ஏஜி கணக்கறிக்கை(2): கழிப்பறையா உணவுச் சேமிப்பு அறையா?

கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு கெமாஸ் பாலர் பள்ளியில் ஒரு கழிப்பறை உலர்ந்த உணவைச் சேமித்து  வைக்கப்படும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதாரம் முறையாக பேணப்படாததற்கு இது ஓர் எடுத்துக்காட்டு எனத் தலைமைக் கணக்காய்வாளர் 2010 கணக்கறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். “உலர்ந்த உணவுப்பொருள்கள் நீண்ட காலத்துக்கு, காலாவதி தேதிக்குப் பின்னரும்கூட…

முஹைடின்: நிருபர் என் அறிக்கையைத் “திரித்து” விட்டார்

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருடைய புதல்வரின் தவறான நடத்தை எனக் கூறப்படுவது மீது தாம் வெளியிட்ட அறிக்கை மாற்று செய்தி ஊடகங்களில் 'திரித்தும்', 'தவறாகவும்' வெளியிடப்பட்டதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தை முடித்து வைத்துப்…

பாஸ் கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் அப்துல் அசிஸ் பேரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது மீது விவாதம் நடத்துவதற்கு மக்களவையில் பாஸ் கட்சி சமர்பித்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தை சபாநாயகர் தமது அலுவலக அறையில் நிராகரித்தார். அந்தத் தீர்மானத்தை பாஸ் குபாங் கெரியான் உறுப்பினர் சலாஹுடின் அயூப் கடந்த…

தொகுதிப் பரிமாற்றம் கெடா அம்னோவுக்கு சம்மதமே

தலைமை ஒத்துக்கொண்டால் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகளுடன் தொகுதிகளை மாற்றிக்கொள்வதில் மறுப்பில்லை என கெடா அம்னோ தொடர்புக்குழு அறிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் அம்னோ பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எந்த முடிவெடுத்தாலும் அதைப் பின்பற்றத் தயார் என அதன் தலைவர் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா கூறினார். சிலாங்கூரில் உள்ள…

ஏஜி 2010 அறிக்கை (1): மாராவின் களவாடித்தனம்

மிகுந்த வறிய நிலையிலுள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரிம54 மில்லியன் நிதியை முற்றிலும் அவர்களுக்காகப் பயன்படுத்தாமல், வாங்கிய பொருள்களுக்கு சந்தை விலையை விட 100 க்கும் அதிகமான விகித விலையைக் கொடுத்து மாரா வாங்கியுள்ளது. இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2010 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வர் (ஏஜி)…

அன்யா-வைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் அவருடைய தாயார் ஆராய்கிறார்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் புதல்வரால் மானபங்கப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட படத்தில் உள்ள இளம் மாதுவின் தாயார், தமது புதல்வியின் நலனைப் பாதுகாப்பதற்கு எல்லா வழிகளையும் பரிசீலித்து வருவதாகக் கூறியிருக்கிறார். 21 வயதான அன்யா ஆன் கோர்க் பற்றிய வதந்திகளைப் பரப்பும் தரப்புக்களுக்கு எதிராக சட்ட…

லிம்: பிஎன்னின் அதிகாரப்பூர்வப் பயணங்கள் செலவுமிக்கவை

பினாங்கில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநில அரசு வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிட்ட தொகை ரிம1.2மில்லியன் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். 2008 மார்ச்சிலிருந்து 2011 மார்ச் வரை முதலமைச்சரின் 20 வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆன செலவு ரிம146,000 என்றும் துணை முதலமைச்சர் மற்றும் மாநில ஆட்சிமன்ற…

மதமாற்ற- எதிர்ப்புச் சட்டப் பரிந்துரையை அரசு ஆராய்கிறது

முஸ்லிம்களை மதமாற்றம் செய்வோரைத் தண்டிக்க  புதிய சட்டம் வரையப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஆராய்ந்து வருவதாக பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் கூறுகிறார். “அதில் கூட்டரசு மற்றும் மாநிலச் சட்டங்கள் சம்பந்தப்படுவதால் நன்கு ஆராய வேண்டியுள்ளது”, என்று அவர் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் கூறியது. மத்தியிலும்…

