நஜிப்: திருத்தப்பட்ட பிசிஏ ஒரு புதிய ஐஎஸ்ஏ அல்ல

குற்றத்தடுப்புச் சட்டம் (பிசிஏ) 1959-இல் செய்யப்படும் திருத்தம்,  விசாரணையின்றித் தடுத்துவைக்க வகை செய்கிறது என்றாலும் அது பழைய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ) போன்றது அல்ல என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். திருத்தப்பட்ட பிசிஏ,  திட்டமிட்ட குற்றச் செயல்களை எதிர்க்கும் நோக்கம் கொண்டது  என்று நஜிப்,  நியூ…

அம்பிகா: ஏஜி-இன் சொல்லுக்கு மதிப்பில்லையா?

சட்டத்துறைத் தலைவரை (ஏஜி) ஓரங்கட்டிவிட்டுத்தான்  அரசாங்கம் தடுப்புக் காவல் சட்டத்தைத்  தாக்கல் செய்ததா? மூத்த வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசன் இக்கேள்வியை எழுப்பியுள்ளார். இன்று  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  பேரணி  ஒன்றில் உரையாற்றிய  அம்பிகா,  கடந்த ஜூலை மாதம்  ஏஜி அப்துல் கனி பட்டேய்ல்  தடுப்புக் காவல் சட்டத்தை  எதிர்ப்பதாக பொதுவில்…

கர்பால், கனவு காண்பதால் மட்டுமே புத்ரா ஜெயா கைக்கு வந்துவிடாது

உங்கள் கருத்து:  ‘பக்காத்தானில் இன்னும் சீர்படுத்த வேண்டியவை நிறைய உள்ளன. இன்னும் விவேகமாகவும் கடுமையாகவும் உழைக்க வேண்டும்’ கர்பால்: மிகவும் வயதாவதற்கு முன்பே புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவோம் பெயரிலி #69337042: கடந்த 56 ஆண்டுகளாக தேர்தல் ஆடுகளம் சமமாக இருந்ததே இல்லை. அதன் விளைவாக ஒரே ஆட்சி இத்தனை…

முக்ரிஸ் ஒரு பழிவாங்கும் மந்திரிபுசார்

கெடா மாநில மந்திரிபுசார் முக்ரிஸ் மகாதிர் பழிவாங்கும் மந்திரிபுசார் என்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. பாரிசானுக்கு எதிரான வாக்களித்ததால் சீனர்களை தண்டிக்கும் எண்ணத்தில் செயல்படுகிறார்  என்று செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோ கூறுகிறார். கெடா மாநில சீனப்பள்ளிகளிடமிருந்து வரும் எந்தக் கோரிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று முக்ரீஸ் விடுத்துள்ள…

கர்பால்: வயதாவதற்கு முன்பு புத்ரா ஜெயாவை வெற்றி கொள்வோம்

வயதாகிக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தில் இடம் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என தாம் நம்புவதாக டிஎபியின் தலைவர் கர்பால் சிங் கூறினார். இன்று கோலாலம்பூரில் நடைபெறும் கட்சியின் சிறப்பு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய கர்பால், பக்கத்தான் ரக்யாட் அடுத்தப் பொதுத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி…

தண்டா புத்தெரா, நட்டம் ரிம3.77 மில்லியன்தான்!

இந்நாட்டு தேசியவாதிகளின் அமோக அரசியல் ஆதரவு இருந்தும் பெரும் சர்ச்சைக்குள்ளான தண்டா புத்தெரா படத்தை காப்பாற்ற முடியவில்லை. இவ்வார தொடக்கத்தில் அப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்ட போது அப்படம் வெற்றிகரமாக தோல்வியில் முடிந்தது. நட்டம் சுமார் ரிம3.77 மில்லியன்தான். அப்படம் ரிம4.7 செலவில் தயாரிக்கப்பட்டது. 25 நாள்கள் சினிமா அரங்குகளில்…

விசாரணையின்றி தடுத்துவைத்தல் என்பது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் உண்டு:…

விசாரணையின்றி தடுத்துவைக்க வகை செய்யும் குற்றத்தடுப்புச் சட்டத் திருத்தம் அமெரிக்கா, பிரிட்டன் முதலிய வளர்ந்த நாடுகளில் உள்ள தடுப்புக் காவல் சட்டம் போன்றதுதான். இதனைச் சுட்டிக்காட்டிய பிரதமர்துறையில் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் நன்சி ஷுக்ரி, “அது, குற்றம் செய்தவர்கள்மீது போதுமான ஆதாரங்களைத் திரட்டுவதற்குத் தேவையான கால அவகாசத்தை…

பிசிஏ பற்றிப் பேசுவதை தவிர்த்தார் கைரி

தம்மை ஒரு முற்போக்கிவாதியாகக் காட்டிக்கொள்ளும் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் குற்றத் தடுப்புச் சட்ட(பிசிஏ)த் திருத்தம் பற்றிக் கருத்துரைப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார். இன்று கோலாலும்பூரில் ஒரு நிகழ்வில் அவரைப் பிடித்துக்கொண்ட மலேசியாகினி செய்தியாளர் பிசிஏ பற்றி கருத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு கைரி, “நான் பேசவுள்ள அரங்கம்…

1.4 மில்லியன் மலேசியர்கள் ஊழல்வாதிகளா?

