கோவிட்-19: சிறையில் ஒரு பாதிப்பு உட்பட 18 புதிய பாதிப்புகள்

இன்று பிற்பகல் வரை, மலேசியாவில் கோவிட்-19 இன் 18 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சபாவில் உள்ள ஒரு கைதியும் உட்பட்டுள்ளார். சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையை தொடர்ந்து அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டார். இன்று ஒரு அறிக்கையில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர்…

அன்வார்: குறிப்பிட்ட சிலரைப் போல நான் சதி திட்டம் ஏதும்…

"சிலரைப் போல" தான் சதி திட்டம் ஏதும் தீட்டவில்லை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். சில தேசிய கூட்டணி (பிஎன்) தலைவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக அவர் இதைத் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீனுடன் அவரின் சமீபத்திய சந்திப்பைப் பற்றி கேட்டபோது, “அது குறித்து…

அரசியல் சதி ஆட்டங்களை நிராகரிக்கவும் – அன்வார் இப்ராஹிம்

அரசியல் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் நிராகரிக்குமாறு பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஷாஃபி அப்தாலை எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அன்வார் இவ்வாறு கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் பதிவிட்ட அன்வார், "அரசியல் சதி ஆட்டங்களை நிராகரிக்கவும்" என்று…

பிரதமர் வேட்பாளராக ஷாஃபி: அப்தால்?

வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்தாலை எதிர்க்கட்சியின் பிரதமராக ஆதரித்துள்ள டாக்டர் மகாதீர் முகமதுவின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை பி.கே.ஆரை நிலைகுலைய வைத்துள்ளது. மகாதீரை பிரதமர் வேட்பாளராக பெயரிட பி.கே.ஆர் கடுமையாக எதிர்த்தது. அதோடு, பி.கே.ஆர் அதன் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை பிரதமர் பதவிக்கு வலியுறுத்தியுள்ள நிலையில், மகாதீர்…

முகிதீன் மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்கிறது பாஸ்

ஜூலை 13 முதல் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்க, பிரதமர் முகிதீன் யாசினுக்கு ஆதரவாக பாஸ் நம்பிக்கை தீர்மனத்தை சமர்ப்பித்துள்ளது என்று அதன் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் தெரிவித்தார். மார்ச் மாதம் தொடங்கி, நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தி, மக்கள் மீது தலைமைத்துவத்தையும் அக்கறையையும் காட்டிய முகிதீனிக்கு…

மலேசிய வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார்

சபாநாயகர் முகமட் அரிஃப் முகமட் யூசோப் மற்றும் அவரது துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகியோரை மாற்றுவதற்கான தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார் பிரதமர் முகிதீன் யாசின். மற்றொரு துணை சபாநாயகர், பாத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் ஹஸ்னோன் இதில் பாதிக்கப்படவில்லை. அவரை மாற்றுவதற்கான தீர்மானம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை.…

10 புதிய பாதிப்புகள், 6 உள்ளூர் நோய்த்தொற்றுகள்

நண்பகல் நிலவரப்படி, மலேசியா 10 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதனால் இன்றுவரை நாட்டில் மொத்தம் 8,616 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்று பிற்பகல் ஒரு ஊடக அறிக்கையில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் 14 பேர் மீண்டு வரந்துள்ளதாகக் கூறினார். இது குணமடைந்த…

பிரதமர்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்

பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் ஊழல் தடுப்புக்கான சிறப்பு அமைச்சரவை குழு (ஜே.கே.கே.எம்.ஆர்)/Jawatankuasa Khas Kabinet Mengenai Anti-Rasuah (JKKMAR) இன்று பாக்காத்தான் ஹராப்பான் நிர்வாக குழுவின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. "இந்த சந்திப்புக் கூட்டம், முந்தைய ஜே.கே.கே.எம்.ஆர் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளுடன் உடன்பட்டு சில…

நான் ஏன் முகிதீனுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை? – மகாதீர்

