பட்ஜெட் நாளில் பக்காத்தானின் மிகப் பெரிய நிதிதிரட்டு நிகழ்வு

13வது பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக பக்காத்தான் ரக்யாட் ‘பக்காத்தான் ரக்யாட்டுடன் பிரதான விருந்து’ என்னும் தலைப்பில் மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.அவ்விருந்து செப்டம்பர் 28-இல் ஷா ஆலம் ஸ்டேடியம் மெலாவாத்தியில் நடைபெறும். விருந்துக்கான 255 மேசைகளில் 30 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் மற்றவை விற்று முடிந்தன…

சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்

ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்கள் சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம்முன் ஒன்றுகூடி Read More

ROS சுவாராமிடம் சொல்கிறது: எங்கள் அதிகாரிகளை நுழைய அனுமதிக்காதது குற்றமாகும்

நேற்று ROS என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் சுவாராம் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குற்றமாகும்." இவ்வாறு ROS இயக்குநர்  அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் கூறுகிறார். சுவாராமை விசாரிக்கும் அதிகாரத்தை ஆர்ஒஎஸ் பெற்றுள்ளது என்றும் சுவாராம் தன்னை ஒரு சங்கமாக பதிவு செய்து கொள்ளவில்லை என்றும் அதற்கு…

ஐபிபி-க்களில் பங்குகளை 1MDB நிறுவனம் வாங்கியுள்ளது மீது பிகேஆர் கேள்வி…

ஐபிபி எனப்படும் சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களில் பங்குகளை கொள்முதல் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆண்டு  ஒரே மலேசியா மேம்பாட்டு நிதி நிறுவனம் (1MDB) வழியாக ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான Tanjung Energy Holdings Sdn Bhd-லும் கெந்திங் பெர்ஹாட்டுக்குச்…

ஒங்: உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹெங் குறை கூறப்பட்டுள்ளார்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், மூத்த மசீச தலைவர் ஒருவர் பண அரசியலில் ஈடுபடுவதாக  குற்றம் சாட்டும் போது உரிய நடைமுறைகளை ஒதுக்கி விட்டதாக முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட் கூறுகிறார். சுவா தமது செக்ஸ் வீடியோ விவகாரம் கசிந்த போது உரிய…

சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர்

சமூக ஆர்வலர்கள் குவாந்தான், கெபெங்கில் லைனாஸ் ஆலை செயல்படுவதற்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க , சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம் முன் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அக்கண்டனக் கூட்டம் மலேசிய நேரப்படி காலை 10.30க்கு(சிட்னி நேரம் பிற்பகல் மணி 12.30) நடத்தப்படும் என ஆஸ்திரேலியாவின் புவி…

சுவா: பண அரசியல் ஊழல் அல்ல

பண அரசியல் ஊழல் என  மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். மசீச-வைச் சேர்ந்த துணை அமைச்சர் ஒருவர் மீது தாம் சுமத்தியுள்ள பண அரசியல் எனக் கூறப்படுவது மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என பிகேஆர் வழங்கியுள்ள யோசனைக்கு சுவா…

ஏஜி அலுவலகம்: சுவாராம் மீதான சிசிஎம் புலனாய்வு முழுமையாக இல்லை

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் சுவாராம் எனப்படும் Suara Rakyat Malaysia மற்றும் Suara Initiatif Sdn Bhd ஆகியவை புரிந்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்கள் பற்றியும் அதன் கணக்குகள் பற்றியும் மேலும் ஆய்வு நடத்துமாறு சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத்துக்கு ஏஜி என்னும் சட்டத்துறைத் தலைவர்…

பிஎன் பெரிய அளவில் வெற்றி பெறும் என டாக்டர் மகாதீர்…

பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எதிர்பார்க்கிறார். ஆனால் அது நல்ல பெரும்பான்மையைப் பெறும் என அவர் எண்ணவில்லை. அதனால் கூட்டரசு அரசாங்கத்தின் நிலை தொடர்ந்து 'பலவீனமாகவே' இருக்கும் என அவர் சொன்னார். அவர் நேற்று பெர்டானா தலைமைத்துவ…

இங்கே கூ காம் : “நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் அல்ல”

தமது டிவிட்டர் செய்திக்காக அரசியல் களத்தில் இரு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புக்களை எதிர் நோக்கியுள்ள பேராக் டிஏபி தலைவர் இங்கே கூ காம், தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் அல்ல என விளக்கியிருக்கிறார். "நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் என்னும் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்," என அவர் சொன்னதாக சினார் ஹரியான்…

சுங்கத் துறை ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குத் தயாராகிறது

ஜிஎஸ்டி என அழைக்கப்படும் பொருள், சேவை வரியை அமலாக்குவதற்கு அரசாங்கம் விரும்பினால் அதனைச் செய்வதற்கு அரச மலேசிய சுங்கத் துறை தயாராக இருக்கிறது. அந்தத் தகவலை அதன் தலைமை இயக்குநர் கசாலி அகமட் இன்று தாவாவ்-வில் வெளியிட்டார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை உருவாக்கும் பொறுப்பு சுங்கத் துறைக்கு…

கேஎல் கெராக்கான் பல்சிகிச்சை சட்ட முன்வரைவில் மாற்றங்களை விரும்புகிறது

கோலாலம்பூர் கெராக்கான் தொகுதி விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள 2012 பல்சிகிச்சை சட்ட Read More

போலீஸ், சங்கப் பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் சுவாராம் அலுவலகத்தில் ‘சோதனை”

போலீஸ் படையையும் சங்கப் பதிவதிகாரி அலுவலகத்தையும் சேர்ந்த ஆறு அதிகாரிகள் இன்று முற்பகல் மணி 11.40 வாக்கில் மனித உரிமைகள் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாரமின் அலுவகத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை 'சோதனை' செய்யும் நோக்கத்துடன் வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. "சோதனைக்காக போலீஸ், சங்கப்பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள்…

நஜிப்பின் பெக்கான் கூட்டப் படம் ஜோடிக்கப்பட்டுள்ளது என இணைய மக்கள்…

பிரதமர் துன் அப்துல் ரசாக் கலந்து கொண்ட பெக்கான் கூட்டத்திற்கு பெரும் திரளாக மக்கள்  வந்திருந்தனர் என்ற தோற்றத்தை அளிப்பதற்காக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில் வெளியான படம் ஒன்று ஜோடிக்கப்பட்டுள்ளதாக இணைய மக்கள் கருதுகின்றனர். திருத்தப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் படத்தில் பின்னணியில் கூட்டத்தில் ஒரு பகுதியினர் இரண்டு முறை…

ஏஜி: திருத்தப்பட்ட ஆதாரச் சட்டத்தில் வலுவான சாட்சியங்கள் தேவை

1950ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஆதாரச் சட்டம் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் முன்னர் அரசு தரப்பு விரிவான புலனாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் ஒரு நபருடைய பெயர் இணைக்கப்பட்டுள்ளதால் அவர் மீது எளிதாகக் குற்றம் சாட்டி விட…

ஹிண்ட்ராப் தலைவர் நாட்டை விட்டு புறப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டார்

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் பி வேதமூர்த்தி நாட்டை விட்டு புறப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார். அவர் தேசிய மருட்டலாக இருப்பது அந்தத் தடைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. "குடி நுழைவுத் துறை தலைமை இயக்குநரும் தேசியப் போலீஸ் படைத் தலைவரும் என் மீது கட்டுப்பாடு விதித்துள்ளதாக என்னிடம்…

லினாஸின் இக்கட்டான சூழ்நிலையை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கேலி செய்கிறார்

லினாஸ் தொழில் நிறுவனம் தனது அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் கழிவுப் பொருட்கள் மீது இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருப்பதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேலியாகக் குறிப்பிட்டுள்ளார். லினாஸ் "அந்தக் குழந்தையை தானே வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு" தள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது என…

பினாங்கு, பிஎன் நில விற்பனைகள் மீது வெள்ளை அறிக்கையை வெளியிடும்

பினாங்கு மாநில அரசாங்கம் முன்னாள் பாரிசான் நேசனல் நிர்வாகம் நிலத்தை மலிவாக விற்றதாக கூறப்படுவது தொடர்பில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளது. நடப்பு அரசாங்கம் அரசு நிலத்தை விற்பதாகவும் அந்தப் பரிவர்த்தனைகளில் சுய நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பிஎன் திரும்பத் திரும்ப குற்றம் சாட்டுவதை முறியடிக்க பக்காத்தான்…

பெர்சே ஆதரவாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன

சட்ட விரோதமாகக் கூடியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவருடைய ஆணையை மீறியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து 21 பேரை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு இருப்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறி விட்டதாக அது தீர்ப்பளித்தது. 2008ம் ஆண்டு பெர்சே-க்கு…

கட்சித்தாவலை பிஎன் சாதாரணமாகக் கருதக்கூடாது

சாபா பாரிசான் நேசனலில் அடுத்தடுத்து நிகழ்ந்த கட்சித்தாவல்கள் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் “அதைச் சாதாரணமாகக் கருதக்கூடாது”என்று அம்னோ உதவித் தலைவர் முகம்மட் ஷாபி அப்டால் கூறியுள்ளார். “அதுவும் அரசியலில் ஒரு பகுதிதான்.எனவே அதைக் கடுமையான விவகாரமாகவே கருத வேண்டும் என்று நினைக்கிறேன்”, என்றாரவர். அதனால்…

‘பண அரசியலில்’ ஈடுபடுவதாகச் சொல்லக்கேட்டு அதிர்ச்சியடைந்தார் மசீசவின் ஹெங்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், கட்சியின் “பெண் துணை அமைச்சர் ஒருவர்” கோப்பெங் வேட்பாளராக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக பண அரசியலில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறியிருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதாக அக்கட்சியின் மகளிர் உதவித் தலைவர்  ஹெங் சியய் கை கூறினார். ஹெங்தான் மசீசவின்…