நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரின் இளம் வயது, 15 வயதான புகார்தாரருடனான அவரது உறவு, மேலும் அவரிடம் பாலியல் கவர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான முன்கூட்டிய செயல்பாடுகள் (grooming) அல்லது துன்புறுத்தல் நோக்கமுள்ள நடத்தை எதுவும் இல்லாதது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டார். குவாந்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதித்துறை ஆணையர்…
‘சின் பெங் ஜனநாயகத்தை எதிர்த்தார் என்பதை மறக்கக் கூடாது’
சின் பெங்கைப் பொறுத்தவரை மலேசியாவை கம்முனிஸ்டு நாடாக்குவதுதான் அவரது குறிக்கோளாகும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவுக்குள் கொண்டுவரலாமா கூடாதா என்ற சர்ச்சை குறித்து வினவியதற்கு மகாதிர் இவ்வாறு பதிலளித்தார். “இதில் சர்ச்சையே வேண்டியதில்லை. பலர் ஆத்திரப்படுகிறார்கள். சிலர் அவரை…
சட்டத் திருத்தத்தில், விசாரணையின்றி தடுத்துவைக்கும் அதிகாரம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது
இன்று காலை குற்றத்தடுப்புச் சட்டத்திற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அத்திருத்தங்களில் ஒன்று, பிரிவு 7பி, ஈராண்டுகளுக்கு விசாரணையின்றி காவலில் வைக்கும் அதிகாரத்தை மீண்டும் அரசாங்கத்துக்கு வழங்குகிறது. அதற்காக மூவரடங்கிய குற்றத்தடுப்பு வாரியம் ஒன்று அமைக்கப்படும். உயர் நீதிமன்ற நீதிபதி, முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்லது கூட்டரசு…
குற்றச் சட்டம்: வழக்குரைஞர் மன்றத்திடம் ‘ஆலோசனை கலக்கப்படவில்லை’
குற்றத் தடுப்புச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் இன்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு வரும் எனத் தெரிகிறது. சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்போது, வழக்கமாக சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் அது பற்றி வழக்குரைஞர் மன்றம், போலீஸ் ஆகியோரிடம் பின்னூட்டங்கள் பெற முனையும். ஆனால், குற்றத்தடுப்புச் சட்டத் திருத்தத்தின் பிரதி எதுவும்…
ஜகார்த்தா ஸஹ்ரேனை தூதராக இன்னும் ‘அங்கீகரிக்கவில்லை’
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஸஹ்ரேன் ஹஷிம் இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து இன்னும் கடிதம் வரவில்லை. இதை, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தெரிவித்த வெளியுறவு துணை அமைச்சர் ஹம்சா சைனுடின், அதன் காரணமாக ஸஹேரேனை முறையான தூதர் என்று குறிப்பிட முடியாது என்றார்.…
சுரேந்திரன் மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்
பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், நடப்பு நாடாளுமன்றக்கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் எம்பி-ஆக விளங்குகிறார். முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ள அந்த பாடாங் செராய் எம்பி, போலீஸ் காவலில் பி.கருணாநிதி இறந்துபோனது எப்படி என்று கேட்டிருந்த கேள்வியை அனுமதிக்க அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா மறுத்துவிட்ட பின்னரும் விடாமல் கேள்வி கேட்டது…
முகைதின்: மெக்கின்சேக்கு ரிம20 மில்லியன் நியாயமான தொகைதான்
தேசிய கல்வி செயல்திட்டத்தை உருவாக்குவது மிகப் பெரிய வேலை என்பதால் ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸே அண்ட் கோ-வுக்கு ரிம20 மில்லியன் என்பது “நியாயமான” கட்டணம்தான் என்கிறார் கல்வி அமைச்சர் முகைதின் யாசின். அத்திட்டத்தைத் தயாரிக்க ஈராண்டு ஆனது என்பதுடன் பன்னாட்டு நிபுணர்கள் பலரது ஆலோசனையையும் பெற வேண்டியிருந்தது என்பதால் அந்நிறுவனத்துக்கு…
ஊழல் கடந்த கால வரலாறாக்கபடும், நஜிப்
மலேசிய பிரதமர் நஜிப் ஊழல் ஒரு கடந்த கால வரலாறு ஆக்கப்படும் என்று சூழுரைத்துள்ளார். அமெரிக்கா, சான்பிரான்ஸ்சிஸ்கோவில் காமன்வெல்த் கிளப் லெக்சர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இந்த ஊழல் ஒழிப்பிக்காக ஒரு புதிய ஆளுகை மற்றும் நேர்மை ஆகியவற்றுக்காக ஓர் அமைச்சரையே நியமித்திருப்பதாக கூறினார். அந்த அமைச்சர் டிரான்ஸ்பேரன்சி…
ரோஸ்மாவின் பெர்மாதாவுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதியை நிறுத்த வேண்டும்
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் தலைமையின் கீழ் இயங்கும் பெர்மாதா நெகாரா செயல்திட்டத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பிகேஆரின் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் கூறினார். பெர்மாத்தா பிரிவின் செயலாளர் சைடாத்து அக்மா ஹசான் அளித்த தகவல்படி வழங்கப்பட்ட ரிம 150 மில்லியனில்:…
கல்வி பெருந்திட்டத்தை வரைந்த நிபுணத்துவமற்ற நிபுணருக்கு ரிம20 மில்லியன்!
