதார். ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு…

முள்ளிவாய்க்கால் 4-ஆம் ஆண்டு நினைவுநாள்

கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வோர்…

ஐபிஎல் போட்டி முறைகேடுகள்: மூன்று கிரிக்கெட் வீரர்கள் கைது

இந்தியா மட்டுமல்லமால் கிரிக்கெட் உலகில் மிகப் பிரபலமாகவும் பல கோடி ரூபாய்கள் பணம் புழங்கும் ஐ பி எல் போட்டிகள் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் உட்பட மூன்று பேர் முறைகேடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ்…

ஓய்வு பெறுகிறார் டேவிட் பெக்கம்

புகழ்பெற்ற முன்னாள் இங்கிலாந்து கால்பந்து விளையாட்டுக்குழுவின் தலைவர், டேவிட் பெக்கம், இந்த விளையாட்டு சீசனுக்குப் பின்னர் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. மான்செஸ்டர் யுனைடட் கிளப்புக்காக ஆடிய தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய டேவிட் பெக்கம், பல பதக்கங்களை வென்றுள்ளார். 38 வயதான இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும்…

இனவாதத்தை ஒழிப்போம்… (பூங்குழலி)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

தமிழகம் வாழ் இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான நலமேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு கட்டமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதுதவிர பாடசாலை கல்வி கற்கின்ற இலங்கை அகதி  மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும்…

‘காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது சர்ச்சைக்குரியது’ : பிரிட்டிஷ் துணைப் பிரதமர்

இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரிட்டனின் முடிவு சர்ச்சைக்குரியது என்று பிரிட்டிஷ் துணைப் பிரதமரும் லிபரல் டெமொகிரடிக் கட்சியின் தலைவருமான நிக் கிளெக் கூறியுள்ளார். இலங்கை மனித உரிமைகளை மீறியிருக்கும் நிலையில் பிரிட்டனின் இப்படியான முடிவு சர்ச்சைக்குரியது என்று அவர் கூறியுள்ளார். மனித உரிமை மீறல்களை…

தாய் மொழிப் பள்ளிகளுக்கு மீண்டும் சாவு மணி அடிக்கத் தொடங்கிவிட்டார்களா?

மாரா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தின்  இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட், "13 வது பொதுத் தேர்தல் முடிவுகள் : முஸ்லிம் தலைமைத்துவமும் உயிர் வாழ்வும்" என்ற கருத்தரங்கில் , மலேசியாவில் ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டுமாயின் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை அகற்ற வேண்டுமென்று திருவாய்…

தீவிரவாதிகளின் எழுச்சியால் நைஜீரியாவில் அவசரநிலைப் பிரகடனம்

ஆப்பிரிகாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தனமையை பலஹீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர். இதனால்,…

சனல் 4 காணொளிகள் குறித்து இலங்கை அரசு விசாரணை

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கை போர்க்குற்றம் குறித்த காணொளிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தலைமை தூதுவர் பி.எம். ஹம்சா நேற்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். இந்த காணொளிகளுக்கான உண்மையான ஆதாரங்களை…

அடை மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

இலங்கையின் வடக்கு கிழக்கில் கரையோரப் பகுதிகளை தாக்கியிருந்த மகாசென் சூறாவளியுடன் மலையகத்தில் அடைமழை காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஹட்டனில் வௌ்ளத்தில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 1115 குடும்பங்களைச்சேர்ந்த 4 ஆயிரத்து எண்ணூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 700 க்கும் அதிகமானோர்…

100 கோடி செலவில் மதுரையில் தமிழ்த் தாய் சிலை: ஜெயலலிதா…

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த்தாய் சிலை ஒன்று நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் கலை இலக்கியச் செல்வங்களையும் கட்டிடக்கலை நாகரீகப் பெருமைகளையும் உலகுக்கு பறைசாற்றும்படி தமிழ்த்தாய் சிலை…

காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னதாக மனித உரிமை வேலைத்திட்டம்

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, அங்கு மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான செயல்நுட்ப உதவிகளை (Technical support) வழங்க காமன்வெல்த் செயலகம் முன்வந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றி தேசிய மட்டத்திலான விசாரணை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை :…

தமிழரசுக் கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை. எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான சிவில் அமைப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பில்…

இனப்படுகொலை : குவாத்தமாலா முன்னாள் ஆட்சியாளருக்கு 80 வருடச் சிறை

குவாத்தமாலாவின் இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போரின் போது அந்த நாட்டுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட் அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1980களின் முற்பகுதிகளில், தனது ஆட்சிக்காலத்தின் போது, லிக்ஸ்ஸின் மாயா இனக்குழுவைச் சேர்ந்த 1800 பேரை…

ஆபிரிக்க நாடுகளின் பக்கம் திரும்பும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை

இலங்கை, தமது வெளிநாட்டுக் கொள்கைகளின் ஊடாக பெற்றுக் கொள்ளக் கூடிய அனுகூலங்களை ஆபிரிக்க நாடுகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தினால் இலங்கைக்கு பல அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜனாதிபதி…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு

வெளிநாடுகளிலும் அகதிகளாக வசிக்கும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு உடனடியாக நிராகரித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் உள்ள இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்ட மூலத்தினூடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.…

தொலைக்காட்சி நிகழ்ச்சியால் அவமானம் : வாலிபர் கொலை

திருச்சி உறையூரை சேர்ந்த முருகானந்தம். சில நாட்களுக்கு முன்பு கடத்தி வரப்பட்டு கொடைக்கானல் வனப்பகுதியில் கழுத்தை அறுத்து, எரித்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சரணடைந்த சரவணன் 28, மணிவண்ணன் 21, கள்ளக்காதலி சுதா 36, முருகானந்தத்தின் தாய் பாப்பாத்தி 60, தந்தை கந்தசாமி 80 ஆகியோரை திருச்சி போலீசார்…

சோனியாகாந்தி பாதுகாப்புக்கு பெண் கமாண்டோ படை

வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பை சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களில் தற்போது 35 பெண் கமாண்டோக்களே உள்ளனர். இவர்கள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடை பெற உள்ளதால் வி.வி.ஐ.…

நவாஸ் ஷெரிப் வெற்றியை புகழ்ந்து தள்ளியுள்ள இந்திய நாளிதழ்கள்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை இந்தியப் பத்திரிகைகள் புகழ்ந்துதள்ளியுள்ளன. இந்தியாவுடனான அமைதிப் பேச்சுக்களுக்கு நவாஸ் ஷெரிப்பின் வெற்றி நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றும் நாளிதழ்கள் கூறியுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஷெரிப்புக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரிப் இந்தியாவுக்கு விஜயம்…