பெர்சே vs ஹிம்புன்: பிரதமர் அவர்களே, உலகளவு வேறுபாடுகள் உள்ளன

"ஆகவே ஹிம்புன் மற்ற சமய அமைப்புக்களை சிறுமைப்படுத்துகிறது என்பது முக்கியமல்ல. தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கு பெர்சே வேண்டுகோள் விடுத்ததுதான் தவறா?" ஹிம்புன், பெர்சே போன்று அல்லாமல் ஒழுங்காக நடந்ததாக பிரதமர் புகழாரம் பிராமன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்ற மலேசியர்களைப் போன்று ஒரே கோளத்தில்தான் வாழ்கிறாரா? பெர்சே…

பெர்சே பேரணியைப் போல் இல்லாமல் ஹிம்புன் பேரணி ஒழுங்காக நடந்தது…

மதம் மாற்ற எதிர்ப்பை நோக்கமாகக் கொண்டு நேற்று முன் தினம் ஹிம்புன் பேரணியை ஒழுங்காக நடத்தியதாக அதன் ஏற்பாட்டாளர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாராட்டியுள்ளார். அது, ஜுலை 9ம் தேதி நடத்தப்பட்ட தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கான பெர்சே 2.0 பேரணியுடன் ஒப்பிடும் போது பெருத்த வேறுபாடாக இருப்பதாக…

நஜிப்: அஜிஸ் பேரி மீதான விசாரணை குறித்த கருத்துக்கள் வேண்டாம்

சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி மீதான விசாரணையை அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் முடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அந்தப் பல்கலைக்கழகம் எடுத்துள்ள நடவடிக்கை மீது பொது மக்கள் கருத்துக் கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். "அவர் (அஜிஸ்) சொன்னதின் அர்த்தம் என்ன…

கர்பால்: “முதலமைச்சர் கம்போங் புவா பாலா விவகாரத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கக்…

2009ம் ஆண்டு கம்போங் புவா பாலா கிராமத்தை அதன் குடியிருப்பளர்கள் காலி செய்ய வேண்டும் எனக் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீறியிருந்தால் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் கூறுகிறார். கூட்டரசு நீதிமன்றம், கம்போங் புவா…

நஜிப்: அரசியல் ஆதாயத்துக்காக குடும்பத்தினரைப் பயன்படுத்த வேண்டாம்

"அரசியல்வாதிகளுடைய குடும்பங்கள், கறை படிந்த அரசியலில் இழுக்கப்படக் கூடாது. அரசியல் ஆதாயத்துக்காக அவை பயன்படுத்தப்படக் கூடாது." இவ்வாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். "நவீன ஜனநாயகத்தின் அடிப்படை இதுதான். நீங்கள் கொள்கை விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அரசியல் வேறுபாடுகளை அரசியல்வாதிகளுடைய பலவீனங்கள் அடிப்படையில் விவாதிக்கலாம்."…

“துணைப் பிரதமர் மறைமுகமாக ஒரு சிறுவன் அவதூறுக்கு இலக்காவதை ஆதரிக்கிறார்”

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் 16 வயது புதல்வனை அவமானப்படுத்தி அழிப்பதற்கு அம்னோ வலைப்பதிவாளர்களுக்கு துணைப் பிரதமர் "மறைமுகமாக ஆதரவு வழங்குகிறார்" என டிஏபி தேசியப் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா சாடியுள்ளார். அதனால் துணைப் பிரதமரை பிரதமர் நஜிப் கண்டிக்க வேண்டும் என அவர்…

அசீஸ் பேரியின் பதிலடி

    சட்டப் பேராசியரும் அரசமைப்பு வல்லுனருமான அசீஸ் பேரியின் வழக்குரைஞர்கள், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், உத்துசான் மலேசியா, கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நோர்டின் ஆகிய தரப்பினருக்கு சில கோரிக்கைகளை முன்வைக்கும் அறிவிக்கைகளை அனுப்பவுள்ளனர். அம்மூன்று தரப்புகளும் அசீஸ் பேரியைக் களங்கப்படுத்தும் வகையில்…

