பெஜுவாங்ஙோடு சரிந்தது மகாதீரின் செல்வாக்கு!

இராகவன் கருப்பையா -முன்னாள் பிரதமர் மகாதீரின் அரசியல் செல்வாக்கு தற்போது எந்நிலையில் உள்ளது என்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கடந்த ஆண்டு மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட அவருடைய பெஜுவாங் கட்சி அத்தேர்தலில் படுதோல்வியடைந்தது மட்டுமின்றி போட்டியிட்ட எல்லா 42 தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்து வரலாறு காணாதப் பின்னடைவை மகாதீருக்கு ஏற்படுத்தியது. மக்கள் இந்த அளவுக்குத் தன்னை புறக்கணிப்பார்கள்…

ஜென்கின்ஸ் விசாரணையை தெற்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிக்க உள்ளது

2017 ஆம் ஆண்டு தனது வருகையின் போது தீவில் காணாமல் போன ஆஸ்திரேலியவை சேர்ந்த அன்னபூரணீ ஜென்கின்ஸ்ன் மரணம் தொடர்பான பினாங்கில் நடக்கும் விசாரணையை தெற்கு ஆஸ்திரேலிய நாடளுமன்றம் கண்காணிக்க உள்ளது. பாரிட் புந்தாரில் பிறந்த ஜென்கின்ஸ், 65, அன்புடன் அணா என்று அழைக்கப்படுகிறார். டிசம்பர் 2017ல் தனது…

கடந்த ஆண்டு 1,571 போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது…

கடந்த ஆண்டு மொத்தம் 1,571 அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தரநிலைகள் இணங்குதல் துறை (JIPS) இயக்குநர் டத்தோ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார். நேர்மையற்ற குற்றங்களில் சொத்தை அறிவிக்காதது, பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்வது, மேலதிகாரியின் அனுமதியின்றி திருமணம்…

எதிர் கட்சிகளுக்கு புதிய பிரதமர் வேட்பாளர் தேவை

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று கண்டதைப் போன்ற இன்னொரு விடியலுக்காக ஏங்கித் தவிக்கும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எதிர் கட்சிகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் பாரிசான் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள…

பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசாங்கம் நடத்துகிறது-  அபிம் ஏமாற்றம்

அபிம் என்ற முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்களின்  உரிமைகளையும் கண்ணியத்தையும் ஆண்களுக்கு நிகராக நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தவறியதற்காக தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.. மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (அபிம்), அரசாங்கம் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் உரிமையை மறுப்பதன் மூலம் அவர்களை இரண்டாம் தர…

ரிம65 மில்லியன் பொது நிதியை தவறாக செலவு செய்தல் மற்றும்…

இன்று மக்கள் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை 2020 தொடர் 1, அதிகமாகச் செலவு செய்தல், தவறாகச் செலவு செய்தல் மற்றும் ஏறக்குரிய ரிம 65 மில்லியன் அளவுக்குப் பணத்தை இழந்த வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு அறிக்கையில், பொதுக் கணக்குக் குழுவின் பிஏசி தலைவர்…

ஹலீம் தலைவர் இல்லையாம் – எம்.டி.யு.சி

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஊடகங்களிடம்  ஹலீம் மன்சோரிடம் இருந்து அறிக்கைகளை பெற வேண்டாம், ஏனெனில் அவர் "தலைவர் இல்லை" என்று வலியுறுத்தியுள்ளது. நேற்று ஒரு அறிக்கையில், எம்டியுசியின் சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட ஹலீமுக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளது. எம்டியுசி பொதுச்செயலாளர் கமருல் பஹாரின் மன்சோர் கூறுகையில்,…

ஜோகூரில் பாரிசான் நேஷனல் எதிர்பார்ப்பை மீறி வெற்றி-பிரதமர்

நடந்து முடிந்த 15வது ஜோகூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட 56 இடங்களில் 40 இடங்களை கைப்பற்றியபோது, பாரிசான் நேசனல்  எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டது என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். அதிகபட்சமாக 35 இடங்கள் என்ற தனிப்பெரும்பான்மையுடன் மட்டுமே பிஎன் வெற்றி பெறும் என்று பலர்…

நீதி மன்றக் கூட்டம் மற்றும் 1எம்டிபி – இவை ஜோகூர்…

ஜோகூர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பதின்மூன்று நாட்களாக, மாநில அரசாங்கத்தை அமைக்க மற்றும் சில இடங்களில் வெற்றி பெற பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன, இன்று நள்ளிரவில் பிரச்சாரம் முடிவடைவதால் இறுதி விறுவிறுப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால், எத்தனை கட்சிகள் பிளவு…

கூத்தாடிகளாக அரசியல்வாதிகள்: சிறுமைப்படுத்தப்படும் இந்தியர்கள்

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தேர்தல் நடக்கும் போதுதான் இந்தியர்களும் இந்நாட்டில் வாழ்கின்றனர் எனப் பல வேற்று இன அரசியல்வாதிகளுக்கு ஞாபகம் வருகிறது. அரசியல் கட்சிகள் அதிகமாகும்போது, சிறுபான்மையினரின் வாக்குகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. எனவே, நாடு முழுவதும்  நிறையத் தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள்தான்…

வாழ்நாள் சாதனையாளர்களை வாழும் போதே வாழ்த்தவேண்டும்

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு துறைகளிலும் நம் சமூகத்தினர் புரிந்து வரும் எண்ணற்ற சாதனைகள் உண்மையிலேயே அளப்பரியது. விளையாட்டுத் துறை, அரசாங்கப் பதவி, எழுத்துத்துறை, அறிவியல், தொழில் துறை, மருத்துவம், சட்டத்துறை, புத்தாக்கம், கலைத்துறை போன்ற பலதரப்பட்ட துறைகளில் நம் இனத்தவர்கள் மிளிர்வது பல்வேறு காரணங்களினால் அண்மைய…

இணைய அடிமைத்தனத்தில் இளைய தலைமுறை – அபாயத்தில் பெற்றோர்கள்!

இணைய அடிமைத்தனம் மற்றும் திறமையான பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாதது இளைய தலைமுறையினரிடையே அதிகரித்த இணைய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் அனுவார் மூசா கூறினார். கல்வி அமைச்சின் கல்வி வள மற்றும் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன், நவம்பர் 16 முதல் மார்ச்…

பெங் ஹாக்கின் மரணத்துடன் தொடர்புடைய எம்ஏசிசி அதிகாரியின் பட்டத்தை ரத்து…

2009 ஆம் ஆண்டு தியோ பெங் ஹாக்கின் மரணத்தில் தொடர்புடைய ஒரு எம்.ஏ.சி.சி அதிகாரிக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட “டத்தோ செரி” பட்டத்தை திரும்பப் பெறுமாறு யாங் டி-பெர்த்வான் அகோங் வலியுறுத்தப்பட்டுள்ளார். தியோ பெங் ஹாக் அறக்கட்டளை இன்று வெளியிட்ட அறிக்கையில், ஹிஷாமுடின் ஹாஷிம் பிப்ரவரி 8 அன்று “செரி…

அரசாங்கம் – முதலாளி பேச்சுவார்த்தை, குறைந்தபட்ச சம்பளம் RM1,500!

அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளமாக RM1,500 நிர்ணக்க முதலாளிகளுடன் பேசி வருகிறது அது இயலும் என்கிறார் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப். இந்த நோக்கத்திற்காக, மனித வள அமைச்சு, பொதுச் சேவையில் உள்ள ஊழியர்களின் சங்கங்கள் (Cuepacs) மற்றும் முதலாளிகள் உட்பட சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது. இந்த…

இந்தியர்களின் மக்கள்தொகை 2020-இல் 6.7%க்கு குறைந்தது!

சமீபத்தில் முடிவடைந்த 2020 -க்கான  தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மலேசியாவின் மக்கள்தொகையில் பூமிபுத்ராவின்  சதவீதம் 69.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சீனர்கள்  மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. 2010-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 28.3 மில்லியனாக இருந்த மலேசியாவின் மக்கள்தொகை  32.4 மில்லியனாக அதிகரித்துள்ளது,…

ஊழலை ஒடுக்க செல்வாக்கு மிக்கவர்கள் தடையா?- அன்வார்

ஊழலை ஒடுக்குவதற்குச் செல்வாக்கு மிக்கவர்கள் தடையாக இருக்கின்றனர் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். இதற்கு முன்னால் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் முன்னாள் பிரதமரும் அடங்குவார் என்கிறார் அன்வார். இதுபோன்ற அரசியல் சூழ்நிலையில் நாம் எதையும் குறைவாக மதிப்பிட இயலாது. “செல்வாக்கும் ஆதிக்கமும் கொண்டவர்கள் உண்மையான நாட்டின் சீரமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை”, என்று குற்றம் சாட்டுகிறார் அன்வார்.…

தமிழ் மொழி வளர்ச்சிக்கு சோதனை மேல் சோதனை

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் தமிழ் பள்ளிகளையும் தமிழ் மொழியையும் பாதுகாக்க  நாம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தொடர்ந்தார்போல் சவால் மிக்க சோதனைகளும் நம்மைத் தாக்கிய வண்ணமாகத்தான் உள்ளன. தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் என அவ்வப்போது விஷக் கருத்துகளைக் கக்கிக் கொண்டிருக்கும் சில தரங்கெட்ட அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவ்வாறு…

மலேசிய-சீன வாணிப சங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்கு பண உதவி

இன்று கோலாலம்பூர் சீன சமூகம் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நான்கு  தமிழ்ப்பள்ளிகளுக்கு மலேசிய-சீன வாணிப சங்கம் ரிம  27,000 வழங்கியது. அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு உதவும் பொருட்டு மலேசியச் சீன-வாணிப சங்கம் (Malaysia - China Chamber of Commerce)  உதவித் திட்டங்களை முடுக்கி விட்டுள்ளது. அதனடிப்படையில்…

ஊழலுக்கு வக்காளத்தா? – கி.சீலதாஸ்

ஊழலால் விளையும் கேடுகளைப் பற்றி உணராத, உணர மறுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை; ஆட்சி அவர்கள் கையில் இருக்கும் வரை ஊழல் நடவடிக்கைகளை, ஊழல் கலாச்சாரத்தை ஒடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது; முடியும் என்று நினைப்பது வெறும் பகற்கனவாகும். இலஞ்சம் வாங்குவோர்க்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டம் சொல்கிறது.…

`தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்` – பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

எதிர்வரும் தைத் திங்கள் முதலாம் நாள் பிறக்கும் திருவள்ளுவராண்டு 2053-ஆம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை, மலேசியத் தமிழர் தேசியப் பேரவை அனைத்து மலேசிய வாழ் தமிழர்களுக்கும் உவகையோடு தெரிவித்துகொள்கிறது. தை துவக்கத்தைச் சீர்மிகு செந்தமிழர் புத்தாண்டாக வரவேற்பதை நமது சங்க இலக்கியங்கள் உறுதிபடுத்துகின்றன. தமிழர் தாயகத்தைத் தாண்டி தமிழர்…

‘பல்லில்லா புலி’யானது புரிந்துணர்வு ஒப்பந்தம்

இராகவன் கருப்பையா -கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்ற இஸ்மாய்ல் சப்ரி அவசர அவசரமாகச் செய்த முதல் காரியம் எதிர் கட்சிக் கூட்டணியை அரவணைத்து அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதுதான். இதன் வழி தனது சிறுபான்மை அரசாங்கத்தை தற்காத்துக்கொண்ட சப்ரி, அம்னோவின் ஊழல்வாதிகளின் நெருக்குதலில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார். அவர் பதவியில் அமர்ந்து சில வாரங்களிலேயே மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மக்களுக்கு ஓரளவு…

தடுப்புக்காவல், அடக்குமுறைக்கு மத்தியில் தொடரும்  தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

கம்போடியாவின் மிகப்பெரிய ஆடம்பர ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியான நாகாவேர்ல்டின் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டனர். டிசம்பர் 2021-ல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதிலிருந்து, 30 நாகாவேர்ல்ட் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு…