அரசாங்கத்தை திரும்பப் பெற்று மக்களின் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் –…

மக்களின் ஆணையை மீட்டெடுக்கும் நோக்கில், அரசாங்கத்தை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுவதாக பாக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) இன்று தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் வாரிசான் தலைவர் ஷாஃபி அப்தால் போன்ற பி.எச் தலைவர்களிடையே நடந்த சந்திப்பின் பின்னர் இந்த விவகாரம்…

கோவிட்-19: 22 புதிய பாதிப்புகள், 59 பேர் குணப்படுத்தப்பட்டனர், இறப்புகள்…

17 மே 2020 : 59 கோவிட்-19 நோயாளிகள் மீட்கப்பட்டு இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,571 ஆக அல்லது 80.8 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், இன்று நண்பகல் வரை 22 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால்…

முக்ரிஸ்: கெடா பாக்காத்தான் வீழ்ச்சியின் உண்மையான கதாநாயகன் நஜிப்

பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் சரிவு மற்றும் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதிரின் வீழ்ச்சி, இவை இரண்டுக்கும் பின்னால் நஜிப் ரசாக் இருப்பதாகக் கூறியுள்ளார் முக்ரிஸ். அவரை மந்திரி பெசார் பதவியில் இருந்து அகற்ற முகிதீன் யாசினிடமிருந்து உத்தரவு வந்த போதிலும், இத்திட்டத்திற்குப் பின்னால் நஜிப் இருப்பதாக முக்ரிஸ்…

பிளவுபட்டு கிடக்கும் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்க முயற்சிப்போம் – ஹாடி

மத்திய கிழக்கிற்கான சிறப்பு தூதர் அப்துல் ஹாடி அவாங், அனைத்துலக அமைப்புகள் மற்றும் தலைவர்களுடனான தனது நல்லுறவைப் பயன்படுத்தி பாலஸ்தீனம், ரோஹிங்கியா மற்றும் காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பாதாக தெரிவித்தார். அப்துல் ஹாடியின் கூற்றுப்படி, அவரும் தனது பிற சகாக்களும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களையும்…

கெடா மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகினார் முக்ரிஸ்

கெடா மாநில சட்டசபையில் இனி பெரும்பான்மை ஆதரவைப் பெறாத நிலையில், உடனடியாக தனது மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகுவதாக முக்ரிஸ் மகாதீர் இன்று அறிவித்தார். பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான அவர், கெடா சுல்தானிடம் இந்த விஷயத்தை சமர்ப்பித்ததாக கூறினார். "நான் பெரும்பான்மையை இழந்ததால், உடனடியாக நடைமுறைக்கு…

கோவிட்-19: மலேசியாவில் 317 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

12 வயதிற்கு உட்பட்ட 317 குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 46 சதவீதம் ஆறு வயது அல்லது அதற்கு கீழ்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலாங்கூரில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட 77 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அடுத்து நெகேரி செம்பிலன் (48), ஜொகூர் (46).…

கோவிட்-19: 17 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு, 73 பேர்…

17 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று நண்பகல் வரை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது மலேசியாவில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 6,872 ஆகக் கொண்டுவருகிறது. "பதிவான 17 பாதிப்புகளில் ஆறு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நோய்த்தொற்றுகள் என்பதையும், பதினொன்று உள்நாட்டு பாதிப்புகளும் அடங்கும். அதில் குடிமக்கள்…

மாநில எல்லை கடக்க முயன்ற 508 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

இன்று தங்களின் ஊர்களுக்கு திரும்புவதற்காக மாநிலத்தை கடக்க முயன்ற மொத்தம் 508 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நாடு முழுவதும் 146 சாலைத் தடைகளில் 238,500 வாகனங்களை ஆய்வு செய்த காவல்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்மாயில் தெரிவித்தார். “ஊர்களுக்கு, குறிப்பாக…

கெடாவின் புதிய மந்திரி பெசார் நாளை பதவி ஏற்கிறார்

நாளை மதியம் 2 மணிக்கு அலோர் செடார் விஸ்மா டாருல் அமானில் நடைபெறும் பதவியேற்பு விழாவுடன், புதிய மந்திரி பெசாரயும் புதிய அரசாங்கத்தையும் கெடா மக்கள் பெறுவர் என தெரிகிறது. இது, 14வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் அரசாங்கம் கெடா மாநிலத்தை வென்ற பிறகு இரண்டு வருடங்கள் மந்திரி…

ரீசாவை தற்காத்து பேசிய நஜிப், மகாதீரின் மகன்களுக்கு வழங்கப்பட்ட வணிக…

1MDB நிதியில் 248 மில்லியன் அமெரிக்க டாலர் (RM1.08 பில்லியன்) சம்பந்தப்பட்ட பண மோசடி வழக்கில் தனது மகன் ரிசா அஜீஸை விடுவிக்க நீதிமன்றம் எடுத்த முடிவு குறித்து டாக்டர் மகாதிர் முகமதுவின் விமர்சனத்திற்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பதிலளித்துள்ளார். ரிசாவிற்கும் அரசு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட…

பிரதமர்: இயங்கலை கற்பித்தல் திறனை வளர்த்துகொள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு

இன்றைய கற்பித்தல் துறையில் ஒரு புதிய நடைமுறையான இயங்கலை அல்லது ஆன்லைன் கற்பித்தல் மற்றும் 'வீட்டு அடிப்படையிலான கற்றல்' ஆகியவற்றில் திறன்களைப் பெறுமாறு நாட்டின் ஆசிரியர்களுக்கு பிரதமர் முகிதீன் யாசின் அழைப்பு விடுத்தார். தற்போது கோவிட்-19 பாதிப்பால் பள்ளியில் கல்வி கற்பித்தல் முடங்கிப் போயுள்ள நிலையில், இயங்கலை கற்பித்தலுக்கு…

கோவிட்-19: 36 புதிய பாதிப்புகள், 88 மீட்டெடுப்புகள், இறப்புகள் ஏதும்…

இன்று நண்பகல் நிலவரப்படி 36 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,855 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட 28 பாதிப்புகள் உள்ளதாகக் கூறினார். 88…

சிலாங்கூர் மாநில அரசு: கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழ்…

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி கிரேட் 56 அரசு ஊழியர்கள் மற்றும் அதற்கும் குறைந்த பிரிவை சேர்ந்தவர்கள் RM1,000 உதவித் தொகையைப் பெறுவார்கள் என அறிவித்தார். இந்த முடிவை அமிருதின் ஒரு சிறப்பு அறிவிப்பில் வெளியிட்டார். "சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்கள், நகர கவுன்சிலர்கள், தலைவர்கள், மாவட்ட…

கெடா சட்டமன்றம்: ஊடக அறிக்கை வெளியிட அனுமதி இல்லை

கெடா சுல்தான் சல்லேஹுதீன் பத்லிஷாவை சந்தித்த கெடா மாநில தேசிய கூட்டணியின் (பி.என்) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று ஊடகங்களுக்கு எந்த அறிக்கையும் வெளியிட அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. காலை 9.15 மணி முதல் கூட்டம் நடைபெற்ற விஸ்மா டாருல் அமானுக்கு வெளியே ஊடகங்கள் கூடியிருந்தாலும் இந்த நிலைப்பாடு…

19 கெடா சட்டமன்ற உறுப்பினர்கள் கெடா சுல்தானை சந்தித்தனர்

இன்று காலை கெடா சுல்தான் அல் அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷாவைச் சந்திக்க பாஸ், அம்னோ மற்றும் பேபாஸைச் சேர்ந்த 19 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அலோர் செட்டாரில் உள்ள விஸ்மா டாருல் அமானுக்கு வந்தனர். காலை 9.15 மணி முதல் வந்தவர்களில், எதிர்க்கட்சித்…

புடு பகுதியில் முட்கம்பி வேலிகள் இடப்பட்டன

ஜாலான் புடுவில் சில பகுதிகள் நேற்று முன்தினம் முதல் முட்கம்பி வேலிகளால் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த பகுதி தீவிர நடமாட்டக் கட்டுப்பாட்டில் இல்லை என்று போலீசார் கூறுகின்றனர். ஜாலான் புடுவிலுள்ள டி மெஜஸ்டிக் பிளேஸ் தங்கும் விடுதிக்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து ஜாலான் லண்டாக் வரை முள் கம்பி…

நாடாளுமன்ற செயலாளர் திடீர் மாற்றம், ஆபத்தானது என்கிறது எதிர்க்கட்சி

நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், அதன் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றம் குறித்து எதிர்க்கட்சி கூட்டணி தங்கள் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கை சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயல்பட வேண்டிய நாடாளுமன்ற நிறுவனத்தில், தலையீடுகள் உள்ளன என்ற கருத்துக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறினர்.…

கெடா சட்டமன்றம்: 36 சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கெடா சுல்தானை…

மொத்தம் 36 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கெடாவின் சுல்தான், அல் அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷாவை, அலோர் செட்டாரில் உள்ள விஸ்மா டாருல் அமானில் நாளை சந்திக்க உள்ளனர். இந்த விஷயத்தை உறுதிப்படுத்த தேசிய கூட்டணி (பி.என்), பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) மற்றும் பேபாஸை…

‘என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்’ – இரண்டாவது ஆடியோ பதிவு வெளியானது

பாக்காத்தானை விட்டு வெளியேறும் முன், பெர்சத்துவின் உச்ச மன்ற கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது ஆடியோ பதிவு டாக்டர் மகாதிர் முகமது சார்பு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் குரலை ஒத்திருந்த அந்த ஆடியோவில், தான் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப பதவி விலகுவதிலிருந்து அவரைத் தடுக்க வேண்டாம் என்று…

கோவிட்-19: 40 புதிய பாதிப்புகள், 70 பாதிப்புகள் மீட்கப்பட்டன

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மதியம் நிலவரப்படி 40 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி உள்ளன என்று தெரிவித்தார். அதில், 31 பாதிப்புகள் மலேசிய அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இறக்குமதி பாதிப்புகள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். இவ்வாறு, மலேசியாவில் மொத்த கோவிட்-19…

பதவிகளுக்காக திசைமாறும் தவளை அரசியல், நெறிகளுக்கும் கொள்கைகளுக்கும் இடம் இல்லை…

மே 18 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் நேரத்தை குறைப்பதற்கான முயற்சி, முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணிக்கு (பிஎன்) பெரும்பான்மை இல்லை என்பதைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தங்கள் இருக்கைகளை இடைவெளி…

நஜிப்பின் வளர்ப்பு மகன் ரீசா ஆஜிஸ் விடுவிக்கப்பட்டார்

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரீசா ஆஜிசை 1MDB நிதிகளுடன் இணைக்கப்பட்ட RM 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 5 பண மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று விடுவித்தது. அரசு தரப்பும் குற்றம்சாட்டப்பட்டவரும் ஒரு உடன்பாட்டை எட்டியதை தொடர்ந்து, நீதிபதி அஸ்மான்…

ஜோகூர் சட்டமன்றம் அசல் நிகழ்ச்சி நிரலின் படி அமைதியாக முடிந்தது

ஜோகூர் சட்டமன்றம் அசல் நிகழ்ச்சி நிரலின் படி அமைதியாக முடிந்தது குழப்பம் மற்றும் சண்டைகள் ஏற்பட்ட மலாக்கா மற்றும் பேராக் மாநில சட்டமன்றங்களுடன் ஒப்பிடும்போது, ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று அமைதியாக தோன்றியது. பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தரப்பினர் அரசியல் ஆட்டங்களில் ஈடுபடக்கூடாது என்ற அரச…