இந்திய மாணவர்களையும் கலாசாரத்தையும் அவமதிப்பதா? சார்ல்ஸ் கண்டனம்

அண்மையக் காலமாக இடைநிலைப்பள்ளிகளில்  இந்திய மாணவர்களை அவமானப்படுத்துதலும் அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இது கவலைக்கிடமான செய்தி என வருத்தம் தெரிவித்தார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. கிள்ளான் உயர்நிலைப்பள்ளி மாணவர் தலைவர் நியமிக்கும் பிரச்சனைக்கடுத்து மறுபடியும் மற்றொரு விசித்திரமான வருந்தத்தக்க புகாரை தாம் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.…

உங்கள் கருத்து: ஹிம்புன் பெரிய தோல்வி

"ஹிம்புன் பேரணிக்கு 3,000 முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்தன. அவை ஒவ்வொன்றும் தங்கள் தலைவரையும் துணைத் தலைவரையும் அனுப்பியிருந்தால் கூட எண்ணிக்கை 6,000-ஆக இருக்கும்." ஹிம்புன் பேரணிக்கு 5,000 பேர் வந்தனர் ஸ்விபெண்டர்: குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கூடியதே உண்மை நிலையை உணர்த்துகிறது. இனம், சமயம்,…

ஹிம்புன் பேரணி: மலாய்க்காரர்கள் உலகிலேயே மிகச் சிறந்த இனத்தினர்

ஷா அலாம் அரங்கில் பிற்பகல் மணி 2 க்கு தொடங்கிய மத மாற்றத்திற்கு எதிரான பேரணியில் பிற்பகல் மணி 4.20 க்கு உரையாற்றிய பாட்டினி யாக்கோப் முஸ்லிம் அல்லாதவர்கள்கூட நாட்ரா என்பவர் மதம் மாற்றம் செய்யப்பட்டதற்காக காலனித்துவ அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார். பாட்டினி சிங்கப்பூரில் 1950 ஆம்…

மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி தொடங்கியது (தொடர்ச்சி) 5,000 பேர்…

பிற்பகல் மூன்று மணி அளவில் அந்த அரங்கத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிறைந்திருந்தனர். பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி அங்கு சென்றடைந்தார். அதற்குச் சற்று நேரத்தில் சிலாங்கூரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, முன்னாள் பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியாவும் வந்து சேர்ந்தனர்.…

ரோஸ்மாவின் கைப்பைகள்: “நஸ்ரியின் மௌனம் ஒப்புதலுக்கு அடையாளமா?

பிரதமரின் துணைவியார் வைத்துள்ள விலை உயர்ந்த பிர்க்கின் ரக கைப்பைகள் மீது நாடாளுமன்றத்தில் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் பதில் அளிக்கத் தவறியிருப்பது உண்மையை ஒப்புக் கொள்வதற்கு அடையாளமா என்று டிஏபி வினவியுள்ளது. பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் 24 மில்லியன்…

மத மாற்ற எதிர்ப்பு பேரணி ஷா அலாமில் தொடங்கிற்று

முஸ்லிம்கள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்ட மத மாற்ற எதிர்ப்பு பேரணி இன்று ஷா அலாமில் பிற்பகல் மணி 2 அளவில் தொடங்கிற்று. முஸ்லிம் அரசு சார்பற்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணி "ஒரு மில்லியன் முஸ்லிம்கள் கூடும் பேரணி" என்று கூறப்படுகிறது. இப்பேரணி…

பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றும் என்கிறார் முஹைடின்

சிலாங்கூரில் "நீல அலை" கண்ணுக்குத் தெரிவதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார். அந்த மாநிலம் மீண்டும் பிஎன் ஆட்சிக்குத் திரும்ப வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை அது காட்டுவதாக அவர் சொன்னார். "சிலாங்கூர் முழுவதும் நீல அலை தென்படுகிறது. பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டுக்கு ஆட்சியுரிமையை வழங்கிய மூன்று…

சரவாக் திட்டங்கள்: அன்வார் குற்றசாட்டை புத்ராஜெயா நிராகரிக்கிறது

சரவாக்கிற்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 310 திட்டங்களில் 92 விழுக்காடு இன்னும் தொடங்கப்படவில்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியிருப்பதை கூட்டரசு அரசாங்கம் நிராகரித்துள்ளது. அக்டோபர் 20ம் தேதி வரையில் மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 228 திட்டங்கள் அல்லது…