நாடாளுமன்றம். கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் கல்வி பெருந்திட்டத்தை வரைந்த மெக்கின்சி அண்ட் கோ நிறுவனத்திற்கு ரிம20.56 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. டிஎபியின் செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியன் மிங் எழுப்பியிருந்த கேள்விக்குக் கிடைத்த பதில் அது. இது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும்…
நஜிப்பின் ராயா கொண்டாட்டதிற்கான செலவு ரிம2.88 மில்லியன் மட்டுமே!
நாடாளுமன்ற செய்தி. ரிம2.28 மில்லியன். அவ்வளவுதான். மக்களின் வரிப்பணம். வேற எவரின் பணமும் இல்லை. கடந்த ராயா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நஜிப்பின் அதிகாரத்துவ இல்லத்திற்குச் சென்ற 80,000 விருந்தாளிகளுக்கு அளிக்கப்பட்ட விருந்துக்கான செலவு அது. நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில் இந்தத் தகவலை பிரதமர் துறை…
சிறைக்காவலர்கள் புடைசூழ உதயகுமார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்
தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கட்சியின் தலைவர் பி. உதயகுமார் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டார். அவரைச் சுற்றி ஆறு சிறை காவலர்கள் இருந்தனர். மற்ற கைதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது ஒரு கைதிக்கு ஒரு காவலர்தான் உடன்வருவார். உதயகுமாரை…
தாய் இராணுவ ஜெனரல்கள்: சின் பெங் நேர்மை மற்றும் மனத்துணிவு…
மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதிச் சடங்கு இன்று (செப்டெம்பர் 23 ) பேங்கோக்கில் உள்ள ஒரு புத்த கோயிலில் நடந்து முடிந்தது. அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தாய்லாந்து இராணுவத்தின் முன்னாள் ஜெனரல்கள் கிட்டி ராத்தாசாயா, அகானிட் முவான்சவாட் மற்றும் பிஸாம் வாட்டானா வோங்கிரி, "சின் பெங்,…
சின் பெங் இறுதிச் சடங்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் கலந்து…
இன்று காலை மணி 10.00 அளவில் துயரார்ந்த சூழலில் தொடங்கிய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் சவாலிட் யோங்ஜாய்யுத்தின் வருகை சிறிய மாற்றத்தை அளித்தது. தாம் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டது…
ஒப்ஸ் சண்டாஸ்: குண்டர் கும்பலைச் சேர்ந்த 304பேர் கைது
ஒப்ஸ் சண்டாஸ் நடவடிக்கையின்கீழ், போலீசார் நேற்று நள்ளிரவுவரை நாடு முழுக்க பல்வேறு குற்றங்களுக்காக 11,036பேரைத் தடுத்து வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் கூறினார். அத்துடன் 23 துப்பாக்கிகள், 14 ஏர் ரைபில்கள், ஒரு கையெறிகுண்டு, 1,238 தோட்டாக்கள், இன்னும் பல்வகை ஆயுதங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். கடும்…
பணக்காரர்களான 40விழுக்காட்டினர் உதவித் தொகைகளில் 80விழுக்காட்டை அனுபவிக்கின்றனர்
அரசாங்க உதவித் தொகை யாரை இலக்காக வைத்துக் கொடுக்கப்படுகிறதோ அவர்களைச் சென்றடைவதில்லை எனத் துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் இன்று கூறினார். “நாட்டில் உயர் வருமானம் பெறும் 40 விழுக்காட்டினர்தான் உதவித்தொகைகளினால் கிடைக்கும் நன்மைகளில் 80விழுக்காட்டைத் துய்க்கிறார்கள்” என்றாரவர். ஆக, உதவித் தொகை சிறந்த பயனை அளிக்கவில்லை. ஆனால்,…
லவ்: ஊழல் ஒழிய இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்
அரசாங்கத்தில் ஊழலை ஒழிக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ள பிரதமர்துறை அமைச்சர் பால் லவ், முதலில் இடைத்தரகர்களை ஒழிப்பதில் முனைப்புக் காட்டுகிறார். இடைத்தரகர்களால்தான் தொழிற் செலவுகள் தேவையில்லாமல் கூடி விடுகின்றன என்றார். ஏனென்றால் அவர்களுக்கு வேறு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் தொழிலின் மதிப்பு கூடுகிறதா என்றால் எந்த வகையிலும் கூடுவதில்லை.…