பிரதமர் முகிதீன் யாசினுக்கு ஆதரவளித்து ஒத்துழைக்க பலர் எனக்கு அறிவுறுத்தினர். நான் ஏன் முகிதீனுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை என்பதை விளக்குகிறேன். நானும் அவரும் பல நண்பர்களுடன் இணைந்து நஜிப் ரசாக்கின் கிளெப்டோக்ராடிக் அரசாங்கத்தை அகற்றுவதற்காக மலேசியாவின் பெர்சத்து கட்சியை உருவாக்கினோம். இது எங்கள் போராட்டம் என்று மக்கள் நம்பினார்கள்.…

கோவிட்-19: 4 புதிய பாதிப்புகள், 40 மீட்புகள்

நான்கு புதிய கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் மட்டுமே இன்று பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,600 ஆக கொண்டுவந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "நான்கு புதிய பாதிப்புகளில், மூன்று பாதிப்புகள் மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகளின்…

நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்கவும் – அம்னோ

சிங்கப்பூர் பிரதமரை பின்பற்றி, நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்கவும் - அம்னோ அறிவுறுத்தல் 15வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்க நாடாளுமன்றத்தை கலைக்க சிங்கப்பூரின் வழியை பின்பற்றுமாறு அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் பிரதமர் முகிதீன் யாசினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்காலத்தில் அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு நல்ல நம்பகமான ஆணை…

சைபுதீன்: கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் பாக்காத்தான் கூட்டணி உறுதியாகவே உள்ளது

பிரதமர் வேட்பாளர் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) உறுதியாகவே உள்ளது என்று பி.கே.ஆர் பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் வலியுறுத்தினார். பி.கே.ஆர், டி.ஏ.பி, அமானா ஆகியவற்றுக்கு இடையிலான உறவில் எந்த மாற்றமும் இல்லை என்று சைபுதீன் கூறினார். டிஏபி மற்றும் அமானா ஆகியவை டாக்டர்…

கோவிட்-19: மேலும் 6 நேர்மறை பாதிப்புகள், 3 புதிய திரளைகள்

இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியா ஆறு புதிய கோவிட்-19 பாதிப்புகளைப் பதிவு செய்து, மொத்த எண்ணிக்கையை 8,231 ஆகக் கொண்டு வந்தது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு பாதிப்புகளும் உள்ளூர் தொற்றுநோய்களின்…

பள்ளி விடுமுறைகள் குறைப்பு, மறுபரிசீலனை செய்யுமாறு NUTP அழைப்பு

2020 பள்ளி விடுமுறைகள் குறித்து கல்வி அட்டவணையில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய எதிர்ப்பார்ப்பதாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் (என்.யு.டி.பி) தலைவர் அமினுதீன் அவாங், தெரிவித்துள்ளார். இரண்டாவது மற்றும் ஆண்டு இறுதி பள்ளி விடுமுறை நாட்கள் குறைக்கப்படுவது, குறிப்பாக சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் கற்பிகும் தீபகற்பத்தைச் சேர்ந்த…

பிரதமர் பதவி இல்லை என்றால் கூட்டணியை முடிவுக்கு கொண்டுவர தயார்…

பிரதமர் பதவிக்கு அவர் போட்டியிடுவதை கட்சி தொடர்ந்து எதிர்த்தால், பி.கே.ஆருடனான தனது கூட்டணியை முடிவுக்கு கொண்டுவர டாக்டர் மகாதீர் முகமது தயாராக உள்ளார் என தெரிவித்துள்ளார். சின் செவ் டெய்லிக்கு அளித்த சிறப்பு பேட்டியில், பாக்காத்தான் பிளஸின் பிரதமர் வேட்பாளருக்கான தடைகள் தீர்க்கப்படாவிட்டால், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன்…

“வழிகாட்டி அமைச்சராக இருக்க எனக்கு விருப்பமில்லை” டாக்டர் மகாதீர்

மத்திய அரசை மீண்டும் கைப்பற்றினால், அமைச்சரவையில் சிறப்பு பதவியில் டாக்டர் மகாதீர் நியமிக்கப்படுவார் என்ற பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் யோசனையை நிராகரித்துள்ளார் டாக்டர் மகாதீர் முகமது. அன்வார் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமரான மகாதீர் அவரது வழிகாட்டியாகவோ அல்லது அரசாங்க ஆலோசகராகவோ நியமிக்கப்படலாம் என்றும்…

கோவிட்-19: 3 புதிய பாதிப்புகள், ஒன்பது மீட்புகள்

மூன்று புதிய கோவிட்-19 பாதிப்புகள் மட்டுமே இன்று பதிவாகியுள்ளன. இது மலேசியாவில் மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,590 ஆகக் கொண்டு வந்துள்ளது. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இரண்டு பாதிப்புகள் மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் மற்றும் ஒரு மலேசியர் சம்பந்தப்பட்ட பாதிப்பும் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.…

புக்கிட் அமானில் விசாரிக்கப்பட்டார் ஹன்னா யோஹ்

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை குறித்து விசாரணைக்கு உதவுவதற்காக செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோஹ்விடமிருந்து காவல்துறையினர் இன்று காலை ஒரு விசாரணையை முடித்துள்ளனர். யோஹ் தனது இரண்டு வழக்கறிஞர்களான கோபிந்த் சிங் தியோ மற்றும் சியாரிட்சான் ஜோஹனுடன் புக்கிட் அமானுக்கு சென்றிருந்தார். அங்கு அவர்…

சினி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளரான பெர்சத்து உறுப்பினரை ஆதரிக்கிறார் டாக்டர்…

ஜூலை 4, 2020ல் நடைபெறும் சினி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தெங்கு ஜைனுல் ஹிஷாம் உசினுக்கு தனது தனிப்பட்ட ஆதரவை அறிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட். சினி வாக்காளர்களுக்கான சிறப்பு வீடியோவில், பெர்சத்து கட்சியின் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சுயேட்சை வேட்பாளர் தெங்கு…

செராடோக் பி.கே.ஆர் கிளை: 25 அடிமட்டத் தலைவர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்

29 செராடோக் பி.கே.ஆர் கிளை உறுப்பினர்களிலிருந்து மொத்தம் 25 அடிமட்டத் தலைவர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். பி.கே.ஆர் அரசியலமைப்பின் படி, இனி தேசிய பி.கே.ஆர் தலைமை அக்கிளையின் நிர்வாகத்தை இடைநிறுத்தவோ, கலைக்கவோ அல்லது கையகப்படுத்தவோ வேண்டியது அவசியமாகிறது. இன்று ஒரு அறிக்கையில், 25 கிளைத் தலைவர்கள் குழு, கட்சி மீதான…

குடிநுழைவு தடுப்பு முகாமில் இந்திய பிரஜை மரணம், காரணம் ஆராயப்படுகிறது

கோவிட்-19க்கு சிகிச்சை பெற்ற சில நாட்களில், கடந்த வாரம் புக்கிட் ஜாலீலில் உள்ள குடிநுழைவு தடுப்பு முகாமில் இறந்த இந்திய சுற்றுலாப் பயணியின் மரணம் குறித்து சுகாதார அமைச்சு பிரேத பரிசோதனை நடத்தியுள்ளது. இருப்பினும், மரணத்திற்கான காரணத்தை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், ஆய்வக அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும் சுகாதார…

‘மாடலாக’ மாறுகிறார் சுகு பவித்ரா; ஒற்றுமையின் சின்னம் என்று புகழாரம்

சுகு பவித்ரா, இப்போது சமைப்பது மட்டுமல்லாமல், ஒரு 'மாடலாகவும்' மாறியிருக்கிறார். ஒரு பத்திரிகையின் அட்டையாக வெளிவந்துள்ள அவரது படம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமையல் வீடியோவின் பிரபலமான யூடியூபராக விளங்கும் சுகு பவித்ராவின் படம், ஒப்பனை கலைஞர் ராஸ்ஸி மூசாவால் இணையத்தில் பதிவேற்றப்பட்ட பின்னர் பிரபலமாக மாறியது. இது…

கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று…

நாட்டில் மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட கோவிட்-19 பாதிப்புகள் எதுவும் இன்று பதிவாகவில்லை என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று நண்பகல் வரை, 15 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது மலேசியாவில் மொத்த நேர்மறை கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,587 ஆகக் கொண்டு வந்துள்ளது.…