உங்கள் கருத்து ‘கண்ணைமூடிக் கருத்துரைக்கும் அம்னோபுத்ரர்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. சிலர், மலேசியாவில் ஊழல் என்ற ஒன்று இல்லைவே இல்லை என்றுகூட அடித்துச் சொல்வார்கள்’ துணை அமைச்சர்: மலேசியர்களில்  ஊழலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை 5 விழுக்காடு மட்டுமே லூயிஸ்: பிரதமர்துறை துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம், அறியாமல் பேசும்…

பிசிஏ மாற்றரசுக்கட்சியினரை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதல்ல: ஜாஹிட் உத்தரவாதம்

குற்றத் தடுப்புச் சட்ட (பிசிஏ)த்தில்  திருத்தங்கள் செய்யப்படுவது, இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் பதிலாக அதனைப் பயன்படுத்துவதற்காக அல்ல  என்கிறார் உள்துறை அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட் ஹமிட். அதே வேளை,  மாற்றரசுக் கட்சியினரை மிரட்டும் நோக்கமும் அதற்குக் கிடையாது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அச்சட்டத் திருத்தங்கள் பரவலான…

எண்ணெய் விலை மீண்டும் உயர்கிறதா? அரசாங்கம் மறுப்பு

எண்ணெய் விலை நாளையிலிருந்து மேலும் 10 சென் உயரும் என்ற வதந்திகளை அரசாங்கம் மறுக்கிறது. எண்ணெய் விலை இன்றிரவு உயராது என்று நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் டிவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார். “ரோன்95-க்கு அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையில் மேலும் 10 சென் குறைக்கப்படுவதாகக் கூறப்படுவதை மறுக்கிறேன்.  எனவே,…

‘பாலேக் இந்தியா’ பாலேக் சீனா’ என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்கப்பட்டது

மாணவர்களை நோக்கி ‘பாலேக் இந்தியா’ பாலேக் சீனா’ என்று கூறியதாக சொல்லப்படும்  எங்கு உசேன் பள்ளி துணை முதல்வர் அப்படிச் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டத்தில்  மன்னிப்பு கேட்கப்பட்டதாக சின் சியு டெய்லி,  பள்ளியின் பணியாளர்களில் ஒருவரை மேற்கொள்காட்டி  செய்தி…

மகாதிர்: ஆலோசனைப் பணிக்கு ரிம20 மில்லியனா? என்னாலும் செய்ய முடியுமே

அரசாங்கம், தேசியக் கல்வி செயல்திட்டத்துக்கு ஆலோசனை கட்டணமாக ரிம20 மில்லியன் கொடுத்திருப்பது பற்றிக் கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தம்மாலும்கூட அந்தப் பணியைச் செய்திருக்க முடியும் என்றார். “என்னாலும் உள்ளூர் நிபுணராக பணியாற்ற முடியும். ஆனால், எனக்குத்தான் யாரும் (ஆலோசனை சொல்லும்) வேலை கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்”,…

அரசாங்க நிகழ்வுகளிலும் அம்னோ தேர்தல் காய்ச்சல்

இன்னும்  ஒரு மாதத்தில் அம்னோ கட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளையில்,  தேர்தல் வேட்பாளர்கள், அதிலும் குறிப்பாக அவர்களில்  அமைச்சர்களாக இருப்பவர்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தேர்தலைப் பற்றி மக்களுக்குக் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு நினைவூட்டத் தவறுவதில்லை. நேற்று,  புத்ரா ஜெயாவில் கார்னிவெல்  உசாஹாவான் டேசா தொடக்க விழாவில்,  பேசிய…

நெகாரா கூ பாடத் தெரியவில்லை என்பதற்காக, பொறுமை இழப்பது சரியல்ல

உங்கள் கருத்து: ‘என்னுடைய பள்ளிக் காலத்தில், 50-கள் 60-களில், எந்தப் பள்ளி முதல்வரும் பாலேக் இந்தியா என்றோ பாலேக் சீனா என்றோ சொன்னதில்லையே, அது எப்படி?’ இன்னுமொரு ஆசிரியர் ‘பாலேக் சீனா, பாலேக் இந்தியா’ என்றார் ஜிரோனிமோ: மாணவர்களிடம் பொறுமை இழந்தார் என்ற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய…

பண அரசியல் பற்றி எம்ஏசிசி-இடம் தெரிவிக்கவும்: கட்சிகளுக்கு லவ் அறிவுறுத்தல்

விரைவில் தேர்தல்களை நடத்தவிருக்கும் அரசியல் கட்சிகள்,  பண அரசியல் பற்றிக் கூறப்படும் புகார்களை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) த்திடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறிய பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் செங் குவான்,  எதிர்வரும் கட்சித் தேர்தல்களில் பணம் கொடுத்து தங்களைக் கவரும் முயற்சிகளை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும்…

சாபா டிஏபி சட்டமன்ற உறுப்பினர் கட்சி விலகினார்

சாபா டிஏபி-இல் உள்சண்டை முற்றியதால் லுயாங் சட்டமன்ற உறுப்பினர் ஹியு கிங் சியு கட்சியிலிருந்து விலகினார். இப்போது அவர் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர். ஆதரவாளர்களையும் நண்பர்களையும் கலந்து ஆலோசித்தபின்னர் அம்முடிவுக்கு வந்ததாக சாபா டிஏபி-இன்  முன்னாள் தலைவரான அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஜிஇ13: மக்கள் நீதிமன்ற விசாரணை விவாதத் தொகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது

மலேசியவின் 13 ஆவது பொதுத் தேர்தல் மீதான மக்கள் நீதிமன்ற விசாரணையில் இறுதி வாதத் தொகுப்பு செப்டெம்பர் 27, 2013 இல் தாக்கல் செய்யப்படும். அந்த வாதத் தொகுப்பை பேராசிரியர் குர்தயால் சிங் நிஜார் வழங்குவார். 13 ஆவது பொதுத் தேர்தல் மீதான அதன் ஐந்து-நாள் விசாரணையை மக்கள்…

கெராக்கான்: விசாரணையின்றிக் காவலில் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

தடுப்புக்காவல் என்பது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அந்த நடைமுறையை அடியோடு  கைவிடுவது நல்லது என பிஎன் உறுப்புக் கட்சியான கெராக்கான் கூறுகிறது. “கடந்த காலத்தில்  தடுப்புக்காவல் என்பது தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருகிறது. அதனைப் பொதுமக்கள் ஆத்திரத்துடன்  எதிர்த்தனர்.  அதன் விளைவாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ),  அவசரகால சட்டம் (இஓ) …

தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் விவகாரம் குறித்து அன்வார் எச்சரிக்கை

தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பது வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அது தொடர்பான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அதன்மீது விவாதம் நடத்தப்படுவதற்கும் பக்காத்தான் ரக்யாட் இடமளிக்காது என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் தொடர்பில் பெர்சே கூட்டுத்…

பிஏஏ சட்டத்தின்கீழ் பிகேஆர் உறுப்பினருக்கு ரிம6,000 அபராதம்

கடந்த மே மாதம் 505 கறுப்புத்தினப் பேரணியை ஏற்பாடு செய்த குற்றத்துக்காக ஜோகூர் பிகேஆர் நிர்வாகச் செயலாளர் யுனேஸ்வரனுக்கு ஜோகூர் செஷன்ஸ் நீதிமன்றம் ரிம6,000 அபராதம் விதித்தது. 505பேரணி ஏற்பாடு செய்த குற்றத்துக்காக அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ் (பிஏஏ) தண்டிக்கப்படும் முதலாவது ஆள் அவராகத்தான் இருக்க வேண்டும். தீர்ப்பை…

இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார்

சிலாங்கூர், செமிஞி இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர், நாட்டுப்பண்ணைப் பாடவும் மதிக்கவும் மறுத்த மாணவர்களை நோக்கி “இந்தியாவுக்கு அல்லது சீனாவுக்குப் போங்க”, என்று திட்டினாராம். எஸ்எம்கே எங்கு உசேன் பள்ளியின் உதவிமுதல்வர் செப்டம்பர் 23-இல், மாணவர்களிடம் மலேசியாவைப் பிடிக்காதவர்கள் “திரும்பிச் செல்லலாம்” என்று கூறியதாக சின் சியு…

கர்பால்: பிசிஏ திருத்தங்கள் அரசமைப்புக்கு முரணானவை

குற்றத்தடுப்புச் சட்டத்தில்(பிசிஏ) கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் அரசமைப்புக்கு விரோதமானவை என டிஏபி தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். “நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லும் பொறுப்பு இருந்தாலும் அரசமைப்புடன் ஒத்துப்போகாத ஒன்றைத்தான் செய்கிறோம். அது அரசமைப்புக்கு முரணானது”, என்றாரவர். அமைச்சர் முடிவு செய்த ஒன்றை இப்போது மூவரடங்கிய வாரியம் முடிவு செய்யும் என்பது…