பவானி இந்தியாவிற்கு போகவேண்டுமாம்; கூறுகிறார் அம்னோ இனவாதி!

"பவானி உனக்கு இலவசக் கல்வி வேண்டும் என்றால், உன் தாய் நாடான இந்தியாவுக்குப் போ, அங்கு இலவசமாக கிடைக்கும்" என்று இனவாத கட்சியான அம்னோ மகளிர் பிரிவைச் சேர்ந்த நோர் ஹயாத்தி சைடின் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார். தோட்டப்புறங்களில் வாழும்போது கழிப்பறை பற்றிகூட அறிந்திராத இந்தியர்கள், இப்போது எல்லாம்…

கடவுளை சாந்தப்படுத்த 100 அடி எரிகல் பள்ளத்தில் குதித்த இந்தியர்

அரிசோனா: அரிசோனாவில் கடவுளை சாந்தப்படுத்துவதாக கூறி, எரி கல்லால் உருவான 100 அடி பள்ளத்தில் குதித்த இந்தியரை, 8 மணி நேர போராட்டத்துக்கு பின் போலிசார் மீட்டனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூனியன் சிட்டியைச் சேர்ந்தவர் பர்மிர்ந்தர் சிங் (28). இவர் கடந்த 11ம் தேதி, திடீரென…

‘Go to India’, Umno woman tells Bawani

The critical comments of a Wanita Umno member regarding law student KS Bawani is causing a stir. In her Facebook posting, Norhayati Saiddin wrote: “Deii Bawani.. kalau mau pendidikan percuma tanggechi pergi ler belajar sana…

ராஜபக்சேவிற்கு எதிராக ஒன்றுசேரும் இரு சிங்கள தலைவர்கள்!

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்னாள் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்கவுடன் இணைந்து செயற்பட தயார் என்று இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிராணி பண்டாரநாயக்க ராஜபக்சே தலைமையிலான அரசினால் பழிவாங்கப்பட்டு அவருக்கும் தமது நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மறைந்துபோய் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை நிலைநாட்ட பண்டாரநாயக்கவுடன்…

இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ரெங்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி பாதுகாப்பாக உள்ளது. கடந்த 1945-ல் இருந்து கோயிலின் மூன்று தலைமுறை குருக்கள் இதை பாதுகாத்து வருகிறார்கள். இந்தநிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை இறுதி சடங்கு செய்வதற்காக இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு…

பாகிஸ்தான் பிரதமரை கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப்ஐ கைதுசெய்யுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமரையும் அவருடன் சேர்த்து இன்னும் 15 பேரையும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 2010-ம் ஆண்டில் நீர் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தபோது, அரச செயற்திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது பெருமளவு…

தமிழர் திருநாளுக்கான கனேடிய மாநாகர மன்றங்களின் அங்கீகாரம் பெருமைக்குரியது

தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் தமிழர்களின் வாழ்வியலின் நம்பிக்கைச் சொல்வழிக்கமைய தமிழர் மரபுத் திங்களென தை மாதத்தினை தமிழினத்தின் பாராம்பரிய மாதமாக கனடாவிலுள்ள மாநகர மன்றங்கள் பல அங்கீகரித்துள்ளமையானது  பெருமைக்குரிய விடயமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தின் கலை…

மாட்டிறைச்சி பர்கரில் குதிரை மாமிசக் கலப்பு

பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து குடியரசில் உள்ள பல சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாட்டிறைச்சி பர்கர்களில் குதிரை மாமிசம் கலந்திருப்பது குறித்து உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பல நிறுவனங்கள் இந்த இரு நாடுகளுக்கும் மாட்டிறைச்சி என்று விற்ற உணவுப் பொருட்களில், குதிரை மற்றும்…

தமிழ் நாளிதழ்களின் சுதந்திரத்தைப் பறிக்காதே!

மலேசியாவில் வெளிவரும் ஐந்து தமிழ் நாளிதழ்களும் மலேசிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, காலனித்துவ காலக்கட்டத்தில் தமிழ் நாளிதழ்கள் ஆற்றிய பங்கு அளப்பறியது. அது போலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக அவை மக்களின் குமுறல்களை வெளிக்கொணரும் முதன்மை சாதனமாக விளங்கின. அந்நிலைக்கு ஆபத்து வந்துவிட்டதாகவும்…

இரக்கம் இறந்துவிட்டது… (பிரேமா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

சார்ல்ஸ் சந்தியாகோ: மாற்றம் தேவை என மக்கள் எழுச்சியடைய தொடங்கி…

நூறாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பயத்தை தகர்த்து, அவர்களின் கோரிக்கையை முன்வைத்து மெர்டேகா அரங்கத்திற்கு ஊர்வலம் சென்ற அந்தக் காட்சி ஒரு புதிய விடியலை கோரும் மக்கள் அலை என்பதனை உணர்த்தியதுள்ளதாக கூறுகிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்-கும் எதிர்கட்சித்…

மாலியில் பயங்கரவாதிகளை ஒடுக்க பிரான்ஸ் படைகள் விமான தாக்குதல்

பாமகோ: ஆப்ரிக்க நாடான மாலியில், பயங்கரவாதிகளை ஒடுக்க பிரான்ஸ் நாட்டு படைகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன. ஆப்ரிக்க நாடான மாலியில், அல் குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது. இதையடுத்து, கடந்த…

மதுரையில் ‘குடி’க்கு சாவு மணி அடித்த ‘மது விலக்கு கிராமம்’

மதுரை: தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள். இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு…

உலகின் அதிக வயதான ஜப்பான் மூதாட்டி மரணம்

டோக்கியோ: உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமை பெற்ற ஜப்பான் பாட்டி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 115. உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி. 115 வயதான இவர் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம்…

காவல்துறை பாதுகாப்பு கோருகிறார் இலங்கை தலைமை நீதிபதி

இலங்கை தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தனது பணி நீக்கத்திக்கான கடிதத்தை பெற்ற போதும் அவர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயார் இல்லை தெரிவிக்கப்படுகிறது. அதுவேளை, ஷிராணி பண்டாரநாயக்க தற்போதும் தலைமை நீதிபதி என்ற வகையில் அவர் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்டரீதியாக காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

சிங்கள இராணுவத்திலிருந்து 71458 பேர் தப்பியோட்டம்!

சிங்கள இராணுவப் படையிலிருந்து கடந்த ஆண்டு 71ஆயிரத்து 458 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2012ம் ஆண்டின் முதல் காலாண்டில் பணிக்குத் திரும்பத் தவறிய படையினரின் எண்ணிக்கையே 71ஆயிரத்து 458 பேராகும். இவர்களில் 33ஆயிரத்து 532 பேர் இராணுவ நடைமுறைகளின் கீழ், இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ளபடையினரைத்…

இந்திய சமுதாயம் இலவச அரிசிக்காக தெருவில் கையேந்தி நிற்கின்றது!

இந்தப் படம் நேற்று செமின்ஞியில் பிரதமர் நஜீப் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக இலவச அரிசி பொட்டலங்கள் கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாகும். ஒரு அரிசி பொட்டலத்துக்காக இந்தியர்களை கையேந்த வைத்து பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டனர். இந்த நிலமை மாற வேண்டும்.…

வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வாசகர்கள் அனைவருக்கும் செம்பருத்தி இணையத்தளத்தின் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 'இல்லங்கள்தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள்தோறும் தங்கட்டும் இன்பங்கள்!' மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளைபொருள்களை வைத்து புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று இறைவனை…

நூறுக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை

இறுதிப் போரின் பின்னரும், நலன்புரி நிலையத்தில் இருந்த போதும் இராணுவத்தினரிடம் சரணடைந்து ஓர் ஆண்டு புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 313 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் பெரும்பலானோர் நீதிமன்ற உத்தரவையடுத்து புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள…

பேருந்தில் சென்ற பெண் மீது மீண்டும் பாலியல் வல்லுறவு தாக்குதல்

பேருந்தில் சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வேறொரு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆண்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழாவது நபரைப் போலிசார் தேடிவருகின்றனர். பேருந்தில் தனியொரு பயணியாக இந்தப் பெண் இருந்த சந்தர்ப்பத்தை அப்பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் பயன்படுத்திக்கொண்டு,…

இலங்கை தலைமை நீதிபதியை பணி நீக்கம் செய்தார் ராஜபக்சே

இலங்கையின் தலைமை நீதிபதி பணியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை பணி நீக்கம் செய்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஷிராணிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கொண்டுவந்திருந்த கண்டன பணி நீக்கத் தீர்மானத்தை ஆதரித்து நாடாளுமன்றம் வாக்களித்து ஓரிரு நாட்களில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு வருகிறது. ஷிராணியை பொறுப்பிலிருந்து அகற்றும்…

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக லியோனெல் மெஸ்ஸி

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பல்லோன் தோர் (Ballon d'Or) தங்கப் பந்து விருதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக அர்ஜெண்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி வென்றுள்ளார். பார்சலோனா கால்பந்தாட்டக் கழகத்துக்கு விளையாடிவரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக விளையாடும் ஸ்பெயினின் அந்த்ரெஸ் இனியஸ்தாவையும், ரியல் மட்ரிட் கழகத்துக்காக விளையாடும்…

மனைவி மீதுள்ள பாசத்தால் பாஸ்போர்ட்டை கிழித்த கணவர்!

இத்தாலி செல்வதற்காக, விமானத்தில் அமர்ந்திருந்த நபர், மனைவியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால், பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தார். பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது குஜராத் மாவட்டம். இந்த பகுதியை சேர்ந்தவர் பைசல் அலி; வேலை நிமித்தமாக, இத்தாலிக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக, நேற்று முன்தினம், லாகூர் விமான நிலையத்திற்கு சென்று…