‘பினாங்கை முன்மாதிரியாகக் கொள்வீர்; நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துவீர்’
மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும், பினாங்கு அரசின் மாற்றுத்தரப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் முயற்சியைப் பின்பற்ற வேண்டும் என டிஏபி எம்பிகள் இருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக முதிர்ச்சியை வெளிப்படுத்தும் பினாங்கு அரசின் முடிவைப் பாராட்டிய புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம்-மும் (இடம்), புக்கிட் பெண்டேரா எம்பி…
ஜாஹிட்: இடம் அளித்தால் மடம் கட்டுவார்கள்
காலஞ்சென்ற மலாயா கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவுக்குள் அனுமதித்தால் அதை வைத்து அவருக்கு ஒரு நினைவு மண்டபமே அமைத்து விடுவார்கள் என்று உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டார். “அஸ்தி ஒரு பிரச்னை அல்ல. ஆனால் அதை வைத்து யாராவது ஒருவர் அவருக்கு ஒரு…
ரபிடாவின் பிரதிநிதி என்று கூறப்படுவதை மறுக்கிறார் மஸ்னா
அம்னோ மகளிர் தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரில் ஒருவரான மஸ்னா மஸ்லான், முன்னாள் மகளிர் தலைவர் ரபிடா அசீசின் உரிமைபெற்ற பிரதிநிதி என்று கூறப்படுவதை மறுக்கிறார். கடந்த சனிக்கிழமை, கடைசி நேரத்தில்தான் மகளிர் பகுதி உயர்பதவிக்குப் போட்டியிட முடிவு செய்ததாகவும் அதற்காக யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறினார்.…
கேள்விகளைத் தாக்கல் செய்வதற்கான கால நிர்ணயிப்பு ‘சர்வாதிகாரத்தனமானது’
எம்பிகள், நாடாளுமன்றத்துக்கான கேள்விகளை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு 14 நாள்களுக்கு முன்னதாகவே தாக்கல் செய்யும் நடைமுறை சரியானதல்ல என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். அதில் ‘சர்வாதிகாரத்தனம்’ தெரிகிறது என்றாரவர். இதனால் கேள்வி களுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப்படும்போது அவை பழையவையாக மாறியிருக்கும். காலத்துக்குப் பொருத்தமானவையாகவும் இருக்க மாட்டா. இரண்டு நாள்களுக்குமுன்வரை …
ஏஎம்பேங்க் நிறுவனர் நஜாடியின் கொலையாளி பிடிபட்டான்
அரேப் மலேசியன் பேங்க் நிறுவனர் அஹ்மட் உசேன் நஜாடி-யை கோலாலும்பூரில் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் 44-வயது ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர். “நாலு கண்” என்றழைக்கப்படும் கொங் சுவீ குவானும் மேலும் இருவரும் இன்று காலை தைப்பிங்கில் கைது செய்யப்பட்டதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அக்கொலைச் செயலுக்கு ஏற்பாடு செய்தவர்…
மரண விபத்து……..ஓராண்டுக்குப் பின்னர் விசாரணை
கடந்த ஆண்டு, செப்டம்பர் 3-இல், கிள்ளான், ஜாலான் பெர்சியாரான் தெங்கு அம்புவான் ரஹிமா-வில் டான் மே தெங் என்பாரை ஒரு கார் மோதித்தள்ளியதில் அவர் உயிர் இழந்தார். மோதிய கார் நிற்காமல் ஓடி விட்டது. டானின் குடும்பத்தார் போலீசில் புகார் செய்துவிட்டுக் காத்திருந்தார்கள். விசாரணை நடப்பதாக தெரியவில்லை. குடும்பத்தாரின்…
‘எண்ணெய் விலை உயர்வுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல’
எண்ணெய்க்கு வழங்கிவரும் உதவித்தொகையைக் குறைத்தது மட்டுமே அரசாங்கம். மற்றபடி, எண்ணெய் விலை உயர்வுக்கு அது பொறுப்பல்ல என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் விளக்கியுள்ளார். “உலகச் சந்தைதான் எண்ணெய் விலையை நிர்ணயிக்கிறது, அரசாங்கம் அல்ல”. இன்று, நாடாளுமன்றத்தில் மாபுஸ் ஒமார் (பாஸ்- பொக்கொக் சேனா) கேட்ட கேள்விக்குப்…


