ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம்; 18 பேர் கைது

மாணவர் போராளி ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஜிஞ்சங் காவல்நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஊர்வலத்தின்போது 18 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக மே 13 ஆம் தேதி போராட்டம் நடத்தியதாக கூறி சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான ஆடாம் அலியை காவல்துறையினர்…

ஒற்றைக்கண் ஒப்பாறி… (குணாளன்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

மலரப் போகும் தமிழீழம் : முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின்…

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப் பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டு நினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும்…

இந்தியாவும், சீனாவும் இனி, கூட்டாளிகள் என்கிறார் சீனப் பிரதமர்

டெல்லி: இந்தியாவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது, எல்லைப் பிரச்சினை தீர்ந்தது. இந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் அல்ல, கூட்டாளிகள் என சீனப் பிரதமர் லீ தெரிவித்துள்ளார். 3 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்த சீனப்பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங்குடன் விரிவான…

நான்கு லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன ‘ போல்ட்’ புறா

மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது. பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம்…

இமயமலையில் ஏறி சாதனை படைத்த காலை இழந்த அருணிமா சின்ஹா

இந்தியாவைச் சேர்ந்த அருணிமா சின்ஹா என்ற ஒரு காலை மட்டுமே கொண்ட பெண் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால் ஒரு காலை இழந்த இளம் பெண் அருணிமா சின்ஹா .…

பாதுகாப்பு விஷயங்கள் குறித்து இந்திய ஆப்கான் தலைவர்கள் பேச்சு

இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயமாக வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று பின்னேரம் சந்தித்து பேசுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகளை அதிகரிக்கக் கோரி கர்சாய் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று கருதப்படுகிறது. ஆப்கானிய அதிகாரிகளுக்கு…

அமெரிக்காவில் பெரும் சூறாவளி : பள்ளிக் குழந்தைகள் உள்பட 51…

அமெரிக்கா ஓக்லஹோமா மாகாண புறநகர் பகுதியான மூரேவில் 55,000 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை 200 மைல் (320 கிலோமீட்டர்) வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளி நேற்று தாக்கியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய இந்த சூறாவளிக்கு வீடுகள், பள்ளிகள் என பல இடங்கள் சூறையாடப்பட்டன. சில இடங்கள்…

முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலத்திரனியல் பொறியியலாளரான குறித்த நபர் வான் வழியாக இந்தியாவை அடைந்ததாக முதலில் தெரிவித்துள்ளார். எனினும், நீண்ட விசாரணைகளின்…

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் : தமிழக முதல்வர்

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா-இலங்கை இடையே, கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவானது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர்…

பாகிஸ்தான் மறுவாக்குப்பதிவு: இம்ரான் கான் கட்சி வெற்றி

பாகிஸ்தானில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, கள்ள ஓட்டு போட்டதாக எழுந்த புகாரையடுத்து கராச்சி பாராளுமன்றத் தொகுதி எண் 250-ல் உள்ள 43 வாக்குச்சாவடிகளில் கடந்த நேற்று மறுவாக்குப்பதிவு…

புலிகளைப் பிளவுபடுத்தவே பிரேமதாச ஆயுதங்களைக் கொடுத்தார்

தமிழீழ விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே தனது தந்தை அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர். பிரேமதாசவின் மகனும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக எனது தந்தை மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்த அந்த ஆயுதங்கள்…

இலங்கையில் மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் இன்னும் இடமில்லை

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும்…

போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்

கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டமாக நடத்திப் பேசினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். பத்து மணிக்குள் பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் வலியுறுத்தியிருந்தனர். அதற்கு முன்னமே 9 மணி…

இமான் இசையில் சொந்தக் குரலில் பாடிய வடிவேலு

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் படத்தில் வடிவேலு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். அரசியலில் சிக்கி கரையொதுங்கிய வடிவேலு சினிமாவை விட்டு விலக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார். இப்போது அவரது வனவாசம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு, இப்போது யுவராஜ் இயக்கும்…

உயிர்த் தோழியை மணக்க விரும்பிய மாணவி: மறுத்ததால் கத்திகுத்து

பிவானி: ஹரியானா மாநிலத்தில் 17 வயது மாணவி ஒருவர் தன்னுடைய தோழியை மணக்க ஆசைப்பட்டுள்ளார். தோழி மறுத்ததால் அவரை கத்தியால் குத்திய மாணவி கைது செய்யப்பட்டார். ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம், சன்வார் கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் 17 வயது சரிகா (பெயர்…

மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றம்?: கலக்கத்தில் அமைச்சர்கள்

சென்னை: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும்பாலன அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளளனர் என்று கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினார். இதையடுத்து அவர் ஆதரவாளர்கள் சிலர் மீது…

லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வு : ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ''மார்பிள் ஆர்ச்'' பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ''பிக்காடிலி சர்க்கஸ்'' வரை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு…

‘புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை’: மகிந்த ராஜபக்ஷ

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 'படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் Read More

தமிழர் தாயகப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்

இலங்கையின் இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவுதின நிகழ்வுகள் Read More

நான் ஒரு மலேசியன் (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

LTTE தலைவர் பிரபாகரன் படம் : நாம் தமிழர் கட்சி…

கடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை வாங்க மறுத்த அக்கட்சியின் பொறுப்பாளர் வீட்டில் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது…