இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக தனது அரசுத் துறையின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒற்றேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. இலங்கை மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மன்றத் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க…

“விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை”

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதை நேரடியாக மேற்பார்வை செய்ய இலங்கை அரசு தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐ.நாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவது தொடர்பில் மறைந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் தம்முடன் நேரடித் தொடர்பில்…

இலண்டனில் இடம்பெற்ற தமிழ் மொழி மீட்பின் தொடர் “கற்க கசடற…

"தேமதுர தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்" என்பதற்கிணங்க, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகம் தமிழ் மொழியையும் அதன் பெருமையையும் தமக்கும், தமது எதிர்கால சமுதாயத்திற்கும் எடுத்துரைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலண்டனில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ‘கற்க கசடற 2012’ திருக்குறள் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வு…

அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை தட்டிக்கழிக்க முடியாது!

அனைத்துலகத்தின் பிடிக்குள் இருந்து தப்பிப்பிழைப்பதற்கே ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் போர்க்குற்றத்தை விசாரிக்க இராணுவ நீதிமன்றம் என்ற போலி நாடகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக அரங்கேற்றி வருகின்றது. இவ்வாறு இலங்கையின் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். படுகொலை கலாசாரத்தை இலங்கைக்கு கற்பித்த…

இலங்கையில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் மாபெரும் தொடர் போராட்டங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிபொருள் விலையேற்றம், மக்களுக்கெதிரான அடக்குமுறை மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையின் சிலாபத்தில் நடைபெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தை விடவும்…

இராணுவ நீதிமன்றத்தினால் உண்மைகள் வெளிவராது; TNA தலைவர் சம்பந்தன்

இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக இறுதிக் கட்ட போரின்போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உ◌ரிமை மீறல்கள், குற்றங்கள், அநீதிகள் மற்றும் உண்மைத் தன்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார். குற்றம்…

கொழும்பில் எதிர்க்கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இலங்கை தலைநகர் கொழும்பில் எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.. பெட்ரோல் விலையேற்றத்தால் ஏற்பட்ட பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கத்தின் முகாமைத்துவ குறைபாடே காரணம் என்கிறார் ஆய்வாளர் எஸ். பாலகிருஷ்ணன். நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி,…

பிரான்ஸ் புலி வலையமைப்பு ஜெனிவா பயணம்: கொழும்பு ஊடகம்

மனித உரிமை மன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் பிரான்ஸ் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்பு ஜெனிவாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி பிரான்ஸ் புலிகளின் வலையமைப்பு ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜெனிவா…

புலிகள் பெண்களுக்கு ஆளுமையையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தார்கள்

தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களுற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார். கனடிய மனிதவுரிமை மன்றத்தினால் நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கைக்கு சமாதான காலத்திலும் தற்போதும் பல…

இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரணில்

போர் முடிவின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வறியவர்களுக்கு உச்சளவில் சலுகை வழங்குவதாக போலி வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது. 1956 மற்றும் 1977-களில்…

இலங்கையின் MIG 27 போர்விமானம் வெடித்து சிதறியது!

இலங்கை ஆகாயப் படைக்குச் சொந்தமான MIG 27 ரக போர் விமானமொன்று இன்று மதியம் வெடித்து சிதறியுள்ளது. அவ்விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஆகயாத்தில் வெடித்து சிதறிய விமானம் இலங்கையின் புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட தும்மல சூரிய என்ற பகுதியில் விழுந்து சேதமாகியுள்ளதாக ஆகாயப்படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டில் குடிபோதையில் குழப்பம் விளைவித்த இலங்கை அமைச்சர்

தமிழ்நாட்டில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை தமிழக காவல்துறையினர் தூக்கிச்சென்று அவரது அறைக்குள் தள்ளிப் பூட்டிய சம்பவம் ஒன்று கோவையில் இடம்பெற்றுள்ளது. திருச்சியில் நடைபெற்ற தனது நண்பர் இல்லத் திருமணத்திற்கு இலங்கை கிராமிய தொழில்துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்…

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் நினைவுப் பேருரை

பிரிட்டிஷ் காலனித்துவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி, இந்திய தேசத்துக்கு மட்டுமன்றி இலங்கை உட்பட தெற்காசிய பிரதேசத்துக்கே சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி அடிகளின் 63ஆவது நினைவு நாளை முன்னிட்டு இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நினைவுப் பேருரை நிகழ்வொன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்த…

புலிகளின் வைப்பகம் திறம்பட இயங்கியது: அமெரிக்க தூதுவர்

இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தவேளை அவர்களால் நிறுவப்பட்ட தமிழீழ வைப்பகம் (BANK) திறம்பட செயல்பட்டதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தமது தலைமைக்கு தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பல நாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக…

விட்டுக்கொடுக்காத உறுதியில் முளைத்தது புலிகள் இயக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வரை ஒரு மர்மமான மனிதர்தான். இவரைப் பற்றி வெளியுலகத்துக்கு தெரிய வந்திருக்காத விடயங்கள் ஏராளம். போராட்டத்தை இவருடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இன்று உயிருடன் உள்ளார்கள். பிரபாகரனைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும்…

கிருஷ்ணாவுக்கு விருந்தளித்து விட்டுக் கன்னத்தில் அறைந்துள்ளார் மகிந்தா!

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விவகாரத்தில் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டுச் சதி செய்கின்றன. இனப்பிரச்னைக்கு 13-வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம் உறுதியளித்திருந்த குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே, இன்று தான் அப்படிக் கூறவே இல்லை…

இலங்கை அரசுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்கள் மிரட்டல்

தமிழக மீனவர்களை தொடந்து சிறைபிடித்து துன்புறுத்தி வரும் இலங்கை கடற்படையினருக்கும் பெருந்தலைவலியாக மாறியுள்ளது சோமாலிய கடற்கொள்ளையர்கள் விவகாரம். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை கேட்பதாக கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களின் குடும்பத்தினர் இலங்கை…

கனடா செல்லும் பயணத்தில் டோகோவில் 200 தமிழர்கள் கைது

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றத்தின் பேரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சட்ட விரோத ஆட்கடத்தல் முகவர்களினால் கனடாவிற்கான பயணத்தின் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு டோகோவிலுள்ள…

ஐநா அமைதி காக்கும் படையில் இலங்கை போர்க்குற்றவாளிக்கு முக்கிய பொறுப்பு

ஐநா மன்றத்திற்கான சிறீலங்காவின் துணைத் துதர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதிகாப்புப் படையின் நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய பசுபிக் நாடுகள் குழுவின் சார்பிலேயே இவர் இந்த ஆலோசனைக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குழுவில் அங்கம் வகிக்கும் உயர்மட்டத்…

இலங்கை அரசின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தொடர்ந்து ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறி, இலங்கையின் தலைநகர் கொழும்பில் புதன்கிழமை செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். 'இலங்கை அரசு, ஊடக அடக்குமுறையை முன்னெடுத்து வருகிறது' என்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த இடத்தில் அரசுக்கு ஆதரவான இரண்டு…